இடுகைகள்

உலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொறியாளரின் சுதந்திர வேட்கையை உடைத்து நொறுக்கும் மத, அரசியல் அமைப்புகளின் கோர முகம்! ரோஸ் ஐலேண்ட் 2020

படம்
                ரோஸ் ஐலேண்ட் சுதந்திரமாக வாழ நினைக்கும் பொறியாளரின் கனவை அரசியலும் மதமும் இணைந்து எப்படி அழிக்கின்றன என்பதுதான் கதை.  இத்தாலியில் வாழும் பொறியாளர் ஜார்ஜியா ரோஸ். இவருக்கு தனித்துவமாக வேலைகளை செய்வது பிடிக்கும். எனவே, பிற பிராண்டு வண்டிகளை வாங்கி நம்பர் பிளேட் வைத்து ஓட்டாமல் தானே மோட்டார் காரை வடிவமைத்து அதனை ஓட்டிச்செல்கிறார். இவரது கனவு பெரியது. ஆனால் அதனை உலகம் புரிந்துகொள்வதில்லை. ஏன்  வழக்குரைஞராக இருக்கும் அவரது காதலி கூட புரிந்துகொள்வதில்லை. ஆனால் அவர் அதற்காகவெல்லாம் கவலைப்படவில்லை. அப்படியா ஃபைன் என கடந்துபோய்விடுகிறார். தான் சுதந்திரமாக இருப்பதோடு பிறரும் அப்படி வாழும்படி ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என முடிவு செய்கிறார். இதற்கு காதலி  கோபத்தில் திட்டும் ஒரு வாக்கியம்தான் காரணமாக உள்ளது. நீ வேறு உலகத்தில் வாழ்கிறாய். நானும் நீயும் ஒன்றாக வாழ முடியாது. நீ ஏதாவது சாதிக்கணும்னா அதை உன்னுடைய உலகில் உருவாக்கிக்கொள் என திட்டிவிட்டு சென்று செல்கிறாள் கேப்ரியெல்லா. அந்த வாக்கியம் ரோஸை அதிகம் யோசிக்க வைக்கிறது. எனவே, உடனே தனது தொழிலதிபர் நண்பனைத் தொடர்புகொள்கிறான். அதி

ஜனநாயக இந்தியா - ஜவாகர்லால் நேரு உரை! - இடைக்கால அரசு பற்றிய நேருவின் உரை மொழிபெயர்ப்பு!

படம்
            ஜனநாயக இந்தியா  ஜவாகர்லால் நேரு உரை  தமிழில் வின்சென்ட்காபோ இடைக்கால இந்திய அரசு நண்பர்களே தோழர்களே ஜெய்ஹிந்த் . ஆறு நாட்களுக்கு முன்னர் நான் இந்திய அரசின் நிர்வாக அலுவலக அறையில் அமர்ந்து சக அதிகாரிகளோடு பேசிக்கொண்டிருந்தேன் . முழுமையான சுதந்திரம் பெற்று தொன்மை நிலத்திலிருந்து அரசு உருவாகியிருந்தது . அதற்கு வாழ்த்து்கள் தெரிவித்து உலக நாடுகளிலிருந்தும் , இந்தியாவின் மூலை முடுக்குகளிலிருந்தும் ஏராளமான வாழ்த்துகள் வந்துகொண்டிருந்தன . பலர் ஏன் புதிய அரசு அமைந்த வரலாற்று தருணத்தை கொண்டாடவில்லை என்று கேட்கின்றனர் . காரணம் , நாம் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரத்தை பெற்றாலும் நாம் நினைத்த லட்சியத்தை இன்னும் அடையவில்லை . மக்கள் இந்த உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டுமென்று நான் நினைக்கிறேன் . நமது பயணத்தில் நிறைய தடைக்கற்களும் , சவால்களும் எதிர்கொள்ள நேரிடும் . இப்பயணத்தில் பலவீனத்தை அல்லது மனநிறைவை உணர்ந்தோம் என்றால் அத்தோடு பயணம் முடிவுக்கு வந்துவிடும் . கல்கத்தாவில் சகோதர ர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதை மறக்கமுடியாது . அச்சம்பவம் நமது இதயத்த