இடுகைகள்

இறைச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரியாணி மவுசு பெற்றது எப்படி?

படம்
              அனைத்து காலங்களிலும் கலக்கும் பிரியாணி ! தமிழகத்தின் தவிர்க்க முடியாத உணவு என்றால் எதனைக் குறிப்பிடுவீர்கள் ? வேறு சாய்ஸே கிடையாது பிரியாணிதான் . அனைத்து தடைகளையும் தாண்டி தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது . பிரியாணி . எண்ணெய்யில் வறுக்கப்படும் உணவு என்பதுதான் இதற்கான அர்த்தம் . இறைச்சி , முட்டை கலந்த பிரியாணி அனைத்து இடங்களிலும் கிடைப்பதோடு , ஒருவருக்கு அல்லது ஒரு கூட்டத்திற்கே என்றால் கூட தாக்குப்பிடிக்கும் திருப்தி படுத்தும் உணவாக மாறியுள்ளது . அடிப்படையில் பிரியாணி என்பது பெர்சியா நாட்டு உணவு . மொகலாயர்களின் இந்திய வருகையின்போது இங்குள்ள மக்களுக்கு இந்த உணவு அறிமுகமாகிறது . பெரு நகரங்களில் சமைக்கப்படும் பிரியாணி , இடத்தைப் பொறுத்து மாறுபடும் . மதுரையில் சீரக சம்பா அரிசியில் அதிக கறியுடன் சமைக்கப்படும் பிரியாணி சென்னையில் பாஸ்மதி அரிசியில் பெரும்பாலும் சமைக்கப்படுகிறது . எப்படி அனைத்து மக்களிடமும் பிரியாணி வெற்றி பெற்றது என்றால் , கறி , முட்டையுடன் கூடிய சத்தான உணவு . முழு சைவ சாப்பாட்டை விட குறைந்த விலையில் வாங்கி சாப்பிட முடியும் . இத்

உலக மக்கள் அனைவருக்கும் ஒரே டயட்!

படம்
  உலக மக்கள் அனைவருக்கும் ஒரே டயட்!  பதினாறு நாடுகளைச் சேர்ந்த 30 ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில், உலக மக்கள் அனைவருக்குமான புதிய உணவு முறையைத் தயாரித்துள்ளனர். உலக மக்கள் தம் பொருளாதார வசதி, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு ஏற்ப பல்வேறு உணவுமுறைகளை கடைபிடித்து வருகின்றனர். இந்தியாவில் பல்வேறு கலாசாரம் கொண்ட மக்கள் நிலப்பரப்பு சார்ந்த உணவுமுறைகளைப் பின்பற்றுகின்றனர். இந்த உணவுகளிலும் ஒருவருக்கு தினசரி அவசியத்தேவையான சத்துகள் (தோராயமாக 2500 கலோரி) கிடைக்கிறதா என்றால் இல்லை என்று கூறவேண்டும்.  புதிய டயட் அறிமுகம் இதற்கு தீர்வாகத்தான் முப்பது ஆராய்ச்சியாளர்கள், மக்களுக்கு பொதுவான உணவுமுறையைப் பரிந்துரைத்துள்ளனர். இதுகுறித்த ஆய்வறிக்கை லான்செட் இதழில் வெளியாகி உள்ளது. கார்போ டயட் முதல் பேலியோ டயட் வரை எக்கச்சக்க டயட்கள் நடைமுறையில் உள்ளன. இப்போது எதற்கு புதிய டயட்? நாம் தற்போது சாப்பிடும் உணவு முறைகள் பூமிக்கும் நம் உடலுக்கும் ஏராளமான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதே இதற்கு காரணம்.  பசுமை இல்ல வாயுக்கள், செயற்கை உரங்கள்(நைட்ரஜன், பாஸ்பரஸ்), நிலவளம் சீர்குலைவு, உணவு வீணாதல் ஆகிய பிரச்னைகள் தற்போது பெரி

பால் வருமானத்திலிருந்து விவசாயிகள் வெளியே வரவேண்டும்! - பசு சாணம், கோமியத்தில் புதிய பொருட்கள்- அசத்தும் தொழில்முனைவோர்

படம்
          மாடுகளை இறைச்சிக்காக கொல்வது கர்நாடக மாநிலத்தில் சட்டம் மூலம் தடுக்கப்பட்டுள்ளது . டிசம்பர் 9, 2020 அன்று இதற்கான அறிவிப்பு வெளியானது . அமுலின் தலைவர் வர்கீஸ் குரியன் காலத்திலிருந்தே மாடுகளை இறைச்சிக்காக கொல்வதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் போராடி வந்துள்ளன . இதற்கு எளிமையான காரணமாக பால் வளத்தை இழந்த மாடுகளை விற்காதபோது , விவசாயி கடனாளி ஆகிவிடுவார் என குரியன் அன்றே பதிலடி கொடுத்துள்ளார் . இத்தனைக்கும் வெண்மைப் புரட்சி எப்படி சாத்தியமானது ? குரியனின் பல்வேறு திட்டங்கள் மூலமாகத்தான் . புதிய கர்நாடக அரசின் சட்டம் மூலம் ரூ .10 லட்சம் வரையில் அபராதங்களை விதிக்க முடியும் . பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று . காங்கிரஸ் கட்சி இதனை அரசியல்ரீதியான நோக்கம் கொண்டது , மக்களைப் பிரிப்பது என கருத்து சொல்லியிருக்கிறது . இச்சட்டம் மூலம் கால்நடைப்பண்ணைகளில் பசுக்களை திருடுவது குறையும் என விலங்கு பாதுகாப்பு அமைப்புகள் கூறியுள்ளன . விமர்சகர்கள் இது தேவையில்லாத சுமையை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் என்று கருத்து சொல்லியிருக்கின்றனர் .

பசுக்களுக்கு ஆதார் அட்டை வழங்கி அதன் உற்பத்தித்திறனை அதிகரிக்கவிருக்கிறோம்! - அதுல் சதுர்வேதி

படம்
        அதுல் சதுர்வேதி         விலங்குகள் நலத்துறை செயலர் அதுல் சதுர்வேதி விலங்குகள் மேம்பாட்டு நிதியகத்தை தொடங்கியிருக்கிறீர்களே ? இந்த அமைப்பு தனியார் துறையினர் பால் , இறைச்சிக்காக முதலீடு செய்வதற்கானது . இந்த அமைப்பு மூலம் திட்டங்களை மேம்படுத்துவதால் இறைச்சிகளை பதப்படுத்துவது எளிதாகும் . இதன் மூலம் பண்ணை விலங்குகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும் . வாடிக்கையாளர்களுக்கு தரமான இறைச்சி கிடைக்கும் . உற்பத்திதிறன் பால் உற்பத்தி ஆகியவற்றுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் ? நீங்கள் கூறும் உற்பத்தித்திறன் , பால் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் பல்வேறு காரணிகள் உள்ளன . நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள பசு ஆதார் மூலம் பசுக்களின் எண்ணிக்கை அவற்றின் உற்பத்தித்திறன் ஆகியவற்றை எளிதாக கண்டுபிடிக்க முடியும் , பால் உற்பத்தி என்பது கால்நடைகளுக்கு நோய் வராமல் இருப்பது மூலம்தான் சாத்தியம் . அதற்காக அனைத்து பசுக்களுக்கும் அதாவது 4 முதல் எட்டு வயதானவற்றுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம் . இதன்மூலம் அவற்றின் நோய் கட்டுப்படுத்தப்படும்

வெயிலை சமாளித்து வாழும் கிரிஸ்பிஆர் எடிட்டிங் செய்யப்பட்ட பசுக்கள்!

படம்
          சுற்றுச்சூழலை தாங்கும் மரபணு மாற்றப்பட்ட பசுக்கள்! கிரிஸ்பிஆர் தொழில்நுட்பம் மூலம் மரபணு மாற்றப்பட்டு பசு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மரபணு குறைவான வெயிலை ஈர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. வெப்பமயமாதல் பாதிப்பு அதிகரித்து வருவதால், மரபணுக்களை கிரிஸ்பிஆர் மூலம் மாற்றுவது, அவற்றின் பாதிப்பை குறைக்க உதவும். இம்முறையில் கால்நடைகள் வெப்பத்தை எதிர்க்கமுடியும். அதன் நிறத்தை நீர்த்துப்போன முறையில் அமைப்பதன் மூலம் சுற்றுச்சூழலை தாக்குப்பிடிக்க முடியும் என்கிறார் நியூசிலாந்தைச் சேர்ந்த கோய்ட்ஸ் லைபிள். இவர் ஏஜி ரிசர்ச் என்ற ஆய்வுமையத்தைச் சேர்ந்தவர். இப்போது நியூசிலாந்தைச் சேர்ந்த பசுக்கள் 20 சதவீதம் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு கருவுறுதல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு கன்று ஈனுவதோடு அவற்றின் பால் உற்பத்தியும் பண்ணைக்கு தேவைப்படுகிறது. வெயில் நேரத்தில் கன்று ஈனுவது கடினமாகி வருகிறது. கருப்பு நிறத்திலுள்ள கால்நடைகள் வெப்பத்தினால் அதிகம் பாதிப்பு அடைகின்றன. எனவே நிறத்தின் அடர்த்தி குறைந்த கால்நடைகள் இருப்பது அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். எனவே இதற்கு  காரணமான பிஎம்இஎல

எதிர்காலத்தில் உணவு எப்படியிருக்கும்? டேட்டா கார்னர்

படம்
  cc உணவு இனி எதிர்காலத்தில் நமக்கு பிடித்த உணவு என்று ஒன்றை சாப்பிட முடியாது என்றே கிடைக்கும் செய்திகள் நினைக்க வைக்கின்றன. பொதுவாக நமக்கு பிடித்த காய்கறிகளை சாப்பிடுகிறோம். இறைச்சி பிடித்திருக்கிறவர்கள் அதனை சாப்பிடுகிறார்கள். ஆனால் இனி கார்பன் வெளியீடு குறைவாக உள்ள பொருட்களை சாப்பிடச்சொல்லி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தலாம். அதனை அரசு விதிகளாக கூட மாற்றலாம். குறிப்பிட்ட விளைபொருட்களை விளைவிக்க கார்பன் வெளியீடு அதிகரிக்கிறதா என்று பார்த்து அதனை ஸ்டிக்கராக ஒட்டிக்கூட பொருட்களை விற்பார்கள். உணவகங்களில் கார்பன் வெளியீடு அதிகம் கொண்ட இறைச்சி உள்ளிட்ட உணவுகளுக்கு அதிக வரி விதிக்கப்படலாம். பிரான்சில் நடந்த யெல்லோ வெஸ்ட் போராட்டம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? எரிபொருட்களால் இயங்கும் வாகனங்களுக்கு கார்பன் வரியை இம்மானுவேல் மாக்ரான் விதித்தார். நாடே போராட்டங்களால் தடுமாறிவிட்டது. அதுபோன்ற சமாச்சாரங்கள் உணவு விஷயங்களில் நடைபெறலாம். குறிப்பிட்ட பெருநிறுவனங்களின் கைகளில் விவசாய நிலங்கள் செல்லும்போது, அவர்கள் இதனை சாத்தியப்படுத்துவார்கள். அதாவது, மக்கள் என்ன சாப்பிடவேண்டும் என்பதை முடிவு செய்யும் அத

இறைச்சி பற்றாக்குறை ஏற்படுமா?

படம்
pixabay இன்று பெரும்பாலான இறைச்சி உணவுகள் நமக்கு பண்ணை விலங்குகளின் மூலமாக கிடைக்கிறது. காய்கறிகள், பருப்புகள், பால் பொருட்கள் மூலம் குறிப்பிட்ட சத்துகள் கிடைத்தாலும் உடலில் அவசிய வளர்ச்சிக்கு தேவையான புரதம் இறைச்சி மூலமே கிடைக்கிறது. இது அறிவியல் உண்மை. சிலர் தீவிரமான அரசியல் கருத்தாக கருத்தியலாக உணவைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இந்த கருத்து கொண்டவர்கள்தான் நடப்பிலும் எதிர்காலத்திலும் இந்தியாவில் மதிய உணவுத்திட்டத்தை வழிநடத்துபவர்களாக உள்ளனர். இப்போதே உணவில் பூண்டு, வெங்காயம் தவிர்த்த உணவுகளை தயாரித்து வழங்கத்தொடங்கிவிட்டனர். இப்போது பண்ணை விலங்குகள் தரும் இறைச்சி உணவு பற்றிய தகவல்களை பார்ப்போம். பொதுவாக கட்டி வைத்து வளர்க்கப்படும் பசு, பன்றி பெரியளவு ஊட்டச்சத்து கொண்டவையாக இருப்பதில்லை. அவை அதன் போக்கில் திரிந்து புற்களையும், பருப்புகளையும், புழுக்களையும் சாப்பிட்டு வளரும்போதுதான் அதன் இறைச்சி நுண்ணூட்டச்சத்துகள் கொண்டதாக மாறுகிறது. சாதாரணமாக வீடுகளில் வளர்க்கப்படும் பன்றிக்கு புற்கள், இலைகள் ஆகியவையே உணவு. இதனால் இதன் இறைச்சியில் ஒமேகா 3 சத்துகள் காணப்படுகின்றன.

பசியில் தவிக்கும் உலகம்!

படம்
pixabay நாம் கடந்த அறுபது ஆண்டுகளாக பசியோடு போராடி வருகிறோம். இந்திய அரசு ரேஷன் கடைகள் மூலம் பல்வேறு உணவுப்பொருட்களை வழங்கினாலும், அவற்றை மக்கள் வாங்க முடியாத அளவுக்கு விலையை சர்வதேச முதலாளிகளோடு செய்துகொண்ட ஒப்பந்தப்படி மாற்றி வருகிறது. அதன் தரத்தை குறைத்து வருகிறது. இதே நேரத்தில் இந்திய உணவுக்கழகம் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து அதனை பாதுகாக்கும் வசதியின்றி வீணாக்கி வரும் செய்திகளையும் படித்திருப்பீர்கள். பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநில மக்கள் இன்னும் கூட ரேஷன் உணவுப்பொருட்கள் கிடைக்காமல் குழந்தைகளை பலிகொடுத்து வரும் செய்திகளை வாரத்திற்கு ஏதேனும் தேசிய நாளிதழ் செய்தி வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 1960களில் மக்களுக்கு சரியானபடி உணவுப்பொருட்களை வழங்கமுடியாத பிரச்னை எழுந்தது. இதனை பால் எல்ரிச்என்ற எழுத்தாளர் 1968ஆம் ஆண்டு எழுதிய தனது தி பாப்புலேசன் பாம் என்ற நூலில் விவரித்துள்ளளார். இந்த நிலையை சமாளிக்கவே, பசுமை புரட்சி உருவானது. இது வேறு ஒன்றும் இல்லை. மாடுகளால் உழுத நிலத்தை ட்ராக்டர் கொண்டு உழுவது, இயற்கை உரங்களைப் பயன்படுத்தாமல் வேதி உரங்களைப் பயன்படுத்துவத

மாற்று உணவுகளை நாம் தேடுவது அவசியம்!

படம்
மாற்று உணவுகளுக்கான தேவை எப்போதும் உள்ளது. பசு, ஆடு, கோழி ஆகியவற்றிலிருந்து இறைச்சியைப் பெற்றாலும் இதிலிருந்து வெளியாகும் கார்பன் அளவு அதிகம். எனவே, ஆய்வகங்களில் இறைச்சி செயற்கையாக தயாரிக்கப்பட்டு வருகிறது. நாளை இயற்கையாக கிடைக்கும் இறைச்சி கிடைக்காத சூழலில் ஆய்வக இறைச்சி பெரும் சந்தைப் பங்களிப்பை பெறும். மாற்று உணவுகளை தேட வேண்டுமா? இன்று உலகம் முழுவதுமே கூட அரிசி, கோதுமை, சோளம் என குறிப்பிட்ட உணவுப் பயிர்களே உள்ளன. அவற்றை மீண்டும் மீண்டும் விளைவித்துகொண்டிருக்கிறோம். நாளை இவை நுண்ணுயிரிகளால், இயற்கைப் பேரிடர்களால் தாக்கப்படும்போது பல்வேறு நாட்டு மக்கள் பட்டினி கிடக்க நேரிடும். எனவே தற்போதைய உணவிலுள்ள சத்துக்களைக் கொண்ட மாற்றைத் தேடுவது எதிர்காலத்திற்கு உதவும். குதிரை, கங்காரு, நாய், பன்றி, பாடும் பறவை ஆகியவற்றை உலகின் சில பகுதிகளில் கூறுபோட்டு மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டு வருகிறார்கள். இவற்றையா சாப்பிடுகிறார்கள் என்று ஆச்சரியப்பட ஏதுமில்லை. அதிலிருந்து வைரஸை பிற நாடுகளுக்கு அனுப்பிவிடாமல் இருந்தால் போதும் தெய்வமே? தெற்காசிய நாடுகளில் எலி, பெருச்

மீன் பிடிப்பதைத் தடை செய்தால் என்னாகும்?

படம்
மிஸ்டர் ரோனி மீன்களைப் பிடிப்பதை தடை செய்துவிட்டால் என்னாகும்? ஓராண்டிற்கு மீன்களை நாம் இருபது கிலோகிராமிற்கு மேல் உணவாக கொள்கிறோம். ஏறத்தாழ பிற கோழி, ஆடுகளை விட அதிகமாக மீன் உணவுகளை மக்கள் சாப்பிடத் தொடங்கியுள்ளனர். இரண்டு மடங்கு வேகமாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இயற்கை நம் உணவுத்தேவைய நிறைவேற்றுகிறது. அதற்காக அதனைப் பயன்படுத்துவதும் தவறில்லை. ஆனால் அதிகளவு மீன்களை பிடித்துக்கொண்டே இருந்தால் கடல் பரப்பு கடுமையான பாதிப்பைச் சந்திக்கும். கடல் மாசுபாடும் ஏற்படும். நாற்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீன்களை பிடித்து அதன் வழியாகவே தங்கள் வாழ்வை நடத்தி வருகிறார்கள். மீன்பிடிக்க தடை விதித்தால் இவர்களின் வாழ்விற்கு அரசு வழிகண்டுபிடிக்கவேண்டும். மேற்குலகில் சிவப்பு இறைச்சியையும் சோயா பொருட்களையும் புரத  சத்திற்காக நம்பியுள்ளனர். தெற்காசியாவில் புரதம் பெறுவதற்கான மீன்களையே பெரும்பாலானோர் நம்பியுள்ளனர். இதற்காக கடலில் மீன்களைப் பிடிக்க சில மாதங்கள் தடை விதிக்கலாம். இதன்மூலம் மீன் வளம் முற்றாக அழியாமல் காப்பாற்ற முடியும். மீன் பிடிக்க செல்பவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்

இறைச்சி சுவையில் சைவ பலகாரங்கள் எப்படி உருவாயின?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி இறைச்சி சுவையில் முறுக்குகள் எப்படி உருவாகின்றன? இறைச்சி சுவையில் உருவாகும் பல்வேறு பிஸ்கெட்டுகள், முறுக்குகள் சைவ வகையைச் சேர்ந்தவைதான். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கு நாடுகளில் 2013 ஆம் ஆண்டு தொடங்கின. இன்று பல்வேறு இறைச்சி சுவையில் தின்பண்டங்களைத் தயாரித்து வருகின்றனர். இறைச்சியில் உள்ள அமினோ அமிலங்கள்தான் அதன் மணத்திற்கு காரணம், இவற்றை சூடுபடுத்தும்போது இறைச்சிக்கான தன்மை உணவில் உண்டாகிறது. இதனை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து சைவ உணவுகள் ரெடியாகின்றன. அப்படியே அல்ல. தாவரங்களிலுள்ள அமினோ அமிலங்களான எல் - சிஸ்டெய்ன் எனும் அமினோ அமிலத்தை இதற்காக பயன்படுத்துகின்றனர். இதன்விளைவாக சைவத்திலும் நிறைய தின்பண்டங்கள் புதிய மணம் சுவையில் சாப்பிடக் கிடைக்கின்றன. நன்றி - பிபிசி

கலைந்துபோன கனவு - இந்திய சுயராஜ்ஜியம் - காந்தி

படம்
pixabay இந்திய சுயராஜ்ஜியம் காந்தி ரா.வேங்கடராஜூலு இன்று இந்தியா பெரும் சிதைவில் உள்ளது. கலாசாரம், மதிப்பீடுகள் என அனைத்திலும் பிரதானமாக பணமே உள்ளது. மேலும் ஒருவர் கூறும் கருத்தை மற்றொருவர் பயத்துடன் ஆமோதிக்க வேண்டிய  கட்டாயம் உள்ளது காரணம், கருத்தை கூறுபவரின் பின்னே ஆயுதங்களுடன் கும்பல் நிற்கிறது. இவர்களின் தலைவர் ஆல் இஸ் வெல் என்று அயல்நாட்டில் சொல்லும்போதே, உள்நாட்டில் இறைச்சி சாப்பிட்ட காரணத்திற்காக ஒருவர் கட்டி வைத்து அடித்துக் கொல்லப்படுகிறார். காரணம், அவர் சிறுபான்மையினர் என்ற ஒரே காரணம்தான். உ.பியில் மதிய உணவுத் திட்டத்தில் நடந்த  ஊழல் உண்மையைச் சொன்ன பத்திரிகையாளர்  மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதியப்படுகின்றன. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று இனி கூறுவது கஷ்டம். இந்து கும்பலை விரட்டி, கலவரத்தை ஒடுக்கி அமைதியை ஏற்படுத்திய போலீஸ்காரர்,  திட்டமிட்டு கொலை செய்யப்பட மாநில முதல்வரே உதவுகிறார்.  இதுபோன்ற சிதைவுகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன. மற்றொரு அபாயம், அடிப்படைவாத தலைவர்கள் ஜனநாயகப் பூர்வமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சர்வாதிகாரத்த

இறைச்சி மட்டுமே உணவு! சரியா - தவறா?

படம்
இறைச்சி மட்டும் உணவாக சாப்பிடலாமா? இறைச்சி மட்டும் உணவாக எடுத்துக்கொண்டால் பல் விளக்க வேண்டியதில்லை. மாவுப்பொருட்களை சாப்பிடுவதால்தான் நாம் பற்களில் ஒட்டும் இறைச்சியை அகற்ற  பல்விளக்க வேண்டியிருக்கிறது. 1928 ஆம்ஆண்டு நடைபெற்ற ஆராய்ச்சிப்படி இரு ஆண்களுக்கு உணவாக இறைச்சி மட்டுமே வழங்கப்பட்டது. இதில் ஆய்வு இறுதியில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படப்படவில்லை. அதாவது நீண்டகால நோக்கில் நீங்கள் இறைச்சியை உணவாக எடுத்துக்கொள்ளலாம். நன்றி: பிபிசி