இடுகைகள்

ஏழை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒலிப்பெருக்கி வழியாக மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அர்ப்பணிப்பான குஜராத் கிராமம்!

படம்
                  ஒலிப்பெருக்கி வழியே கல்வி ! ஷைலேஷ் ராவல் ஆசிரியர் , குஜராத் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கல்வி தடைபட்டுள்ளது . இந்த நேரத்திலும் பல்வேறு ஆசிரியர்கள் புதுமையான முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தர தொடங்கியுள்ளனர் . குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரம் . இங்குள்ள பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ஊர் பார்பட்டா . இங்கு காலை எட்டு மணி என்றால் ஒலிபெருக்கிகள் முழங்கத் தொடங்கிவிடும் . இதுதான் அங்குள்ள பள்ளி செல்லும் மாணவர்களுக்கான பாடவேளை தொடங்கிவிட்டதற்கான அறிகுறி . ஷைலேஷ் ராவல் இப்படித்தான் ஒலிபெருக்கி வழியாக மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறார் . பல்வேறு மாநில மாணவர்களும் இணையம் வழியாக கற்கத் தொடங்கியபோது , ஷைலேஷ் ஒலிப்பெருக்கி பக்கம் நகர்ந்துள்ளார் . வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மாணவர்கள் பலரின் வீடுகளில் ஸ்மார்ட்போன் , டேப்லெட் , மடிக்கணினி , ஏன் டிவி கூட கிடையாது . அண்மையில் ஸ்மைல் பௌண்டேஷன் 22 மாநிலங்களில் 42,831 மாணவர்களிடம் செய்த ஆய்வில் 56 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்ற உண்மை தெரியவந்துள

தேர்ச்சியை கணிக்க அல்காரிதங்களே சிறந்தவையா? - மாணவர்களை பிளவுபடுத்தும் அல்காரிதங்கள்

படம்
              தேர்ச்சியைக் கணிக்கும் அல்காரிதம் ! இங்கிலாந்தில் கொரோனா தொற்று பிரச்னையால் , மாணவர்களின் தேர்வு நிறுத்திவைக்கப்பட்டு முந்தை ஆண்டு மதிப்பெண்களே வழங்கலாம் என தீர்மானிக்கப்பட்டது . ஆனால் இதற்கிடையில் அவர்களின் மதிப்பெண்களை மதிப்பிட கல்வி அமைச்சகம் அல்காரிதம் ஒன்றைப் பயன்படுத்தியது . இதன் விளைவாக வெளியான தேர்வு முடிவுகளில் ஏ கிரேட் மாணவர்கள் 40 சதவீதம் பேர் மிகவும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர் . ஆசிரியர்களின் கணிப்பை விட அல்காரிதத்தின் கணிப்பு முறை மாணவர்களின் தேர்ச்சி தரத்தை குறைத்துள்ளது நாடெங்கும் சர்ச்சையானது . மாணவர்கள் தெருவுக்கு வந்து போராடத்தொடங்கினர் . இப்பிரச்னையைத் தீர்க்க இங்கிலாந்து கல்வி அமைச்சகம் , ஆசிரியர்களின் யூக தேர்ச்சி முறையை செயல்படுத்துவதாக அறிவித்துவிட்டது . அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலரும் அல்காரித முறையில் தேர்ச்சியை இழந்துள்ளனர் . இவர்கள் சட்டம் , இலக்கியம் ஆகிய படிப்புகளை படித்தவர்கள் ஆவர் . அல்காரிதத்தில் ஆசிரியர்களின் பரிந்துரை , மாணவர்களின் முந்தைய ஆண்டு மதிப்பெண்கள் ஆகியவை உள்ளீடு செய்யப்படவில்லை . என

வணிகத்தில் கிடைத்த பணத்தை ஏழைமக்களுக்கு செலவிட்ட மசாலா மகாராஜா!

படம்
                  அஞ்சலி மசாலா மகாராஜா மகாசாய் தரம்பால் குலாத்தி இவரது பெயரைச்சொல்வதை விட எம்டிஹெச் மசாலா கம்பெனி விளம்பரத்தில் வரும் பெரியவர் என்று சொல்லிவிடலாம் . 1933 ஆம் ஆண்டு தொடங்கி 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3 வரை இவரது மசாலா நிறுவனத்தின் தீம் மாறவில்லை . ஆனால் விற்பனை புதிய மசாலா கம்பெனிகள் வந்தாலும் கூடிக்கொண்டேயிருக்கிறது . குலாத்தியின் குடும்பமே மசாலா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது . இவருக்கு ஆறு மகள்கள் , ஒரு பையன் . பையன் வெளிநாடுகளில் வியாபாரங்களை ஏற்றுமதி செய்வதை பார்க்கிறார் . பெண்கள் உள்நாடுகளில் விநியோகத்தை கவனிக்கிறார்கள் . குலாத்தியின் தந்தை சுன்னி லால் பாகிஸ்தானின் சிலாய்கோரில் சிறிய மசாலா கடையைத் தொடங்கினார் . அந்த நிறுவனம்தான் இன்று 2 ஆயிரம் கோடி நிறுவனமாக வளர்ந்துள்ளது . தந்தையின் தொழிலுக்கு குலாத்தி விரும்பியெல்லாம் வரவில்லை . படிப்பை நிறுத்திவிட்டுத்தான் வந்தார் . மிளகாய்த்தூள் விற்பனை அப்போது சிறப்பாக நடந்து வந்தது . முதலில் குலாத்தி தொடங்கிய கடை மசாலாவுக்கானது அல்ல . தன்னுடைய முயற்சி என்ற வகையில் கண்ணாடிகள் , காய்கறிகள் விற்பன

இந்திய அரசு தொடங்கியுள்ள ஊட்டச்சத்து திட்டம் ஏழை குழந்தைகளுக்கு உதவுகிறது! போஷான் ஊட்டச்சத்து திட்டத்தின் நிலை!

படம்
            ஆரோக்கியமான இந்தியா ! மத்திய அரசு தொடங்கியுள்ள போஷான் ஊட்டச்சத்து திட்டம் , ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் வயதிற்கேற்ற உயரம் , எடையில் இருப்பதை உறுதி செய்கிறது . பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இணைந்து கடந்த செப்டம்பர் மாதம் போஷன் மா எனும் திட்டத்தை தொடங்கி வைத்தனர் . இதில் பல்வேறு ஊட்டச்சத்தான உணவுகள் பற்றி ரெசிபிகளை பகிர்வது , தாய்மார்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை நாடெங்கும் தொடங்கின . உண்மையில் இந்த திட்டம் மூலம் குழந்தைகளுக்கு ஏற்பட்டு ஊட்டச்சத்து பாதிப்பு குறையுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது . இந்திய அரசின் திட்டம் , ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பட்டினியைப் போக்கி அவர்களை வலிமையுள்ளவர்களாக மாற்றுவதுதான் . உலகம் முழுவதும் 67.3 கோடி மக்கள் ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதில் இந்தியாவின் பங்கு 28 சதவீதம் . அதாவது 18 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 2017-19 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை (UNICEF,WHO)) கூறுகிறது . இந்த அறிக்கையில் வயதுக்கேற்ற உயரம் , எடை இல்லாத ஐந்து வயதிற்குட்பட்ட க

பசியில் தவிக்கும் உலகம்!

படம்
pixabay நாம் கடந்த அறுபது ஆண்டுகளாக பசியோடு போராடி வருகிறோம். இந்திய அரசு ரேஷன் கடைகள் மூலம் பல்வேறு உணவுப்பொருட்களை வழங்கினாலும், அவற்றை மக்கள் வாங்க முடியாத அளவுக்கு விலையை சர்வதேச முதலாளிகளோடு செய்துகொண்ட ஒப்பந்தப்படி மாற்றி வருகிறது. அதன் தரத்தை குறைத்து வருகிறது. இதே நேரத்தில் இந்திய உணவுக்கழகம் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து அதனை பாதுகாக்கும் வசதியின்றி வீணாக்கி வரும் செய்திகளையும் படித்திருப்பீர்கள். பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநில மக்கள் இன்னும் கூட ரேஷன் உணவுப்பொருட்கள் கிடைக்காமல் குழந்தைகளை பலிகொடுத்து வரும் செய்திகளை வாரத்திற்கு ஏதேனும் தேசிய நாளிதழ் செய்தி வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 1960களில் மக்களுக்கு சரியானபடி உணவுப்பொருட்களை வழங்கமுடியாத பிரச்னை எழுந்தது. இதனை பால் எல்ரிச்என்ற எழுத்தாளர் 1968ஆம் ஆண்டு எழுதிய தனது தி பாப்புலேசன் பாம் என்ற நூலில் விவரித்துள்ளளார். இந்த நிலையை சமாளிக்கவே, பசுமை புரட்சி உருவானது. இது வேறு ஒன்றும் இல்லை. மாடுகளால் உழுத நிலத்தை ட்ராக்டர் கொண்டு உழுவது, இயற்கை உரங்களைப் பயன்படுத்தாமல் வேதி உரங்களைப் பயன்படுத்துவத

கலகக்கார கோமாளி - ஜோக்கரின் முன்கதை

படம்
ஜோக்கர் இயக்கம் டாட் பிலிப்ஸ் ஒளிப்பதிவு லாரன்ஸ் செர் இசை ஹில்டர் 1981ஆம் ஆண்டு நடைபெறும் கதை. இதில் ஜோக்கர் எப்படி உருவானார் என்பதை விவரிக்கிறது. அடக்கமுடியாமல் சிரிக்கும் குறைபாட்டால் அவதிப்படும் ஆர்தர் பிளேக்கிற்கு, இக்குறைபாட்டால் தனிக்குரல் நகைச்சுவையாளராக வாய்ப்பும் பறிபோகிறது. ஒரு நிகழ்ச்சியில் கல்ந்துகொண்டு பேசுகிறார். ஆனால் அதனை நாடு முழுவதும் கிண்டல் செய்து பேசுகிறார் டிவி தொகுப்பாளரான ராபர்ட் நீரோ. முதலில் இதற்காக மகிழும் பீனிக்ஸ், பின்னர் அது தன்னை கிண்டல் செய்வதற்கான முயற்சி என கோபமாகிறார். அவர் அதற்கு பதிலாக என்ன செய்தார். என்பதை ஜோக்கர் படம் சொல்லுகிறது. படத்தின் நிறம், இசை என ஜோக்கரின் இருண்ட மனநிலையை சொல்வது போலவே உள்ளது. அனாதையாக பிறந்தவரை எடுத்து வளர்க்கும் அவரது தாய்க்கும் மனநிலை பிறழ்வு பிரச்னை அவரின் வாழ்வை பரிகசிக்கிறது. கோதம் நகரில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் மருத்துவ சிகிச்சைகளை நகர நிர்வாகம் தடாலடியாக நிறுத்துகிறது. இதனால் ஏற்கெனவே சிதைந்த மனம் கொண்ட பீனிக்ஸின் சிரிப்பை நிறுத்தமுடியாமல் போகிறது. அவரின் கற்பனை உலகிலும் அவரா

ஏழை மக்களின் வாழ்நிலையும், பொருளாதாரமும் - அபிஜித், எஸ்தர் டஃப்லோ

படம்
புத்தக வாசிப்பு புவர் எகனாமிக்ஸ் அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ ப.320 வெளியீடு 2011 இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க பல்வேறு நலத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஐந்தாண்டு காலத்திற்குள், சில அரசுகள் மட்டுமே காகிதத்தில் மசோதாவாக இருக்கும் திட்டங்கள் மக்களுக்கு பயன்படும்படி யோசிக்கின்றன. ஏன் சில திட்டங்கள் மட்டும் சிறப்பான பயன்களைத் தருகின்றன, நிலப்பரப்பு ரீதியாக என்ன பிரச்னைகளை இருக்கின்றன, உணவை விட மக்கள் பொழுதுபோக்குக்கு செலவிட தயாராக இருப்பது ஏன்? வறுமை என்ற நிலை தொடர்ச்சியாக மாறாமல் இருப்பது எப்படி, அரசு உண்மையில் இதற்காக உழைக்கிறதா? அரசு அமைப்புகளின் ஊராட்சி பங்களிப்பு மக்களுக்கு உதவுகிறதா என பல்வேறு கேள்விகளை அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ இந்த நூலில் எழுப்பியிருக்கிறார்கள். அரசு வேலைதான் என அலட்சியமாக காலையில் எட்டு மணிக்கு வரவேண்டிய வேலைக்கு பத்து மணிக்கு வருவது என மருத்துவப் பணியாளர்கள்  உதய்பூரில் வேலை செய்கின்றனர். இதனால் அங்குள்ள மக்கள் அரசு சுகாதார நிலையத்திற்கு வருவதே இல்லை. பெண் பணியாளர்கள் எப்போது வருகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதே தெரியாத நில

வருமுன் காப்பதில் கவனமாக இருக்கிறோமா?

படம்
giphy.com வருமுன் காப்பதில் கவனம் தேவை!  உலக நாடுகளின் சுகாதாரத்தை அளவிடும் சுகாதாரப் பாதுகாப்பு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இந்தியா 57ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் தொற்று நோய்களும், தொற்றா நோய்களும் ஏராளமாக மக்களைத் தாக்கி வருகின்றன. நாம் இவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பது முக்கியமானது. இவற்றை நாம் எப்படி கண்காணிப்பது என்றால் அதற்கென பல்வேறு ஆராய்ச்சிகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் உலக சுகாதாரப் பட்டியல். இப்பட்டியலில் இடம்பெற்ற 195 நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் முதன்மையாக உள்ளன. இப்பட்டியலில் இந்தியா சுகாதாரம் சார்ந்த பணிகளில் 46.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. முதன்மை இடம் பெற்ற மூன்று நாடுகளின் சுகாதாரப் புள்ளிகள் 75 முதல் 83 வரை உள்ளன.  இப்பட்டியலுக்கான ஆய்வு, 140 கேள்விகளை உள்ளடக்கியது. நோய்களை முன்னெச்சரிக்கையாகத் தடுப்பது, சிகிச்சை, பாதிப்புகள், மக்களின் நிலை, நிலப்பரப்பு சார்ந்த சமூகப் பொருளாதாரம் என அனைத்தையும் இதில் கவனிக்கின்றனர். ஆய்வில் வழங்கப்படும் புள்ளிகளில் குறைந்தபட்சம் 40 புள்ளிகளு

அபிஜித் கருத்து என்ன?

படம்
ஷங்கர் படத்தில் தொடங்கிய பழக்கம் இது. யாராக இருந்தாலும் கண்டிப்பாக ஒரு கருத்து மனதில் இருக்கும். அதனைச் சொல்லியே ஆக வேண்டும் என வற்புறுத்துவது. விளைவு, படுமோசமாகத்தான் இருக்கும். கேள்வி கேட்டவருக்கு அல்ல, பதில் சொன்னவருக்கு. இம்முறையில் அபிஜித்திடம் பல்வேறு விவகாரங்களில் கருத்துக்களை கேட்டுள்ளனர். இதில் அவர் என்ன நினைக்கிறார் என்பது படித்தால் உங்களுக்கே புரிந்துவிடும். பணமதிப்பு நீக்கம்! இந்த நடவடிக்கையின் பின்னுள்ள லாஜிக்கை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வெளியிட வேண்டும்? இதனால் ஏழைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்பது அதிகமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். தன்னைவிட கருப்புபணம் வைத்திருப்பவர்கள் அதிகம் கஷ்டப்படுவார்கள் என்று மக்கள் சிலர் நினைத்திருக்கலாம். ஆனால் வெளியிட்ட பணத்தில் 97 சதவீதம் ரிசர்வ் வங்கிக்கே திரும்பிவிட்டது. இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். பணக்காரர்களுக்கு அல்லது கருப்பு பணத்தை வைத்திருப்பவர்களுக்கு  என்ன கஷ்டம் நேர்ந்திருக்குமென்று.... பொருளாதாரரீதியில் அரசு செய்த முட்டாள்தனங்களில் ஒன்று பணமதிப்பு நீக்கம். உண்மையில் இந்

அபிஜித் பானர்ஜியின் ஆர்சிடி நுட்பம்! - வறுமை ஒழிப்பு ஆயுதம்!

படம்
அபிஜித் பானர்ஜியின் ஆய்வு! வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை ஒழிக்க மாத்திரைகளை அரசு வழங்குகிறது. இலவசமாகத்தான். நிறைய பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் இதனை மறுப்பார்கள். காசு கொடுத்துத்தான் மருந்துகளை வாங்க வேண்டும். அப்போதுதான் அதன் மதிப்பு தெரியும்  என்று பேசுவார்கள். ஆனால் அபிஜித் உள்ளிட்ட மூவரும் அதனை மறுக்கிறார்கள். தொடக்க சுகாதார விஷயங்களை அரசு இலவசமாகவே வழங்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இதனை 1990-2000 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் நடத்திய கள ஆய்வுகளில் உறுதியாக உணர்ந்துள்ளனர். அதனை அறிக்கையாக எழுதி வெளியிட்டுள்ளனர். இதன்விளைவாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நா அமைப்பு ஏழை மக்களுக்கான சுகாதாரத்திட்டங்களை சிறப்பாக திட்டமிட முடிந்தது. இவர்கள் கண்டுபிடித்த பொருளாதார நுட்பம் ராண்டமைஸ்டு கன்ட்ரோல் ட்ரையல் என்பது சுருக்கமாக ஆர்சிடி(RCT). வறுமை ஒழிப்பில் உள்ள சமூக பொருளாதார தடைகளை இவர்கள் கண்டுபிடித்தனர். அதனைத் தீர்க்கும் வழிகளையும் கூறியுள்ளனர். 2003 ஆம் ஆண்டு இவர்கள் எம்ஐடியில் அப்துல் லத்தீஃப் ஜமால் போவர்ட்டி ஆக்சன் லேப் (J-Pal) என்பதைத் தொடங்கினர். இதன்மூலம் 80க்கும் மேற்பட

உணவுக்கான ரேஷன் தேவையா? சேட்டன் பகத்!

படம்
Giphy.com நாம் சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் ஆகிறது. இதை எப்போது உணர்ந்திருக்கிறீர்கள்? நிச்சயம் அது உங்கள் கவனத்திலேயே இருக்காது. காரணம், நாம் இன்னும் வறுமை நாடாகவே இருக்கிறோம். உங்களில் வீட்டில் எலக்ட்ரிக் பொருட்கள் வந்துவிட்டன. ஆனாலும் அரசு தரும் ரேஷன் பொருட்களை வாங்க வரிசையில் நிற்கிறீர்கள். அரசு குடிமகன்களுக்கான உணவு, உடை, வாழிடம் கொடுப்பது கடமை. இதில் கூடுதலாக மின்சாரத்தையும் சேர்க்கலாம்தானே? இவற்றை உருவாக்கிக்கொள்ளும் வேலை தந்துவிட்டால் மக்களுக்கு யாரையும் சார்ந்து நிற்க வேண்டியதில்லை. ஆனால் மக்களிடம் பிரச்னை எழுந்தால்தானே தேர்தலில் அரசியல்வாதிகள் வெல்ல முடியும்? pixabay எனவே அவர்கள் வறுமை ஒழிக்க வேலை பெற்றுத்தருவதை விட ரேஷனில் மாதம் அரிசி, காய்கறி, சர்க்கரை என வழங்குவது எளிது. நாமும் இந்த அவலத்தை மனப்பூர்வமாக ஏற்று இந்தியாவை தலைகுனிய வைக்கிறோம். அரசு வழங்கும் பொருட்களை பெறும் நிலையில் உள்ள வறுமையான குடும்பங்கள் ஒப்பீட்டளவில் குறைந்துள்ளன. ஆனாலும் நாம் ரேஷன் கார்டிலுள்ள பொருட்களை மனத்தயக்கமின்றி சென்று வாங்குகிறோமே ஏன்?  எனக்கு அரசின் இலவசப் பொருட்கள்