இடுகைகள்

முத்தாரம் கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிட்ஸ்! - கா.சி.வின்சென்ட்

படம்
பிட்ஸ் எக்ஸ்பிரஸ் ! ரொம்ப யோசிப்பவர்களுக்கு பெரிய மூளை இருக்கவேண்டுமா ? நீரில் ராஜாங்கம் நடத்தும் முதலைகளின் மூளை எடை 8.4 கி . கி . இதனோடு ஒப்பிட்டால் மனிதர்களுடைய மூளை எடை சராசரியாக 1.3 கி . கி . ஜெல்லி மீன்களின் உடலில் இதயம் , எலும்புகளை தேடினாலும் கிடைக்காது . 95% நீரினால் ஆனது இம்மீன் . சுறாக்கள் வாரத்திற்கு ஒரு பல்லை இழக்கிறது ஏன் தெரியுமா ? பல்லை இறுக்கமாக பிடிக்க அவற்றுக்கு ஈறுகள் கிடையாது . விழுந்தாலும் நோ பிராப்ளம் , அடுத்தநாளே பல் முளைக்கத்தொடங்கிவிடும் . விண்வெளிக்கு பறவைகளை கொண்டுசெல்லும் சிம்பிள் சூப்பர் பிளானை நாசா முயற்சித்து தோற்றுப்போனது . என்னாச்சு ? பறவைகள் உணவை விழுங்க பூமியில் ஈர்ப்புவிசை இருக்கும் . விண்வெளியில் என்ன செய்வது ? நரி தன் சகோதரர்களான நாய் , ஓநாய்கள் போல ஏராளமான உறுப்பினர்களை கொண்டதல்ல .  முடிந்தவரை தனியாகவே வாழ விரும்பும் பிரைவசி விலங்கு நரி .    நன்றி: முத்தாரம் வார இதழ்

அறிவியல் புத்தகங்கள் அறிமுகம்! - தொகுப்பு:புலந்தர் ககான்

படம்
புக் கார்னர் ! LIFE 3.0 Being Human in the Age of Artificial Intelligence by Max Tegmark 336pp,Rs 1,791 Knopf நாம் கண்டுபிடித்த எந்த டெக்னாலஜியையும் விட AI என்பது சமூகம் , போர் , குற்றம் , வேலை என அத்தனை விஷயங்களிலும் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி எம்ஐடி பேராசிரியரான மேக் தெக்மார்க் இந்நூலில் அ முதல் ஃ வரை தெளிவுபடுத்து அதை எப்படி பிராஃபிட்டாக்கலாம் என ஐடியாக்களையும் தூவியுள்ளார் . ஆட்டோமேஷன் எதிர்காலம் எனில் உங்கள் குழந்தைக்கு என்ன கற்றுக்கொடுப்பது , பிரைவசி காப்பது , வேலை மார்க்கெட்டில் நாம் ஜெயிப்பது எப்படி நாம் தயங்காமல் கலந்துகொள்ள வேண்டிய கருத்துக்களை ஆசிரியர் இந்நூலில் பேசியிருப்பதே இதனை முக்கியப்படுத்துகிறது . The Cosmic Machine: The Science That Runs Our Universe and the Story Behind It by Scott Bembenek 358pp, Rs.1,362 Zoari Press அணுக்கள் , ஆற்றல் , க்வாண்டம் மெக்கானிசம் ஆகியவையே பால்வெளியின் ஆதாரம் . அவை நாம் வாழும் உலகை எப்படி பாதிக்கின்றன , அவற்றின் கண்டுபிடிப்பால் நமக்கு கிடைத்ததென்ன ஆகியவற்றை பேசும் நூல் இது . இன்று இருக்கும் உலகில

முத்தாரம் ஸ்பெஷல்ஸ்- தொகுப்பு: பெல்லம் தேவி

படம்
உப்பில் பிளாஸ்டிக் ! குடிநீர் குழாயில் பிளாஸ்டிக் கலந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உறுதி செய்த நிலையில் , தற்போது கடல்நீரில் அதிகரிக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்கினால் உப்பு மாசுபட்டு வருகிறது என இங்கிலாந்து , சீனா , ஸ்பெயின் , பிரான்ஸ் , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கண்டுபிடித்துள்ளனர் . உலகிலுள்ள கடலில் 12.7 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்துள்ளது என்கிற ஆய்வுத்தகவல் அலற வைக்கிறது . ஒவ்வொரு ஆண்டும் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு இது . ஒரு நிமிடத்திற்கு ஒரு குப்பை லாரி கழிவு கடலில் கொட்டப்படுகிறது என்கிறது ஐநா சபை . 2.3 கிராம் உப்பில் 660 எனும் அளவில் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளதையும் , 90% அமெரிக்கர்கள் அதிகளவு உப்பை சேர்த்துக்கொள்வதும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . " பிளாஸ்டிக் கலப்படமான உப்பு மனிதர்களை மட்டுமல்ல சூழலையும் சேர்த்து கெடுக்கிறது " என்கிறார் நியூயார்க் மாநில பல்கலையைச் சேர்ந்த ஷெரி மாசன் . பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட 21 வகை உப்புகளிலிருந்து பெறப்பட உப்புகளிலும் இருந்த பிளாஸ்டி

முத்தாரம் ஸபெஷல்ஸ்! தொகுப்பு - விக்டர் காமெஸி

படம்
தீவிரவாத தாக்குதல்கள் ! கடந்த மூன்று ஆண்டுகளில் ஐரோப்பா மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை 420. பெல்ஜியம் , ஃபிரான்ஸ் , ஆஸ்திரியா , ஜெர்மனி , இங்கிலாந்து , ஃபின்லாந்து ஆகியவற்றில் புதிதாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன . தாக்குதலை 74% அரசு முன்னே அறிந்திருந்தது . தீவிரவாதிகளில் 50% குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் . இதில் 26% முன்னமே சிறைதண்டனை பெற்றவர்கள் . 64%  பேர் சொந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் . தீவிரவாதிகளின் குறைந்தபட்ச வயது 15, அதிகபட்ச வயது 56. தாக்குதல் நடத்தியவர்களின் சராசரி வயது 27. தாக்குதலுக்குள்ளான நாடுகள் அகதிகளின் குடியேற்றத்தை குறைக்கும் விதிகளை இயற்றுவது எதிர்காலத்தில் நிகழலாம் . ஹிட்லர் நல்ல நோக்கம் கொண்டவரா ? " ஹிட்லர் யூதர்களை கொன்றார் என்ற ஒரே காரணத்திற்காக அவரது நோக்கத்தை தவறு என்று கூறிவிட முடியாது " என புது சர்ச்சையை கிளப்பியுள்ளார் ஜப்பானின் நிதியமைச்சரான தாரோ ஆஸோ . தாரோ ஆஸோ இந்த தத்துவ முத்தை உதிர்த்தது  லிபரல் ஜனநாயக கட்சி மீட்டிங்கில் . எதிர்ப்புகளும் கண்டனங்களும் திகுதிகுவென க

ரியலா? ரீலா?

படம்
ரியலா ? ரீலா ? ரீல் : திருமண ஆசீர்வாத அரிசி பறவைகளைக் கொல்லும் . ரியல் : அரிசியால் பறவைகள் இறக்கும் என்பது செம டூப் . பறவைகளின் இறப்பு பயத்தால் எகிப்தின் தொன்மையில் உருவான ஆசீர்வாத அரிசி கைவிடப்பட்டு இன்று திருமணங்களில் மிகச்சிறிய பந்துகள் தம்பதிகள் மீது வீசப்படுகின்றன . 2002 இல் கென்டக்கி யுனிவர்சிட்டி செய்த ஆய்வில் , பறவைகள் தின்னும் விதைகள் அரிசியை விட நிறைவு தருகின்றன என்று கூறுகிறது . ரீல் : வௌவால்கள் குருடானவை ரியல் : அப்புறம் ஏன் வௌவால்களுக்கு கண்கள் இருக்கவேண்டும் ? வௌவால்களின் கண்களால் பார்க்க முடிவதோடு , கூடுதலாக எதிரொலி முறையையும் பயன்படுத்துகிறது . கண்களைவிட எதிரொலி டெக்னிக் இன்னும் தெளிவைத் தருகிறது . ரீல் : பறவைகுஞ்சுகளை மனிதர்கள் கையாண்டால் தாய்ப்பறவை அவற்றை கைவிட்டுவிடும் . ரியல் : பறவைகளுக்கு உடல்மண வேறுபாடு தெரியாது . குஞ்சுகள் தனிதது தாயால் விடப்படுவது அவை பறப்பதற்கான பயிற்சிக்காகவே . இது பொய்யான கருத்து .    ரியலா ? ரீலா ? ரீல் : ஓநாய்க்கூட்டத்துக்கு தலைமை தாங்கும் ஓநாய்க்கு ஆல்பா என்று பெயர் . ரியல் : ஆல்பா , பீட்டா

உலகை மிரட்டிய மாஃபியா குழுக்கள்!

படம்
கோமாளிமேடை ஸ்பெஷல் உலகை மிரட்டிய மாஃபியா குழுக்கள் ! நம்பர்ஸ் கேங்க்ஸ் தென் ஆப்பிரிக்காவிலுள்ள பால்ஸ்மூர் சிறை ஃபேமஸாக காரணம் , இங்கு சிறைபட்ட நெல்சன் மண்டேலா , அடுத்து  நம்பர்ஸ் குழு . 26,27,28 என மூன்று குழுக்கள்தான் ஜெயிலுக்கு இன்சார்ஜ் . இந்த மூன்றில் ஒன்றை நீங்கள் செலக்ட் செய்தேயாகவேண்டும் .   நோ சொன்னால் , கற்பழிப்பு அல்லது கொலை இரு ஆப்ஷன்கள் மட்டுமே உங்களுக்குண்டு . 27 கேங்கில் சேர , ஜெயிலரை கத்தியால் குத்தவேண்டும் . 28 இல் சேர கோல்டு , சில்வர் என இரு பிளான்கள் உண்டு . கோல்டில் பிறரோடு சண்டையிட வேண்டும் . சில்வரா ? பாலியல் அடிமை நீங்கள் . ட்ரியாட் கேங்க்ஸ் ( சுன் யீ ஆன் ) 17 ஆம் நூற்றாண்டின் சீன மாஃபியா இது . 1949 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின்போது , தைவான் , மக்காவு , ஹாங்காங் ஆகிய இடங்களுக்கு சுன் யீன் ஆன் குழு இடம்பெயர்ந்தது . மொத்தம் 57 சங்கங்கள் , 60 ஆயிரம் உறுப்பினர்கள் . போதைப்பொருள் , விபச்சாரம் , ஆட்கடத்தல் என அத்தனையிலும் ஜெயித்த குழு இது . சுன் யீ ஆன் குழுவின் ஸ்பெஷல் , கொலை செய்ய கத்திதான் ஆயுதம் . ஒருவரை கொன்றால் அவரின் மூட்டு

சயின்ஸ் ஸ்பெஷல்! - கா.சி.வின்சென்ட்.

குரங்குகளை அழிக்கும் பாமாயில் ! உராங் உட்டான் குரங்களின் அதிகம் வாழும் இடங்களில் இந்தோனேஷியாவும் ஒன்று . சுமத்ரா தீவுகளிலுள்ள ட்ரைபாபீட் காடுகள் பலவும் பாமாயில் பெறுவதற்காக தொடர்ந்து அழிக்கப்பட்டுவருவதால் , உராங் உட்டான் குரங்குகளின் வாழ்க்கை உறைந்துபோய் நிற்கிறது . சுமத்ரா மற்றும் போர்னியோ ஆகிய இரு தீவுகளில் மட்டுமே தற்போது உராங் உட்டான் குரங்குகள் வாழ்கின்றன . பிஸ்கட்டுகள் , லிப்ஸ்டிக் , பெயிண்ட் , ஷாம்பூ , நூடுல்ஸ் என அனைத்திலும் இடம்பெறும் பாமாயில் தயாரிப்பில் இந்தோனேஷியா நாடு முன்னிலை வகிக்கிறது . வணிகத்திற்காக சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு பாமாயில் பெறுவதற்காக பனைமரங்கள் விதைக்கப்படுவது அங்கு வாழும் பன்மைத்தன்மையை சிதைத்து உயிரிகளை அழித்துவருகிறது . உணவுதேடிவரும் குரங்குகளை கொன்று , அதன்குட்டிகளை வளர்ப்பு பிராணிகளாக விற்கும் பிஸினஸூம் கொடிகட்டி பறக்கிறது . இயற்கை பாதுகாப்பு அமைப்பு , சுமத்ரா காடுகளிலுள்ள உராங் உட்டான் குரங்குகளை பாதுகாப்பதற்கான இடத்திற்கு மாற்றும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளன .   கேட்ஜெட்ஸ் ரவுண்ட் அப் ! Brompton Electric bicycle எலக