இடுகைகள்

நாஜி கொடுமைகளை உலகறியச் செய்தவர்! - ஹென்ரிக் ராஸ்

படம்
போலந்து புகைப்படக்காரர் ஹென்ரிக் ராஸ் போலந்து நாட்டை நாஜிப்படையினர் ஆக்கிரமித்தனர். ஆண்டு 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். இப்போரின் விளைவாக 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு லோட்ஸ் கெட்டோ சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் யூத புகைப்படக்காரரான ஹென்ரிக் ராஸ், லோட்ஸ் கெட்டோ நகரில் பணியாற்றி வந்தார். அங்குள்ள சிறைக்கைதிகள் அடையாள அட்டை பணிக்கான புகைப்படங்களை இவரே எடுத்தார். இவர் யூதர் என்ற அடையாளம் தெரிந்தால் தானும் தன் குடும்பமும் சித்திரவதை செய்து கொல்லப்படுவோம் என்பதை அவர் அறிந்திருந்தார். 1944 ஆம் ஆண்டு கோடையில் மட்டும் 44 ஆயிரம் மக்கள் நாஜிப்படையின் சித்திரவதை, பட்டினியால் இறந்துபோனார்கள். இவர்களில் பலர் வதைமுகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டும், நச்சு வாயு சேம்பர்களில் அடைக்கப்பட்டும் இறந்தனர். இம்மக்களை பதிவு செய்த ராஸ் உதவியால்தான், அன்று நடந்த ஹிட்லரின் கொடுமைகளை உலகம் அறிந்தது. சிலுவைப்போர்களாலும மக்கள் வதைபட்டு இறந்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட இனத்தை பழிகூறி அதனை வேட்டையாடி அழித்த சுவடுகள் என்பது ஹிட்லரின் ஆட்சியில்தான் நடைபெற்றது. இறுதியில் ரஷ்ய செம்

ஹிப்பி திருவிழா - 1969 வுட்ஸ்டாக் கொண்டாட்டம்!

படம்
அரை நூற்றாண்டுக்கு முன்பு இசைக்கலாசாரம் ஒன்று தொடங்கியது. இதில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விநோதர்கள் கலந்துகொண்டனர். ஆம் இவர்கள்தான் இசை, ஆன்மிகம் என நாடோடியாக அலைந்து திரிந்த கேசுவல் ஹிப்பிகள். எல்எஸ்டி போர்டு வைத்து அதனை விற்று காசு சேர்த்து ஜமாய்த்த கில்லாடிகள். அமைதியும் இசையும் என்ற பெயரில் இந்த இசை விழாக்கள் அக்காலத்தில் மரபு ஆட்களையும் அமைப்புகளையும் அதிரடித்தன. அதைப் பலரும் பின்பற்றி இசையமைத்து பாடல்களும் வெளியிட்டனர். வுட்ஸ்டாக் இசைவிழாவை மைக்கேல் லாங், ஆர்டி கான்ஃபெல்ட், ஜோயல் ரோசன்மென், ஜான் ராபர்ட்ஸ் ஆகியோர்தான் தொடங்கினர். இவர்கள் பல்வேறு இசை நட்சத்திரங்களை அணுகி, நிகழ்ச்சி நடத்தக் கேட்டனர். ஆனால் அவர்கள் ஏதோ காரணத்தால் மறுத்துவிட்டனர். ஆனாலும் இளைஞர்களை சந்திக்க முடியும் காரணத்தினால் புகழ்பெற்ற சிலர் இசைந்தனர். இதன் விளைவாக, அவர்கள் புகழின் உச்சத்தைத் தொட்டனர். வால்கில் எனுமிடத்தில் விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அவர்களும் ஒரு கட்டத்தில் இசைவிழாவுக்கு இடம் தர மறுத்துவிட்டனர். பின் பெதல் பகுதியில் நிலமுள்ள பால்பண்ணை விவசாயி இடம் தர முன்வந்தார். அதற்கும்

நாய்களுக்கு உருவாகியுள்ள பரிணாம வளர்ச்சி தசைகள்!

படம்
ஆல்பா படம் ஓநாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவைப் பேசியது. ஓநாய்கள்தான் மெல்ல மனிதர்களிடம் பழகி வீடு, பண்ணை என காவல் காத்து மெல்ல நாய் என மாறியது என்று கூறப்படுகிறது. இன்றுவரையிலும் கூட பிற விலங்குகளை விட நாய் மனிதர்களோடு அந்நியோனியமாக உள்ளது. காசுள்ளவர் வீட்டு நாய், ஆடி காரில் உட்காருகிறது. காசில்லாத ரிக்சாவில் தூங்குபவரின் காலடியிலும் ஆதரவாக நாய் இருக்கிறது. இந்த எடுத்துக்காட்டை ஏன் கூறுகிறேன் என்றால், நாய்க்கு தேவையானது மனிதர்களின் அன்பு ஒன்றே. அது உங்களை காசிற்காக மதிக்காது. நீங்கள் அதன் மீது கொண்ட நேசத்திற்காகவே உங்கள் மீது விழுந்து புரண்டு விளையாட அழைக்கிறது. தற்போது ஓநாய்களின் கண்களில் இல்லாத தசைகள் நாய்க்கு உருவாகியுள்ளதாக  Proceedings of the National Academy of Sciences  என்ற   அறிவியல் இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. பிற விலங்குகள் மனிதனை நேரடியாக கண்ணோடு கண் பார்க்காது. முடிந்தளவு அப்படி பார்ப்பதைத் தவிர்க்கும். நாய் மட்டுமே தனக்கான அங்கீகாரத்தைப் பெற இயல்பாக மனிதனின் கண்களைப் பார்க்கும். அப்படிப் பார்க்காதே அது சண்டைக்கு வா என்று சொல்லுவதைப் போல என்ற

காஷ்மீரில் வல்லுறவும் கொலைகளும் அதிகரிக்கும்! - எழுத்தாளர் மிர்சா வகீத்

படம்
நேர்காணல் மிர்சா வகீத் இந்தியாவில் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பாக காஷ்மீரில் கடுமையான போராட்டம் வெடித்துள்ளது. அதனை ஒடுக்கும் முயற்சியில் ராணுவம் காவல்துறை உறுதியாக உள்ளன. அங்குள்ள பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாநில கட்சித்தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.இதற்கு முன்னோட்டமாக காஷ்மீர் வந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.  தற்போது அங்கு நிலைமை எப்படி உள்ளது என நேர்மையாக காட்டும் ஊடகங்கள் இந்தியாவில் கிடையாது. பிபிசி, அல்ஜசீரா, ராய்ட்டர்ஸ் மட்டுமே இதுதொடர்பான செய்திகளை சரியாக வெளியிட்டு வருகின்றனர். இரண்டு நாவல்களை வெளியிட்டுள்ள நாவலாசிரியர் மிர்சா, லண்டனில் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் காஷ்மீரில் வாழ்கின்றனர். அவரிடம் காஷ்மீரிலுள்ள நிலை குறித்துப் பேசினோம். நீங்கள் உங்களது பெற்றோரைச் சந்தித்தீர்களா? இல்லை. போன் வழியே தொடர்பு கொள்ள முடியவில்லை. இணைப்பு முடக்கப்பட்டுள்ளது. நெருங்கிய நண்பர் மூலம் தொடர்புகொண்டு பெற்றோரின் நலனை விசாரித்தேன். அவர் நலமாக இருக்கிறார் என்று கூறினார். அதன்பிறகுதான் நிம்மதியானேன். காஷ்மீரில் என்னதான்

தடுமாறும் தொழிற்சாலைகள்!- வழி என்ன?

படம்
இந்தியாவில் மாருதி, டாடா, மஹிந்திரா ஆகியோர் தமது வேலைநாட்களை குறைக்கலாமா என யோசித்து வருகின்றனர். காரணம் உலகம் முழுக்க ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கம். இது அமெரிக்காவில் 2007 ஆம் ஆண்டு ஏற்பட்டது போலத்தான். இதன் தாக்கத்தை சீனா, இந்தியா விரைவில் உணரும். ஜெர்மனி மற்றும் சீனாவில் ஏற்கனவே பாதிப்பின் தாக்கம் தொடங்கிவிட்டது. அங்கு உற்பத்தியாகும் பொருட்களை பெருமளவு வாங்குபவர்கள் அமெரிக்கர்கள்தான். இப்போது வர்த்தகப்போர் பிரச்னைகள் தலைதூக்கத் தொடங்கிவிட்டன. சீனா உடனடியாக தன் பொருட்களுக்கான சந்தையைத் தேடாதபோது, அதன் உற்பத்தி முடங்கி தொழிலாளர்கள் வேலையிழக்க வேண்டி வரும். அமெரிக்காவில் தேக்கநிலை முன்பிருந்தே இருப்பதால், இப்போது பெரியளவு பாதிக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால் சீனா அப்படியல்ல. 17 ஆண்டுகளில் இல்லாத அளவு தொழிற்சாலை உற்பத்தி குறைந்துள்ளது. பிரேசில், தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் இருக்கும் சூழலில் வேலையைக் காப்பாற்றிக்கொள்ளவே போராடி வருகின்றனர். இந்தியாவில் வாகனத்துறை 19 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இந்தியாவிலுள்ள நிசான் நிறுவனம்  ஆயி

ஊட்டச்சத்துக்குறைவால் இந்தியா தவிப்பது ஏன்? - ஸ்மிருதி இரானி

படம்
நேர்காணல் ஸ்மிருது இரானி பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர். இந்தியா 73ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. ஆனால் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படுகிறதே? பிரதமர் மோடி உருவாக்கிய போஷன் அபியான் திட்டம் மூலம் நாங்கள், ஊட்டச்சத்துக்குறைவை தீர்ப்போம். திட்டம் பற்றிய அறிக்கைகள் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம். நிதி ஆயோக்கின் அறிக்கையைப் பின்பற்றி இதனை செய்வோம். பிரதமரின் முக்கியமான திட்டம் என்கிறீர்களே? இந்திய அரசு மட்டும் இதனை செய்ய முடியாது. கூட்டாட்சி முறையில் மாநிலங்களும் இத்திட்டத்தில் இணைந்தால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியம். இந்தியாவின் ஜிடிபி விழுந்துவிட்டது. கலோரிகளின் அளவும் குறைந்து வருகிறது. குழந்தைகளின் உணவு பற்றி அரசு கவலைப்படுவதாகவே தெரியவில்லையே? பிரதமர் மோடி வாக்குவங்கிக்காக வேலை செய்பவரல்ல. புதிய இந்தியா இப்போதுதான் உருவாகிக்கொண்டு இருக்கிறது. பரிக்சா பே சாச்சா என்பதை உருவாக்கியது மோடிதானே? படிக்கும் குழந்தைகளுக்கு உள்ள மன அழுத்தம் பற்றி உணர்ந்த தால்தானே அப்படி திட்டங்களை உருவா

மயிலாப்பூர் டைம்ஸ் - அப்லோடை விட டவுன்லோடு முக்கியம்!

படம்
பிரம்மானந்தம் நாயக் படத்தில் ஜிலேபியாக.... மயிலாப்பூர் டைம்ஸ் -- இனிப்பு பரிதாபங்கள்! ஆபீஸ் செல்வது பெரிய சிரமம் இல்லை. புதன்கிழமை தாண்டினால் போதும். விகடன் வியாழன் வரும். படித்து சமாளித்தால் வெள்ளி குங்குமம். அதில் ரத்தமகுடம் குஜாலாக படிக்கலாம் என்பதுதான் பெரும்பாலான நேர நினைப்பு. ஆனால் நடப்பது அப்படியே தலைகீழாக இருக்கும். வாசிப்பு வெறி, ஐலைக் காமிக்ஸ் வலைத்தளத்தில் கூட முடியும். ஆனால் ஸ்நாக்ஸ் வெறி இருக்கிறதே? சென்னகேசவா காப்பாற்று என்றாலும் நாக்கு அத்தனை தந்திரங்களையும் வீணாக்கிவிட்டது. வீக் எண்டில் முளைத்த வில்லங்கம், என்னுடைய வயிற்றை களேபர பூமியாக்கியது. நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் மண்டையன் கடையை நெருங்கும்வரை. பஜார் தெருவிலுள்ள புகழ்பெற்ற கடைதான் அது. லட்டு, மிக்சர், பாதுஷா என மனசைக் கலைக்க அப்படியே நின்றேன். படியேறினால் கடை ஓனருக்கு என் முகம் தெரியும். ஏறினேன். லட்டு கால்கிலோ குடுங்க என்றேன். புன்சிரிப்புடன் பார்த்தவர், ஒருமணிநேரம் கழிச்சு வாங்கிக்கலாமே என்றார். என்னடாது, லட்டு கண்ணு முன்னால வெச்சுக்கிட்டு எதுக்கு ஒருமணிநேர

தடைகள் ஜனநாயக நாட்டை உருவாக்காது - சேட்டன் பகத்!

படம்
ஆபாச வலைத்தளங்களுக்கு தடை உதவாது! இந்திய அரசு, ஆபாச வலைத்தளங்களைத் தடைசெய்து உத்தரவிட்டது எனக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. காரணம் வளர்ந்த ஜனநாயக நாடுகள் இதுபோன்ற தடைகளை மக்கள் மீது விதிப்பதில்லை. காரணம், ஒன்றைப் பார்ப்பது, பார்க்காமல் இருப்பது என்பது தனிநபர் சுதந்திரம் தொடர்பானது. அதில் பெரும்பாலான உலக நாடுகள் தலையிடுவதில்லை. மக்களுக்கு பெரும் பிரச்னையாக இருப்பது,போதைப்பொருள் விற்பனை, ஆபாசப் படங்களில் குழந்தைகளை நடிக்க வைப்பது போன்றவைதான். இவற்றை அரசு சட்டங்கள் மூலம் தடுப்பது பயனளிக்கும். ஆனால் அரசு மக்கள் முடிவெடுக்கவேண்டிய விஷயங்களில் தடை போன்றவற்றை கொண்டு வரக்கூடாது. காரணம், நாம் இஸ்லாமிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இன்றுள்ள தொழில்நுட்பபடி, அரசின் தடை உத்தரவை மிக எளிமையாக உடைத்தெறிய முடியும். இதனை அரசு உணர்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை. உலகமயமாதல், தாராளமயமாக்கல் விதிகளால் உலகம் என்பது நெருக்கமாகி வருகிறது. இதில் எல்லைக்கோடுகள் நிலப்பரப்பில்தானே ஒழிய இணையத்தில் கிடையாது. இந்த நேரத்தில் மக்களின் தனிநபர் சுதந்திரத்தில் தடை என்பது தேவையி

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கான போராட்டம் நடந்ததா?

படம்
ஜம்மு காஷ்மீர் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களாக செயல்படவிருக்கிறது. சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தால் கட்டுப்படுத்தப்படும்படி மாநிலம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புகள் வரவில்லையா? ஊடகங்கள் எதிலும் இத்தகைய காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது.  அரசு விசுவாசம்தான் இதற்குக் காரணம். ஆனால் பிபிசி, அல்ஜசீரா ஆகிய டிவி நிறுவனங்கள் உண்மையை வெளிக்காட்டி விட்டன. பத்தாயிரம் பேர்களுக்கு மேல் பங்கேற்ற பேரணியைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டு, ரப்பர் மூடி கொண்ட தோட்டாக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். மேற்சொன்ன வீடியோக்கள் பொய் தேசபக்தி டிவி சேனலான ரிப ப்ளிக் டிவி கூறியது. கூடவே ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் இதற்கு சமூக வலைத்தளத்தில் போலிச்செய்தி என சப்பைக் கட்டு கட்டினர்.  உள்துறை அமைச்சகம் நடந்த போராட்டம் உண்மை. அதில் 20 பேர்தான் இருந்தனர் என விநோதமான காரணத்தைக் கூறியது. ஆனால் உண்மை என்ன என ஆல்ட் நியூஸ் வலைத்தளம் களமிறங்கி விளக்கியது. வீடியோவில் காணப்படும்  அங்கிருந்த விளம்பரப்பலகை, ஜீனப் சாயிப் பசூதி,  பேனரிலுள்ள போராட்ட வாச

வீழ்ச்சியில் சிக்கிய இந்திய ஆட்டோமொபைல் துறை!- பிரச்னை என்ன?

படம்
பொருளாதாரம் வாகனத்துறை சரிவிலிருந்து மீளுமா? இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை உற்பத்தி மற்றும் விற்பனையில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதற்கு இந்திய அரசு உயர்த்திய ஜிஎஸ்டி வரியும், வாகனங்களின் பதிவுக்கட்டண உயர்வும் முக்கிய காரணமாக உள்ளது. பத்து முதல் இருபது லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்களுக்கு பத்திரப்பதிவுக்கட்டணம் 8-16 சதவீதம் உயர்ந்துள்ளது. வாகனத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3கோடியே 20 லட்சம்பேர் பணியாற்றி வருகின்றனர். இத்துறையின் மதிப்பு 8.3 லட்சம் கோடியாகும். 2021ஆம் ஆண்டில் உலகளவில் மூன்றாவது பெரிய வாகனத்துறையாக இந்தியா மாறும் என்று ஆய்வுகள் கூறிவந்த நிலையில்தான் பெரும் சரிவு நடந்துள்ளது. அதிகரிக்கும் வேலை இழப்பு! விழாக்காலங்களில் அதிகரிக்கும் கார் மற்றும் பைக் விற்பனை கூட இந்த ஆண்டு மந்தமானதால், வேலையிழப்பு அபாயமும் ஏற்பட்டுள்ளது. ”ஆட்டோமொபைல் துறையில் முதலீடு இல்லை; தேவையும் இல்லை. வளர்ச்சி வானத்திலிருந்தா வரும்?” என்கிறார் பஜாஜ் ஆட்டோ நிறுவனரான ராகுல் பஜாஜ். இவரின் கூற்றை ஆமோதிக்கும் விதமாகவே கார் மற்றும் பைக் விற்பனை நிலவரங்கள் திகிலூட்டுகின்றன.

செய்திகளைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி ? மிஸ்டர் ரோனி மனிதர்கள் ஏன் செய்திகளைத் தெரிந்துகொள்வதில் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள்? காரணம் இது மரபணுரீதியான தன்மை.  மனிதர்களின் மூளையில் உணவுத்தேவைக்கான கேள்வி எழுப்பும் அதனை தேடச்சொல்லும் பகுதிதான் செய்திகள், உண்மை, ஃபேஸ்புக் கிசுகிசு, லைட்ஸ் ஆன் சுனில் பகுதியில் மஞ்சள்தேக நடிகை பற்றியும் அறிந்துகொள் என்று கூறுகிறது. எனவே இதெல்லாம் உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ளத்தான். அதனால என்னாகும என்று கேட்காதீர்கள். எதற்காவது உதவும் என வைத்துக்கொள்ளுங்களேன். நன்றி: பிபிசி