இடுகைகள்

ஏர் பிளேன் மோடு சரியானதா?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி?   மிஸ்டர் ரோனி விமானங்களில் செல்லும்போது செல்போன்களை ஏர்பிளேன் மோடில் மாற்றச்சொல்லுவது ஏன்? செல்போன்களை மட்டுமல்ல; லேப்டாப், இபுக் ரீடர்(கிண்டில்) என அனைத்தையும் செயலற்ற நிலையில் வைத்திருக்க விமானங்களில் கூறுவார்கள்.  காரணம், அவை விமானத்தின் தகவல் தொடர்ப்பில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால்தான். இதனால்தான் விமானம் புறப்படத்தொடங்கும் டேக் ஆஃப் சமயத்தில் போன்களை ஏர்பிளேன் மோடில் வைக்கச்சொல்லுகின்றனர். அப்போது கதிர்வீச்சு பிரச்னை இருக்காது.  இன்று விதிகள் முன்பைப் போல கடினம் இல்லை. ஆனாலும் செல்போன்கள், ரேடியோ அலைகளைப் பயன்படுத்துவதால் அவை விமான தகவல் தொடர்பை பாதிக்கின்றன என அவற்றை பயன்படுத்த மறுக்கின்றது விமான நிர்வாகம்.  நன்றி: பிபிசி

லவ் இன்ஃபினிட்டி: பிரம்மச்சரியத்தை உடைத்த நண்பன்

படம்
pinterest லவ் இன்ஃபினிட்டி 15 குமார் சண்முகம் தொகுப்பு: ராக்கி, தேஜஸ்வின் ராஜ் சுமதி தன்னோடு கருத்தை தெளிவா சொல்லிட்டா. எனக்கு ஆசையிருக்குன்னு. அவ ரொம்ப போல்ட். சில சமயங்களில் நான்தான் விலக வேண்டியிருந்தது. ஒருவகையில் அது இயற்கைதான். எனக்கு அப்போ புனிதமானவன்னு ஒரு பிடிவாதம் இருந்தது. என் உடம்பும் மனசும் ஒண்ணுக்கொண்ணு சண்டை போட்டது அவளோட இருக்கும்போதுதான். உண்மையில் அவளோட ஆர்வம் வேற வகையில் யோசிக்க வெச்சாலும் நான் யூ சர்டிஃபிகேட் வாங்கின பையன். அந்த மாதிரியெல்லாம் கல்யாணத்துக்கு அப்றம்தான்னு சொல்றவன். ஆனாலும் இயற்கை ஜெயிக்கிறது முடியுமா? ஃப்ரெண்டா, அதுக்கும் மேலயான்னு உடம்பு விவாதிக்க விடல. ஆனால் என்னோட கூட்டாளி கில்டி குணா, மீட்டர் வட்டி விட்ட ஜெகன்கிட்ட மூவாயிரம் ரூபாய் காசு வாங்கிட்டுப் போய், பிரம்மச்சரியத்தை உடைத்து எங்க வயித்தெரிச்சலை சம்பாதிச்சான். அப்போ அங்க இந்த விஷயத்துல ஃபேமஸா இருந்தது, திட்டுப்பாறை ஸ்வேதாதான். இதையெல்லாம் என்னோட ஃபிரண்டு மங்கை முருகன்கிட்ட சொன்னா சிம்பிளா ஒரு த த்துவம் சொன்னான். கோவம்தான். பட் அவன் சொன்னதுல ஒரு நேர்மை இருந்துச்சு பல்லு

நாவலின் வடிவம் வேறு சினிமாவின் வடிவம் வேறு

சாத்கூன் மாஃப், ஹேப்பி நியூ இயரில் நடித்த விவான் ஷா இப்போது நாவல் ஆசிரியராக மாறியிருக்கிறார். கொலை குறித்த மர்மங்களைக் கொண்ட லிவிங் ஹெல் என்ற நூலை பெங்குவின் பிரசுரித்துள்ளது. அதுபற்றி விவானிடம் பேசினோம். இந்த நாவலை எழுத உங்களைத் தூண்டியது எது?  நான் சிறுவயதிலிருந்து துண்டு துக்காடவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். முதலில் நாடகங்கள் சிலவற்றை எழுதினேன். பின்னர், கட்டுரைகளுக்கு நகர்ந்தேன். நான் இலக்கியம் படித்தவன் என்பதால் இது எளிதாக சாத்தியமானது. நான் கலைப்படைப்புகளை உருவாக்க பேனாவும் பேப்பரும் இருந்தாலே போதும். சாத் கூன் மாஃப் படத்தின் ஆக்கத்திலும் பங்களித்திருக்கிறீர்கள். அதோடு எட்கர் ஆலன்போவின் கதைகளை நாடகமாக்கிய திறமையும் கொண்டவர். இருண்ட கதைகள் ஏன் உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது.  காரணம், நான் தொடக்கத்தில் கற்ற படித்த இலக்கியங்கள் நேர்மறையான தன்மை கொண்டவை அல்ல. அறிவியல் ஆய்வாளன் கண்டுபிடித்த ஆய்வு உண்மையைப் போலவே கலைஞனும் உண்மையைத் தேடவேண்டும். நம் வாழ்க்கையைப் பாருங்கள். அவ்வளவு எளிதில் நேர்மறையான விஷயங்களை நீங்கள் அடையாளம் கண்டுவிட முடியாது. கலை என்பது ஆன்மிக ரீதியா

கருகுகிறது பிஸ்கட் துறை!

படம்
ஜிஎஸ்டி வரிகளால் கருகும் பிஸ்கட் துறை! behance தற்போது பிஸ்கட் துறையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சாதாரண கம்பெனிகளல்ல. பிரிட்டானியா, பார்லே, ஐடிசி ஆகிய கம்பெனிகள். என்ன காரணம்? ஜிஎஸ்டிதான். இதனால் மாநிலங்களிலுள்ள சிறு சிறு பிஸ்கட் கம்பெனிகள் குறைந்த விலையில் பிஸ்கட்டுகளை கடைகளில் கிடைக்கச் செய்துவருகின்றனர். இதன் விளைவாக, இந்தியளவில் விற்பனை செய்துவரும் பார்லே பெரும் சரிவை சந்தித்துள்ளது. முதலிடத்தில் உள்ள பிரிட்டானியாவும் இதனை உணரத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் பிஸ்கட் சந்தையின் மதிப்பு 35 ஆயிரம் கோடி ரூபாய். தற்போது ஏற்பட்டுள்ள சரிவு 350 கோடி ரூபாயாக உள்ளது. தற்போது பிஸ்கட்களுக்கு உள்ள வரி பதினெட்டு சதவீதம். இதனை 12 சதவீதமாக குறைக்க பிஸ்கட் நிறுவனங்கள் அரசை வற்புறுத்துகின்றன. பிரிட்டானியா, பார்லே, ஐடிசி ஆகிய நிறுவனங்கள் மூன்றும் 69 சதவீத பங்குகளை கையில் வைத்துள்ளன. நன்றி: எகனாமிக் டைம்ஸ்

சைக்கோ கொலைகாரர்கள் அசுரர்களா?

படம்
dahmeraesthetics\pinterest குழந்தைகளை கற்பழித்துக் கொன்று, உடலையும் எரித்துவிட்டு எந்த குற்றவுணர்வும் இல்லாமல் ஒருவரால் இருக்க முடிகிறது. பின்னர் போலீஸ் அவரை கைது செய்துவிட, பெயிலில் வந்தவர் அவர் செய்த குற்றத்தைப் பற்றி பேச கோபம் வருகிறது. அம்மாவையும் அடித்தே கொல்கிறார். இந்த செய்தியை நாளிதழில் படித்திருப்பீர்கள். இப்போது உங்கள்மனதுக்குள் என்ன விஷயம் ஓடுகிறது? இவன் மனிதனே அல்ல, மிருகம். என்பதோடு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சைக்கோ கொலைகாரர்களின் சிக்னேச்சர் கொலைமுறைகள் கூட மனதில் ஓடலாம். ஆனால் இவர்களின் மூளை எப்படி செயல்படுகிறது என யோசித்தால்,  உங்கள் ஐக்யூவிற்கு வாழ்த்துகள் சொல்லலாம். 49 சைக்கோ கைதிகளின் மூளை செயல்படும் விதத்தை அறிய மருத்துவர், ஜோஸ்வா பக்ஹோல்ட்ஸ் முயற்சித்தார். நாம் சைக்கோ கொலைகாரர்கள், உடலிலும் உள்ளத்திலும் உணர்ச்சிகளே அதிர்வுகளே இல்லாதவர்கள் என நினைக்கிறோம் . அது தவறு என்று தில்லாக அறிவித்தே ஆராய்ச்சியைத் தொடங்கினார். டெமோ இதுதான். கைதிகளுக்கு, சிறியளவு பணத்தைக் கொடுத்து  அதை எப்படி செலவு செய்ய முடிவெடுக்கிறார்கள் என்பதுதான் சோதனை. இ

மாற்றுப்பாலினத்தவரை ஒடுக்கும் ஜப்பான் அரசு!

படம்
ஜப்பானில் அரசின் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுப்பாலினத்தவர் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு கட்டாய அறுவை சிகிச்சை! - ஜப்பானின் புதிய விதி! நேர்காணல்: கனோ டோய் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஜப்பானில் மாற்றுப்பாலினத்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஜப்பானில் வாழும் மாற்றுப்பாலினத்தவர்கள் இன்னும் வெளிப்படையாக அடையாளம் காணப்படவில்லை. முறையான அரசு, அங்கீகாரமும் கிடைக்கவில்லை. மேலும் அரசு, மாற்றுப்பாலினத்தவர்களுக்கு எந்த சலுகைகளையும் வழங்க முன்வரவில்லை. அரசின் ஆவணங்களில் தங்களுடைய பாலினத்தை மாற்ற முயல்பவர்களுக்கு பாலின அடையாள குறைபாடு கொண்டவர் என்ற பிரிவில் அவர்களுக்கு விதிகளை மீறிய அறுவைசிகிச்சை செய்யும் ஜப்பான் அரசு முயற்சிக்கிறது. ஜிட் சட்டம் என்ன சொல்கிறது? இச்சட்டம் அமலாகி பதினைந்து ஆண்டுகளாகின்றன.  இதன் மூலம் மாற்றுப்பாலினத்தவர் தன் பாலினத்தை மாற்றிக்கொள்ள முடியும். அதை இச்சட்டம் அனுமதிக்கிறது. அது சரிதானே? என்ன பிரச்னை உள்ளது? பிரச்னை சட்டம் அல்ல; சட்டத்தின் உள்ளே உள்ள கட்டுப்பாடுகள்.  இப்பிரிவில் தற்போது மாற்றுப்பாலினத்தவர்களுக்கு கருத்தடை

இந்தியாவை உருக்குலைக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு!

படம்
healthline ஊட்டச்சத்து பற்றாக்குறையால் தடுமாறும் இந்தியா! தேர்தல் வந்தவுடன் இந்தியர்களை வேலையின்மை , பசி ,பட்டினி அனைத்தையும் மறக்கடிக்க பணத்தை வாரிறைக்க தொடங்குகின்றனர். இதெல்லாம் ஆட்சியைப் பெறும்வரையில்தான். அப்புறம்... இதுவரை நீங்கள் என்ன பார்த்தீர்களோ அதுவேதான் தொடரும். வீடு, உணவு, உடை என அடிப்படை ஆதாரங்களுக்கே நாம் இன்னும் அரசை நம்பியுள்ள நிலையில், தற்சார்பை அதிகரிக்கும் திட்டங்கள் கண்ணுக்கு எட்டியுள்ள தூரம் வரை  காணோம். தற்போது குழந்தைகளை பாதுக்கும் ஊட்டச்சத்துக்குறைவு எனும் பாதிப்பு மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் செய்த ஆய்வுகளில் 20 சதவீத அளவுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை மேலோங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. ரத்தசோகை, குறைந்த எடை, வளர்ச்சிக் குறைவு ஆகியவை இதன் முக்கிய பாதிப்புகள். ஜார்க்கண்டில் பத்து தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 19 தொகுதிகள், கர்நாடகத்தில் பத்து தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் பத்து தொகுதிகள், ராஜஸ்தானில் ஆறு தொகுதிகள் இவ்வகையில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆதார அறிக்கை எகனா