இடுகைகள்

நூல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லாக்டௌன் காலத்தில் சென்னைவாசியின் நிலை!

படம்
  லாக்டௌன் 4.1.2022   அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஜனவரி, பிப்ரவரி என இரண்டு மாதங்களுக்கு கட்டுரைகள் எழுதி மென்பொருளில் பதிந்துவிட்டேன். ஆனால், பத்திரிகை அச்சுக்கு செல்லவில்லை. இதுவரை செய்த வேலைகள் எல்லாம் வீணா இல்லையா என்று தெரியவில்லை. இப்போது உள்ள நிலைமையில் லாக்டௌன் அறிவிப்பார்கள் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை வந்தால் எங்களுக்கு சம்பள வெட்டு நிச்சயம். இம்முறை வேலையில் பிழைத்திருப்போமா என்று தெரியவில்லை. இந்த பத்தியை எழுதுகிற சமயம்,   அலுவல வேலைகளை வீட்டில் இருந்து செய்யும்படி அனுமதி கொடுத்துவிட்டார்கள். நான் வீட்டில் இருந்து வேலை செய்வதை விரும்பவில்லை. அலுவலகத்திற்கு எப்போதும் போல வரப்போகிறேன். சக பணியாளர்கள் இல்லையென்றால் வேலை செய்வது உன்னதமான அனுபவம். என்னால் அறையில் உட்கார்ந்து வேலை செய்ய முடியவில்லை. புத்தக காட்சி வேறு தள்ளிப்போகிறது. தற்போது எழுதி வரும் அறிவியல் பகுதிகள் சார்ந்து சில நூல்களை வாங்கும் தேவை உள்ளது. கல்விக்கொள்கை பற்றி வினி கிர்பால் இந்து ஆங்கிலத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந

ராயல்டியை ஏமாற்றும் பதிப்பு நிறுவனங்களை நினைத்தாலே கசப்பாக உள்ளது!

படம்
6/5/2023 அன்பரசு சாருக்கு அன்பு வணக்கம். நலமா? தோல் பிரச்னை எப்படி இருக்கு? சிகிச்சை மேற்கொள்ள பொருளாதாரம் உள்ளதா? கடிதம் எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அடிக்கடி டெலிகிராமில் பேசுவதால் முறையாக கடிதம் எழுதவில்லை. தீராநதியில் பேட்டி கொடுத்த இந்திரா சௌந்தர்ராஜனைப் பற்றி நீங்கள் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. பல எழுத்தாளர்களும் ராயல்டி விஷயத்தில் ஏமாற்றப்படுவது கசப்பாக உள்ளது.  நேற்று (5/5/2023) எடிட்டரிடம் பேசினேன். திங்கட்கிழமை தாய் நாளிதழுக்கு எழுதும் ஒரு பக்க கணக்குப் புதிர்களை புத்தகமாக போடுவது சம்பந்தமாக. ‘’நிறுவனப் பதிப்பகத்தில் போடலாம்’’ என்றார். நான்,’’ வேண்டாம் சார். வேறு பதிப்பகத்தை நண்பர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்’’ என்று சொன்னேன். எடிட்டரும் நான் கூறிய பதிப்பகத்தில் இலக்கிய நூலொன்றை எழுதியிருப்பதாக கூறினார். மேலும், அங்கு இலக்கியம் சார்ந்த புத்தகங்களே அதிகம் விற்கும் என்றும், கணக்கு புத்தகங்களை கமர்ஷியல் பதிப்பகத்தில் போட்டால்தான் சரியாக இருக்கும் என்றார். உண்மையா சார்? சமீபத்தில், மாணவர் இதழுக்கு இன்டர்ன்ஷிப் வந்த இளம்பெண், இதழில் உதவி ஆசிரியராக இணைந்தார். கூடுதலாக 23

இந்து சமூகத்தில் அடிப்படை மாற்றங்கள் நிகழாதபோது ஆழமான வலியை மனதில் உணர்ந்தவர் அம்பேத்கர் - அசோக் கோபால்

படம்
  அம்பேத்கர் சுயசரிதை- நவாயனா இடதுபுறம் - ரவிக்குமார், திருமாவளவன், நவாயனா பதிப்பகத் தலைவர் அசோக் கோபால், வரலாற்று பட்டதாரி. 2003ஆம் ஆண்டு முதல் பி.ஆர். அம்பேத்கரைப் பற்றி படித்து ஆய்வு செய்து வருகிறார். அம்பேத்கரின் தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் செயல்பாடு, காந்தியுடனான உறவு என பல்வேறு விஷயங்களைப் பற்றி மராத்தி, ஆங்கில மொழியில் இருந்து படித்து வருகிறார். இதன் விளைவாக நிறைய விஷயங்கள் தெரிய வந்துள்ளன. அதைப்பற்றி அவரிடம் பேசினோம்.   இதுபற்றி   எ பார்ட் அபார்ட் – தி லைஃப் அண்ட் தாட் ஆஃப் பி.ஆர். அம்பேத்கர் என்ற நூலை எழுதியுள்ளார். நூலை நவாயனா பிரசுரித்துள்ளது. நெடுநாட்களுக்குப் பிறகு, அம்பேத்கரின் வாழ்க்கை பற்றிய முழுமையான நூல் வெளிவந்துள்ளது. நூலை எழுதுவதற்கான பணியைப் பற்றி கூறுங்கள். 2003ஆம் ஆண்டு, அம்பேத்கரைப் பற்றி படிக்கத் தொடங்கினேன்.   நான் மிக குறைவாக அறிந்த மனிதரைப் பற்றி முழுமையாக அறிவதே நோக்கம். இந்த ஆய்வுப் பணியில் அவரைப்பற்றி எழுதப்பட்ட நூல்களில் கூறப்பட்டதைவிட, அவரே தன்னைப் பற்றி கூறியதை விட, நிறைய விஷயங்களை அறிய முடிந்தது. குறிப்பாக, அம்பேத்கர் புத்தமதத்தை ஏன் தழுவுகிறா

வரலாற்றை உண்மைகளின் அடிப்படையில்தான் பார்க்கவேண்டும் - வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர் வில்லியம் டால்ரிம்பிள்

படம்
  வரலாற்று ஆய்வாளர் வில்லியம் டால்ரிம்பிள் வில்லியம் டால்ரிம்பிள், டெல்லியைப் பற்றிய நிறைய நூல்களை எழுதியுள்ளார். டெல்லி பல்வேறு வம்ச மன்னர்களின் கதைகளைப் பேசிக்கொண்டே இருக்கும் நகரம். அங்கு எங்கு திரும்பினாலும் ஏதாவது ஒரு மன்னரின் கல்லறை, நினைவுத்தூண் இருக்கும். எழுத்தாளர் வில்லியம், டெல்லியில்   நிஜாமூதீன் கல்லறை அருகில் அறை எடுத்து தங்கியிருந்தார். சிலந்திவலைகள் கட்டிய மூலை, தூசி படிந்த ஜன்னல்கள், கசியும் நீர்க்குழாய்   என வசதிகள் நிறைந்த அறை அது. சிட்டி ஆஃப் ஜின் (1993), தி அனார்ச்சி, வொயிட் முகல்ஸ், ரிடர்ன் ஆப் எ கிங், தி லாஸ்ட் முகல் என தொடர்வரிசையாக நூல்களை எழுதியுள்ளார். 2021ஆம் ஆண்டு ‘கம்பெனி குவார்டர்’ என்ற நூலை எழுதினார். இப்போது இந்து நாளிதழின் இந்து லிட் ஃபார் லைஃப் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருக்கிறார். அவரிடம் அவரின் அடுத்த நூல், பாட்காஸ்ட், வரலாறு பற்றியும் பேசினோம். நீங்கள் காலத்திற்கு ஏற்ப உங்களை புதுப்பித்துக்கொள்கிறீர்களா? நான் முதல் நூல் எழுதும்போது என்ன செய்தேனோ அதைத்தான் இப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். எனது பேச்சுகள் குறிப்பிட்ட காட்சிப்பரப்பை விளக்கி வரு

நூல்முகம் - நூல்களின் விமர்சனக் கட்டுரைகள் - இன்டர்நெட் ஆர்ச்சீவ் வலைத்தளத்தில் வெளியீடு

படம்
  இந்த நூல் முன்னமே பிரதிலிபி தளத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் அதனை படிக்க ஆப்பைத் தரவிறக்கி... உறுப்பினரை பதிவுசெய்து என நிறைய தொல்லைகள் உண்டு. எனவே, இப்போது இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்தில் நூல் வெளியிடப்படுகிறது. நூலை தரவிறக்கி சுதந்திரமாக வாசிக்கலாம். வணிகரீதியாக பயன்படுத்தக்கூடாது. இலவச வாசிப்பு தளங்கள் அதன் நோக்கத்தில் சிறப்பானவை. ஆனால் அவையும் கூட ஒருகட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் தனிநபரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டு நூல்களைத் தேர்ந்தெடுத்து வெளியிடத் தொடங்குகின்றன. இதனால் சமூக, கலாசார தன்மைக்கு வேறுபட்ட புதிய சிந்தனையிலான நூல்கள் வெளியாவது புறக்கணிக்கப்படுகிறது. திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுகிறது. ஏறத்தாழ இந்தியாவில் அறிவிக்கப்படாத நடைமுறையாகிவிட்ட தடை கலாசாரம் போல...  எனவே இந்த வகையில் இனி  கோமாளிமேடை - ஆராபிரஸ் வெளியிடும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை கொண்ட நூல்கள் இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வாசகர்கள் அங்கிருந்து நூலை தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.   இந்த தளம் நூலை எளிதாக வாசித்துப் பார்க்க உதவும்படி வடிவமைக்கப்பட்டிருப்பதோடு, நூல்களை பல்வேறு

லத்தீன் அமெரிக்க நாடுகளை மோட்டார் சைக்கிளில் சுற்றிய சேகுவேராவின் அனுபவம்! மோட்டார்சைக்கிள் டைரீஸ்

படம்
  மோட்டார் சைக்கிள் டைரிஸ் சேகுவேரா நன்றி புக் பை வெயிட், சங்கரா ஹால், ஆழ்வார்பேட்டை, சென்னை சேகுவேரா அவரது நண்பர் ஆல்பெர்டோவுடன் செல்லும் பயண அனுபவம்தான் நூலாகியிருக்கிறது. இருவரும் மருத்துவர்கள். காசநோய் சார்ந்த பிரச்னைகளை செல்லும் இடங்களில் தீர்க்க முயல்கிறார்கள். முக்கியமாக மோட்டார் சைக்கிளில் சாலை வழியாக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பயணிக்கிறார்கள். சாலை வழியாக பயணிப்பது என்றாலே நிறைய பிரச்னைகள் எழும். தங்குவது, சாப்பிடுவது, வாகனம் பழுதானால் அதை சரி செய்வது, சோதனைச் சாவடி, நாட்டின் எல்லையில் ஏற்படும் இடர்ப்பாடுகள்,   பணப் பற்றாக்குறை, நோய்கள் என அனைத்தையும் எதிர்கொள்கிறார்கள். இந்த அனுபவத்தின் வழியாக பல்வேறு மனிதர்களை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். நல்லவை,   அல்லவை என இரண்டு வகையாகவும் மனிதர்களையும் பார்க்கிறார்கள். அவர்களின் மூலம் பல்வேறு சலுகைகளை, சங்கடங்களை அனுபவிக்கிறார்கள். குறிப்பிட்ட தூரம் நண்பர்கள், தெரிந்தவர்கள், வனத்துறை அலுவலர்கள் என தங்கி செல்கிறார்கள். பிறகு காசு கொடுத்து சரக்கு வாகனத்தில் செல்கிறார்கள். இதில் சேகுவேரா ஆஸ்துமா நோயாளி. அவருக்கு அடிக்கடி மூ

உலகமே வேண்டும் என அத்தனைக்கும் ஆசைப்படும் அஞ்சல் ஊழியரின் வாழ்க்கைப்பாடு! - அஞ்சல் நிலையம்

படம்
  அஞ்சல் நிலையம் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி தமிழில் பாலகுமார் எதிர் வெளியீடு   சார்லஸ் புக்கோவ்ஸ்கி நன்றி- காமன்ஃபோக்ஸ்  ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த அமெரிக்க கவிஞரான சார்லஸ் எழுதியுள்ள நாவல்தான் அஞ்சல் நிலையம். இந்த நூல் அவரின் சுயசரிதை என கூறப்படுகிறது. நாவலின் இறுதிப்பகுதியை நீங்கள் படித்தால் அதை உணர்வீர்கள்.   நாவல் முழுக்க அஞ்சல் வேலை, அதிலுள்ள பிரச்னைகள், அதை எதிர்கொண்டு வேலை செய்யும் ஹென்றி சின்னஸ்கி என்ற ஊழியரின் செயல்பாடு, அவரின் மேலதிகாரிகள், சின்னஸ்கியின் பிற ஆர்வங்களான குதிரைப்பந்தயம், பெண்களை இஷ்டப்படி புணருவது என விவரிக்கப்பட்டுள்ளது. நூலை நீங்கள் சிரித்துக்கொண்டுதான் படிப்பீர்கள். அந்தளவு செய்யும் வேலையை , சந்திக்கிற மனிதர்களை   பகடி செய்கிறார் சார்லஸ். குறிப்பாக பணத்திற்காக வேலை செய்து அந்த வேலையே அவர்களது மனதை, உடலை   எப்படி உருக்குலைக்கிறது என்பதை வேடிக்கையான மொழியில் சொல்கிறார். நாவலின் அங்கத மொழி இல்லாதபோது நூல் சாதாரணமாகவே தோன்றும். அதிலும் அஞ்சலக வேலை, இடங்களை நினைவு வைத்துக்கொள்வதற்கான திட்டங்களை கடுமையாக அங்கதம் செய்திருக்கிறார். கூடவே, அலுவ

ஓஷியானா நாட்டில் ஒரே கட்சி நடத்தும் சர்வாதிகார அரசியல் கோமாளித்தனங்கள்- 1984 -ஜார்ஜ் ஆர்வெல் க.நா.சு

படம்
  1984 ஜார்ஜ் ஆர்வெல்   தமிழில் க.நா.சு ஓஷியானா என்ற சர்வாதிகார நாடு. அங்கு ஒரே கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது. முத்தண்ணாதான் அதன் நிரந்தர தலைவர். அந்த கட்சி உருவாக்கும் கொள்கை, போர், எதிரிகளைப் பற்றிய பிரசாரம், மக்களின் அவலமான வாழ்க்கை, பொய்யான வளர்ச்சி பிரசாரம் என பல்வேறு விஷயங்களை அங்கதமாக கூறும் நாவல்தான் 1984. வின்ஸ்டன் என்ற அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்தான் நாவல் நாயகன். இவன்தான் கதையை நாடு எப்படி செயல்படுகிறது என்பதை நமக்கு விளக்குகிறான். இவனது காதலியாக வரும் ஜூலியா தனது உடல் மூலம் புரட்சிக்கு எதிரான வகையில் செயல்படுகிறாள். அது எப்படி என்பதை நாவல் படித்து தெரிந்துகொள்ளுங்கள். ஒருவகையில் இந்த நூல் குறிப்பிட்ட கொள்கைகளை வலியுறுத்தி, கோஷம் போடும் கோரஸ் பாடும் கட்சிகளை சர்வாதிகாரத்தை கேலி செய்கிறது. தனிப்பட்ட மக்களின் வாழ்க்கையில் அரசு எந்தளவு தலையிட்டு அவர்களை கட்டுப்படுத்துகிறது என்பதை விவரிக்கும் இடங்கள் பீதியூட்டுகின்றன. ஏறத்தாழ வளர்ந்த,வளரும் நாடுகளில் கண்காணிப்பு பொருட்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையை கருத்தில் கொண்டு ஜார்ஜ

வலியுடன் அறம் பேசும் உண்மை மனிதர்களின் கதை! அறம் - ஜெயமோகன்- வம்சி

படம்
  அறம் ஜெயமோகன் வம்சி பதிப்பகம்   நூலில் மொத்தம் பதிமூன்று கதைகள் உள்ளன. ஒவ்வொன்றுமே முக்கியமானவைதான்.   வாசிப்பவர்களுக்கு அவை சிறப்பான அனுபவங்களை தருகின்றன. நான் இங்கு குறிப்பிடவிருப்பது சில கதைகளை மட்டுமே. கோட்டி   சிறுகதை, இன்றைய நவீன அரசியலை கேலி செய்யும் காந்தியவாதியின்   கதையைக் கூறுகிறது. குறைகளை சொன்னாலும் கூட அனைத்து ஊர்களிலும் இப்படி தன் வாழ்க்கையை பிறருக்காக அர்ப்பணித்த மனிதர்கள் உண்டு. இவர்கள் போன்றவர்களால்தான் ஊரிலுள்ள பல்வேறு பிரச்னைகள் தீர்வு காணப்படும். கதையில் வரும் பூமேடை அப்படிப்பட்டவர். அவர் நோட்டீஸ் ஒட்டும் இடமும், ஏன் ஒட்டுகிறீர்கள் என கேட்கும்போது சொல்லும் பதிலும் அட்டகாசமாக அவரது மனதை வெளிக்காட்டுகிறது.   பிறரது சந்தர்ப்பவாதங்களை அனைத்து இடங்களிலும் உரித்துக்காட்டும் மனிதராக முகத்தை உள்ளபடியே காட்டும் மனிதராக பூமேடை இருக்கிறார். இதனால் அவரை கோட்டி என ஊரே சற்று தள்ளி நின்று பார்க்கிறது. அவர் தலித் மக்களுக்கான தோட்டி வேலை பற்றி ஆவேசமாக பேசும் காட்சி எவ்வளவு ஆழமான பொருள் கொண்டது. பெண் பார்க்க செல்லும் வழக்குரைஞரின் நிலையில்தான் நாம் பூமேடையை பார்க்கிறோம

இந்திய நாயினங்கள் பற்றி கவனிக்க கோரும் முக்கியமான நூல்! - இந்திய நாயினங்கள் - தியடோர் பாஸ்கரன்

படம்
  இந்திய  நாயினங்கள்  தியடோர் பாஸ்கரன்   காலச்சுவடு  மின்னூல்  இந்தியாவில்  உருவான 25  நாயினங்களை வரிசைக்கிரமமாக விவரித்து அதன் வரலாற்றைப் பேசும் நூல் இது. கூடுதலாக நாய்களால் ஏற்படும் ரேபீஸ் நோய்,அதற்கு செலவாகும்தொகை, தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் தலையிடும் விலங்கு நல சங்கங்களின் விவகாரம், பாதிக்கப்படும் மக்கள் என இறுதிப் பக்கங்களில் பேசியுள்ளதும் முக்கியமான விவகாரம்தான்.  கோம்பை,ராஜபாளையம், பஷ்மி, சடை  நாய்கள், இமாலயன் மஸ்டிஃப் என பல்வேறு  நாய்களின் உடல் அமைப்பு, தனித்திறன்களைப்  பற்றி நூலில் விவரித்துள்ளார் ஆசிரியர். ஏறத்தாழ நாய்களைப் பற்றிய ஆய்வு நூலாக உருவாகியுள்ளது. நாய் என்ற பெயர் வந்தது எப்படி, அதன் பொருள் என்ன, இலக்கியத்தில் நாயை குறிப்பிட்டுள்ளனரா என்று தொடங்கப்பட்டிருப்பது நூலின் நோக்கத்தை  தெளிவுபடுத்துகிறது. பல்வேறு நாய்களின் புகைப்படங்களை பார்த்து அடையாளம் கொள்ள முடியும். அப்படி பார்க்க முடியாத நாய்களை ஓவியமாக நூலில்  காட்டியுள்ளார் ஆசிரியர்.  இந்திய நாயினங்களைப்பற்றி கள ஆய்வுகளை இந்திய அரசு நிறுத்தியதை வருத்தத்தோடு பதிவு செய்யும் ஆசிரியர், இந்திய  நாய் சங்கம் நாய்களை க

வெப்பத்தால் உருகும் உடல், மனம்!

படம்
  அரசு சொத்தை விற்பது சுலபம் ! அன்புள்ள கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? சென்னையில் பள்ளி , கல்லூரிகள் தொடங்கிவிட்டதால் வேலை பரபரப்பாக நகர்கிறது . புத்தக பதிப்பு என்பது அனைவருக்கும் ஏற்ற வேலை அல்ல . எனவே வேலைநேரம் மெதுவாக நகர்வது போலவே தெரிகிறது . அரசின் பொதுச்சொத்துகளை நிறுவனங்களை அடகு வைத்து பணம் பெறுவதைப் பற்றிய கட்டுரையை இந்து ஆங்கில நாளிதழில் படித்தேன் . எனக்கு இது சரியான கொள்கையாக படவில்லை . குறிப்பிட்ட நாட்களுக்கு சொத்துகளை தனியாருக்கு கொடுத்து அடிப்படை கட்டமைப்புக்கான நிதியைப் பெறுவது என்பது புத்திசாலித்தனமாக முடிவல்ல . இதன் காரணமாக தனியார் நிறுவனங்கள் மக்களிடம் அதிகளவு கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது . குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளும் என கட்டுரையில் கூறப்பட்டுள்ளது . நாளிதழ் பணியில் இருந்து உதவி ஆசிரியர் , எழுத்தாளர் பாலபாரதி விலகிக்கொண்டுவிட்டார் . வேறு ஏதோ அரசு இதழுக்கு ஆசிரியராகி வெளியேறுகிறார் . இவர் பொறுப்பேற்று பார்த்து வந்த பக்கங்கள் எனக்கு வரும் என நினைக்கிறேன் . நாங்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய சமூக பொறுப்புணர்வு பற்றிய நூல் ஒன்

கடித நூலை பதிவேற்ற செய்யமுடியாமல் தடுத்த அமேஸானின் அல்காரிதம்! - அமேஸான் அக்கப்போர் -1

படம்
  அமேஸானுடன் ஒரு அக்கப்போர்! அமேஸானில் இதுவரை பத்து மின்னூல்களை வெளியிட்டுள்ளேன். ஆனால் இதுவரை பெரிய பிரச்னை ஏதும் வந்தது கிடையாது. நூலில் பயன்படுத்துவது அனைத்தும் யுனிகோட் எழுத்துரு என்பதால் பிழைகளும் இருக்காது. அதாவது படிக்கும்போது பெட்டிபெட்டியாக வரும் பிரச்னையைச் சொல்லுகிறேன்.  இதுவரை அப்படி புகார் வந்ததில்லை. ஆனால் இப்போது அமேஸான் அப்படிப்பட்ட பிரச்னைகள் வருவதாக பயனர்கள் புகார் கொடுத்துள்ளனர். என பல பக்கங்களுக்கு ஒரு கோப்பைக் காட்டி அதிலுள்ள தவறுகளை திருத்துங்கள். பிறகு நூலை பதிவேற்றம் செய்யலாம் என நிபந்தனை விதிக்கிறது. இந்த சவாலைத் தாண்டுவதே கடினம். அப்படித் தாண்டினால் அடுத்துதான் அட்டைப்பட அக்கப்போர்கள் வரும். இதற்கு அடுத்ததாக உள்ளது, நூலின் அட்டைப்படம். பொதுவாக அட்டைப்படத்தை நான் ஜிம்பில் அல்லது போட்டோஷாப்பில் எல்லாம் செய்வது கிடையாது. அதற்கென கன்வா வலைத்தளம் உள்ளதே என ஒரு அசட்டு துணிச்சல். அதே துணிச்சல் தான் இதற்கு முன்னர் பயன்பட்டது. ஆனால் இந்த முறை டோல்கேட்டில் பணத்தை கேட்டு மிரட்டுவது போலாகி விட்டது நிலைமை. பத்தாயிரம் பிக்சல்களுக்குள் அட்டைப்படம் அடங்கவில்லை என அமேஸானின் அல