இடுகைகள்

சிறுநீர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விமானத்தில் செல்லும்போது அழுகை வருவது ஏன்? பதில் சொல்லுங்க ப்ரோ? - வின்சென்ட் காபோ

படம்
    pixabay       பதில் சொல்லுங்க ப்ரோ ? வின்சென்ட் காபோ காய்ச்சலில் இருக்கும்போது சாப்பிடாமல் இருப்பதும் , சளிப்பிடித்திருக்கும்போது சாப்பிடுவதும் சரியா ? சளி பிடித்திருக்கும்போது சாப்பிடுவது பொதுவானதுதான் . நோய்த்தொற்றை எதிர்கொள்ள உடலில் பலம் தேவை . எனவே நோயுற்றிருக்கும்போது ஏதாவது உணவை சாப்பிடுவது அவசியம் . உடலில் நீர்ச்சத்து குறைந்திருக்கும்போது , சூப் தயாரித்து குடிப்பதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் . 2002 இல் செய்த ஆராய்ச்சிப்படி ஆராய்சியாளர்கள் சளிப்பிடித்திருக்கும்போது உணவை முறையாக எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கிறது என்று கூறினர் . இதில் கலந்துகொண்டவர்கள் குறைவானர்கள்தான் . மேலும் பசித்தால் சாப்பிடாமல் கட்டாயப்படுத்தி சாப்பிடுவது சரியானதல்ல . கிரேக்கத்தில் காய்ச்சல் அடிக்கும்போது எதையும் சாப்பிடாமல் பட்டினி கிடப்பது புழக்கத்தில் இருந்து வந்த து . இது காய்ச்சலை குணப்படுத்தும் என்று கூறமுடியாது . உணவு எடுத்துக்கொள்வதை விட முழுமையாக ஒய்வெடுப்பது முக்கியமானது . விமானத்தில் படங்களை பார்க்கும்போது கண்ணீர் வருவது ஏன் ? தனி

பசுவைக் காக்க படாதபாடு படும் இந்தியா அரசு! - அமலுக்கு வரும் அவசியமான விதிகள்!

படம்
      cc     கால்நடைகள் விரைவில் முறைப்படுத்தப்படவிருக்கின்றன. வாயில்லாத ஆனால் பாலை பாக்கெட் நிறைய கொடுக்கும் ஜீவன்களை காப்பதுதானே இந்திய ஜனநாயகத்தின் மகத்துவம். கால்நடைகளைப் பற்றிய சிறிய டேட்டா இதோ! 13.6 கோடி கால்நடைகள் இந்தியாவில் உள்ளன. இதில் 2.4 லட்சம் கால்நடைகள் தலைநகர் டில்லியில் வாழ்கின்றன. பசுக்கள் தினசரி தலா 15-30 கிலோ அளவில் சாணியையும் சிறுநீரையும் வெளித்தள்ளுகின்றன. இவை பெரும்பாலும் குப்பையில் வீசப்படுகின்றன. இல்லையெனில் பாவம் தீர்க்கும் கங்கையின் பாகமாக இவையும் மாறுகின்றன. இக்கழிவிலிருந்து அம்மோனியா, சல்பைடு, ஹைட்ரஜன், மீத்தேன் ஆகிய வாயுக்கள் வெளியாகின்றன. புதிய விதிகள் பசுவின் சாணி, சிறுநீரை சாக்கடையில் அள்ளி வீசக்கூடாது. நகராட்சி மாநகராட்சி இதற்கென தனி இடங்களை உருவாக்கி அதில் அவற்றை கொட்டுவார்கள். இதிலிருந்து வறட்டி, எரிவாயு தயாரிக்கும் புதிய ஐடியாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு கால்நடைக்கு 150 லிட்டர் நீர் மட்டுமே என ரேஷனில் அரிசி நிறுப்பது போல அளவிட்டு வழங்கப்படும். கழிவுகள் நிலத்தடி நீரில் கலப்பதை தடுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். கோசாலைகள் குடியிருப்புகளிலிருந்து 200

டீ பேகை அழுத்திப் பிழிந்து குடித்தால் என்னாகும்?

படம்
giphy மிஸ்டர் ரோனி க்ரீன் டீ குடிக்கும்போது டீ பேக்கை சிலர் மெதுவாக நனைத்து எடுக்கிறார்கள். சிலர் அதனை கையில் வைத்து பிழிகிறார்கள். இது ஆபத்தானதா? துணியைக்கூட இறுக்கமாக வைத்து பிழியாதீர்கள். ஆயுள் குறையும் என துணிக்கம்பெனி சொல்கிறார்கள். அதற்காக வேலைக்காரர்கள் என்ன இலவம் பஞ்சையா வைத்து தேய்த்து அழுக்கை நீக்குகிறார்கள். அடித்து பிழிகிறார்கள் அல்லவா? அப்புறம் என்ன? டீ பேக்கை அப்படி விரல்களால் கசக்கி பிழிந்தால் என்னாகும் தெரியுமா? அதிலுள்ள டானின் எனும் மஞ்சள் நிற அமிலம் டீயில் அதிகம் கலக்கும். கசப்புச்சுவை அதிகரிக்கும். இது ஒன்றும் உங்களுக்கு பெரிய ஆபத்தை கொண்டு வந்து சேர்க்காது. பயப்படாதீர்கள். நன்றி: பிபிசி 

விளையாட்டை நேர்மையாக விளையாட உதவுகிறோம்!

படம்
மினி பேட்டி! ஆலன் பிரெய்ல்ஸ்போர்டு, ஆய்வக இயக்குநர் இங்கிலாந்து விளையாட்டு வீரர்களை எப்படி சோதிக்கிறீர்கள்? கோடைக்காலத்தில் எங்களுக்கு வரும் மாதிரிகள் குறைவு. ஆனால் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடக்கும்போது தினசரி 250 மாதிரிகளைச் சோதிப்போம். கடந்த ஆண்டு மட்டும் 13 ஆயிரம் மாதிரிகளை சோதித்தோம். ரத்தம், சிறுநீர் ஆகிய மாதிரிகளின் மூலம் சோதனைகள் செய்கிறோம். இன்று பெரும்பாலும் சிறுநீர் மாதிரிகள் அதிகம் வருகின்றன. இதில் என்னென்ன சவால்களைச் சந்திக்கிறீர்கள்? சோதனைகளை சரியாக செய்வதற்கான நேரம்தான். வேறென்ன? போட்டிகளில் பங்கேற்றும் வீர ர்களை சரியான முறையில் சோதிக்க நிறைய நேரம் தேவை. அப்போதுதான், ஏமாற்றும் வீரர்களை சரியான முறையில் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் செய்கிற இந்த பணியால் விளையாட்டி கவனிக்கிற ஆர்வத்தை இழந்து விட்டீர்களாழ நான் விளையாட்டு வீரன் அல்ல. என்னுடைய பணி ஆய்வு செய்வதுதான். நான் இதில் மோசடி செய்யும் வீர ர்களை அடையாளம் காட்டி வருகிறேன். விளையாட்டை விதிமுறைகளுக்குட்பட்ட விளையாட்டாக இருக்க உதவுகிறோம். அதில் எனக்கு மகிழ்ச்சிதான். நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ்  

மருந்துகளும் தடைகளும்! - நோய் மருந்துகளுக்கு தடை!

படம்
விளையாட்டு உலகில் ஒருவர் தங்கம் வெல்வது முக்கியமானது. அதற்குப் பிறகு அவரின் உடலின் ரத்தம், சிறுநீர் சோதனை நடைபெறும். இதில்தான் வெற்றி பெறும் பல்வேறு வீர ர்களும் மாட்டிக்கொள்கின்றனர். இதில் தடை செய்யப்பட்ட மருந்துகளை அவர்கள் பயன்படுத்தினால் பதக்கம் பறிக்கப்படும். இரண்டாம் நிலையிலுள்ள வீரருக்கு அப்பதக்கம் வழங்கப்படும். இது பெரிய அவமானம். தடை செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிடுகிறோம் என்பதே வீர ர்களுக்கு தெரிவதில்லை. காரணம் இதிலுள்ள நிறைய குழப்பங்கள்தான். டெஸ்டோஸ்ட்ரோன் நமது உடலில் இயல்பாக சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்தான் இது. ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்ட்ரோன் அதிகமாக சுரந்தால்தான் அவர்களின் உடல் எலும்புகள் வளர்ச்சி பெறும். தசைகள் வளர்ச்சி சீர் பெறும். இதனை விளையாட்டு வீர ர்கள் தம் எடையைக் கூட்ட தசைகளை வலிமைப்படுத்த பயன்படுத்துகின்றனர். எப்ஹெட்ரின் ஆஸ்துமா பாதிப்பைக் குறைக்க பயன்படுத்தும் மருந்து. இதுவும் எடையை அதிகரிக்கவும், உடல் உறுப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் இந்த மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். டையூரெட்டிக்ஸ் சிறுநீரக கற்களைக் கரைக்கவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்

டீ குடித்தால் கழிவறை நோக்கி ஒடுகிறீர்களா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி காபி, டீ குடித்தால் உடனே மலம் கழிக்கத் தோன்றுவது ஏன்? உடனே பீதியாகாதீர்கள். எனக்குக்கூட என் அம்மா வைக்கும் ரசத்தைச் சாப்பிட்ட உடனே பாத்ரூமுக்கு ஓடுவேன். அது குடும்பத்தில் நடக்கும் பழிக்குப்பழி சமாச்சாரம். அதை விடுங்கள். டீ, காபியில் ஏன் அப்படி நடக்கிறது?  காரணம் அதிலுள்ள ஊக்கமூட்டிகள் குடலை சற்று நெகிழ வைப்பதுதான். இதனால் உலகிலுள்ள 60 சதவீதம் பேர் காபியை ஆசையோடு குடித்துவிட்டு தலைதெறிக்கும் வேகத்தில் பாத்ரூமில் அடைக்கலமாகிறார்கள். இது தவிர்க்க முடியாது. இதுவே சாப்பிட்ட உடனே மலம் கழிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும் .இதனை ஆயுர்வேத த்தில் கழிச்சல் நோய் என்பார்கள். இதனை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். எனவே, டீ, காபியை குறைத்துக்கொண்டால் மலம் வேகமாக வெளியேறும் வேகத்தைக் குறைக்கலாம். உடலிலுள்ள நீரும் இதன் காரணமாக வேகமாக வெளியேறும் என்பதால் கவனம் தேவை. நன்றி: பிபிசி