இடுகைகள்

வீடியோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிக்டாக்கிற்கு மாற்றாக பிரபலமாகி வரும் ட்ரில்லர் !

படம்
            டிக்டாக்கிற்கு மாற்றாக ட்ரில்லர் ! அமெரிக்கா , இந்தியா ஆகிய நாடுகளின் தடைக்கும் பிறகு உலகம் முழுக்க வேகமாக பரவும் அதேபோன்ற ஆப்தான் ட்ரில்லர் . இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட இணைந்துள்ளார் . இந்த ஆப்பும் டிக்டாக் போலவேதான் . இதில் இணைபவர்கள் தங்களுக்கு பிடித்த பாடலைப் போட்டு டான்ஸ் ஆடி பகிரவேண்டியதுதான் . இதில் தங்களுக்குப் பிடித்தவர்கள் ரசித்து லைக் போட்டு பின்தொடர்பவர்கள் அப்படியே தொடரலாம் . 2015 ஆம் ஆண்டு ட்ரில்லர் ஆப் உருவாக்கப்பட்டுவிட்டது . ஆனால் பிரபலமானது , டிக்டாக் தடைக்கும் பிறகான ஓராண்டில்தான் . டிக்டாக் பயனர்கள் எல்லாருமே அப்படியே ஸ்பேர் பஸ்சுக்கு மாறுவது போல இந்த ஆப்புக்கு தாவி ஏறிவிட்டார்கள் . இன்றுவரை உலகம் முழுக்க 120 மில்லியன் (1 மில்லியன் - பத்து லட்சம் ) பேர் இதனை தரவிறக்கம் செய்திருக்கிறார்கள் . 27 மில்லியன் மக்கள் இந்த ஆப்பை தினசரி பயன்படுத்துகிறார்கள் . டிக்டாக்கில் புகழ்பெற்ற பிரபலங்களான ஜோஸ் ரிச்சர்ட்ஸ் , சார்லி டிஅமெல்லோ , ஜஸ்டின் பைபர் , டைனமோ , ரீடா ஓரா ஆகியோர் பிற பயனர்ளள் ட்ரில்லரைப் பயன்படுத்த தூண்டுகிறார்கள் .

தந்தையின் கொலைக்கு ஊடகங்களை பழிவாங்கும் சைக்கோ மகன்! - அன்டிரேசபிள்

படம்
          அன்டிரேசபிள் பேராசிரியர் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். அவரது மகன் இதனால் பாதிக்கப்படுகிறான். சைக்கோ ஆகிறான். தனது அப்பாவின் இறப்பை வீடியோக்களாக போட்டு காசு சம்பாதித்தவர்களை பழிவாங்க நினைக்கிறான். விஷத்தை குளுக்கோஸில் கலந்து கொள்வது, லைட் மூலம் தோலை எரித்து கொள்வது, ஆசிட் மூலம் ஒருவரின் உடலை கரைப்பது என பல்வேறு விஷயங்களை முயன்று கொலைகளை செய்கிறான் பேராசிரியர் மகன். அதனை அவன் எப்படி செய்தான் என்பது கதை. படம் முழுக்க நடித்திருப்பது ஜெனிஃபர், கிரிப்பின். ஆகிய  இருவரும்தான். எப்பிஐ என பந்தாவாக கோட் மட்டும் மாட்டுகிறார்கள். வழக்கில் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஜெனிஃபர் மட்டுமே ஆபீசில் வேலை பார்ப்பது போல காட்டியிருக்கிறார்கள். மற்ற அதிகாரிகள் கம்பெனியின் இயக்குநர் கூட பஞ்சாயத்து டிவில் படம் பார்க்க கூடியது போல அடிக்கடி மீட்டிங் போடுகிறார்கள். ஆனால் எதையும் உருப்படியாக பேசுவதில்லை. படம் முழுக்க டயானே லேன்தான் வருகிறார். படத்தின் சுமையை தோளில் சும்ப்பவதும் அவர்தான். இதனால் அவரைப் போலவே நாமு்ம் சீக்கிரமே களைத்து விடுகிறோம். படுசோம்பல் - அன்டிரேசபிள் கோமாளிமேடை டீம்  

சரச சல்லாப வீடியோ - கல்யாண நாளில் என்னாகும் நிலைமை?

படம்
மீக்கு மாத்திரம் செப்தா - தெலுங்கு இயக்கம் - சமீர் சுல்தான் ஒளிப்பதிவு - மதன் குணதேவா இசை சிவகுமார் போனில் செய்யும் சிறிய தவறு எப்படி கல்யாண நாளில் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்பதை எவ்வளவு ஜாலியாக சொல்ல முடியுமோ அவ்வளவு ஜாலியாக சொல்லியிருக்கிறார்கள். தருண் பாஸ்கர் இயக்காமல் நடித்திருக்கிற படம். படத்தில் ஒவ்வொரு அங்குலத்திலும் அவர் இவரும், அபினவ்வும் செய்யும் காமெடிகள்தான் படத்தைப் பார்க்க வைக்கின்றன. பட வாய்ப்புக்காக தருண் ஒரு உப்புமா இயக்குநரை சந்திக்கிறார். அந்த சமாச்சாரம் நடக்கும் வரையில் அவர் உப்புமா ஆள் என தருணுக்கு தெரியாது. படத்தில் தருணின் பெயர் ராகேஷ். அங்கு பார்த்தால், ஒரு பெண், ஒரு பெட், ஒரு லைட் என எல்லாம் மினிம மாகவே இருக்கிறது. யெஸ் ராத்திரி வீரன் ரக படம்தான். இதுதெரியாத தருண், காலை நீட்டிப்போட்டு... பெட்டில்தான். படுத்து தூங்கிவிடுகிறார். ஏசி காற்று தூக்கத்தை அள்ளித்தருகிறது. இவருக்காக சாப்பிட சோறு எடுத்துவரச் சென்ற பெண், இதனால் டென்ஷன் ஆகிறாள். அதனால் என்ன செல்போன் கேமராவை திருப்பிவைத்து உறங்கும் நிலையில் இயக்குநர் சொன்ன சமாச்சாரத்தை முடிக்கிறார

ASMR வீடியோக்கள் பெருகி வருகின்றன!

படம்
ஆம் அப்படித்தான் கூகுள் ட்ரெண்ட்ஸ் கூறுகிறது. ஏஸ்எம்ஆர் என்றால் அட்டானமஸ் மெரிடியன் சென்சரி  ரெஸ்பான்ஸ் என்று கூறலாம். சாதாரணமாக ஓரிகாமி, சமையல்  உள்ளிட்ட வீடியோக்களை நீங்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள் அல்லவா அந்த வீடியோக்களைத்தான் இப்படி குறிப்பிடுகிறார்கள். இந்த வீடியோக்களில் இன்று நூறு என கூகுள் டிரெண் ட்ஸ் குறிப்பிடுகிறது. எந்த மாநிலங்களைத் தெரியுமா? மிசோரம், நாகலாந்து உள்ளிட்ட மாநில மக்கள்தான் இந்த வீடியோக்களை ஆர்வமாக அதிகமாக பார்த்திருக்கிறார்கள். இந்த வீடியோக்களின் டிரெண்டு அமெரிக்காவில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. இன்றும் இந்த ஏஎஸ்எம்ஆர் வீடியோக்களுக்கான நிகழ்ச்சிகளை தயாரிப்பவர்களுக்கு பத்தாயிரம் டாலர்கள் வரை வருமானம் கிடைக்கிறது. என்ன வீடியோக்களை பதிவிடுவது? ஐபோன் விமர்சனம் முதல் படுக்கும்போது குழந்தைகளுக்கு சொல்லும் கதை வரை எதை வேண்டுமானானாலும் சொல்லுங்கள். வீடியோ வடிவில் இதனை தயாரித்தால் சோலி முடிந்தது. இதற்கான வீடியோ தயாரிப்பவர்கள் ஒலியைப் பதிவு செய்வதற்காக தனி மைக்ரோபோன்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் பாத்திரம் தேய்க்கும் ஒலி, சாப்பிடும் ப