திரைப்படம் குறித்து எனக்கும் சில ஆர்வங்கள் உண்டு. லூசியா திரைப்படம் முகநூல் நண்பர்களின் மூலம் மக்களின் பணம் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம். திரைக்கதை அவர்களுக்காக முழுதும் வெளியிடப்பட்டது என்ற செய்தியை அறிந்தேன். புதுமையான முயற்சிகளை என்றும் வரவேற்க விரும்புவன் நான் .எனவே லூசியா விமர்சனத்தை நண்பர் ஒருவரின் வலைதளத்திலிருந்து வழங்குகிறேன். திரைப்படம், காமிக்ஸ் குறித்த தேடுதல்களுக்கு karundhel.com, kolantha.blogspot.com என்ற முகவரியைத் தேடிப்பாருங்கள். 70MM லூசியா - கனவுகளின் காதலன்! நீ மாயையினுள்ளா... ? மாயை உனக்குள்ளா ?! நீ உடலினுள்ளா... ? உடல் உனக்குள்ளா ?! நீ கனவினுள்ளா... ? கனவு உனக்குள்ளா ?! நீ போதையினுள்ளா... ? போதை உனக்குள்ளா ?! இ ந்தப் பாடல் பின்னணியில் ஒலிக்க , படம் துவங்குகிறது! பலத்த அடி பட்டு கோமாவில் கிடக்கிறான் நிக்கி என்ற நிகில் ; அதற்கான காரணத்தை அறிய புலன் விசாரணைகள் நடந்து கொண்டிருக்க , இடையிடையே அவனது பிளாஷ்பேக் காட்சிகள் நமக்குக் காட்டப் படுகின்றன! பெங்களூர் தியேட்டர் ஒன்றில் , டார்ச் அடி