இடுகைகள்

ஐஸ்ஹவுஸ் குறிப்புகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேடலும் தேடல் நிமித்தமும்

படம்
                                                    தேடலும் தேடல் நிமித்தமும்                                        ஒரு ஊரில் அது முற்றிலும் அந்நியமாக இருக்கையில் அதனைத் தேடி அதனுள் ஒரு இடத்தை உறுதி செய்து நிழலில் அமருவது பெரும்பாடு. அப்படி அமர்ந்தவர்களின் உதவியில் அமருவது அதன் பின் வருபவர்களின் வழக்கம். நகரம் கிராமத்தின் பல மனிதர்களை வசீகரித்து இழுக்கிறது. ஆனால் அந்தக் கவர்ச்சியும் வசீகரமும் மாநகரத்தில் வாழும் சில நாட்களிலேயே அவர்களுக்கு பிடிக்காது போய்விடும். காரணம் பொருள் தேடும் பரபரத்து தடதடத்து பாயும் காட்டாற்று வாழ்க்கையில் இங்கே முகம் கொடுத்து பேச, புன்னகைக்க யாரிருக்கிறார்கள் இங்கே?  பெரும்பாலான  சமயங்களில் கடற்காற்றும் வானமும் துணையாக நிற்கின்றன. ஒவ்வொரு மனிதனும் ஏன் நகரத்தில் சலனமில்லாது மோட்டார்சைக்கிளை சிறிதும் கவனமேயில்லாது ஏதோ ஒரு வகையில் மற்றவர்களை ஈர்க்கும்படி வேகமாக ஓட்டிச்செல்கிறார்கள்? சைலன்ஸரின் ஒலியை மாற்றியமைத்து அரசியல் மேடையின் ஆபாச கூச்சல்களுக்கு இணையாக அதனை நம் காதில் கேட்க வைக்கிறார்கள்? அனைத்திற்கும் காரணம் உண்டு.                 நகரங்களி

நான் ஏன் விவசாயம் செய்யமாட்டேன்?

படம்
                    நான் ஏன் விவசாயம் செய்யமாட்டேன்?                    சி.ஏ படிப்பை வெற்றிகரமாக முடித்தவுடன் நண்பர் கதிரவன் என்பவர் தான் ஒரு அறக்கட்டளை நிறுவி ஏதாவது உதவிகளைச் செய்வதாக  கூறினார். ஆனால் நான் அதை பத்தாவது, பிளஸ் டூ மாணவர்களின் உற்சாக உளறல்களாக அப்போது நினைக்கவில்லை. ஆனால் அதன் பின் எனது வாழ்விலும், அவரது வாழ்விலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. இன்று நாங்கள் ஒன்றாக சந்தித்துப் பேசும்போது மூலமான கொள்கை எண்ணங்கள் செயல்பாடு என்பதிலேயே பெரும் மாற்றத்தைப் பார்த்தேன். என்னைப்போல அவர் இல்லை. அவருக்கு  கிராமத்தில் நிலங்களும் உண்டு. வழக்குச் சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கிறது. அதிலும் அவர்கள் தந்தை, தாய், அக்கா என எல்லோருமே விவசாய வேலைகளைச் செய்து வருகிறார்கள். அவருக்கு விடுமுறை என்று கிடைத்தால் அவரை நீங்கள் வீட்டில் சந்திக்கவே முடியாது. வீட்டிற்குச் சென்று அழைத்தால் தம்பி காட்டுல இருக்கறானப்பா என்றுதான் பலமுறை கூறியிருக்கிறார்கள். சென்னையிலிருந்து வந்த களைப்பு தீருவதற்குள் விவசாய வேலையில் மூழ்கிவிடுவார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் வேலையை விட்டுவிட்டு சிறிது முதலீ

இந்தியர்களை இணைப்பது எது?

படம்
                                         இந்தியர்களை இணைப்பது எது?           தேசியகீதம் என்கிறீர்களா? கிடையவே கிடையாது. உணவு  நிச்சயம் இல்லை. வேறென்ன? சினிமாதான். நான் தங்கியிருக்கும் அறையில் முதல் நாள் யாரும் என்னிடம் பேசவே இல்லை. சில விவரங்களை கேட்டார்கள் அந்த மூத்த அறைவாசிகள். என்ன வேலை? சம்பளம்? வேலையின் பெயர்? இதுபோன்றவை. அதில் ஒருவரின் பெயர் பதுமன் என்பதே நான் அவரிடம் தெலுங்கு படங்கள் தொடர்பான சில விஷயங்களை பேசியபின்னே அவர் முகம் மலர்ந்து தன் பெயரைக்கூறும் போதுதான் அறிந்துகொண்டேன். அதன் பிறகு அவர் தவிர்த்த மற்ற அறைவாசிகளிடம் நான் அதிகம் பேசுவது கிடையாது. அவர்களைப் பார்த்தால் கடப்பா ராஜூ உணர்ச்சிதான் மனதில் எழுகிறது. தவிர்க்கமுடியவில்லை.             ஒருவர் நல்ல யூரியா உரமூட்டை மாதிரி இருப்பார். அவர்  பெயர் தெரியவில்லை. ஆனால் படிக்கும் நேரம் தவிரத்து மூஞ்சியில் ஒரு க்ரீம் பூசுவார். ஆம்பாடுகளில் (தொடை இடுக்குகளில்) ஒரு க்ரீம் பூசுவார். ஒரு நாளாவது இந்த இரண்டும் மாற வாய்ப்பிருக்கிறதா என்று எனக்கு சந்தேகம் வந்தது. நாமதான் ஏறுக்குமாறா ஏதாவது பண்ணி கோமாளித்தனம் பண்ணுவமே? ப

பெத்த கண்ணு பேரழகி!

படம்
                                                        பெத்த கண்ணு பேரழகி!                 காலையில் அலங்க மலங்க எழுந்தால் அறையில் உள்ள ஆந்திர வாலாக்களில் ஒருவர் மூச்சு பயிற்சி செய்துகொண்டிருந்தார். திடீரென்று இவர்களுக்கு தேர்வு தொடங்கினால் மட்டும் மூச்சு பயிற்சி நினைவு எப்படி வருகிறது என்றே தெரியவில்லை. அது போதாதென்று தெலுங்கில் பவன் கல்யாணின் தமிழில் இளைய தளபதி நடித்த பத்ரியில் கிழங்கு தின்ற நாய் கத்துவது போல் அவர் உடற்பயிற்சி செய்யும்போது ஒருபாடல் வருமே  அந்த வர்ஷனில் அங்கே பவன் உடற்பயிற்சி செய்வார். அப்படியே அதே காட்சிகள் தமிழில் இருக்கும். அதைப்போட்டுக்கொண்டு ஷெல்பை பிடித்து அதைப் பெயர்த்து தரைக்கு கொண்டுவருவது போல புல் அப்ஸ் எடுத்து மிரட்சிக் குள்ளாக்குவது அடுத்த அவரது திட்டம்.  அறையில் இன்னும் இரு ஆந்திர வாலாக்கள் விடுமுறையில் இருப்பதால் மிரட்டல் அடி குறைவாக இருக்கிறது. இன்னும் பல மிரட்சிகள் காத்திருக்கின்றன என நினைக்கிறேன்.             பேருந்தில் ஏறினால் அங்கும் இஸ்லாமிய பெண்களில் முகத்தையும் கண்களிலேயே பார்த்து ஓகே ஒரு தடவை பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே செ

தயிர்சாதம்

                                                              தயிர்சாதம்                              மம்மி மெஸ் போய் சாப்புடுப்பா என்று செயின்ட் கூறியபிறகு போய்த்தான் பார்ப்போமே என்று ஒரு எண்ணம். செரி என்று நண்பர் க. சு விடம் கூறிவிட்டு வேகமாக குளக்கரை சாலையில் நடந்தேன். அரக்க பரக்க செல்வதற்கு ஒரு காரணம் உண்டு. அலுவலக நிர்வாகி பி இரண்டு மணிக்குள்ளார வந்துருவியா என்று கேள்வி கேட்டுத்தான் சாப்பிட அனுமதித்தார். வேகமாக செல்ல நினைத்தாலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட வள்ளுவர் கோட்டம் செல்லும் வழி அது. சாலை தாண்டி உள்ளே சென்று பத்து ரூபாயை எடுத்து இந்தா வச்சுக்கோ என்று போஸில் நீட்டினால் எத்தனை என்றார் ஒரு பெண்மணி. எத்தனையா ஒன்னுதாங்க என்றேன். மூணு ரூபா எடு என்றார். சில்லறை கேட்கும் மனிதர்களுக்கு பெரிய தெம்பு ஏற்பட்டு விடுகிறது. தருவானா இருக்குமா பாப்போமே என்பதுதான் அது. தயிர்சாதம்தான் வாங்கினேன். நன்றாக கொதிக்கும் பதம். தயிர் சூடாக சாப்பிட்டால் என்ன என்ன பிரச்சனைகள் வரும் என்பதை சாப்பிட்ட பின் தினமணி கதிரில் ஆயுர்வேத மருத்துவரின் பதில்களை படித்து தெரிந்துகொள்ளலாம். அப்படி இல்லையென்ற

களமாடுவோமா தோழா

                                                                 களமாடுவோமா தோழா   லோகத்தின்ட தோஸ்த் வெளியிடுகின்ற லோகம் புத்தகம் முழுக்க அறிவியல் தகவல்களால் நிரம்பி வழிகிறது. ஒரு பக்கம் கூட படிக்கமுடியவில்லை. ஆனால் முக்கியமான சூழல் குறித்த விழிப்புணர்வு புத்தகம்தான். என்னால் ஒரு பத்தி கூட வாசிக்க முடியவில்லை. எப்படியோ உணவுத்திருவிழா என்று நடத்தி சோறு போட்டு புத்தகத்தை வாசிக்கச் சொல்லுகிறார்கள். நிறைய பேசுகிறார்கள். நல்ல வேலைக்குச் சென்று சம்பாதிக்கிறார்கள். ஞாயிறன்று ஒரு கூட்டம் போட்டு அந்நாளை வெற்றிகரமாக பொழுதுபோக்கு ஆக்குகிறார்கள். களப்பணி என்றால் காணாமல் போகும் ஆட்கள் இவர்கள். செய்பவர்கள் என்ன சொல்லிக்கொண்டா இருக்கிறார்கள்?  எல்லாமே அடையாளம் குறித்த சிக்கல்தான் என்று வடிவமைப்பாளர் கூறினார். எல்லாவற்றையும் ஒற்றைப்புள்ளியில் குவித்துவிடுவார் அந்த நண்பர். அவரின் தீர்மானங்கள் என்னைப்பொறுத்த வரையில் பெரிதாக தோற்றுப்போனதில்லை. வயிற்றுக்கு சோறு முதலில் வேண்டும். லட்சியத்தை காய்ந்த வயிற்றுடன் அடைய முடியாது என்பது அவர் என்னுடனான உரையாடலில் எப்போதும் கூறும் அருள்வாக்கு. அதை ந

மம்மி மெஸ்

                                                                மம்மி மெஸ்             செயின்ட் இறுதியாக கூறிவிட்டார். ''இப்படி கருவாடா கெடக்காதீங்க சார். பணம் குறைவா இருந்தா  மம்மி மெஸ்ல சோறு தீருறதுக்குள்ள போயி சாப்பிட்டு வந்திருங்க''. எனக்கு திகிலெல்லாம் மம்மி மெஸ்லயே கடைசி வரை டோக்கன் வாங்க வைச்சிருவாரோன்னுதான். வேலைகளை இறுதி செய்துவிட்டு  ஜாலி டூர் கெளம்பிவிட்டார் ஆசிரியர். செயின்ட் ஏற்படுத்தி வைத்திருக்கிற காமெடிகளையும் பலரும் நம்புகிறார்கள். ஒருத்தர் பஞ்சாபிலிருந்து  ஆன்லைன்ல உங்க புத்தகத்தை படிக்க முடியுமா? என்று கேட்டிருந்தார். சும்மாவே அதை படிக்கமுடியாது என்று நான் மனதிலிருப்பதை எல்லாம் பேசிவிடமுடியுமா என்ன? சமாளித்து பதில் எழுதினேன். இணையதளம் வேலை செய்வதேயில்லை. ஆனால் எதற்கு அதை ஒவ்வொருதரம் அச்சிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. ஏதாவது கேட்டால் எல்எஸ் மேமை கேட்க வேண்டும் என்று கூறிவிடுகிறார். விவாதித்து நல்ல விஷயங்களை செய்வது நல்லதுதான். ஆனால் தாமதம் ஆகக்கூடாது இல்லையா? இப்போதே அதிக நாட்கள் ஆகிவிட்டன. நாமென்ன விகடனா? எளிதில் புத்தகங்களை விற்றுவிட? சித்தா

மூவ் பண்ணுப்பா உள்ள

                                                        மூவ் பண்ணுப்பா உள்ள          24ஏ அடிக்கடி அதாவது இருபது நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று கூறுகிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் அரசை முழுக்க நம்பி நாம் காத்திருந்தால் காலடியில் வேர்கள் முளைத்துவிடும். நானும் வொயிட் போர்ட் பேருந்தில் குறைந்த கட்டணத்தில் பயணித்துவிடலாம் என்றாலும் வாய்ப்பு கிடைக்கமாட்டேன்கிறது. எப்போதுமே டீலக்ஸ்தான் வருகிறது. 29சி எடுத்துக்கொள்ளுங்கள். ஏகப்பட்ட பேருந்துகள் இருக்கின்றன. முக்கியமான நேரத்தில் வொயிட் போர்ட் பேருந்தும் உள்ளது. ஆனால் 24ஏ  பேருந்தைப் பொறுத்தவரையில் அதெல்லாம் கனவுபோல. அன்று இரவு வெகுநேரம் காத்திருந்து பேருந்து ஏறினேன். கண்டக்டர் 'மூவ் பண்ணு உள்ள'  என்றார். கதை எங்கேயும் உள்ளது என்பார்களே. அப்படித்தான் ஒரு கதை தோன்றியது. கருப்பு ஏ எழுத்தின் மேல் சிவப்பு வட்டம் போடும் படம்தான். காதலிக்கும் பெண்ணும், ஆணும் பேருந்தில் செய்யும் சில சில்மிஷங்கள்தான்  படம். பயப்படாதீர்கள். உரையாடல்கள், சில தீண்டல்கள் என இந்தப்பகுதி மட்டும் நான் யோசித்தேன். மீதிப்பகுதி அவர்கள் வீடு சென்றடைந்தபின் தொட

சில்லறை முறிப்பது எனும் கலை

படம்
                                                         சில்லறை முறிப்பது எனும் கலை                  நகரத்தில் சில்லறை முறிப்பது ஒரு கலை. உங்களுக்கு இதில் பல வாய்ப்புகள் உள்ளன. சரக்கு வாங்குவீர்களோ இல்லையோ சில்லறைக்காக நான பல டாஸ்மாக் கடைகளை நாடி ஓடியிருக்கிறேன். ஊரில் சென்னை வருவதற்கு சில்லறை முறிப்பதற்காக மூன்று கடைகளை அடைந்து சில்லறை இரண்டில் இல்லை பிறகு ஒரு கடையில் கிடைத்தது. அந்தக்கடை எக்ஸ்ட்ரீம் புரட்சியாளரை எப்போதும் சந்தித்து பேசும் கடை என்றால் நீங்கள் எதுவும் நினைத்துக்கொள்ள மாட்டீர்கள்தானே?                சென்னைப் பேருந்துகளில் நடத்துநர்களிடம் நம் உள்ளூர்கள் போலில்லாது விரைவில் சில்லறை கிடைக்கிறது. ஆனால் இதெல்லாம் மடமடப்பான நோட்டுகளுக்குத்தான். ஆனால் ஒரு ரூபாய் சில்லறைக்கு என்ன செய்வீர்கள்? வேறு வழியே இல்லை. தேநீர்  பிடிக்கிறதோ இல்லையோ ஒன்பது ரூபாய் கட்டணம் வசூலிக்கும் கடைக்குப்போய் அக்கம்பக்கம் பார்த்து தேநீரை கவனமாக உள்ளிறக்க முயலத்தான் வேண்டும். சில வேளைகளில் வெந்நீர் மலச்சிக்கலுக்கு நல்லது என்று இயற்கை மருத்துவம் நூலில் தமிழ்வாணன் கூறியிருக்கிறார்.

திட்டமிடல்கள் உடைகின்ற காலம் இது

படம்
                                    திட்டமிடல்கள் உடைகின்ற காலம் இது பெரிய திட்டமிடல்கள் ஏதும் எனக்கில்லை. அன்பரசு போல கனவுகள் இல்லை. ஜோஃபாக்ஸ் போல லட்சியத் திட்டமிடல்கள் கிடையாது. வேலைக்குப்போகவேண்டும். கிடைக்கின்ற ஊதியத்தில் நல்ல புத்தகங்கள், சினிமா டி.வி.டிக்கள் வாங்கி பார்க்கவேண்டும். முக்கியமாக வாழ்க்கையை நூலில் இல்லாமல் அதன் இயல்பில் ரசித்து வாழவேண்டும். பலரும் அப்படிசெய்யாதே, இப்படி செய்யாதே என்றெல்லாம் என்னிடமும் கூறுகிறார்கள். ஆனால் தோழர்களே அவர்கள் கூறுவதை நம்பாதீர்கள். வாழ்க்கை நரகமாகிவிடும். இறைவன் நமக்கு பல நல்ல விஷயங்களை கொடுத்திருக்கிறார். அவற்றுக்கு நாம் என்றும் நன்றி கூறுவதேயில்லை. ஆனால் துன்பங்களை மட்டும் கொடுக்கிறார் என்று புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. நல்லவை நிகழும் ஏன் என்ற கேள்வி நம்மிடம் வராது. அல்லவை நேரும்போது எப்படி கேள்விகள் அம்மா ஆட்சி ஊழல்போல பிய்த்துகொண்டு கிளம்புகின்றன. ஜே. கிருஷ்ணமூர்த்தியும், ஓஷோவும் கூட அண்மையில் படிக்கவில்லை. எப்படி என்னால் இப்படியெல்லாம் கூறமுடிகிறது? ஆனால் ஒன்றே ஒன்று கூறுவேன். அறம், தர்மம் என்பதெல்லாம்

பகலில் ஒரு குதிரை,

படம்
                                                                           6                                   பகலில் ஒரு குதிரை இன்று ஒரு இளைஞர் பேருந்தில் ஏறினார். நல்ல ரேஸ் குர்ரம் போல உடம்பு. குதிரை போலவே தலை, அட குதிரை போலவே பின்கழுத்து முடி. ஒவ்வொரு தலை திருப்பலுக்கும் குதிரை என் கண்முன்னே அசைந்தது போலவே இருந்தது. தலைக்கு ஜெல் போட்டிருப்பார் போல. கடும் நெடி. சமயத்தில் நின்றுபோன 501 சோப்பின் வாடையின் சேர்மானங்கள் கூட அவரது நீண்ட முடிகொண்ட கேசத்தில் இருந்தது. வாளிப்பான முடியாக பின்னாளில் நீளும் என்ற நம்பிக்கையுடன் முடியை தடவிக்கொண்டே இருந்தார். பாடல்கேட்டுக்கொண்டு தலையை ஆட்ட ஆட்ட என் கண்முன்னே குதிரை தலை திருப்பல்கள் பலிதமாகிக்கொண்டு இருந்தன். எனக்கென்னமோ எனது பின்னாலிருந்த ஒரு பெண் அவரைப் பார்த்துக்கொண்டு இருப்பது போல என் பிடரியில் ஒரு உறுத்தல் நான் இறங்கும் நிறுத்தம் வரையில் இருந்தது. நிச்சயம் இது என்னுடைய கற்பனை இல்லை என் மூலாதாரத்திலிருந்து எங்கேனும் சக்தி பாய்ந்து யுபிஎஸ் வேலை செய்ய தொடங்கியிருக்குமா? மன்னிக்கவும் யுஎஸ்பி இந்த வித்தைகளே நான் நிகோலஸ் க

மாநகரத்தில் வாழ்கிறேன்

படம்
                                ஐஸ்ஹவுஸ் குறிப்புகள்           ஐஸ்ஹவுஸ் குறித்த முக்கியமான பதிவு என்று ஜெயமோகன் எழுதிய வெள்ளையானை நாவலைக் குறிப்பிட முடியும் என்று நினைக்கிறேன். அதில் இப்பகுதியில் வாழ்ந்த தலித் மக்களின் வாழ்வு குறித்து பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உதவ முற்படும் ஆங்கிலேயர் கூட சாதிப்பிரிவினையினால் ஒன்றும் செய்யமுடியாமல் குடிக்கு மெல்ல அடிமையாவார். அதிலும் வண்டி பஞ்சத்தினால் அடிபட்ட மக்களின் உடல் மீது ஏறிச்செல்லும் இடங்களெல்லாம் நான் புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். மனமே பதறிவிட்டது. வாழ்க்கை அத்தனையையும் மீறி ஒரு கவர்ச்சியைக் கொண்டுள்ளதுதான் இல்லையா?                                                                              5                                     டீஷர்ட் போடுங்கள்                  ஓபன் வார இதழில் சமுதாயத்தில் வெளிப்படையான பல்வேறு செயல்பாடுகளைச் செய்து வரும் பலரைப்பற்றி மொத்தம் 50 பேர் பற்றி எழுதியிருந்தார்கள். அதைப்படித்த செயின்ட்  எல்எஃப் மேமிடம் இதுதான் உடையா இப்படித்தான் உடை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பாங்களா