இடுகைகள்

இஸ்லாமிய நாடாக மாற்றப்பட சிரியா நாடு சிதைக்கப்படுகிறது! - சமர் யாஸ்பெக்கின் நூல்

படம்
                பயணம் சிரியாவின்  சிதைந்த இதயத்தை நோக்கி சமர் யாஸ்பெக் தமிழில் ஶ்ரீதர் ரங்கராஜ் சிரியா நாட்டிற்குள் மூன்றுமுறை சென்று வந்த பத்திரிகையாளரும் சிரிய நாட்டவருமான சமர் யாஸ்பெக் என்ற பெண்மணியின் களப்பணி அனுபவங்கள்தான் நூலாகியிருக்கிறது . சிரியாவில் எப்படி ஜனநாயக ஆட்சி மலராமல் இஸ்லாமிய குழுக்கள் பார்த்துக்கொள்கின்றன , உலக நாடுகள் போரை எப்படி ஊக்குவிக்கின்றன , இதனால் அங்கு அழியும் சுன்னி - ஷியா மக்களின் வாழ்க்கை , அரசுப்படைகளின் தீவிரமான வன்முறை என பல்வேறு விஷயங்களை நெஞ்சை உருக்கும் எழுத்துக்களின் வழியாக பேசுகிறார் எழுத்தாளர் . ஐஎஸ்ஐஎஸ் குழுக்கள் , நூஸ்ரா முன்னணி , அல்ஹார் என பல்வேறு மதவாத குழுக்கள் கூட்டணி அமைத்து வெளிநாட்டு வீரர்களை உள்ளே கொண்டு வந்து சுதந்திர குடியரசு படைகளைக் கொன்று அரசு படைகளோடு உள்நோக்கத்தோடு போராடுவதும் , வென்ற பகுதிகளில் சிறுபான்மையினரான கிறிஸ்துவர்கள் , அலாவித்துகளை அடித்து விரட்டுவதுமான காட்சிகள் திகிலை ஏற்படுத்துவன . மதவாத அமைப்புகள் எப்படி அறக்கட்டளை வழியாக மக்களின் வாழ்க்கைக்குள் புகுந்து அவர்களை கட்டாய இஸ்

நம்பிக்கை மனிதர்கள் 2020! - நிம்மதியாக மூச்சு விட குறைந்தவிலையில் வெண்டிலேட்டர்கள்!

படம்
              நிம்மதியாக மூச்சு விடுங்கள் ! பெங்களூரூவைச் சேர்ந்த கௌதம் பசுபுலேட்டி , தனது பயோடிசைன் இன்னோவேஷன் லேப் மூலம் குறைந்த விலையில் வெண்டிலேட்டர்களை தயாரித்து வருகிறார் . இந்தியாவில் நாளுக்கு நாள் கோவிட் -19 பாதிப்பு அதிகரித்து வருகிறது . குறைவான அறிகுறிகள் கொண்டவர்கள் முதல் தீவிரமான அறிகுறிகள் கொண்டவர்கள் வரை வெண்டிலேட்டர் என்பது அவசியமான வசதியாக இருக்கிறது . ஆனால் இன்று இந்திய மாநிலங்களில் ஏழில் மட்டுமே படுக்கை , வெண்டிலேட்டர் போன்ற வசதிகள் சிறப்பாக உள்ளன . அவை , தமிழ்நாடு , கேரளம் , மகாராஷ்டிரம் , உத்திரப்பிரதேசம் , மேற்கு வங்காளம் , தெலங்கானா , கர்நாடகம் . நோய்தொடர்பான ஆராய்ச்சிப்படி 19 லட்சம் படுக்கைகள் , 48 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் , 95 ஆயிரம் ஐசியு படுக்கை வசதிகள்தான் இந்தியாவில் உள்ளன . கௌதம் , அரசு மருத்துவமனைகளோடு இணைந்து வெண்டிலேட்டர்களை குறைந்த விலையில் தயாரித்து வழங்கும் முயற்சியை செய்துவருகிறார் . ‘’’’ எங்களது நோக்கம் , அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் உயிரை பாதுகாப்பதுதான் . இதற்காக மத்திய அரசின் நிதி ஆயோக்கோடு இணைந்

சாதனை படைக்கும் வள்ளல் பணக்காரர்கள் ! வியட்நாம், ஜப்பான், ஹாங்காங் நாட்டு வள்ளல்கள்

படம்
          உலகம் புகழும் வள்ளல் பணக்காரர்கள் ! பாம் நாட் உவாங் வின் குழுமம் வியட்நாம் பாம் , 2006 ஆம் ஆண்டு கைண்ட் ஹார்ட் பௌண்டேஷனை உருவாக்கினர் . இந்த நிறுவனத்திற்கென 77 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளார் . இதன் மூலம் சிகிச்சை தேவைப்படும் ஏழை எளியவர்களுக்கும் மாணவர்களின் உதவித்தொகைக்கும் நிதியை வழங்கியுள்ளார் . இந்த பௌண்டேஷன் வீடுகளைக் கட்டுவது , மருத்துவ மையங்களை அமைப்பது . நூலகங்களை உருவாக்குவது என வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கென பல்வேறு செயல்பாடுகளை பாம் செய்துள்ளார் . இயற்கை பேரிடர்களுக்கு உதவுவதோடு , வின் குழுமம் கோவிட் -19 நிவாரணப்பணிகளுக்கும் 55 மில்லியன் டாலர்கள் அளவில் பல்வேறு கருவிகளை வாங்கிக் கொடுத்துள்ளனர் . வின் குழுமத்தில் அதிக பங்குகளை வைத்துள்ள பாம் , வாகனங்கள் தயாரிப்பு , ரியல் எஸ்டேட் , தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை தயாரித்து விற்கிறார் . ததாசி யானாய் ஃபாஸ்ட் ரீடெய்லிங் ஜப்பான் இவரது நிறுவனம் யுனிக்யூ என்ற ஜவுளி பிராண்டை நடத்தி வருகிறது . இதில் கிடைக்கும் வருமானத்தில் 102 மில்லியன் டாலர்களை நாட்டின் பல்க்கலை

மாநில அரசுகள்தான் ஆயுர்வேத மருத்துவத்தின் புனித தன்மையை கெடுத்துவிட்டன! - தியோபுஜாரி, இந்திய மருத்துவத்துறை

படம்
            மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவைசிகிச்சை செய்யலாம் என்று கூறியுள்ளது . இதனை அலோபதி மருத்துவர்கள் எதிர்க்கி்ன்றனர் . கூடுதலாக ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யமுடியுமா என மக்களும் குழப்பத்தில் உள்ளனர் . இதுபற்றி மத்திய அரசின் இந்திய மருத்துவமுறைகள் கௌன்சில் தலைவர் வைத் ஜெயந்த் தியோபுஜாரி கூறுகிறார் . அறுவை சிகிச்சை பற்றிய மத்தி அரசின் புதிய அறிவிப்பு எதற்கு ? 1979 ஆம் ஆண்டு ஆயுர்வேத படிப்பின் முதுகலைதொடர்பாக விதிமுறைகள் உருவாக்கப்பட்டன . 2016 ஆம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கான தெளிவிற்காக கூறப்பட்டது . விதிமுறைகள் முன்னமே அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருபவைதான் . நாடெங்கும் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சை நடைமுறைப்படுபப்பட்டால் அதனை எப்படி கண்காணிப்பீர்கள் ? நாங்கள் கடுமையாக விதிகளை வகுத்துள்ளோம் . கல்லூரியில் குறிப்பிட்ட தர அளவுகோல் கடைப்பிடிக்கப்படாதபோது நாங்கள் அவர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை . கடந்த ஆண்டு நாங்கள் இம்முறையில் 106 கல்லூரிகளுக்கு இளநிலைப்படிப்பிற்கான அனுமதியை வழங்கவில்லை . அறுவைசிகிச்சையாள

பெரும்பலூர் மாவட்டத்தில் பசுமையைப் பரப்பிய மனிதர்!

படம்
    sample picture/ pixabay     க்ரீன் கார்டியன் பெரும்பலூர் மாவட்டத்திலுள்ள கீழப்புளியூர் கிராமத்தில் வி . கருப்பையா என்பவர் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகன்றுகளை நட்டதுடன் அவற்றைப் பராமரித்து வருகிறார் . கடந்த நாற்பது ஆண்டுகளாக கருப்பையா மரக்கன்றுகளை ஆற்றின் கரையோரமாக நட்டு பராமரித்து வருகிறார் . ’’’ நான் நூறு மரக்கன்றுகளை நடவில்லை . காரணம் , அத்தனையையும் என் ஒருவனால் பராமரிக்க முடியாது . ஆண்டுக்கு நான்கு மரக்கன்றுகள் என நடுவேன் . அதனை தினசரி சென்று பராமரித்து வருகிறேன்’எனும் கருப்பையான கோவில் ஒன்றினை நிர்வாகம் செய்து வருகிறார் . இவர் பெரும்பாலும் வேம்பு , ஆலமரம் ஆகிய்வற்றை அதிகம் நடுகிறார் . தினசரி காலை வேளை தொடங்குவது மரக்கன்றுகளை சென்று பார்த்தபிறகுதான் . இவருக்கு மரக்கன்றுகளை நடுவதற்கான யோசனை சிறுவயதில் வந்திருக்கிறது . அப்போது சிலர் மரங்களை வெட்டி எடுத்துச்சென்றுள்ளனர் . அவர்களை எப்படி தடுதது என்று தெரியாமல் தவித்திருக்கிறார் . உடனே பெற்றோரிடம் இதனை சொல்லியிருக்கிறார் . ஆனால் அவர்களும் இதனை கண்டுகொள்ளவில்லை . இதனால் தனது வீட்டுக்கருகில் உள்ள இடங்களில

காஷ்மீரில் அனைவரும் நிலம் வாங்க முடியுமா? புதிய சட்டங்கள் என்னென்ன சொல்லுகின்றன?

படம்
                காஷ்மீரில் மத்திய அரசு 12 விதிகளை மாற்றியுள்ளது . புதிதாக 14 திருத்தங்களை விதிகளில் கொண்டுவந்துள்ளது . இதெல்லாம் எதற்கு காஷ்மீரை விற்பதற்குத்தான் . அதாவது அங்குள்ள நிலங்களை தொழிற்சாலைகளுக்கும் , விவசாயம் செய்யவேண்டி விரும்புபவர்களும் இந்த சட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் . இது உண்மையா ? காஷ்மீரில் உள்ள விவசாய நிலங்களை விவசாயிகள் தவிர பிறர் வாங்க முடியாது . விவசாய நிலங்களை வாங்குபவர்கள் விவசாயம் செய்வதற்குத்தான் பயன்படுத்த வேண்டும் . காஷ்மீர் இப்போது யூனியன் பிரதேசம் என்பதால் புதிய விதிகளை கவனித்துத்தான் ஒருவர் நிலங்களை வாங்க முடியும் . ஆனால் இந்த விதியை அரசு தூக்கியெறிந்து தேவைப்படுபவர்களுக்கு நிலங்களை வழங்க முடியும் . எது விவசாய நிலம் , விவசாய நிலமல்லாதது எது என மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து அறிக்கை கொடுக்கலாம் . நிலங்களை வாங்குவதற்கான வரம்பு ஏதாவது இருக்கிறதா ? முன்னர் ஒருவர் ஒன்பது ஹெக்டேர்களுக்கு அதிகமாக நிலங்களை வைத்திருக்கக்கூடாது என்று கூறப்பட்டது . 1950 ஆம்ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டம்தான் இப்படி சொல்கிறது . மோடி அரசு இதனை மாற்றிவிட்டத

பிறருக்கு சாரி சொல்லிப் பழகுங்கள்! - அன்ஹிங்க்டு படம் சொல்லும் செய்தி!

படம்
              அன்ஹிங்க்டு சாரி என்ற சொல்லை சொல்லாத காரணத்தால் இளம்பெண் தனது உறவினர்களை பலிகொடுக்க நேரிடும் சூழல் உருவாகிறது . எப்படி அச்சூழ்நிலையை அவள் சமாளிக்கிறாள் என்பதுதான் கதை . படத்தின் ஒரே படம் ரஸ்ஸல் க்ரோவ்தான் . ஹல்க் போல சதை போட்டு மக்கள் மீது பெரும்கோபமாக அலைகிறார் . அவர் டிராஃபிக்கில் நிற்க தனது மகனை பள்ளியில் விடச்செல்லும் ரேச்சல் ஹண்டர் என்ற பெண் சலூனுக்கு செல்ல தாமதம் ஆவதால் அவரை வேலையை விட்டு நீக்கிவிடுகிறார் அவரது முதலாளி டெபோரா . இதனால் கடுப்பில் இருந்த ரேச்சல் , காரை சாலையில் வேகமாக ஓட்டாமல் நிறுத்தியிருந்த டாமை கண்டபடி திட்டிவிடுகிறாள் . இதனால் எரிச்சலுக்கு உள்ளாகும் டாம் ரேச்சலை துரத்தி பழிவாங்குவதுதான் கதை . ஒரே லைனில் கதை செல்கிறது . சைக்கோ கொலைகாரனிடம் ரேச்சலின் போன் சிக்கிவிட அதை வைத்து எப்படி அவளின் உறவினர்கள் , தெரிந்தவர்கள் என பழிவாங்க நினைக்கிறான் . அதனை ரேச்சல் எப்படி தடுக்கிறாள் என்பதுதான் கதை . படத்தில் நியூசிலாந்து நடிகை ரேச்சல் ஹண்டராக சிறப்பாக நடித்துள்ளார் . மற்றபடி படத்தில் சொல்ல ஏதுமில்லை . முடிந்தவரை உணர்ச்