இடுகைகள்

கடும் போராட்டத்திற்கு பிறகு மீண்டு வந்த கோல்ஃப் புலி! - டைகர் உட்ஸ்

படம்
டைகர் உட்ஸ் டைகர் உட்ஸ் கடந்த ஆண்டு டைகர் உட்ஸோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். இருவரும் எங்கள் குழந்தைகள் உலகை எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றிப் பேசினோம். அப்போது எனது நான்கு வயது மகன் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதைக் கவனிப்பதாக கூறினேன். அதற்கு டைகர் உட்ஸ், தனது பிள்ளைகள் தான் கோல்ஃப் விளையாட்டில் வெல்வதை அவர்கள் பார்ப்பார்கள் என்று கூறினார். பதினொரு ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உட்ஸ், தனது 15 வது பட்டத்தை வென்று சாதித்தார். அவரின் போராட்டம் எனக்கு பெருமையாக இருந்தது. சில ஆண்டுகளாகவே அவர் பல்வேறு அறுவைசிகிச்சைகளால் ஓய்வில் இருந்தார். பலமணி நேரங்களை உடற்பயிற்சி நிலையத்திலும், கோல்ஃப் மைதானத்திலும் செலவழித்தார். எங்கு 15 வது பட்டம் வென்றாரோ அதே மைதானத்தில் அவர் தனது அப்பாவை 22 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டித்தழுவினார். ஆனால் இன்று அவர் வெற்றி பெற்றாலும் தனது பிள்ளைகளை கட்டித்தழுவ யாரும் அனுமதிக்கவில்லை. அவர் திரும்ப விளையாடி வெற்றி பெறுவது கடினம் என விளையாட்டு விமர்சகர்கள் கூறிய நிலையில் அவரது வெற்றி மகத்தானது. போராட்டங்கள் நிறைந்தவை. வலி நிறைந்தவை. தனது வெற்றி மூலம்

அமெரிக்க சாசர் விளையாட்டை உயரத்துக்கு கொண்டுபோன வீராங்கனை! - அலெக்ஸ் மோர்கன்

படம்
அலெக்ஸ் மோர்கன்  அலெக்ஸ் மோர்கன் சாசர் விளையாட்டில் மோர்கன் காட்டும் வேகமும், துணிச்சலும், புத்திசாலித்தனமும் அவரது விளையாட்டு மீதான காதலை அனைவருக்கும் சொல்லும். அவரின் சிறப்பான ஆட்டத்திறனும், அணிவீரர்களுக்கு இடையிலான உறவும்தான் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவரது அணி கோப்பை வெல்ல முக்கியமான காரணம். 31 வயதாகும் மோர்கன், தனது அணிக்கு அளிக்கும் உழைப்பும், பிற வீரர்களுடன் இணைந்து ஒருங்கிணைப்போடு விளையாடும் விளையாட்டு அற்புதமானது. மோர்கன் இதே வேகத்தில் விளையாடினால் அவர் நிறைய வெற்றிகளை அணிக்கு பெற்றுத்தர வாய்ப்புள்ளது. பனிரெண்டு வயதாகு இரட்டையர்களை பெற்றவர், நிச்சயம் அடுத்த தலைமுறைக்கு முக்கியமான ஊக்கமூட்டியாக இருப்பார் என்று நிச்சயம். அமெரிக்க அணியின் வெற்றிக்கு மோர்கன் அளிக்கும் உற்சாகம் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறேன். மியா ஹாம்       முகேஷ் அம்பானி முகேஷ் அம்பானி திருபாய் அம்பானி, இந்தியாவில் தொழில் குழுமத்தை நிறுவனர். அவரின் மூத்த மகன் முகேஷ் அம்பானி அதனை தன் தந்தையின் ஆசிர்வாதத்துடன் பிரமாண்டமாக வளர்த்து செல்கிறார். பல்வேறு துறைகளிலும் தனது காலடியை பதித்துள்ளார். இ

இந்தியாவில் மொபைல் போன் சேவையை மாற்றியமைத்த சாதனையாளர்கள்! மொபைல்சேவை@25

படம்
செல்போன் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகின்றன தகவல்தொடர்பை வலுப்படுத்திய தலைவர்கள்! இந்தியாவில் மொபைல்போன்கள் 1994இல் அறிமுகமாயின. அன்று அதனை வாங்க அதிக செலவு செய்யவேண்டியிருந்தது. மேலும் ஒரு நிமிடம் மொபைலில் பேச ரூ.18 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. எனவே, பணக்காரர்களுக்கு மட்டுமேயான வசதியாக மொபைல் போன்ற கருதப்பட்டது. லேண்ட்லைன் எனும் வீட்டுபோன் கூட ஊரில் வசதியானவர்கள் வீட்டில் மட்டும்தான் இருக்கும். இதில் பேசும் கட்டணம் தவிர்த்து மாத வாடகையையும் சேர்த்து கட்டவேண்டும். இதனால் பலரும் இந்த இணைப்பை துண்டித்தனர். பின்னாளில் ரிலையன்ஸ் குறைந்த விலைக்கு மொபைல்போன்களை இந்தியா முழுக்க விற்று சாதனை செய்தது. வயர்லெஸ் முறையில் செயல்படும் போன்களையும் ரிலையன்ஸ்தான் ஜனரஞ்சகப்படுத்தியது. ஆனாலும் சந்தையில் தாக்குப்பிடிக்கமுடியாமல் தோற்றுப்போனது. வெற்றி தோல்வி தாண்டி மொபைல்போன், சேவை நிறுவனங்களின் கட்டணம், புதிய தொழில்நுட்பங்கள் நம் கைக்கு வர ஏராளமான அதிகாரிகள், அமைச்சர்கள் உழைத்துள்ளனர். அவர்கள் யார் என்று பார்ப்போமா? சுக்ராம் பி.வி.நரசிம்மராவின் அமைச்சரவையில் தகவல்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர். ப

இணையம் வழியாக மக்களை இணைத்தவர்! - மார்க் ஸூக்கர்பெர்க்

படம்
மார்க் ஸூக்கர்பெர்க் மார்க் ஸூக்கர்பெர்க் உலகையே இன்று தனது நிறுவனத்தின் மூலம் மாற்றியமைத்துள்ள மார்க்கை, நான் 2004ஆம் ஆண்டு சந்தித்தேன். அப்போது அவர் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை வாங்கியிருந்தார். ஃபேஸ்புக்கிலும் கூட ஏராளமான நல்ல அம்சங்களை சேர்த்துக்கொண்டிருந்தார். தனது நிறுவனத்தின் மூலம் மக்களை எப்போதும் இணைந்திருக்க செய்தவர் மார்க். 15 ஆண்டுகளுக்கு முன்னர் அவரை நான் சந்தித்தபோது எப்படி அடக்கமாகவும் கூச்சம் கொண்டவராகவும் இருந்தாரே அப்படியேதான் இப்போதும் இருக்கிறார். கலிஃபோர்னியாவில் அவரது நவீனமான இல்லம் அமைந்துள்ளது. அவரது வாழ்க்கை எளிமையானது. நான் சமூக வலைத்தளத்தை கடுமையாக விமர்சிப்பவன். காரணம் அது மனித உறவுகளுக்கு இடையில் உள்ள பலவீனமான புள்ளிகளைப் பயன்படுத்தி லாபத்தில் கொழிக்கின்றன. இன்று ஃபேஸ்புக் ஏராளமான தகவல் கசிவு, அரசியல் சீர்குலைவு பதிவுகள், வெறுப்பு அரசியல், போலி செய்திகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்நிறுவனம் மீது ஏராளமான வழக்குகள் உலகமெங்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் கடந்து நாகரிகமான முறையில் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த அவர் உதவுவார்

மத்திய வங்கிக்கு ஏராளமான யோசனைகளை வழங்கி மக்களைக் காத்தவர்! - ஜெரோம் போவெல்

படம்
ஜெரோம் போவெல் ஜெரோம் போவெல் பொருளாதாரத்துறையில் முக்கியமான சாதனையாளர். தனியார் துறையில் சாதனைகளை செய்துவிட்டு பொதுத்துறைக்கு வந்தவர். அமெரிக்க அரசின் மத்திய வாரி உறுப்பினராக இவர் பதவிவேற்று ஏழு ஆண்டுகள் ஆகின்றன. கருவூலத்துறையிலும் ஜெரோம் அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார். மத்திய வங்கியின் பணியாளர்கள் நடைமுறை, நிதியை சேகரித்து வைக்கும் விதிகள், செயல்பாடு ஆகியவற்றை திறம்பட அறிந்தவர் ஜெரோம். தனது திறமை காரணமாக பணமதிப்பு கொள்கையை வகுத்து மக்கள் அவையில் உறுப்பினர்களுக்கு நிலையை தெளிவாக புரியவைத்துள்ளார். பணவீக்கத்தையும் கூட எளிதாக சமாளித்து அதனை கடந்து செல்ல உதவியுள்ளார். இவரது தலைமையின் கீழ் மத்திய வங்கி சிறப்பான நிலையை எட்டிப்பிடிக்கும். இது அமெரிக்காவில் உள்ள அனைத்து மக்களுக்கும் வணிகங்களுக்கும் உதவும். ஜேனட் யெல்லன்

விளையாட்டும் சமூக அர்ப்பணிப்பும் கொண்ட மகத்தான வீரர்! - லீப்ரோன் ஜேம்ஸ்

படம்
லீப்ரோன் ஜேம்ஸ் - யூடியூப் லீப்ரோன் ஜேம்ஸ் நான் ஜேம்ஸை பத்தாண்டுகளுக்கு முன்னர் சந்தித்தேன். அப்போது நாங்கள் பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவனத்தின் ஆண்டுக்கூட்டத்தை நடத்தும் முனைப்பில் இருந்தோம். அவருடன் நடந்த விளையாட்டில் நாங்கள் வென்றோம். அதற்கு முழு காரணம், அன்று எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்ததுதான். அப்போட்டியில் அவரது தலைமைத்துவ திறன்கள் எனக்கு நன்கு தெரிந்தன. புத்திசாலித்தனமான சிந்தனைகள் கொண்ட துடிப்பான வீரர். அவரின் திறமைக்கு நிச்சயம் வேகமாக செயல்படுபவர்களாக இருந்தால் ஆபத்தான வேறு முடிவுகளை எடுத்திருப்பார்கள். ஆனால் ஜேம்ஸ், தன்னை கட்டுக்குள் கொண்டு   வந்திருந்தார். அவர் தனது செயல்பாடுகளால் பல லட்சம் இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுத்து   வந்தார். தன்னை பெரிய பிரபலமாகவே எப்போதும் அவர் அடையாளம் காணவில்லை. என்னை அவர் பார்க்கும்போது அவரது ஊரிலுள்ள ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளி கட்டுவது பற்றி பேசினார். அதனை நான் ஏற்றேன். ஜேம்ஸிடம் என்னை ஈர்ப்பது, போட்டி இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி எப்போதும் முதலிலிருந்து தொடங்கலாம் என்ற வேட்கைதான். வாரன் பஃபட்

மக்களின் தகவல்களை பாதுகாக்க முயலும் பெண்! - வேரா ஜொரோவா

படம்
வேரா ஜொராவா - ரேடியா பிராக் வேரா ஜொரோவா 2006ஆம் ஆண்டு தவறான குற்றச்சாட்டுக்கு உள்ளாகி ஒருமாதம் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்திருந்தார் வேரா. அப்போதுதான் எப்படி சரியான தகவல்கள் இன்றி பல்லாயிரம் மக்களுக்கு அநீதி வழங்கப்படுகிறது என்பதை அறிந்தார். பின்னாளில் ஐரோப்பிய யூனியனின் நீதித்துறைக்கு தலைவர் ஆனார்..   அதனால் விதிமுறைகளை மீறிய டெக் நிறுவனங்களுக்கு அதிர்ச்சியூட்டும் பல்வேறு விதிகளைக் கொண்டுவந்தார். அதில் முக்கியமானது தகவல் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்தல் விதி. இதன்மூலம் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்களின் தகவல்களை பாதுகாக்க முடியும். இதனால் டெக் நிறுவனங்கள் பயனர்களின் அனுமதி இன்றி அவர்தம் தகவல்களை வியாபார நிறுவனங்களுக்கு விற்க முடியாது. இந்த வகையில் இவரின் செயல்பாடு முக்கியமானது. நாம் அனைவரும் அதனை பின்பற்றவேண்டியதும் கூட. 2014 முதல் 2019 வரை நீதித்துறை கமிஷனராக வேரா பதவி வகித்தார்.  மார்க்கரேட் வெஸ்டாகர்

இந்திய ரயில்வே விரைவில் தனியார்மயம் ஆகிறது! - டேட்டா கார்னர்

படம்
ரயில்வே தனியார்மயம் - வினவு ரயில்கள் தனியார்மயம்! விரைவில் 151 ரயில்கள் இந்தியாவில் தனிப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமாக செலுத்தப்படவிருக்கின்றன. இதற்கென 109 வழித்தடங்கள் இந்திய ரயில்வேயால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு ரயிலில் குறைந்தபட்சம் 16 கோச்சுகள் இணைக்கப்பட்டிருக்கும். 12 முனையங்களிலிருந்து ரயில்கள் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ரயில்களின் வேகம் 160 கி.மீ. என திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்கள் தனியார்மயம் ஆவதால், இத்துறையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. ஜூலை 1, 2020 ரயில்களை இயக்க முன்வரும் நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. நவ – டிச. 2020 ஏலத்தொகை அடிப்படையில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும். ஏப்ரல் 2021 ஒப்பந்தம் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஏப்ரல் 2023 தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ரயில்கள் இயங்கத் தொடங்கும்.  எகனாமிக் டைம்ஸ்

சமூக வலைத்தளத்தில் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை பதிவு செய்வதில்லை! -ஜெய்தீப் அகாலத்

படம்
ஜெய்தீர் அகாலத் - பாதாள்லோக்  ரீடர்ஸ் டைஜஸ்ட் நேர்காணல் ஜெய்தீப் அகாலத் இந்தி நடிகர் நீங்கள் ராணுவ அதிகாரியாக ஆகவேண்டும் என்று விரும்பியது உண்மையா? உண்மைதான். நான் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவன். அங்குள்ள மாணவர்கள் பெரும்பாலும் ராணுவத்தில் சேருவதற்குத்தான் முன்னுரிமை அளிப்பார்கள். அப்போது எனக்கும் அதே லட்சியம்தான் கண்முன்னால் இருந்தது. திரைப்படங்களில் நடிக்க வந்தது எப்படி? பாதுகாப்பு படைக்கான தேர்வை நான்கு முறை எழுதினேன். அனைத்திலும் தோல்வி, விரக்தி. மனம்போன போக்கில் சுத்தினேன். பின்னர் நாடகம் சார்ந்து இயங்க நினைத்தேன். அதற்காகவே கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பாடத்தை எடுத்து படித்தேன். இதனால் பல்வேறு பல்கலைக்கழகம் சார்ந்த போட்டிகளில் பங்கேற்க முடியும். பின்னர்தான் புனேவிலுள்ள டிவி மற்றும் திரைப்பட கல்லூரியில் சேர்ந்தேன். 2 கேங்க் ஆப் வாசிப்பூர் படத்தில் சாகித் கான் கதாபாத்திரத்தில் நடித்திருந்தீர்கள். அதற்கு எப்படி வரவேற்பு கிடைத்தது? நான் நடித்தபோது ஃபேஸ்புக் மிகவும் புகழ்பெற்றிருந்த து. பலரும் படத்தின் ஸ்டில்களை எடுத்துப்போட்டு என்னை பாராட்டியிருந்தனர். அனுராக் காஷ்யப்

ஓவியங்கள் மூலம் ஏழைகளுக்கு உணவு! - ஐஸ்வர்யா மணிவண்ணன்

படம்
aiswarya ஐஸ்வர்யா மணிவண்ணன் ஓவியங்கள் மூலம் கொரோனா பாதிப்புக்கு உதவி ! கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவெங்கும் தீவிரமாக பரவியுள்ளது . மக்களை பாதித்து , தொழில்துறையை முடங்க வைத்துள்ளது . இதனால் பலரும் பெரு நகரங்களை கைவிட்டு தங்களது சொந்த ஊருக்கே திரும்பத் தொடங்கியுள்ளனர் . வேலையில்லாத நாட்களில் உணவுக்கு இவர்கள் என்ன செய்வார்கள் ? சில மனிதர்கள் உணவை விலையின்றி வழங்கி இவர்களின் பசிப்பிணி தீர்த்து வருகின்றனர் . இன்றும் இந்திய ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி நகருகையில் 27 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே தடுமாறி வருகின்றனர் . இவர்களுக்கு எளிதாக உதவி செய்யும் வழியை ஐஸ்வர்யா கண்டுபிடித்துள்ளார் . இவர்களின் பசிப்பிணியை நீக்க இவரின் வலைத்தளத்தில் உள்ள ஓவியங்களை வாங்கினால் போதும் . இவரின் மைசா ஸ்டூடியோவில் (Maisha studio) வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள சிறுவர்கள் வரைந்த ஓவியங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன . அவற்றை வாங்குவதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள 260 குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது . “ நாங்கள் ஜூன் 19 க்கு முன்னரே 2.6 லட்ச ரூபாய் நிதி தி

கிராமப்புற பெண்களின் வாழ்க்கையை மாற்றிய ஸ்மார்ட்போனும், இணைய வசதியும்! - வெற்றிக்கதை

படம்
digital sathi indian express கிராமத்தில் நுழையும் தொழில்நுட்பம் ஓடிஷா மாநிலத்தைச் சேர்ந்த கிராமப்புற பெண்கள் இணையம் மூலம் கல்வி கற்று பல்வேறு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் . ஒடிஷாவின் கியோன்ஜார் என்ற மாவட்டத்திலுள்ள கிராமங்களில் 2 ஜி போன்கள்தான் பயன்பாட்டில் இருந்தன . ஆனால் அவற்றையும் ஆண்கள் பயன்படுத்தலாம் . பெண்கள் பயன்படுத்தக்கூடாது என்ற தடையே போடப்பட்டிருந்தது . யாராவது இந்த போன்களைப் பயன்படுத்தினால் அவர்கள் மீது கிராமசபை நடவடிக்கை எடுக்கும்படி நிலைமை இருந்தது . 2019 அக்கிராம பெண்களுக்கு மிகவும் மோசமாக அமையவில்லை . 4 ஜி வசதி கொண்ட இணையத்தை அங்குள்ள பெண்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர் . இதற்கு இளைஞர்கள் மற்றும் சமூக மேம்பாட்டு மையம் , கிராம தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பு ஆகிய தன்னார்வ அமைப்புகள் , கூகுளோடு இணைந்து மாற்றங்களை நிஜமாக்கியுள்ளன . இன்று இக்கிராமத்தைச்சேர்ந்த பெண்கள் 14 முதல் 60 வயது வரை அனைவருமே இணையத்தில் வீடியோக்களைப் பார்க்கின்றனர் . பதிவேற்றுகின்றனர் . செய்திகளை பல்வேறு செயலிகள் வழியாக பகிர்ந்துகொள்கின்றனர் . மேற்சொன்ன தன்னார்வ அமைப்புகள் இங்குள