இடுகைகள்

ஜல்சா செய்வதற்கான டிரையல் முயற்சி! - 3 மங்கீஸ்

படம்
3 மங்கீஸ் 2020 தெலுங்கு இயக்கம் அனில்குமார் ஒளிப்பதிவு சன்னி தோமலா இசை இயக்குநரேதான். போன் டேட்டாவை வேஸ்ட் செய்துவிட்டோமோ என நினைக்க வைக்கும் படம். மூன்று நண்பர்கள், ஒரே லட்சியம். ஒரு பெண்ணையாவது படுக்கையில் வீழ்த்தி தன் பராக்கிரமத்தை காட்ட வேண்டுமென்று. ஒருவனை ஆபீஸ் பெண் அதிகாரி மடக்கி டேட்டிங்கிற்கு நேரம் சொல்கிறார்.  இன்னொருவனை, நிறுவன இயக்குநரின் மனைவி படுக்கையை பகிர்ந்துகொள்ள ஓகேவா என சம்மதம் கேட்கிறார். இன்னொரு சினிமா உதவி இயக்குநருக்கு, வீட்டுவேலைக்காரி மீது இன்ப வெறி. இந்த அட்டகாச லட்சிய வெறியைத் தீர்த்துக்கொள்ள முடிவெடுக்கிறார்கள். வண்டியை டெஸ்ட் ட்ரைவ் செய்தால்தானே மைலேஜ் எப்படி என தெரிந்துகொள்ள முடியும். இதற்காக, விலைமாது ஒருவரை காசு கொடுத்து வீட்டுக்கு வரச்சொல்லி மஜா செய்ய முயல்கின்றனர். அப்போது நேரிடும் விபத்து அவர்களை ஊழல் வெறிபிடித்த போலீசிடம் சிக்க வைக்கிறது. இதனால் அவர்களின் வாழ்க்கை என்னவாகிறது? என்பதுதான் கதை.   ஆஹா முதல்காட்சியில் அம்மா மகன் காட்சியைத் தவிர படத்தில் வேறு எந்த விஷயங்களும் உருப்படியாக இல்லை. ஐயையோ மேலே சொன்னதுத

தொப்பி போட்ட பூனை செய்யும் சேட்டை! - தி கேட் இன் தி ஹேட்!

படம்
தி கேட் இன் தி ஹேட் 2003 இயக்கம் போ வெல்ச் மூலக்கதை - தியோடர் சியஸ் தி கேட் இன் தி ஹேட் ஒளிப்பதிவு இம்மானுவேல் லூபெஸ்கி இசை டேவிட் நியூமன் ஆன்வில்லே என்ற ஊரில் நடைபெறும் கதை. குழந்தைகளுக்கான படம். ஜோன்ஸ் என்ற கணவர் இல்லாத பெண், ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு ஆண், பெண் என இரு பிள்ளைகள்(கான்ராட், சாலி) இருக்கின்றனர். இதில் கான்ராட் என்ற சிறுவன் சேட்டைக்காரன். இவனைக் கட்டுப்படுத்த அவன் தாய் அரும்பாடுபடுகிறார். இவரது தாய்க்கு ஸ்கெட்ச் போட்டு தன் கடன்களை அடைத்துவிட பக்கத்துவீட்டு ஆண் நண்பர் திட்டமிடுகிறார். ஜோன்ஸ் வீட்டில் அன்று ஆபீஸ் சந்திப்பு நடத்துவதாக ஏற்பாடு. அன்று அவர்களின் வீட்டிற்கு வரும் புதிய விருந்தினர் அனைத்து விஷயங்களையும் மாற்றிவிடுகிறார். அந்த சந்திப்பு நடைபெற்றதா, கான்ட்ராக்ட் குறும்புகள் செய்யாமல் இருந்தானா?என்பதுதான் கதை.  ஆஹா படத்தில் வரும் விஷயங்கள் அனைத்தும் ஃபேன்டசி என்பதால் ஜாலியாக ரசிக்கலாம். முடிந்தளவு தமிழில் பார்த்தால் சந்தோஷமாக நிறைய காட்சிகளை ரசிக்க முடியும். பெரிய பூனை வரும் காட்சிகள் அனைத்தும் பிரமாதமாக

இன்ஸ்டன்ட் காபி ரெடியாவது இப்படித்தான்!

படம்
pixabay காபி எங்களது பத்திரிகை அலுவலகம் உள்ள காம்ப்ளக்சை மணக்க வைப்பது சத்யா காபிக்கடைதான். இத்தனைக்கும் காபி தயாரித்து வழங்கும் கடை அல்ல. காபி பொடியை அரைத்து விற்கும் கடைதான். நூற்றுக்கணக்கு மேலான கடைகள் இருந்தாலும் அந்த கட்டடத்திற்கு அடையாளமாக அந்தக் காபிக்கடை மாறிவிட்டது.    கொஞ்சம் தள்ளி நடந்து வந்தால், மயிலாப்பூரில் டீக்கடைகளுக்கு செம போட்டியாக இருப்பது, லியோ காபி, கிரைண்ட் காபி, கோத்தாஸ் காபி கடைகள்தான். இதில் லியோ காபி, கிரைண்ட் காபி ஆகியவை காபி பொடியோடு காபியையும் தயாரித்து வழங்கத்தொடங்கிவிட்டனர்.  காபிகளில் இரண்டு வகை உண்டு. அராபிகா, ரோபஸ்டா. இதில் அராபிகா விலை அதிகம். மெதுவாக வளரும் காபி இனம். காஃபீன் அளவும் அதிகமாக உள்ளது.  காபிச்சொடி வளர்ந்து காபி கொட்டைகளை அறுவடை செய்வதற்கு ஐந்து ஆண்டுகள் தேவை. பச்சையாக இருக்கும் கொட்டைகளின் மேலோடு சிவப்பாக மாறியபின் அறுவடை தொடங்கும். சிவப்பாக உள்ள மேலோடு வெயிலில் காய வைத்து அகற்றப்படுகிறது. இதிலுள்ள பீன்ஸ் முதலில் பச்சையாகவே இருக்கும். பின் அதனை வறுத்து பக்குவப்படுத்தும்போது அதன் நிறம் கருப்பாக மாறுகிற

பழச்சாறு vs ஸ்மூத்தி Vs கார்பன் பானங்கள் எது சிறந்தது?

படம்
pixabay உடனுக்குடன் பிழியப்பட்ட பழச்சாறு, பழத்திலிருந்து எடுக்கப்பட்ட கான்சென்ட்ரேட் என இரண்டு இருக்கிறது. இவற்றில் எது நல்லது? இரண்டிலும் வித்தியாசம் ஏதுமில்லை. கான்சென்ட்ரேட்டில் கூடுதலாக சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதாவது ப்ரக்டோஸ். இது கலோரி அளவைக் கூட்டுகிறது. இது சிறுவர்களின் பற்களை பெருமளவு பாதிக்கிறது. பெப்சி, கோலா இவற்றைவிட பழரசம் சிறப்பானது என நினைப்பீர்கள். ஆனால் பழரசத்தில் சர்க்கரை அளவை குறைத்துக்கொண்டால் மட்டுமே நீரிழிவு போன்ற பிரச்னைகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும். இல்லையெனில் நீரிழிவு பிரச்னை பெரியவர்களுக்கு மட்டுமல்ல ப்ரூட்மிக்ஸ் குடிக்கிற சிறுவர்களுக்கும் வந்துவிட வாய்ப்பு உள்ளது. பழங்கள், காய்கறிகளை கலந்து செய்யும் ஸ்மூத்தி பழச்சாறுகளுக்கு நல்ல மாற்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவற்றை கவனமாக தயாரிக்கவேண்டும். ஒவ்வொரு பழங்களுக்கும் உள்ள தன்மையைப் பொறுத்தே அவற்றை ஒன்றாக சேர்க்கவேண்டும். இவற்றைக் குடித்தபின் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இல்லையெனில் இதிலுள்ள இயற்கையான சர்க்கரையும் கூட பற்களை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. பழச்சாறுகளையோ

ஒரு கப் தேநீரில் என்ன இருக்கிறது என தெரியுமா?

படம்
  உலகம் முழுக்க பல கோடி மக்களால் பருகப்படும் பானம் தேநீர். பிரிட்டிஷார் காலத்தில் அதிகம் பயிரிடப்பட்ட பணப்பயிர், இன்றளவும் முக்கியமான ஏற்றுமதிப் பொருளாக உள்ளது. பொதுவாக மக்கள் டஸ்ட் டீயை குடித்து வந்தாலும், இதில் ஆறு வகைகள் உள்ளன. கருப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை, ஊலாங், பு RCH  என ஆறு வகைகள் இன்று சந்தையில் உள்ளன. சூப்பர் மார்க்கெட்டுகளில் இவற்றை நீங்கள் வாங்கிக்கொள்ள முடியும். இல்லையெனில் அரசு கடைகளான டேட்டீ கிளைகளில் பல்வேறு வகை டீ வகைகள் கிடைக்கின்றன. காபியை விட டீயில் காஃபீன் அளவு அதிகம். ஆனால் தேயிலையை தூளாக மாற்றும் பல்வேறு படிநிலைகளில் காஃபீன் அளவு குறைந்துவிடுகிறது. ஒரு கப் டீயில் 50 மி.கி. காஃபீன் உள்ளது. அதேயளவு காபியில் 175 மி.கி. காஃபீன் உள்ளது. காரணம் தேயிலைக்கும், காபி கொட்டைகளுக்கும் உள்ள வேறுபாடுதான். இதனால்தான் டீயை விட்டுத்தர முடிந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். ஆனால் காபியை பலரும் விட்டுத்தர முடியாமல் அடிமையாக மாறக் காரணம் அதிலுள்ள காஃபீன்தான். இன்று டீயிலும் கூட பல்வேறு கலப்படங்கள் வந்துவிட்டன. டீ, காபி இயல்பாகவே உடலை ஊக்கமூட்டும் தன்மை கொண்டது.

மாற்று உணவுகளை நாம் தேடுவது அவசியம்!

படம்
மாற்று உணவுகளுக்கான தேவை எப்போதும் உள்ளது. பசு, ஆடு, கோழி ஆகியவற்றிலிருந்து இறைச்சியைப் பெற்றாலும் இதிலிருந்து வெளியாகும் கார்பன் அளவு அதிகம். எனவே, ஆய்வகங்களில் இறைச்சி செயற்கையாக தயாரிக்கப்பட்டு வருகிறது. நாளை இயற்கையாக கிடைக்கும் இறைச்சி கிடைக்காத சூழலில் ஆய்வக இறைச்சி பெரும் சந்தைப் பங்களிப்பை பெறும். மாற்று உணவுகளை தேட வேண்டுமா? இன்று உலகம் முழுவதுமே கூட அரிசி, கோதுமை, சோளம் என குறிப்பிட்ட உணவுப் பயிர்களே உள்ளன. அவற்றை மீண்டும் மீண்டும் விளைவித்துகொண்டிருக்கிறோம். நாளை இவை நுண்ணுயிரிகளால், இயற்கைப் பேரிடர்களால் தாக்கப்படும்போது பல்வேறு நாட்டு மக்கள் பட்டினி கிடக்க நேரிடும். எனவே தற்போதைய உணவிலுள்ள சத்துக்களைக் கொண்ட மாற்றைத் தேடுவது எதிர்காலத்திற்கு உதவும். குதிரை, கங்காரு, நாய், பன்றி, பாடும் பறவை ஆகியவற்றை உலகின் சில பகுதிகளில் கூறுபோட்டு மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டு வருகிறார்கள். இவற்றையா சாப்பிடுகிறார்கள் என்று ஆச்சரியப்பட ஏதுமில்லை. அதிலிருந்து வைரஸை பிற நாடுகளுக்கு அனுப்பிவிடாமல் இருந்தால் போதும் தெய்வமே? தெற்காசிய நாடுகளில் எலி, பெருச்