இடுகைகள்

நரசிம்மராவ் இந்தியாவை நிறையவே மாற்றியுள்ளார்! பிரகாஷ் ஜா - திரைப்பட இயக்குநர்

படம்
  பிரகாஷ் ஜா  இந்தி சினிமா இயக்குநர்  பிரகாஷ் ஜா, ஓடிடி தளத்திற்காக ஆஷ்ரம் தொடரை எடுத்து வருகிறார்.  ஆஷ்ரம் தொடரின் மூன்றாவது பகுதியை எடுத்து வருகிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருக்கிறது? நான் ஆஷ்ரம் தொடரை எழுதுவது தொடங்கி  அதனை படமாக்குவது, அதன் இறுதிகட்டப் பணிகள் வரை அனுபவித்துத் தான் செய்கிறேன். நான் எப்போதும் ஆஷ்ரம் தொடரின் மையக்கருத்து பற்றி மிகவும் ஆராய்ந்து கொண்டிருக்கவில்லை. அப்படி செய்தால், இத்தொடரை உருவாக்கியிருக்க முடியாது. அப்படியே அந்த சிந்தனையில் சிக்கிக் கொண்டிருப்பேன். ஆஷ்ரம் தொடர் வேடிக்கையான ஒன்று. இதில் வரும் பாபாவின் பக்தர்கள் கூடுவார்கள். அவரைச் சேர்ந்த குழுவினர் அதிகரிப்பார்கள். இந்த நேரத்தில் மெல்ல அவரின் வீழ்ச்சி நடைபெறுகிறது. அதுதான் மூன்றாம் பாகத்தின் மையம்.  கடந்த ஆண்டு போபாலில் நீங்கள் படப்பிடிப்பு நடத்தியபோது, பஜ்ரங்தள் அமைப்பினரால் தாக்கப்பட்டீர்கள். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நீங்கள் உங்கள் கதைகளை தணிக்கை செய்துதான் எடுக்கிறீர்களா? தணிக்கையெல்லாம் செய்யவில்லை. மேற்படி நீங்கள் சொன்ன தாக்குதல் நடந்தபிறகு படப்பிடிப்பை முடித்துக்கொண்டோம். என்னுடைய கதைகளை நான்

விருது வெற்றிக்கு எழுத்துலகில் இடம் இல்லை! - இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ

படம்
  கீதாஞ்சலி ஸ்ரீ இந்தி மொழி எழுத்தாளர்  ரெட் சமாதி என்ற பெயரில் கீதா எழுதிய நூல் டாம்ப் ஆஃப் சாண்ட் என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. டெய்ஸி ராக்வெல் என்பவர் இதனை மொழிபெயர்த்தார். இந்த நூலுக்கு தற்போது சர்வதேச புக்கர் பரிசு கிடைத்துள்ளது. 64 வயதான கீதாஞ்சலியை சந்தித்துப் பேசினோம்.  நீங்களே உங்கள் நூலை ஆங்கிலம், இந்தி மொழியில் எழுதியுள்ளீர்கள். தற்போது விருதுபெற்ற நாவல் கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உங்களுடைய படைப்புகளை நீங்களே மொழிபெயர்க்க ஆசைப்பட்டுள்ளீர்களா? என்னுடைய கிரியேட்டிவிட்டியான எழுத்து என்பது இந்தி மொழியில்தான். பிரேம்சந்தின் சுயசரிதை நூலை ஆங்கிலத்தில் எழுதினேன். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்பதைவிட நான் இந்தியில் புதிதாகவே நூலை எழுதிவிட முடியும்.  டாம் ஆஃப் சாண்ட் நாவல், எப்படி ஒருவரின் இறந்தகாலம் தினசரி வாழ்க்கையை மாற்றுகிறது, வடிவமைக்கிறது என விவரிக்கிறது. 60 ஆண்டுகள் கழித்தாலும் கூட இந்த விளைவுகள் நடைபெறுகின்றன. வரலாற்றோடு ஒருவர் சரியான உறவை எப்படி பேணுவது? நாவலில் வரும் இறந்தகாலம் என்பது 50-60 ஆண்டுகள் ஆகும். இறந்த காலத்தின் பாதிப்புகள் நம்மை

காலநிலை மாற்றத்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டுமா? உங்களுக்காகவே இந்த நூல்கள் இதோ!

படம்
  காலநிலை மாற்றம் பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள் தி நியூ க்ளைமேட் வார் - தி ஃபைட் டு டேக் பேக் அவர் பிளானட் மைக்கேல் இ மன் காலநிலை மாற்ற வல்லுநர் மைக்கேல் இ மன், டோன்ட் லுக் அப் என்ற டிகாப்ரியோவின் பட பாத்திரம் போலவே இருக்கிறார். அதாவது நாயகனாக இருக்கிறார் என சொல்ல வருகிறோம். மைக்கேல், நடப்பு கால காலநிலை மாற்ற செயல்பாடுகள் எதை செய்தன எதை தவறவிட்டன என்பதை தெளிவாக விளக்குகிறார்.  தி அன் இன்ஹேபிட்டபிள் எர்த் டேவிட் வாலஸ் வெல்ஸ்  காலநிலை மாற்றம் பற்றிய பயத்தை ஏற்படுத்துகிற நூல் என இதனை தாராளமாக கூறலாம். இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால் என்னவாகும் என்பதை துல்லியமாக விளக்கியிருக்கிறார் டேவிட். பயம்தானே நம்மை முன்கூட்டியே செயல்படத்தூண்டும். அந்த வகையில் காலநிலை மாற்றத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு செயல்பட டேவிட்டின் இந்த நூல் ஊக்கமாக அமையலாம்.  தி நட்மெக்ஸ் கர்ஸ் - பாரபிள்ஸ் ஃபார் எ பிளானட் இன் கிரிசிஸ்  அமிதவ் கோஷ் காலனிய காலம் தொடங்கி இன்றுவரை முதலாளித்துவ பொருளாதாரம் எப்படி இயற்கையை அழிக்கிறது என அமிதவ் கோஷ் விலாவாரியாக தகவல்களை சேகரித்து எழுதியிருக்கிறார். இதேபோல அமிதவ் எழுதிய தி

வடகிழக்கு பெண் என்பதால் எனது மொழி உச்சரிப்பை கிண்டல் செய்தனர்! - ஆண்ட்ரியா கெவிசூசா

படம்
  ஆண்ட்ரியா கெவிசூசா இந்தி சினிமா நடிகை - அனெக் திரைப்படம் ஆண்ட்ரியா கெவிசூசா உங்கள் பின்னணி பற்றி சொல்லுங்கள்? நான் கோகிமாவில் பிறந்து வளர்ந்தவள். எனக்கு ஐந்து சகோதரிகள் உண்டு. அதில் இளையவள் நான். எனது அப்பா அங்காமி பழங்குடியைச் சேர்ந்தவர். அம்மா ஆவோ பழங்குடியைச் சேர்ந்தவள். அப்பா காலமாகிவிட்டார். பெண்களான எங்களுக்கு எதை செய்யவேண்டும், செய்யக்கூடாது என பெரிய லிஸ்ட்டே உண்டு. பெற்றோர் நிறைய கண்டிப்புடன் வளர்த்தார்கள். பத்தாம் வகுப்பு வரை லிட்டில் பிளவர் பள்ளியில் பத்தாவது வரை படித்தேன். அதற்கு முன்னர் கத்தோலிக்க பெண்கள் பள்ளியில் படித்தேன். பிறகு மேகாலயாவின் சில்லாங்கிற்கு இடம்பெயர்ந்தோம். பிறகு படிப்பு அங்கே அமைந்தது. பதினைந்து வயதிலிருந்து நான் மாடலிங் செய்து வருகிறேன்.  நடிகர் ஆவது என்பது பற்றி கனவு கண்டீர்களா? எனக்கு சிறுவயதிலிருந்து இருந்தது ஒரே கனவுதான். மருத்துவம் படித்து மருத்துவராகி எனது கிராமமான கோகிமா சென்று மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது மட்டுமே எனது ஆசை. ஆனால் நான் படிக்கும்போது எனக்கு வந்த வாய்ப்புகளை பின்பற்றி இப்போது நடிகராகி இருக்கிறேன். இப்படி கிரியேட்டிவிட்டி கொண்ட த

பனிச்சிறுத்தையை லடாக்கில் படம் பிடித்தது சவாலான சம்பவம்! - ஆதித்ய டிக்கி சிங்

படம்
  ஆதித்ய டிக்கி சிங் காட்டுயிர் புகைப்படக்கலைஞர் புகைப்படத்துறைக்குள் எப்போது நுழைந்தீர்கள்? 1999ஆம் ஆண்டு. இந்தியாவின் ரந்தம்பூரில் பிபிசிக்கான ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அதற்கான நான்கு பேர் கொண்ட குழுவில் நானும் ஒருவன். ஒளிப்பதிவாளர்கள் தங்கள் பணியில் தீவிரமாக இருந்தனர். நான் பணியின்போது புகைப்படம் எடுக்கும் தேவை இருந்தது. அங்கிருந்தவர்களில் என்னால் மட்டும்தான் கேமராவின் கையேட்டை ஆங்கிலத்தில் படிக்க முடிந்தது. இப்படித்தான் அந்த வேலையை செய்து புகைப்படக்காரனானேன்.  கேமராவை எப்போதாவது சேதப்படுத்தி உள்ளீர்களா? நிச்சயமாக. இரண்டு லென்ஸ்கள், இரண்டு கேமராக்களை சேதப்படுத்தியுள்ளேன். அதை நினைத்து அப்போது பெரிய வருத்தம்... புதிதாக இத்துறைக்கு வருபவர்களுக்கு ஏதாவது அறிவுரை சொல்ல நினைக்கிறீர்களா? பல்லாயிரக்கணக்கான மணி நேரங்கள் நீங்கள் உழைத்தாக வேண்டும். எனவே, தயாராக இருங்கள். உழையுங்கள்.  புலிகளை புகைப்படம் எடுப்பதில் நீங்கள் புகழ்பெற்றவர். அப்படி புகைப்படம் எடுத்ததில் எது சிறந்த விஷயம்? நிலத்தில் வாழும் வேட்டையாடிகளை படம் எடுப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. ரந்தம்பூரில் உள்ள பல தலைமுறை புலிக

இயற்கை பற்றி அறிந்துகொள்ள உதவும் நூல்கள்!

படம்
  ரீவைல்டிங் ஆப்பிரிக்கா கிரான்ட் ஃபோவிட்ஸ் - கிரஹாம் ஸ்பென்ஸ் ராபின்சன் சூழலியலாளர் கிரான்ட் மற்றும் ஸ்பென்ஸ் ஆகியோர் இணைந்து  பெருந்தொற்று காலத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் வனப்பாதுகாப்பு எப்படியிருந்தது என விளக்கியிருக்கிறார்கள்.  வொய் ஷார்க்ஸ் மேட்டர் டேவிட் ஷிஃப்மேன் ஜான் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி பிரஸ்  விருது பெற்ற தாவரவியலாளர் டேவிட், சுறாக்கள் பற்றி பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளார். சுறாக்களைப் பற்றித்தான் நாம் நிறைய தவறான தகவல்களைப் பேசி வருகிறோம். புரிந்துகொள்ளாமல் வாழ்கிறோம். நம்மிடமிருந்துதான் சுறாக்கள் பயப்பட்டு வாழ வேண்டுமென பகடியாக எழுதியிருக்கிற தொனியில் நிறைய தகவல்களை வாசகர்களுக்கு கூறுகிறார்.  பிளாட்டிபஸ் மேட்டர்ஸ்  ஜாக் ஆஸ்பை ஹார்பர் கோலின்ஸ் பதிப்பகம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாலூட்டிகள் படிக்கவும் அறியவும் வினோதமானவை. இதில் பிளாடிபஸ் என்ற விலங்கு பற்றி ஆய்வாளர் ஜாக் விரிவாக விளக்கி இதன் பின்னணியில் உள்ள புராண புனைவுகளையும் பேசியுள்ளார்.  எண்ட்லெஸ் ஃபார்ம்ஸ்  சீரியன் சம்னர்  ஹார்பர் கோலின்ஸ்  குளவிகள் பற்றி நிறைய சுவாரசியமான விஷயங்களை ஆசிரியர் விளக்கியுள்ளார். பலரும் பா

இந்தி சினிமாக்களில் விலைமாதுக்களின் நிலை!

படம்
  பாலியல் தொழிலாளிகளையும் மதிக்கவேண்டும். அவர்கள் செய்வதும் தொழில்தான். விலைமாதுக்களையும் கௌரவமாக நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கௌரவம் நிஜமாக கிடைக்குமோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் திரைப்படங்களில் விலைமாதுக்களை காட்டிய சினிமாக்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். இது இந்தி சினிமாக்கள் மட்டுமே.  பேகம் ஜான்  பீரியட் படம்தான். முகேஷ் பட் தயாரிக்க 2017இல் வெளியான படம். சுதந்திரத்திற்கு பிறகான விலைமாதுக்களின் நிலையைப் பேசிய படம் இது. வித்யாபாலன் தான் விலைமாதுக்களின் தலைவி. வங்காளப் படமான ராஜ்கஹினி என்ற படத்தின் இந்தி ரீமேக் இது.  மண்டி  1983ஆம் ஆண்டு ஷியாம் பெனகல் உருவாக்கிய படம்தான் மண்டி. படத்தில் ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா படேல், நஸ்ரூதின் ஷா ஆகியோர் நடித்திருந்தனர். இதன் மூலம் உருது சிறுகதை. ஆனந்தி என்ற சிறுகதையை எழுதியவர் குலாம் அப்பாஸ். விபச்சாரத்தை நடத்துபவராக தலைவியா ஷபனா ஆஸ்மி நடித்திருந்தார். இவரது கட்டுப்பாட்டில் உள்ளவருக்கு உருவாகும்  இன்னொரு உறவால் ஏற்படும் பாதிப்புகள்தான் கதை. காமம், உடல்ரீதியான மகிழ்ச்சி ஆகியவற்றைப் பற்றிய பேசிய வகையில் முக்கியமான படம். 1984ஆம் ஆண்டு மண்டி ப

இந்தியாவின் சுயசார்பு தன்மை சாத்தியமா என ஆராயும் நூல்! - புதிய புத்தகங்கள்-

படம்
  ஃப்ரம் டிபன்டென்ஸ் டு செல்ஃப் ரிலையன்ஸ் பிமல் ஜெயின் ரூபா 695 ரூபாய் இறக்குமதியை சார்ந்து அல்லாமல் தானே உருவாக்கி உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்து மிஞ்சுபவற்றை உபரியை விற்கும் திட்டம் சாத்தியமா என்பதை ஏராளமான தகவல்களை வைத்து விளக்கியிருக்கிறார் பிமல் ஜெயின். இவர் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் என்பது முக்கியமான தகவல்.  நோமட்ஸ்  ஆன்டனி சட்டின் ஹாசெட் 799 ரூபாய்  மக்கள் எப்போதும் வரலாற்றின் வெளிப்புறங்களில் வாழ்கிறார்கள். ஆனால் அதன் உட்புறங்களில் என்ன நடக்கிறது என்பதை அறிய இந்த நூலை படியுங்கள். உருக், பாபிலோன், ரோம், சங்கன் ஆகிய நகரங்களில் வாழ்ந்த மக்கள் பற்றியும், அவற்றின் உருவாக்கம் பற்றியும் நூலில் பேசப்படுகிறது.  எ நியூ வே டு திங்க் ரோஜர் எல் மார்ட்டின் பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  1250 ரூபாய்  உலகிலுள்ள முக்கியமான பல்வேறு பெருநிறுவனங்களின் இயக்குநர்களுக்கு ஆலோசனைகளை ரோஜர் வழங்கி வருகிறார். உலகளவில் உள்ள வணிக சவால்களை எப்படி சமாளிப்பது என நூலில் பேசியுள்ளார் ரோஜர்.  தோஸ் வுமன்ஸ் ஆர் கொரமண்டல் ரங்கா ராவ்  ஆலெப் புக் கம்பெனி 699 ரூபாய்  இதில் மூன்று பெண்களின் வாழ்க்கை, அவர்கள் சார்ந்த ம

காப்புரிமைப் போர்!

படம்
    நிறுவனத்தை முதன்முதலில் ஸ்டார்ட்அப்பாக தொடங்குபவர், அதற்கான கொள்கை, லட்சியத்தை உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் சுமப்பார். மற்றவர்கள் இதை அப்படியே பின்பற்றுவார்கள். அந்த வகையில் ஹூவாவெய் நிறுவனத்தில் புகழ்ச்சிக்கு எந்த மரியாதையுமில்லை. உழைத்தே ஆகவேண்டும். தங்களை நிரூபிப்பவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு உண்டு. நிறுவனத்தின் பங்குகளும் கூடுதலாக வழங்கப்படும்.   நிறுவனம் எதற்கு தொடங்கப்படுகிறது? அதன் லட்சியம் என்ன? நினைத்த லட்சியத்தை சாத்தியப்படுத்துமா என்பதற்கான பதில்களே தேடிக் கண்டுபிடிப்பது முக்கியம். அப்படி இல்லாதபோது நிறுவனம் விரைவில் டைட்டானிக்காக தொழில்துறையில் சவால்களை சந்திக்க முடியாமல் மூழ்கிவிடும். இந்த வகையில் ஹூவாவெய் தனது இலக்குகளை அறிந்தேயுள்ளது என்றார் ரென். அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் தொலைத்தொடர்பு வசதிகள் கிடைக்கவேண்டும் என்பதுதான் ஹூவாவெய்யின் லட்சியம்.   அமெரிக்க அரசின் குற்றச்சாட்டு காரணமாக குவால்காம், கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் மென்பொருள், வன்பொருள் சேவைகளை ஹூவாவெய்யிடமிருந்து விலக்கிக்கொண்டனர். இதனால் உங்களுக்கு நஷ்டம்தானே என சிஎன்பிசி சேனல் பேட்டியில்

கவிதைகளின் நகரமாக டெல்லி எனக்கு பிடிக்கும்! - விமானி மார்க்

படம்
  மார்க் வான்ஹோனாக்கர்  விமானி, எழுத்தாளர்  சிறுவயதிலிருந்து வானத்தில் விமானம் ஓட்ட அசைப்பட்டவர்தான் மார்க். இப்போது அங்கே இங்கே என அலைந்து ஒருவழியாக காக்பிட்டில் உட்கார்ந்துவிட்டார். கூடுதலாக கிடைத்த நேரத்தில் ஸ்கை ஃபேரிங் என நூலை வேறு எழுதிவிட்டார். அதுதான் முதல் நூல். பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனத்தில் பல்வேறு ஊர்களுக்கு சென்றவர், அந்த அனுபவங்களை காதல் கடிதம் போல எழுதிய நூல்தான் இமேஜின் எ சிட்டி என்ற நூல். அவரிடம் இதுபற்றி பேசினோம்.  உங்களுக்கு பிடித்தமான விமானநிலையம் எது? மும்பையின் டெர்மினல் 2 என்பது எனக்கு பிடித்தமான இடம்.  2007இல் விமானத்தை முதல்முறையாக ஓட்டும்போது மும்பைக்குத் தான் ஓட்டிச்சென்றேன். இதை என்னால் எப்போதும் மறக்கமுடியாது. டெல்லி விமானநிலையமும் எனக்கு பிடித்தமானது.  பிடித்தமான நேரம்? இரவில் விமானத்தில் பறப்பது பிடித்தமானது. அப்போது வானம் நிறைய நட்சத்திரங்கள் இருக்கும். அந்த நேரத்தில் கீழே பார்க்கும்போது நகரங்கள் ஒளிவிட்டபடி இருக்கும். சாலைகளிலிலும் பிரகாசம் தெரியும்.  பொதுவாக கார் ஓட்டுநர்களுக்கு பிறர் கார் ஓட்டி தான் உட்கார்ந்து வருவது பிடிக்காது. உங்களுக்கு எப்படி? ந

சூரியவம்சிகளை அழிக்க பாசுபாஸ்திரத்தை ஏவும் சிவன்! - வாயுபுத்திரர் வாக்கு- அமிஷ் திரிபாதி

படம்
  சிவா முத்தொகுதி வாயு புத்திரர் வாக்கு அமிஷ் திரிபாதி வெஸ்ட்லேண்ட் முதல் இரு பாகங்களில்... இதுவரை..... குணாக்களின் தலைவரான சிவன், நீலகண்டர் என அடையாளம் காணப்படுகிறார். அவரை அடையாளம் கண்ட சூரிய வம்சிகள் தங்களுக்கு ஏற்ப அவரை மூளைச்சலவை செய்கின்றனர். இதனால் சோமரஸம் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து சந்திரவம்சிகளால் உருவானது என நம்புகிறார். இதனால் போர் நேரிடுகிறது. இதில் சந்திரவம்சிகள் தோற்றுப்போகின்றனர் அயோத்யாவின் ஸ்வத்பீட மன்னர் திலீபர், தோற்றுப்போனாலும் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் சூரியவம்சிகள் பக்கம் நீலகண்டர் இருப்பது அவரை நிலைகுலைய வைக்கிறது. உண்மையில் நீலகண்டர்  சூரியவம்சி மற்றும் சந்திரவம்சிகளுக்கு பொதுவான ஆளுமை, கடவுள். இதை நீலகண்டர் உணர வாசுதேவர்கள் உழைக்கிறார்கள். டெலிபதி மூலம் அவரிடம் தொடர்புகொண்டு மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லுகிறார்கள்.  சிவனுக்கு இயல்பிலேயே டெலிபதி திறன் உள்ளது. ஆனால் அதனை செயல்படுத்த சற்று உயர்ந்த இடத்திலுள்ள கோவில்களுக்கு செல்லவேண்டியுள்ளது. முதல்பாகத்தில் சிவன் நீலகண்டராக மாறுகிறார். தேவகிரி செல்கிறார். சூரியவம்சி மன்னரான