இடுகைகள்

எழுதுபவரும், வாசகரும்

படம்
                                                        எழுதுபவரும், வாசகரும் இந்த இருவருக்குமான நேயமே சிறிது சிக்கலான ஒன்றுதான். வாசகரைப்பொறுத்தவரை அவர் தன் மனக்கண்ணில் எழுத்தினைப் பொறுத்து எழுத்தாளரை ஒரு மனதாக முடிவு செய்து வைத்திருப்பார். ஆனால் ஓரிடத்தில் வாசகர் சந்திப்பில் எழுத்தாளரை சந்திக்கும்போது அவர் மனதில் நினைத்ததற்கு மாறாகவே இருக்கும் அவரது உடல், குரல், கருத்தினைப் பகிரும் தன்மை. இதனாலேயே பெரும்பாலும் எழுத்தாளரும், வாசகரும் சந்திப்பதென்பது அவ்வளவு விரும்பத்தக்கதாக இருந்ததில்லை. அப்படி சந்திக்க வேண்டும் என்றால் எழுத்தாளரின் எழுத்தில் அவர் அடைந்த உணர்ந்து எழுதிய தன்மையை நாம் சிறிதேனும் தொட முயற்சித்திருந்தால் அதைப் புரிந்திருந்தால் சிறப்பானதாக இருக்கும். ஆனால் நம் சூழ்நிலையில் என்ன நிகழ்கிறது? பழனி முருகனுக்கு காவடி தூக்குவது போல எழுத்திற்கு காவடி தூக்குவது. இல்லையா? தூக்கி ஓரமாய் இறக்கி வைத்துவிட்டு சென்றுவிடுவது. எனது சகோதரரின் நண்பர் ஒருவர் வெகுஜன பத்திரிகை ஒன்றில் பயணக்கட்டுரை ஒன்றினை மனிதர்களின் அனுபவங்களோடு எழுதியிருந்த  ஒரு எழுத்தாளரை புத்தகத்திருவிழாவில் சந்த

KOMALIMEDAI: மேலோட்டமான ஊடகமனிதர்கள்

KOMALIMEDAI: மேலோட்டமான ஊடகமனிதர்கள் :                                               மேலோட்டமான  ஊடகமனிதர்கள்                    ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகள் கடினமான உழ...

மேலோட்டமான ஊடகமனிதர்கள்

படம்
                                              மேலோட்டமான  ஊடகமனிதர்கள்                    ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகள் கடினமான உழைப்பையும், தளராத முயற்சியையும் கோருவன. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை தகவல்களை இளைஞர்கள் பெறுவது மிக எளிது.  ஆனால் குறிப்பிட்ட செய்திகளின் தாக்கம் அவர்களின் மனதை சென்றடைகிறதா என்பதே சந்தேகம்தான். ஆனால் அவர்களின் வேகத்திற்கு ஏற்ப அவர்களின் உழைப்பு இருக்கிறதா என்று என்னால் அறியமுடியவில்லை. அவர்கள் மெல்ல ஏழைமக்களுக்கு எதிராக திரும்புவதும் போல் தெரிகிறது. இவர்களின் கல்வித்தகுதி என்பது பெரியதாக இருக்கிறது. எனக்கு அண்மைய நாட்களில்  சுந்தர் என்பவர் அறிமுகமானார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். முதல் சந்திப்புகளிலேயே நான் நினைத்தது பட்டினத்தாரின் மறுபிறப்போ என்றுதான். ஆனால் அவருக்குள்ளேயே பெண்களின் உடை, சுதந்திரம் குறித்து ஆதிக்க மரபான மனிதன் இடையறாது உரையாடி வந்தான் என்பதை நான் பேச்சினூடே எளிதில் உணர முடிந்தது. இணைய வீடியோக்கள், செய்திகள் என சிந்திக்காது அவற்றின் பார்வைக்கோணத்தை,  அரசியலை சந்தேகிக்காமல், புரிந்துகொள்ளாமல் அவற்றை நம்பும் மனங்களினால் விளையும்

லட்சியவாதங்களின் நொறுங்கல்

படம்
                                           லட்சியவாதங்களின் நொறுங்கல்   சில நாட்களுக்கு முன் ஒரு முன்னாள் லட்சியவாதி ஆசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். சந்தித்து நான் பேசியதை விட அவர் பேசிய பொருமலைத்தான் அதிகம் கேட்க வேண்டியிருந்தது. ஏறத்தாழ காந்தியின் லட்சியங்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் ஏற்பட்ட அதே உரசலைத்தான் இன்னொரு நிகழ்கால அப்டேட் வர்ஷனில் கூறிக்கொண்டிருந்தார். முன்பு லட்சியவெறி எல்லை தாண்டி இருந்த போது தன் மூத்த மகளையும், இரு மகளையும் தமிழ் வழியில் படிக்கவைத்திருந்தார் ஆனால் இன்றைய காலநிலையில் தமிழுக்கான கௌரவத்தை இந்த வலைப்பூ நிறுவனரின் நிலையைப் பார்த்தாலே தெரிந்திருக்கும். முதுகெலும்பு நொறுங்க வேலை செய்து நகரத்தில் என்ன செய்கிறார் என்பதை அவரது புலம்பலான எழுத்துக்களிலிருந்து அறிந்துவருகிறோம். அதே கதைதான். ஆனால் பயம் தொடர்பான அவரது இளைய மகளுக்கல்ல.  ஆசிரியர் மற்றும் முக்கியமான அந்த எழுத்தாளப்பெருந்தகைக்குத்தான்.             ஒவ்வொரு நண்பராக அழைத்து என்ன படிப்பிற்கு வருங்காலத்தில் வரவேற்பு இருக்கும்? என்று அழைத்து கேட்டுக்கொண்டிருந்தார். ஏறத்தாழ ஆறு அழைப்புகளுக்கும் ம

சிறிதேனும் கடவுளாகலாம்

படம்
                                            சிறிதேனும் கடவுளாகலாம்               இந்தியாவில் கடவுளாவது பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. மிக எளிதுதான். ஏதேனும் எளியவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தால் போதுமானது. இங்கே பெரும்பாலும் தீர்வுகளை எதற்கும் நினைவுகூருவதே இல்லை. ஏனெனில் பிரச்சனைகள்தான் தீர்ந்துவிடுமே. ஒரட்டாங்கைபோல் எப்போதும் ஒரே புலம்பல், அழுகை. அதுவும் ஒரு அரசியல் வழிதான். பலரும் கடவுளைத் தொழுகிறார்கள். பிரச்சனைகள் தீர, தேவைகள் நிறைவேற, வணிகக்கூட்டிற்காக, சுமையை சுமத்துவதற்காக, பிரச்சனையிலிருந்து மீளுவதற்காகவும் கூடத்தான். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் 'ஞா' என்று கொள்வோம். இருவரும் திருமண விழாவில் சந்தித்துகொள்வதாக ஏற்பாடு. சந்தித்தோம். பேசினோம். இடையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஏறத்தாழ இரண்டு மணிநேரங்கள் பேசினார் நண்பர். பிறகு, அவர் அழைத்தது ஒரு பெண்தோழி என்றார். ''அவுங்க வீட்டுல ஏதோ பிரச்சனையாட்ட, ஈஷாவுக்கு போயிரலாம்னு இருக்கறங்கறாங்க, நாஞ் சொன்னன் இங்க பிரச்சனைன்னு அங்க போனா அங்க ஏதாவது சிக்கல் இருந்தா எங்க போவீங்கன்னு கேட்டா எதுவும் ப

தேதியிடா குறிப்புகள்

படம்
தேதியிடா குறிப்புகள் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் சந்திக்க இந்நூல் ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறது. தேதியிடா குறிப்புகள் பல எழுத்துக்களின் சங்கமாக இருக்கும். அன்பு, இரக்கம், கோபம், பகடி, கோபம், கொண்டாட்டம், வலி, வேதனை, துயரம், விரக்தி என அனைவரின் வாழ்விலிருக்கும் விஷயங்கள் இங்கு ஒரு கோணத்தில் சொல்லப்படுகிறது. ஒரு தனிமனிதனின் உடல் பலவீனம், அவனை ஒரு இடத்திலே முடக்கிவிட புத்தகங்களிலான உலகம் அவனை எப்படி உருவாக்குகிறது என்பது நான் எழுதும் நூல்கள் அனைத்திற்கான தேடல். இந்த சமுதாயம் தன் மையப்படுத்தலால் எத்தனை இதயங்களை சிதைக்கிறது, மீள முடியாத துயரத்தில் தள்ளுகிறது! உறவுகளின் பயன்படுத்திக்கொள்ளும் துயரம், உலகமயமாதல் சூழ்நிலையில் ஏற்படும் பெரும் பண்பாட்டு நுகர்வு ஒவ்வொரு மனிதவாழ்க்கையையும் எத்தனை பெரிய துயரில் தள்ளுகிறது! பலவற்றை நான் சொல்ல முடியவில்லை என்றாலும் தனிமனிதனின் நாட்குறிப்பு போல் நீளும் இப்பதிவுகள் ஏதோ ஒன்றை சொல்ல முயலுகின்றன. ஒவ்வொருவரிடமும் உள்ள கதைகளினால் உலகம் முழுவதும் எத்தனை கதைகள் சொல்லியும், சொல்லாமலும் இருக்கின்றன? ப்ரான்ஸ் காப்கா கிழித்தெறியச்சொன்ன கதைகளைப்

வானமே கூரை

படம்
                                          வானமே கூரை                   சென்னையில் நீங்கள் நடைபாதையில் ஏதோ ஒரு மரத்தின் அடியில் பேருந்து நிறுத்தத்தின் அருகில் இருப்பவர்களைப் பற்றி எப்போதேனும் நினைத்திருக்கிறீர்களா? நாமோ இஎம்ஐ வாங்கி அதைக்கட்டுவதற்கென்றே பிடிக்கிறதோ இல்லையோ வேலைக்கு போகின்ற ஆட்கள். ஆனால் இது போன்ற எந்தக்கவலையும் இல்லாமல் எப்படி அவர்கள் அழுக்குத்துணியோடு, அடுத்தவேளை உணவு, மலம் கழிப்பது போன்ற அவசியமான எந்த கவலைகளும் இல்லாமல் உட்கார்ந்திருக்க முடிகிறது? என்னைப் பொறுத்தவரையில் சென்னை வந்தாலே வயிற்றுக்குள் பல உருட்டல் மிரட்டல் சத்தங்கள் கேட்கத்துவங்கிவிடும். எங்கே போகவேண்டும்? சரியான பேருந்தில்தான் ஏறுகிறோமா? எங்கே போனாலும் அங்கே கழிவறை இருக்குமா? தண்ணீர் வைத்திருப்பார்களா? குழாயில் காற்றுக்குப்பதில் நீர் வர சாத்தியம் இருக்குமா? என பல கேள்விகள் எழும். முடிந்த அளவு சில முன்னேற்பாடுகளுடன் எழுந்து கவனமாக தயாராவேன்.                    ஒரு பத்திரிகை ஒன்றின் நேர்காணலுக்கு சென்னை வந்துவிட்டு தங்க இடமில்லை. அப்போது அன்பரசின் சகோதரர் கூட இடம் கேட்க முடியாத சூழல். அப்ப

வக்கிரத்தின் அளவீடு எது?

படம்
                                                 வக்கிரத்தின் அளவீடு எது?               42 ஆண்டுகள் கோமாவில் இருந்து இறந்துபோன மும்பை நர்ஸ் அருணா ஷான்பாக் 66 வயதில் இறந்துவிட்டார். அதுகுறித்த ஏங்க இப்படி நடக்குது? என்று அதிர்ச்சியடைந்த முகத்துடன் ஒரு விஷயத்தை பகிர்ந்துகொண்டார். நண்பர் சுந்தரத்தின் சக தோழி ஒருவர் பிரைமரி ஸ்கூல் ஒன்றில் பணிபுரிகிறார். அவருக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் காதல் கடிதம் கொடுக்கிறான் இது எவ்வளவு வக்கிரமானது? என்று வருத்தப்பட்டார் அவர். ஏறத்தாழ பள்ளி பயின்ற நம்மைப்போல பலரும் ஆணோ, பெண்ணோ ஆசிரியர் எவராக இருந்தாலும் அவரது கம்பீரம், பழகும் முறை, கவர்ச்சி இதனால் கவர்ந்திழுக்கப் படாமல் இருக்கவே முடியாது. ஆண் என்பதை விட பெண் எனும் போது அது மாணவர்களுக்கு கூடுதல் பிணைப்பை அவர்களுடன் ஏற்படுத்துகிறது. தாயின்மேல் தந்தையிடம் இருப்பதைவிட ஆண் பிள்ளைகளுக்கு நெருக்கம் அதிகம்தானே! இதை ஏன் நாம் இந்தக்கோணத்தில் பார்க்கக்கூடாது? என்றேன். அதற்கு அவர், ''அப்படியா சரி, நெல்லை பேருந்து நிலையத்தில் நான் நடந்துபோய்க்கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் 45 வயது மதி

கூலி ஆட்கள் எங்கே போனார்கள்?

படம்
                                      கூலி ஆட்கள் எங்கே போனார்கள்?   விவசாயத்திற்கு கூலி ஆட்கள் கிடைக்கவில்லை என்று பலரும்  குறை கூறுகிறார்கள். சிலர் இதனை நேரடியாக டி.வி நிகழ்ச்சிகளிலும் கூறுகிறார்கள். அந்த நிகழ்ச்சி ஒன்றினை நண்பர் ஆர்.எம்  கலந்துகொண்ட பகுதியை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஏறத்தாழ அழுதுகொண்டே என் நிலத்தில் யாரும் வேலை செய்ய வரமாட்டேன் என்கிறார்கள் அதற்கு காரணம் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்தான் அதை நிறுத்தவேண்டும் என்கிற ரீதியில் பேசினார். அப்போது செந்தமிழன், ஆர்.எம் இருவரும் அதற்கான நேர்மையான காரணத்தை கூறியபோதும், நிலவுடைமையாளரால் உண்மையை ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. நேர்மையான காரணம் என்னவென்றால் நிலத்தில் வேலை செய்வது தாழ்த்தப்பட்ட வகுப்பினர்; தலித் மக்கள்தான். ஆனால் இந்த மேல்ஜாதி முதலாளிகள் அவர்களை கடுமையாக அதட்டி உருட்டி அடிமைபோல வேலை வாங்குகிறார்கள். மரியாதை கிடைக்காத வேலையை ஒருவர் ஏன் ஏற்க வேண்டும்? முதலில் வேறு வாய்ப்புகள் இல்லை. ஆனால் இன்று ஏராளமான வாய்ப்புகளை நகரம் வாரி வழங்குகிறது.  எனவே அவர்கள் அங்கே குறைந்த கூலி என்றாலும் அதை நாடி செல்கிறார்கள். அந்த வீட

திசை தேடி....

படம்
                                                                திசை தேடி....                   நகரத்தைப் பொறுத்தவரையில் திசை மிகவும் முக்கியம் என்று கூறலாம்.  அண்ணாநகர் மேற்கு என்றால் அங்கிருந்து மெயின் ரோட்டில் இருந்து பல சாலைகள் இடையறாது நூலகம் வரையில் பிரிந்து பிரிந்து ஒன்று சேரும். கிராமங்களில் உள்ள போக்குவரத்து சாலைகள் போன்றதல்ல இவை. நகரத்தில் பேருந்துகள் போக ஒரு வழி, திரும்பி வர ஒரு வழி. இவை ஏதோ ஒரு இடத்தில் ஒரு பொதுவான சந்திப்பில் சந்தித்துக்கொள்ளும். ஆனால் புதிதாக நகரத்திற்கு இடம்பெயர்ந்து வரும் ஒருவனுக்கு இவை பெரும் திகைப்பை அளிக்கும். அதாவது எனக்கு அளித்தது. அடிக்கடி தொலைந்துபோவதுதான் எனது வாடிக்கை. மிகத்துல்லியமாக தவறான வழியில் சென்று நூடுல்ஸ் அல்லது பாஸ்தா போன்றிருக்கிற மூளையை மேலும் நொச நொச வென முறுக்கிக்கொள்வேன். முதலில் மயிலாப்பூரில் வந்தபோது, வெஸ்டர்ன் டாய்லெட் போக ஒருவார பயிற்சியை எனது உடன்பிறப்பு அளித்தார். அப்படியிருந்தும் அதில் அமர்ந்து மலம் கழிப்பது என்பது பிராண சங்கடமாகவே இருந்தது. உட்கார்ந்தவாக்கில் மலம் கழிப்பது என்பது எப்படி பழகுவது என்று என்னால் பு

ஏத்துடா மெழுகுவத்திய!

படம்
                                                ஏத்துடா மெழுகுவத்திய!             இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது எப்போதும் நம்மிடையே இருக்கும் ஒரு உத்திதான். எல்லாமே தத்தமது இருப்பை உறுதி செய்து கொள்வதற்காகத்தான் தோழர்களே! இப்போது பாருங்கள்.  இறந்தவர்களை பாராட்டுபவர் அவரது கொள்கைக்கு விரோதியாக கூட இருக்கலாம். மோடி அம்பேத்கரை பாராட்டுவது போல. அதெல்லாம் நமக்கு ஒரு பிரச்சனையா என்ன. செத்தவன் எழுந்து வந்து ஏதாவது சொல்லவா போகிறான்? நேற்று நுங்கை முழுவதும் ஒருவர் பேனரில் மண்வெட்டி வைத்து நிற்கிறார். ஒன்றில் கட்சியின் அணிவகுப்பை பார்வையிடும் மேஜர் ஜெனரல் போல இருக்கிறார். ஆனால் கட்சியினர்க்கு இன்னும் திராவிடக் கட்சியினரைப் போன்ற படைப்புத்திறன் இல்லை. ஒசாமா, ஒபாமா, சே போன்று எல்லாம் முயற்சிக்கவில்லை. அட மறந்துவிட்டேன். அதை குருமா எடுத்துக்கொண்டு விட்டார் அல்லவா? அதனாலென்ன அலெக்ஸாண்டர், சீசர், நெப்போலியன் என வாய்ப்புகள் நிறைய நமக்கு காத்திருக்க என்ன இது மண்வெட்டி, மேஜர் ஜெனரல் வேஷம் எல்லாம். ஞாயிற்றுக்கிழமையை எப்படி கழிப்பது என்பவர்களுக்கு இதுபோன்ற போலி செயல்பாட்டுவாதிகள் பெரும்