இடுகைகள்

கொரோனா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் அனைத்து முக்கியமான ஏஜென்சிகளும் தோற்றுவிட்டன! டாக்டர் டி ஜேக்கப் ஜான்

படம்
                இந்தியாவின் அனைத்து முக்கியமான ஏஜென்சிகளும் தோற்றுவிட்டன ! நேர்காணல் டாக்டர் டி ஜேக்கப் ஜான் இரண்டாவது அலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறதா ? நோய்ப்பரவலின் வேகமும் , அளவும் எனக்கு ்ஆச்சரியத்தை அளிக்கிறது . இந்தியாவில் கடந்த ஆண்டு பாதித்த கொரோனா வைரஸிற்கு மாற்றாக டி 614 ஜி எனும் புதிய வகை மாறியுள்ளது . இந்த மாறியுள்ள வைரஸ் இரண்டாவது அலைக்கு காரணமா என்று தெரியவில்லை . மாறியுள்ள கொரோனா வைரஸ் இங்கிலாந்து , பிரேசில் , தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் . நோய்த்தொற்றை கண்டுபிடித்து தடுக்கும் பொறுப்பில் உள்ள ஐசிஎம்ஆர் , ஐஎன்எஸ்ஏ , சிஓஜி ஆகிய மூன்று அமைப்புகளும் இதில் தோல்வியைத் தழுவியுள்ளன . வைரஸ்களை கண்டுபிடிக்கும் ஆரா்ய்ச்சி அமைப்புகளையும் , ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கத் தவறிவிட்டோம் . அதற்காகத்தான் இப்போது விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம் . பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனைக் கொடுக்கவே நாம் தடுமாறி வருகிறோம் . மருத்துவ அடிப்படைக் கட்டமைப்பில் எங்கு நாம் தவறு செய்துள்ளோம்

செங்கொடியை பறக்க விட்ட பினராயி விஜயன்! - எதிர்ப்புகளை முறியடித்து மக்கள் நலன் காத்த தலைவர்

படம்
      பினராயி விஜயன்/விகடன்       பினராயி விஜயன் - மகத்தான தலைவன் கேரளத்தில் இடதுசாரி முன்னணி அரசு முந்தைய தேர்தலை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று 140 சீட்டுகளில் 100 சீட்டுகளை வென்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது . இத்தனைக்கும் 75 வயதான விஜயனின் மீது தங்க கடத்தல் வழக்கு , சபரிமலை பிரச்னை என பல்வேறு வழக்குகளை பாஜக கட்சி தொடுத்தது . மத்திய விசாரணை அமைப்புகளின் மூலம் ஆளும் அரசுக்கு நெருக்கடி கொடுத்தது . இதனை முதலில் அமைதியாக பார்த்த விஜயன் , தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த அமைப்புகளை மாநிலத்தில் நுழைவதற்கு தடை விதித்தார் . இதனை காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களும் பின்பற்றின . இடதுசாரிகள் சிறப்பாக வென்றதோடு , பாஜக கட்சி வெல்லுவதற்கான வாய்ப்பையும் தடுத்துள்ளனர் . 2016 தேர்தலை விட எட்டு சீட்டுகளை மக்கள் கொடுத்துள்ளனர் என்பதோடு , 2024 இல் மக்களவைத் தேர்தலிலும் கூட பாஜகவிற்கு எதிரான கூட்டணியை அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது . இதில் ம ம்தா , ஸ்டாலின் , பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கலாம் . நிபா நோய்த்தொற்று , வெள்ளப்பிரச்சினை , கொரோனாவை சமாளித்தது

கிழிந்து தொங்கும் சுயசார்பு இந்தியா திட்டம்!- ஆக்சிஜன் கொடுப்பது எப்படி?

படம்
                ஆத்மா நிர்பாரத மிஷன் கடந்த ஆண்டு மே 12 இல் பிரதமர் மோடி , ஐந்து அம்சங்களைச் சொல்லி ஆத்மாநிர்பாரத திட்டத்தை அறிமுகப்படுத்தினார் . உலகம் நமக்கு கற்றுத்தந்துள்ள பாடங்களில் சுயசார்பும் ஒன்று . இதனை ஈஷாபந்தா என்ற நூலில் கூட கூறியிருக்கிறார்கள் . தன்னிறைவு பெற்ற இந்தியா என்பது அதுதான் என பேசினார் . அதற்குப்பிறகு மத்திய அரசு அறிவிக்கும் நிதிசார்ந்த திட்டங்களுக்கு சுயசார்பு , தன்னிறைவு ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன . அக்டோபர் , நவம்பரில் மானியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன . பிறகு கொரோனா பாதிப்பு ஒருநாளுக்கு மூன்றரை லட்சம் பேரை பாதித்தவுடனே ஆத்மாநிர்பார் கோஷங்கள் தடுமாறத் தொடங்கின . உடனே இந்திய அரசு தனது சொந்த நாட்டு பெருமைகளை ஒரம்கட்டிவிட்டு அமெரிக்க வழங்கிய நூறு மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவிகளைப் பெற்றது . இதில் ஆயிரம் சிலிண்டர்கள் , 15 மில்லியன் என் 15 மாஸ்குகள் , ஒரு மில்லியன் சோதனைக் கருவிகள் உள்ளடக்கம் . இருபது முதல் முப்பது மில்லியன் தடுப்பூசிகள் ஆஸ்ட்ராஜெனகாவும் அடங்கும் . இதோடு சீனாவும் இந்தியாவுக்கு பல்வேறு உதவிகளை வழங்க முன்வந்தது . எல்லை

இந்திய மக்கள் இறப்பதற்கு அரசின் செயலற்ற தன்மைதான் காரணம்! - ஶ்ரீனிவாஸ் பி.வி. இளைஞர் காங்கிரஸ் தேசியத் தலைவர்

படம்
            கோவிட் 19 நோய்த்தொற்று காரணமாக அரசு முழுக்கவே செயலிழந்துவிட்டதாக என நினைக்கத்தோன்றும் அளவுக்கு நிலை மோசமாக உள்ளது . பேஸ்புக்கில் மோடிபதவிவிலகு என எழுதும் அளவுக்கு மக்கள் விரக்தி நிலைக்கு வந்துவிட்டார்கள் . கோபம் கொள்வது சரி , செயல்வேகம் கொண்ட மனிதர்கள் இந்தியாவில் வேறு யாரும் இல்லையா ? என்றால் இருக்கிறார்கள் என உற்சாகமாக கூறலாம் . இளைஞர் காங்கிரசின் தேசிய தலைவர் ஶ்ரீனிவாஸ் பிவி , கட்சி பேதமில்லாமல் பலருக்கும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறார் . நீங்கள் என்ன விதமான உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறீர்கள் ? நாங்கள் எங்களை தொடர்புகொள்ளும் நோயாளிகளிடம் பேசிவருகிறோம் . அவர்களை தனிமைப்படுத்தவும் , தேவையான தன்னார்வலர்களாக உள்ள மருத்துவர்களின் உதவிகளைப் பெற உதவுகிறோம் . நோயிலிருந்து மீண்டவர்களைப் பற்றிய பட்டியலைப் பெற்று அவர்களிடமிருந்து பிறருக்கு பிளாஸ்மா பெற உதவுகிறோம் . மேலும் மக்களுக்கு மருத்துவமனை படுக்கை , ஆக்சிஜன் சிலி்ண்டர்களையும் வழங்குகிறோம் . நாங்கள் ஆக்சிஜன் வழங்குபவர்களோடு தொடர்பில் இருக்கிறோம் என்வே , ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற முடியாத ஏழைகளுக்கு உ

இரண்டாவது அலையை கணிக்க தவறியது மத்திய அரசின் குற்றம்தான்! - பூபேந்திரசிங் பாதல் -சத்தீஸ்கர் முதல்வர்

படம்
              பூபேந்திரசிங் பாதல் சத்தீஸ்கர் முதல்வர் - காங்கிரஸ் உங்கள் மாநிலத்தில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு உள்ளதா ? நாங்கள் இரண்டு நாட்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளோம் . 45 முதல் 60 வயது கொண்ட 63 சதவீத மக்களுக்கு நாங்கள் தடுப்பூசியை செலுத்தியுள்ளோம் . அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க வயது வரம்பை தளர்த்த மத்திய அரசிடம் கூறியுள்ளோம் . கொரோனா நோய்த்தொற்று வயது வரம்பின்றி அனைத்து மக்களையும் பாதித்துள்ளது . தற்போது உள்ள இரண்டு தடுப்பூசிகளை மட்டுமே வைத்து மக்களை பாதுகாக்க முடியாது . முன்னாள் பிரதமரான மன்மோகன்சிங் கூறியபடி வெளிநாட்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதோடு , உ்ள்நாட்டு தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யவேண்டும் . அப்போதுதான் தடுப்பூசியை மக்கள் அனைவருக்கும் வழங்க முடியும் . மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தைக்கூட நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் . அவருடைய கடிதத்திற்கு ஹர்ஷ்வர்த்தன் காங்கிரஸ் தலைவர்கள் , முதல்வர்களை தாக்கி பதில் கூறியிருக்கிறாரே ? இங்கே பாருங்கள் . ஹர்ஷ்வர்த்தன் மரியாதைக்குரிய பதவியில் இருக்கிறார் . அதற்க

ஏழு ஆண்டு கால ஆட்சியில் நோய்களும் மரணங்களும்!

படம்
                  ஏழு ஆண்டு கால ஆட்சியில் நோய்களும் மரணங்களும் ! ப . சிதம்பரம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக கட்சி , 303 சீட்டுகள் வென்று ஆட்சியைப் பிடித்தது . கூட்டணியாக 353 இடங்கள் கிடைத்தன . இப்போது மூன்றாவது ஆண்டாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறது . அக்கட்சியில் என்ன விஷயங்கள் நமக்கு கிடைத்துள்ளன என்பதைப் பார்ப்போம் . உணவு , பாதுகாப்பு , வேலை , வீடு , சுகாதாரம் , கல்வி ஆகியவை மக்களுக்கு சரியான முறையில் கிடைத்திருக்க வேண்டும் . உலகிலேயே இந்தியாதான் அதிகளவில் பருப்பு , தானியங்கள் , பால் , காய்கறிகள் , மீன்களை உற்பத்தி செய்கிறது . அனைத்து மக்களுக்கும் தேவையான உணவு கிடைக்கச்செய்வது அவசியமானது . ஆனால் அப்படி கிடைக்கவில்லை . 2015-16 ஆண்டு குடும்பநலத்துறை ஆய்வு அறிக்கையில் 58.6 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் தவித்து வருகின்றனர் . இவர்களுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது . இதில் உணவு வீணாக்கப்படும் பிரச்னையும் உள்ளது . 22 மாநிலங்களில் ஆய்வு செய்ததில் 18 மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது . 12 மாநிலங்களில் உணவு வீணாக்கப்படுவது நடந்து

கொடூரமாக பரவும் வைரஸை பற்றி கவலைப்படாமல் இருந்துவிட்டோம்! - ப்ராமர் முகர்ஜி,

படம்
            நேர்காணல் பேராசிரியர் பிராமர் முகர்ஜி உத்தர்பிரதேச மாநிலத்தில் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது . இதில் நாம் பின்பற்றிய மாடல் தோற்றுப்போய்விட்டது என்று கூறியுள்ளீர்கள் . இப்படி நோய்த்தொற்று அதிகரிப்பது உத்தரப்பிரதேசத்தில் மட்டும்தானா ? இல்லை . உத்தரப்பிரதேசம் , மேற்குவங்கம் , பீகார் , டெல்லி ஆகியவை இதுபோன்ற ஆபத்தான கட்டத்தில் உள்ளன . இதற்குப்பிறகு ஆந்திரா , ராஜஸ்தான் , மத்தியப்பிரதேசம் . கேரளா , குஜராத் , கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வருகின்றன . கேரளத்தில் பாதிப்பு அதிகரித்துள்ளது . கேரளா , மேற்கு வங்கம் , உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பது அவசியம் . அசாம் , ஒடிஷாவில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை இப்போதைக்கு குறைவாக உள்ளது . இரண்டாவது அலை பாதிப்பு இந்தியாவில் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா ? மே மாதத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் . பிறகு பத்து நாட்களில் இறப்பு எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்புள்ளது . மே மாதத்தின் நடுப்பகுதியில் எட்டு முதல் பத்து லட்சம் என நோயாளிகளின் எண்ணிக்கை கூடலாம் . 5,500 என இறப்பு எண்