இடுகைகள்

வன்முறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்சாப் இசைக்கலைஞர்களுக்கு உலக மேடையை திறந்து வைத்துள்ள நட்சத்திரம் - தில்ஜித் தோசன்ஜி

படம்
  பஞ்சாபி பாடகர், நடிகர் தில்ஜித் தோசன்ஜி பஞ்சாபி இசை, திரைப்படங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நட்சத்திரம் -தில்ஜித் தோசன்ஜி காலிஸ்தான் பிரச்னை, பஞ்சாப் விவசாயிகள் தற்கொலை என பல்வேறு பரபரப்பான விவகாரங்களை தாண்டி, தில்ஜித் நமது கவனத்தை ஈர்த்திருக்கிறார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் கோச்செல்லாவேலி இசை மற்றும் கலை விழாவில் தில்ஜித், சீக்கியர்களின் மரபான உடைகளை அணிந்து பாடி, நடனம் ஆடினார். இந்த விழா, அவரை உலகளவிலான மேடையில் அறிமுகப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. தனது அமெரிக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு இந்தியா திரும்பியவருக்கு ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன. அமெரிக்காவில் நடைபெற்ற இசைவிழாவில் முதல் இந்தியராக பங்கேற்றவர் தில்ஜித் தோசன்ஜிதான்.   இவர், தனது ஏழு வயதில் இருந்து பஞ்சாபி பாடல்களை பாடி ஆடிவருகிறார். இவருக்கான ஊக்கத்தை அக்காவுக்கு டியூசன் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் ஏற்படுத்தியிருக்கிறார். அவர் பஞ்சாபி பாடல்களை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். தான் எழுதிய பாடல்களை தில்ஜித் மனப்பாடம் செய்து பாடச்செய்திருக்கிறார். அப்படித்தான் தில்ஜித் ப

வெறுப்பு, பழிவாங்கும் வெறி ஆகியவற்றால் உருவாகும் மகத்தான நாயகன்! - அல்டிமேட் சோல்ஜர் - ரோக்

படம்
  அல்டிமேட் சோல்ஜர் மங்கா காமிக்ஸ் சீனா ரீட்எம்.ஆர்க் வயது வந்தோருக்கு மட்டுமே..... அரசின் ரகசிய அமைப்பில் வேலை செய்தவர் ஜெடோ. ஆனால், அவர் திடீரென தன் சக நண்பர்களை ஏமாற்றிக் கொன்றுவிட்டு தலைமறைவாகிவிடுகிறார். இதன் காரணமாக அவரது குடும்பத்தினரான மனைவி ஸ்மைல் ரோஸ், ரோக் என்ற மகன் என இருவருமே துரோகிகள் என ஊராரால் தூற்றப்படுகிறார்கள். அடித்து உதைக்கப்படுகிறார்கள். ரோக் சிறுவனாக இருந்தபோதும், ஊர் மக்களால் சக வயதுடைய சிறுவர்களால் அடித்து உதைக்கப்படுகிறான். யாரும் சிறுவனை எதற்காக அடிக்கிறீர்கள் என்று கேட்பதில்லை. அந்தளவு மக்களின் மனதில் வன்மம் பெருகி வளர்கிறது. ரோக் சிறுவனாக இருந்தாலும் அவனது அப்பா பற்றி பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் அவரின் செயலால் அம்மா கஷ்டப்படுவது பற்றித்தான் அதிகம் நினைக்கிறான். எனவே, அவளை நல்லபடியாக பார்த்துக்கொள்ளவேனும் வலிமையாகவேண்டும் என நினைக்கிறான். இதனால் ஆன்ம ஆற்றல் உள்ளவர்களுடன் முரட்டுத்தனமாக மோதுகிறான். காயம்பட்டாலும் கூட எழுந்து நின்று அவர்களை பீதியூட்டுகிறான். இதற்கு காரணம், அவன் மனதில் மக்கள் மீது எழும் வெறுப்புதான். என்னை ஏன் தேவையில்லாமல் வெறுப்பேற

குடும்பத்தின் மரபணு தொடர்பில்லாத, ஆண்மையற்ற ஒருவனின் வாழ்க்கைப் போராட்டம்! ஸ்ட்ராங்கஸ்ட் அபாண்டட் சன் - மங்கா காமிக்ஸ்

படம்
  ஸ்ட்ராங்கஸ்ட் அபாண்டட் சன் 200+--- (சீனா) மங்கா காமிக்ஸ்   தொன்மைக் காலத்தில் நடைபெறும் போரில்,   வலிமையான   இனக்குழு, ஷே லுயான் எனும் இனக்குழுவைத் தாக்கி முழுமையாக அழிக்கிறது. இந்த தாக்குதலில் ஒரு மாணவன் மட்டும் தாக்கப்பட்டாலும் உயிரோடு இருக்கிறான். இந்த போர் நடைபெற்றது கூட அவன் மாஸ்டர் சம்பந்தப்பட்டதுதான். அவனது மாஸ்டராக உள்ள பெண்மணியை, இன்னொரு இனக்குழுவில் உள்ளவர் மணக்க விரும்புகிறார். ஆனால் மாஸ்டருக்கு விருப்பமில்லை. எனவே, திடீர் போர் நடத்தப்பட்டு பழிவாங்கப்படுகிறது. அதாவது அதிகாரம் உள்ள ஆண் மணம் செய்ய விரும்பினால, பெண் தனது உடலை விட்டுக்கொடுத்துவிடவேண்டும். அப்படி இணங்காவிட்டால் அவளையும் அவளைச் சார்ந்தவர்களையும் கொல்வது சீன கலாசார வழக்கம்.   இந்த வகையில்,   ஒட்டுமொத்த மாஸ்டர் சார்ந்த இனக்குழுவே இறந்துவிடுகிறது. தனது, மாணவனுக்காக மாஸ்டர் முன்னே நின்று தனது உயிரைவிடுகிறார். மாணவன் காப்பாற்றப்பட்டாலும் அவனது ஆன்மா முன்ஜென்ம நினைவுகளோடு நவீன உலகிற்கு வருகிறது. பொதுவாக இப்படி அமைக்கப்படும் கதையில், நவீன வாழ்க்கை வாழும் மனிதர், சோங்கியாக, பலவீனமாக, நிறைய அவமானங்களை சந்திப்

நீங்கள் மட்டும்தான் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? - எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ்

படம்
  எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ் நேர்காணல் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ். இவர் தனது முதல் நாவலை எழுதியபோது அதற்கு பெரும் வரவேற்பு, மாலை மரியாதையெல்லாம் கிடைக்கவில்லை. ஜான் குரோவ்ஸ் டெவில் என்பதுதான் நூலின் பெயர். இந்த நூல் பதிப்பாளர்களால் 78 முறை மறுக்கப்பட்டுள்ளது. கடும் விரக்திக்குள்ளான மார்லன், எழுதிய கையெழுத்து பிரதி, நண்பர்களின் கணினியில் இருந்த பிரதி என அனைத்தையும் அழித்தார். ஆனால் ஒரு ஒரு கணினி பிரதி மின்னஞ்சலில் தப்பி பிழைத்தது. பின்னாளில் 2015ஆம் ஆண்டு எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் செவன் கில்லிங்க்ஸ் என்ற புனைவை எழுதி   மேன் புக்கர் பரிசை வென்றார். நூலில், இசைக்கலைஞர் பாப் மார்லியை ஒருவர் கொலை செய்ய முயல்வதை புனைவாக்கியிருந்தார். அதற்குப் பிறகு டார்க் ஸ்டார் எனும் தொடர்வரிசை நாவல்களை எழுத தொடங்கினார். பிளாக் லியோபேர்ட், ரெட்வோல்ஃப் என இரண்டு நாவல்கள் ஓடிடியில் தொடராக தயாரிக்கப்படவிருக்கின்றன. ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவிற்காக வந்தவரிடம் பேசினோம். மரபான வரலாற்றை எப்படி கற்பனையான புனைவாக மாற்றுகிறீர்கள்? நான் சிறுவயதில் இருந்து பல்வேறு வகையான கதைகள், கட்ட

பால்ய கால தோழியால் எதிர்மறை குணங்களைக் கொண்டவன் மனந்திருந்த வாய்ப்பு கிடைத்தால் - கதலோ ராஜகுமாரி

படம்
  கதலோ ராஜகுமாரி நரரோகித், நமீதா பிரமோத் இசை – இளையராஜா, விஷால் சந்திரசேகர்   சினிமாவில் வில்லனாக நடிக்கும் அர்ஜூன் சக்ரவர்த்தி, நிஜத்திலும் ஆணவம் பிடித்தவராக யாரையும் மதிக்காத இயல்புள்ளவராக இருக்கிறார். அவரை டேட்டிங்கிற்கு அழைத்த இளம்பெண், அவரது ஈகோ பற்றி விமர்சித்துவிட்டு உன்னோடு காதல் மட்டுமல்ல வாழ்வதும் கடினம் என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறாள். இதனால் அர்ஜூன் மனதளவில் தான் ஏன் இப்படி ஆனோம் என யோசிக்கிறார். அதற்கு விடையாக பள்ளியில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அதில் பாதிக்கப்பட்டவர், தன்னை அப்படி மாற்றிய சிறுவயது தோழியைத் தேடி கிராமத்திற்கு செல்கிறார். அவர் தனது தோழியைச் சந்தித்தாரா, தனது பிரச்னைக்கு தீர்வு கண்டாரா என்பதே கதை. நர ரோகித் நடித்துள்ள கதை என்பதற்காகவே பார்த்த படம். அவரும் ஏமாற்றவில்லை. ஆனால் கதை சொன்ன இயக்குநர் அவரை ஏமாற்றிவிட்டார். அர்ஜூன் சக்ரவர்த்தியாக, தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற வில்லன். ஆனால் அவர் சொல்லியதை அனைத்தும் இயக்குநர் கேட்பது என்பது நம்புகிறது போல இல்லை. தெலுங்கு சினிமா உலகமே ஹீரோக்களை நம்பித்தானே இருக்கிறது. இந்த நிலையில் வில்ல

செய்திகளில் தகவல் துல்லியம், தெளிவு அவசியம்!

படம்
  மாநகரில் ஓரிடத்தில் வன்முறை சம்பவம் நடைபெறுகிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களை அணுகி கட்டுரை ஒன்றை எழுதுகிறீர்கள் என வைத்துக்கொளவோம். அப்படி எழுதும்போது ஒருவர் அனுபவித்த துயரத்தை அதிகப்படுத்திவிடக்கூடாது. அதேசமயம் தேவையான கேள்விகளைக் கேட்டு தகவல்களைப் பெற்று எழுத வேண்டும். பெறும் தகவல்களில் தெளிவு, துல்லியம் அவசியம். சிலர் பேசும்போது முக்கியமான நபர்கள், சம்பவங்களைத் தவிர்த்துவிட்டு சில விஷயங்களைப் பெரிதுபடுத்தி பேசுவார்கள். இதைக் கவனித்து கட்டுரையில் செம்மை செய்வது முக்கியம். பெறும் செய்திகளை நடுநிலையாக எழுத முயல வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு, அரசு தரப்பு, எதிர்தரப்பு, என தகவல்களைத் தேடி கேட்டு தொகுத்து கட்டுரையாக செய்தியாக எழுத வேண்டும். வன்முறை சம்பவம் வழக்காக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தால், அதைபற்றி முன்முடிவாக எந்த கருத்தையும் கூறக்கூடாது. இப்படி கூறும் கருத்துகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பத்திரிகையாளருக்கும், வெளியீட்டு நிறுவனத்திற்கும் சட்டச் சிக்கலைக் கொண்டு வரலாம். பாதிக்கப்பட்ட சம்பவத்தில் பத்திரிகையாளரான நீங்கள் மையமாக இருந்தால், அதாவது பாதிக்கப்பட்டவராக இரு

வன்முறைச் சம்பவங்களை எழுதுவது எப்படி?

படம்
  இன்று உலகம் முழுக்க பத்திரிகையாளர்கள் பல்வேறு செய்திகளை எழுதுகிறார்கள். அதில் அதிகம் கவனம் பெறுவது மனிதர்களைப் பற்றிய செய்திகள்தான். வெற்றி, தோல்வி, மீண்டு வந்த கதைகள் என வைத்துக் கொள்ளலாம். இவற்றை எப்படி எழுதுவது என பார்ப்போம். ஜாதி, மதம், இனக்குழு, நிறம், பாலியல் என பல்வேறு வகையாக குறிப்பிடப்பட்டு மனிதர்கள் தாக்கப்படுகிறார்கள். இப்படி தாக்கப்பட்டவர்களைப் பற்றிய செய்திகளை எழுதும்போது, பெயர்களை வெளியிடவேண்டாம் என தொடர்புடையவர் கூறினால் அதன்படியே செய்தியை எழுத வேண்டும். ஏனெனில் செய்தி வெளியாகி அவரின் மீதமுள்ள வாழ்க்கை, மரியாதை பாதிக்கப்படக்கூடாது. முற்றிலும் அழிந்துவிடக்கூடாது.   பாலியல் வல்லுறவு, சீண்டல் காரணமாக குழந்தைகள் பாதிக்கப்பட்டால் முடிந்தளவு அவர்களின் பெயர், புகைப்படத்தை வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட நினைத்தால் பாதிக்கப்பட தரப்பிடம் உரிய அனுமதி வாங்கவேண்டும். இல்லையெனில் இந்த சம்பவம், பத்திரிகையாளருக்கு தண்டனை அளிக்கும் குற்றமாகவும் மாறலாம். வன்முறை சம்பவத்தை பதிவு செய்யும்போது எழுதும் மொழி, நடை என்பது சற்று மத்திய நிலையில் இருக்கவேண்டும். எந்த தரப்பிற்கும் ஆதரவாக அம

திருட்டு, கொலை ஆகியவற்றில் உள்ள உளவியல் கோட்பாடுகள்

படம்
  மக்கள் கூடும் இடங்களான மதுபானக்கடை, கிளப், பப் ஆகியவற்றில் எப்படியும் வன்முறை சம்பவங்கள் நடந்துவிடுவது வாடிக்கை. மது குடித்துவிட்டு மனிதர்கள் உணர்ச்சிகளை வெளியே கொட்டும்போது, பிறர் அதை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதனால் மதுவைத் தொடர்ந்து அடிதடி, கைகலப்பு,   கொலை வரை நீள்கிறது. மதுபானக்கடைகளைப் பொறுத்தவரை அடிப்பவர், அடிபடுபவர் என இருவருமே மது அருந்திய மது பிரியர்கள்தான். நாட்டின் தூண்களான குடிமகன்கள்தான்.   உளவியலாளர் ஹெண்டர்சன் வன்முறை என்பதை   கைதிகள், சிறை நிர்வாக அதிகாரிகள் என இரண்டு வகையாக பிரித்துக் காட்டுகிறார். குற்றம் செய்துவிட்டு உள்ளே வந்த கைதிகளை அடக்கி வழிக்கு கொண்டுவர, தனக்கேற்றாற்போல நடந்துகொள்ள வைக்க சிறைத்துறை   அதிகாரிகள் வன்முறையைப் பயன்படுத்துகின்றனர். இதற்காக சிறைக்கைதியை அடித்து உதைப்பது, தனிமைச்சிறையில் அடைப்பது ஆகியவற்றை செய்கிறார்கள். சிறை என்பது தனி உலகமாக சமூகத்திற்கு கட்டுப்படாத இடமாக உள்ளது. சிறைக்கு அடுத்து குடிநோயாளிகள் மறுவாழ்வு மையம், மனநல குறைபாடு கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஆகியவற்றில் நோயாளிகளின் மீதான வன்முறை என்பது

இளைஞர்களிடையே வன்முறை இயல்பு எப்போதும் இருப்பதுதான்

படம்
  வன்முறை எப்போடு இயல்பானதாகிறது? அதை நீங்கள் தினசரி வாழ்க்கையில் சந்தித்துக்கொண்டிருந்தால் ஒருவர் அடித்து நொறுக்கப்படுவதை, பிறரை நீங்கள் தாக்கி ரசிப்பதைக் கூட பின்னாளில் செய்யலாம். அந்தளவு மனம் அத்தகைய காட்சிகளால் நிரம்பியிருக்கும். மனதிற்கு முதல்முறை நடக்கும் வன்முறை அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை மனதை மெல்ல மரத்துப் போகச் செய்கிறது. கலைகளில் உயர்வு பெற்ற மேற்குநாடுகளில் அதற்கு இணையான போர் கொடூரங்கள், சித்திரவதைகள் நடந்துள்ளன. மனதிற்கே ஒருபுறம் கலையின் உயர்வு, மறுபுறம் கற்பனை செய்யவே பயப்படும் கொடூரங்களை நடத்த முடிகிறது வன்முறையால் ஒருவருக்கு சாகச உணர்வும், சமூகத்தில் அந்தஸ்தும் கிடைக்கிறது என்றால் எப்படியிருக்கும்? இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் வன்முறையை இயல்பானதாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று உளவியலாளர்களான வோல்ஃப்கேங், ஃபெராகுட்டி ஆகியோர் கூறினர். இதற்கு ஆதாரமாக பெரு நகரங்களில் இளைஞர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை நிறைய ஆய்வுகள் காட்டுகின்றன. வறுமை, இனக்குழு மோதல்கள், முரண்பாடுகள், விரக்தி ஆகியவற்றின் இறுதி வடிவமே வன்முறையாக உருவெடுக்கிறது. இப்ப

குற்றத்தைக் கண்டுபிடிக்க உதவும் உளவியல்!

படம்
  கொலை நடந்துவிட்டது என்றால் அதைக் கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் அரும்பாடு படுவார்கள். பல்வேறு துறைகளிலுள்ள திறன்களையும் அவர்கள் கொண்டிருந்தால் அல்லது நிபுணர்களின் துணை இருந்தால்தான் அவர்களால் உண்மையை அறிய முடியும். மானுடவியல், பொருளாதாரம், மருத்துவம், தத்துவம், உளவியல், சமூகவியல் என பல்வேறு துறைகளிலும் துப்பறிவாளர்கள் திறமை பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் வழக்கிலுள்ள இயல்புகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போகவும் அதிக வாய்ப்புள்ளது. குற்றங்களை ஆராய்ந்து அதனை துப்பு துலக்குவதில் முக்கியமான துறை, குற்றவியலாகும். இதிலும் கொலை, அதன் காரணம், ஆகியவற்றை கோட்பாடாக உருவாக்கி பிறகுதான் அதன் பின்னாலுள்ள உண்மையை அறிய முடியும். இதில் சில மாற்றுக்கருத்துகளும் உள்ளன. அதாவது, குற்றவியல் துறை அதன் சிறப்புத்தன்மைகளுக்காக சமூகவியலைச் சார்ந்துதான் இருக்கிறது என கூறி வந்தனர். ஆய்வாளர்கள் வோல்ஃப் கேங், ஃபெராகுடி ஆகியோர்,   1967ஆம் ஆண்டு, குற்றவியல் துறை அதன் கோட்பாடுகள், நுட்பங்களால் பிற துறைகளிலிருந்து வேறுபட்டு இயங்கும் தன்மையுடையது என கூறினர். குற்றங்களை முழுக்கவே உளவியல் சார்ந்து விளக்கிவிட முடிய

டிவி நிருபர் காதலைச் சேர்த்து வைக்க ஆடும் ருத்ர தாண்டவம் - பங்காரம்- தரணி

படம்
  பங்காரம் இயக்கம் தரணி இசை வித்யாசாகர் ஒளிப்பதிவு கோபிநாத் டிவி சேனலில் வேலை பார்க்கும் நிருபர், தீவிரவாதி ஒருவரை பேட்டி எடுக்கச் செல்கிறார். ஆனால் அந்த வேலையை டிவி உரிமையாளர் நினைத்தபடி செய்யாததால் வேலை இழக்கிறார். கூடவே வேறு வேலைக்கும் போகமுடியாதபடி சூழல் மாறுகிறது. இதை சரி செய்ய டிவிக்கு நிதி அளிக்கும் பெத்த ரெட்டி என்பவரை சந்திக்கச் செல்கிறார். அதுதான் படத்தின் முக்கியமான திருப்பு முனை. இதுவரையில்தான் படம் சற்று படமாக தெரிகிறது. அதற்குப் பிறகு, போட், ஜேபிஎல் என எந்த ஸ்பீக்கரை காதில் வைத்திருந்தாலும் நுவ்வு செப்பக்கூடாதுடா ரே, சம்பெய்ண்டா வாடே, நறுக்குத்தானு, ஏய்..என வில்லன் குழுக்கள்   எழுப்பும் கூச்சல்களால் உடலே அடிக்கடி அதிர்ச்சியில் தூக்கிப் போடுகிறது.   படத்தில் மீரா சோப்ரா இருக்கிறார். ஆனால் அவருக்கும் பங்காரத்திற்கும் காதல் போல பாடல்களை வைப்பார்கள். ஆனால் காதல் கிடையாது என்பதுதான் ட்விஸ்ட். ஆனால் படத்தில் இருக்கும் ஒரே அம்சம். சண்டைதான். கோடரியால் வெட்டுவது, கழுத்தை அறுப்பது, நெருப்பால் சுடுவது, மூங்கில் குச்சியால் நாயகின் வயிற்றில் குத்துவது என படம் நெடுக ரத்த க