இடுகைகள்

சூரியக்கடிகாரம் தோன்றியது எப்படி?

படம்
          இன்று ஸ்மார்ட்போனில் மணி பார்க்கத் தொடங்கிவிட்டதால் பெரும்பாலான கை கடிகாரங்கள் அனைத்துமே அந்தஸ்தைக் காட்டும் கடிகாரங்களாக மாறிவிட்டது . இதனால் கடிகார நிறுவனங்கள் பிராந்தியப் பெருமை பேசும் கடிகாரங்களை தயாரிக்கின்றன . தங்கம் , பிளாட்டினம் , வைரம் என அதனை அலங்கரித்து வருகின்றன . சூரியக் கடிகாரம் சூரியன் கிழக்கில் உதித்தவுடன் அதன் நிழல் எப்படி விழும் என்பதை குச்சி வைத்து கணிக்கும் முறை . மோசமானது என்று இன்று கூறலாம் . ஆனால் அன்றைக்கு இதுவே பெரிய விஞ்ஞானமுறை . ஆனால் இதை வைத்து இரவில் மணி பார்க்க முடியாது . இதற்காக நட்சத்திரங்களை கூட்டிக்கழித்து வரிசையைப் பார்த்து மணியைச் சொல்லும் முறையை கிரேக்கநாட்டு மக்கள் கண்டறிந்தனர் . எகிப்தில் நீர் கடிகாரம் கூட முயன்றார்கள் . உருளை வடிவ கட்டிடத்தில் நீரை நிரப்பி வெளியேறும் நீர் அளவைக் கணித்து நேரத்தை கண்டுபிடிக்கலாம் . ஆனால் பனிக்காலத்தில் நீர் உறைந்துவிடுவதால் இதில் நேரத்தைக் கணிக்க முடியாது . பாக்கெட் வாட்சுகள் , கைகடிகாரங்கள் பெண்டுலமாடி கடிகாரம் ஓடிக்கொண்டிருந்த நிலையில் அதனை மாற்றியது பாக்கெட் கடிகாரங்க

லிஸ்டர் பற்றிய ஐந்து சுவாரசியமான விஷயங்கள்!

படம்
          லிஸ்டர் பற்றி ஐந்து விஷயங்கள் ! லிஸ்டரின் அப்பா , தனது பதினான்கு வயதில் பள்ளிக்கல்வியை விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியே வந்தார் . பின்னாளில் அவர் உருவாக்கிய நுண்ணோக்கி , அதன் லென்ஸ் ஆகியவற்றுக்காக பணமும் புகழும் பெற்றார் . லிஸ்டர் ஏராளமான நுட்பமான பல்வேறு கருவிகளை உருவாக்கினார் . அதனை புத்திசாலித்தனமாக காப்புரிமை பெற்று வைத்திருந்தார் . அறுவை சிகிச்சை செய்த புண்களை தைக்கும் ஊசி , காதில் நுழைந்த பொருட்களை எடுக்கும் கொக்கி போன்ற கருவி , வயிற்றிலுள்ள உறுப்புகளை ஆராயும் கருவி என சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம் . லிஸ்டர் உருவாக்கிய ஆன்டிசெப்டிக் முறையை இங்கிலாந்தில் எதிர்த்தாலும் , பிரான்ஸ் , ஜெர்மனி ஆகிய நாடுகள் அரவணைத்துக்கொண்டு பயன்படுத்தினர் . பிரான்ஸ் ப்ரஸ்ஸியா போர்க்காலங்களில் இம்முறையை பரவலாக பயன்படுத்தினர் . இன்று மருத்துவர்கள் நோயாளிகளை நம்பர் அல்லது கேஸ் என்று சொல்லித்தான் கூப்பிடுவார்கள் . ஆனால் லிஸ்டர் இந்த ஏழை மனிதர் , இந்த நல்ல பெண்மணி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி நோயாளிகளை தேற்றியிருக்கிறார் . தனது மாணவர்களிடம் நோயாளிகளின் நோ்

ஆன்டிசெப்டிக் முறையை மருத்துவர்களின் பிரசாரம் செய்து நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியவர்!

படம்
        ஜோசப் லிஸ்டர்       மருத்துவத்துறையில் இன்று டெட்டால் , சேப்லான் என பல்வேறு ஆன்டிசெப்டிக் மருந்துகள் கிடைக்கின்றன . இதனை அறிமுகப்படுத்தியவர் யாரென்று தெரிந்து உய்வோமா ? ஜோசப் லிஸ்டர் என்ற படிப்பில் மூழ்கி ஏராளமான தங்கமுலாம் பூசிய பதக்கங்களை பெற்ற மனிதர்தான் அறுவை சிகிச்சையை பாதுகாப்பானதாக மாற்றினார் . 1827 ஆம்ஆண்டு 5 ஏப்ரலில் பிறந்தவர் குவாக்கர் குடும்ப வாரிசு . இவரது படிக்கும் நேரம் போக மீதி நேரம் போக அப்பாவின் நுண்ணோக்கியில் ஏராளமான நுண்ணுயிரிகளைப் பார்த்துக்கொண்டிருப்பார் . இப்படிப்பட்டவருக்கு வேறு என்ற ஆசை இருக்கமுடியும் ? மருத்துவராகவே ஆசைப்பட்டார் . லண்டன் பல்கலைக்கழகத்தில் கலைப்படிப்பு பட்டம் படித்தார் . 1848 ஆம் ஆண்டு மருத்துவம் படிக்க சேர்ந்தார் . அப்போதுதான் மருத்துவத்துறையில் அனஸ்தீசியாவைப் பயன்படுத்துவது பரவலாகிக் கொண்டிருந்தது . அதில் நிறையப் பேர் சேர்ந்து பயின்று வந்தனர் . 1846 ்ஆம் ஆண்டு ஈதர் அனஸ்தீசியா வல்லுநராக உருவானார் . ஆனால் அப்போதும் பல்வேறு நோயாளிகள் நோய்த்தொற்று காரணமாக இறந்துபோனார்கள் . இதற்கு காரணம் என மோசமான காற்றான மியாஸ்மாவைக் காரண

தொன்மைக்காலத்தில் நோயாளிகளை சித்திரவதை செய்த அறுவைசிகிச்சை கருவிகள்!

படம்
            பீதியூட்டும் பண்டைய அறுவை சிகிச்சை உபகரணங்கள் ! நவீன அறுவை சிகிச்சை உபகரணங்கள் பார்க்க அழகாக இருந்தாலும் , தொடக்கத்தில் அப்படி இல்லை . கரடுமுரடாக இருந்த ஆயுதங்களை டிரிம்மிங் செய்து செதுக்கியது போலவேதான் இருக்கும் . அதனைப் பார்த்தே வைத்தியம் செய்துகொள்ளாமல் ஓட்டம் பிடித்தவர்கள் உண்டு . ஆனாலும் சிகிச்சை செய்யாவிட்டால் எப்படி அரைவைத்தியன் லெவலுக்கு வருவது ? எனவே நோயாளிகளை பிடித்து கட்டி வைத்து மண்டையில் ஓட்டை போட்டு சூடுபோட்டு என பண்ணாத சித்திரவதைகள் கிடையாது . ஆனாலும் இதற்காக நீங்கள் கவலைப்பட்டு ஐ . நாவில் புகார் கொடுக்கவேண்டியதில்லை . அதனால்தான் , புதிய கருவிகள் உருவாக்கப்பட்டன . டிரெபான் இன்று நமக்கு காலையில் ஹேங்ஓவரால் தலைவலிக்கிறது என்றால் உடனே ஆஸ்பிரின் மாத்திரை ஒன்றை எடுத்து போட்டால் போதும் . ஆமாங்க ஆமாம் என தலைவலி தலையாட்டிக்கொண்டே ஓடிவிடும் . ஆனால் கி . பி .6500 காலகட்டத்தில் நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் தலைவலி பிரச்னையை கொடூரமாக இயக்குநர் பாலா ஸ்டைலில் அணுகியிருக்கிறார்கள் . அதற்கான கருவிதான் டிரெபான் . தலைவலிக்கு தீர்வு எப்படி கருவி எ

கொரோனாவை சந்தித்து மீண்டு வந்த இந்திய புத்தக கடைகள்! - நிலையை எப்படி சமாளித்தனர்?

படம்
            தாக்குப்பிடித்த புத்தக கடைகள் ! உலகம் முழுவதும் பொதுமுடக்கம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது . புத்தக கடைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன ? அப்படி தப்பி பிழைத்த புத்தக கடைகள் பற்றி இங்கு பார்ப்போம் . என்ன சாகசங்கள் செய்து ்தங்களை காப்பாற்றிக்கொண்டனர் என்பதை பார்ப்போம் . பாக்தண்டி புனே நேகா , விஷால் பிபாரியா ஆகியோர்தான் இந்த புத்தக கடையை நடத்தி வந்தனர் . பொதுமுடக்கத்தை எதிர்கொள்ள இவர்களுக்கு கிடைத்த ஐடியா , கிப்ட் வ வுச்சர்கள்தான் . அதனை தங்களது வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ள கூறினர் . அப்படி வாங்கியவறை பிற்காலத்தில் பயன்படுத்திக்கொள்ளமுடியும் . இப்படிக் கிடைத்த தொகை மூலம் மூடப்பட்ட நாட்களை சமாளித்துள்ளனர் . ஆன்லைனில் வலைத்தளங்கள் கொடுக்கும் தள்ளுபடிகளை புத்தககடைகள் கொடுக்க முடியாது என்பது நிதர்சனம் . எங்களது வாடிக்கையாளர்கள் மூலமே நாங்கள் இன்றுவரை இயங்கி வருகிறோம் என்கிறார்கள் நேகா அ்ண்ட் கோ . விட்டுக்கொடுக்காமல் இருந்தது . புத்தக கடை என்பதை முழுமையான அனுபவமாக மாற்றியது இக்கடையின் வெற்றி என்கிறார்கள் . ரச்சனா ஸ்டோர்ஸ் காங்டொக் ரா

ஊடகங்கள் பெருகியுள்ள காலத்தில் கோவிட் மரணங்களை எப்படி மறைக்க முடியும்? - சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

படம்
            நேர்காணல் கே . கே . சைலஜா தற்போதைய நோய்த்தொற்று என்பது நிபாவை விட எப்படி வேறுபட்டது என்கிறீர்கள் ? நிபா நோ்ய்த்தொற்றுதான் எங்களை இன்று எச்சரிக்கையாகவும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ளவும் உதவின . நிபாவின் மரண சதவீதம் அதிகம் என்றாலும் கோவிட் 19 அளவுக்கு வேகமாக பரவ வில்லை . கோழிக்கோட்டிலுள்ள வௌவால்கள் மூலம் நிபா பரவியது . எனவே நாங்கள் மக்களை வெளியே வரவேண்டாம் என்று சொன்னோம் . கோவிட் 19 வெளிநாட்டிலிருந்து நமது நாட்டிற்கு வந்தது . கேரளத்திலுள்ள விமானநிலையங்கள் நான்கு . அதன் மூலம் வந்திறங்கிய மக்கள் மூலம் நோய்த்தொற்று வேகமாக பரவியது . இதனால் 14 மாவட்டங்களில் உடனடியாக நோய்த்தொற்று பரவி பாதித்தது . இரண்டாவது அலை பரவுவதால் , மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா ? பொதுமுடக்கம் என்பது இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படவில்லை . எனவே , மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று நினைக்கிறேன் . மக்களை ஏற்கெனவே அடைத்து வைத்தது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது . நாங்கள் இப்போது நோயிலிருந்து மக்களை காப்பாற்றவே முயன்று வருகிறோம் . கொர

சமூக வலைத்தளங்களில் பாலியல் கல்வி நடத்தும் புதிய தலைமுறை மருத்துவர்கள்!

படம்
          ஆன்லைனில் செக்ஸ் கல்வி நடத்துகிறார்கள் ! இன்றைய புதிய தலைமுறை மருத்துவர்கள் சமூக வலைத்தளங்களில் பாலியல் கல்வியை விழிப்புணர்வுக்காக பிறருக்கும் பரப்புரை செய்கிறார்கள் . இவர்களுக்கு ஏராளமான பார்வையாளர்களும் கிடைத்துள்ளனர் . இந்தியாவில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைத்து கல்லூரி நடத்த ஆசைப்படுபவர்களை அதிகம் . இந்த சூழலில் வளரும் ஆணோ , பெண்ணோ இருவருக்குமே தங்கள் உடல் பற்றியும் , அதன் ஆரோக்கியம் பற்றியும் பலவித கேள்விகள் , ஐயங்கள் இருக்கும் . ஆனால் இதைப்பற்றி வெளிப்படையாக யாரிடம் கூறுவது ? ஆலோசனை பெறுவது என்பதில் தயக்கம் நிலவுகிறது என்பதே உண்மை . யோனியில் கசியும் திரவத்தின் நிறம் மாறுபடுவது பற்றிய கேள்விகளுக்கு கூட இங்கு பெண்ணின் உடல் சார்ந்தும் , அவள் நடத்தை சார்ந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன . இப்படி கேள்வியை யாரிடம் கேட்பது எனத் தவிப்பவர்களுக்கு ஆதரவாக இரும்பில் முதுகெலும்பு கொண்ட புதிய தலைமுறை மருத்துவர்கள் சமூக வலைத்தளத்தில் இயங்கி வருகிறார்கள் . இவர்கள் , தாங்கள் இயங்கும் சமூக வலைத்தளத்தில் கூட பாலியல் சார்ந்த விழிப்புணர்வுக்கு பலமுறை தடை