இடுகைகள்

ஹைப்பர்லூப் இந்தியா! -ச.அன்பரசு

படம்
ஹைப்பர்லூப் இந்தியா ! - ச . அன்பரசு பெங்களூரு எஞ்சினியர்களின் ஃப்யூச்சர் சாதனை ! டெல்லி டூ மும்பை - 1 மணிநேரம் , நியூயார்க் டூ வாஷிங்டன் -29 நிமிஷங்கள் , லாஸ் ஏஞ்சல்ஸ் டூ சான்   பிரான்சிஸ்கோ -36 நிமிஷங்கள் போதும் . இது ஃப்யூச்சரில் நாம் செல்லவிருக்கும் ஹைப்பர்லூப் பயணத்தின் ட்ராவல் டைம் . நம்புங்கள் . சொல்வது அனைத்தும் ஹைப்பர்லூப் கனவை எப்பாடு பட்டேனும் இவ்வாண்டே நிறைவேற்றத்துடிக்கும் எலன் மஸ்க் மீது சத்தியமாக உண்மை .   2015 ஆம் ஆண்டு எலன் மஸ்கினுடைய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் , உலகிலுள்ள அனைத்து எஞ்சினியர்களும் ஹைப்பர் லூப் டிசைனில் பங்கேற்க அழைத்தது . இதில் இந்தியா சார்பாக பங்கேற்ற ஒரே டீம் பெங்களூரின் வொர்க் பென்ச்சர்ஸ் ( எ ) ஹைப்பர்லூப் இந்தியா மட்டுமே . ஹைப்பர்லூப் என்ற போக்குவரத்து பற்றிய எந்த முன்மாதிரிகளும் இல்லாமல் ஆராய்ச்சி செய்து கற்று பெங்களூரைச்சேர்ந்த பொறியியல் குழு ஹைப்பர்லூப் மாடலை வடிவமைத்துள்ளது சாதனைதானே ! வொர்க் பென்ச் நிறுவனத்தின் இயக்குநரான அனுபமா கௌடாவின் வழிகாட்டுதலில்

கோமாளிமேடை ஸ்பெஷல்ஸ் -ரோனி

படம்
Hotwater சேலஞ்ச் ! ப்ளூவேல் கேமில் இணைந்து பலரும் உயிரை விட்டுக்கொண்டிருக்க அடுத்ததாக புயலாக அமெரிக்காவில் ஹாட்டாக கிளம்பியிருக்கிறது Hotwater சேலஞ்ச் ! ஐஸ்பக்கெட் சேலஞ்ச் உள்ளிட்ட நோய்களுக்கான நிதிபிரசார விளையாட்டுகளைத் தாண்டி இணையத்தில் சுயவதையை தூண்டும் பிரசாரம் செய்யும் ட்ரெண்ட் திகுதிகுவென பரவி வருகிறது . ஹாட்வாட்டர் சேலஞ்சும் அப்படித்தான் . வெந்நீரை நன்கு காய்ச்சி , நண்பர்கள் மீது ஊற்றுவதுதான் கேம் பிளான் . அப்போது கைகால் வெந்துவிடுமே ? யெஸ் . அப்படி கதறி துடித்தால்தானே கேமில் அடுத்த லெவல் . அடுத்த லெவலில் வெந்நீரை இன்னும் பல நூறு செல்சியசில் கொதிக்கவைக்கவேண்டும் . அமெரிக்காவின் அர்கனாசில் வீட்டில் தூங்கிய சிறுவனின் முகத்தில் ஓவனில் கொதிக்க வைத்த வெந்நீரை கொட்டி ஊரையே பதறவைத்துள்ளான் அச்சிறுவனின் சக நண்பன் . இரண்டாவது சம்பவத்தில் 11 வயதான ஜாமோனிஷா ஹாட்வாட்டர் சேலஞ்சால் பாதிக்கப்பட்டு முகம் , தோள் எல்லாம் வெந்து ஆஸ்பிட்டலில் சேர்ந்துள்ளது உலகெங்கும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது . சூசைட் டூ சுமங்கலி பவ ! சினிமாவில்தான் இது சாத்தியம் . ஒருவரின் லைஃபில்

கோமாளிமேடை ஸ்பெஷல்! தொகுப்பு: ரோனி

படம்
ஃபேக்டரியை எரித்த அணில் ! வெற்றிக்கு அணிலாக உதவினேன் என்று சிலர் வெட்டிப் பெருமை பேசுவார்கள் . நிஜமாகவே அணில் உதவியா , உபத்திரமா என கீழேவரும் சீஸ் ஃபேக்டரி ஓனர்தான் சொல்லவேண்டும் . ஏன் ? அவருக்கு அணில் செய்த செய்வினை அப்படி . கனடாவின் பர்னபி பகுதியிலுள்ள ஸ்கார்டில்லோ சீஸ் ஃபேக்டரிதான் சம்பவம் நடந்த ஸ்பாட் .   காலை 9 மணிக்கு அப்பகுதியின் ஃபயர்சர்வீஸ் நிலைய அலாரம் ஒலித்தது . நெருப்புடா என பதறிய வீரர்கள் உடனே மின்னல் வேகத்தில் சீஸ் ஃபேக்டரியில் என்ட்ரியானார்கள் . என்ன ஆச்சு ? அணில்தான் . பல்லை வைத்துக்கொண்டு பழம் , பாதம் என தின்னாமல் முக்கிய பவர்லைனின் வயர்களை கடித்து வைக்க , ஃபேக்டரி முழுக்க தீ ஜம்மென்று பிடித்துவிட்டது . 4 வண்டிகள் , 15 ஃபயர் ஆட்கள் என 12 மணிநேரம் போராடி தீயை அணைத்ததில் சீஸ் செய்ய வைத்திருந்த 20 ஆயிரம் காலன் பாலும் காலி . இப்போ சொல்லுங்க , இதுக்கு மேலயும் அணிலைப் பார்த்தால் உங்களுக்கு பாசம் வருங்களா ஆபீசர் ? என்னை காப்பாத்துங்க அமைச்சரே ! குறைந்தபட்ச அமைச்சரவை அதிகபட்ச நிர்வாகம் என்ற லட்சியத்தில் அணுவளவும் பிறழாமல் மாதம் ஒரு வரி , மாதம்

குங்குமம் ஸ்பெஷல்! -ரோனி ப்ரௌன்

படம்
காசு வேண்டாம் காதல் போதும் ! என் மகள் இப்படி பண்ணிட்டாளே என மனம் குமைந்து கிடக்கிறார் மலேசிய பணக்காரரான கே பெங் . பின்னே , மூன்று கண்டங்களில் வீடு , பிரைவேட் ஜெட் அத்தனையும் விட்டுவிட்டு ஆசைமகளான ஏஞ்சலினா ஃப்ரான்சிஸ் , பத்து பைசாவுக்கு பிரயோஜனமில்லாத தருமி போன்ற ரேஞ்சிலுள்ள காதலனை மணந்துகொண்டதுதான் அப்பாவின் வருத்தத்துக்கு காரணம் . 300 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரியான பெங்கின் மகள் ஏஞ்சலினா , 2008 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டில் படிக்கும்போது ஜெடிடியா ஃப்ரான்சிஸ் என்ற கரீபிய கட்டழகன் மீது மையலாகிவிட்டார் . அப்பா பெங் , கண் சிவந்து நம்பியாராகி கையைப்பிசைய , எம்ஜிஆராக ஜெடிடியா மாற வேறென்ன ? ஏஞ்சலினாவும் ஜெடிடியாவும் கமுக்கமாக 30 பேர் முன்னிலையில் கெட்டிமேளம் கொட்டி 1500 டாலர்களில் மேரேஜை முடித்து ஃபிரான்சிஸின் அறையில் குடித்தனமே செய்யத்தொடங்கிவிட்டனர் . காதலே ஜெயம் !   அவமானத்தை வென்ற மாற்றுத்திறனாளி ! மனிதவளம் கொட்டிக்கிடக்கும் இ்ந்தியாவில் எளிய மனிதர்களுக்கு ரெஸ்பெக்ட் கிடைப்பதே சால கஷ்டம் . இதில் பிறரின் உதவியாலேயே வாழும்  மாற்றுத்திறனாளிகளின் நிலைமை என