இடுகைகள்

நினைவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூளையில் ஏற்படும் மாற்றங்கள் நினைவுகளை பாதிக்கும்- இரு நோயாளிகளிடம் செய்த பரிசோதனைகள்

படம்
                  மூளையும் நினைவுகளும் மருத்துவத்துறையில் மூளை நரம்பியல் இன்று வெகுவாக முன்னேறிவிட்டது . ஆனால் அதில் ஏற்பட்ட துல்லியமான அனைத்து மாற்றங்களையும் வெகுஜன மக்கள் அறியமுடியாது . திரைப்படங்கள் அந்த வேலையை செய்தன . தலையில் அடிபட்டு நினைவுகளை இழந்தவர் , பைத்தியம் ஆனவர் , கோமா நிலைக்கு சென்றவர் என பல்வேறு மனிதர்களை செல்லுலாய்டில் உலவ விட்டனர் . இதில் சுந்தர் சி போன்ற இயக்குநர்களின் படங்களில் கட்டையால் அடித்தால் கண்டிப்பாக ரத்த த்தைவிட மயக்கம்தான் வரும் எனும் டுபாக்கூர் விஷயங்களும் வெளிவந்தன . பின்னாளில் அவரே தன்னுடைய படத்தில் லாஜிக் பார்த்தால் எப்படி என்று சொல்லிவிட்டதால் , அவரை விமர்சிக்க ஏதுமில்லை . இப்போது ஒரு நோயாளி பற்றி பார்ப்போம் . அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹென்றி மொலைசன் . இவரது ஏழு வயதில் மோட்டார் பைக் விபத்தில் தலையில் அடிபட்டது . அதிலிருந்து டெம்பொரல் லோப் பகுதி பாதிக்கப்பட்டு வலிப்பு பிரச்னைஉருவானது . வலிப்பு தொடர்பான மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்தினார் . ஆனாலும் 27 வயதில் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது . மருத்துவர் ஸ்கோவில்லே இவருக்கு

நினைவை எப்படி மூளை தட்டி எழுப்புகிறோம்? - மூளையிலுள்ள நினைவை பாதுகாக்கும் பகுதிகள் ஒரு பார்வை

படம்
          ஞாபகம் வருதா ? சிலரது கைகளை தொட்டால் பல்வேறு நினைவுகள் வரும் . சிலரது முகத்தை பார்த்தால் நமக்கு நெருக்கமானவர்களின் நினைவு பல ஆண்டுகளுக்கு சென்று உடனே ரீகேப் ஆகி மீளும் . சிலரது உடல்மொழி கூட நமக்கு தெரிந்தவர்களை திடீரென பெய்யும் அடைமழை போல நினைவுப்படுத்தி செல்லும் . இதெல்லாம் எப்படி நடக்கிறது ? மூளையில் அதற்கான பார்ட்டுகளை பிரம்மா தனது கையாலேயே செய்து வைத்திருக்கிறார் . உணர்வுரீதியான நினைவு , குறுகியகால நினைவு , நீண்டகால நினைவு என மூன்று வகை நினைவுகள் உள்ளன . உணர்வு ரீதியான உணர்வு சில நொடிகள் மட்டும்தான் நீடிக்கும் . குறுகியகால நினைவுக்கு ஆயுள் 20 நொடிகள் . நீண்டகால நினைவுக்கு ஆயுள் அதிகம் . நினைவுகளைப் பொறுத்தவரை அதனை முக்கியம் என்று நீங்கள் கருதினால் அது நிலைக்கும் . இல்லையென்றால் மண்டையில் நிற்காது . நடத்துநர் எச்சிலைத் தொட்டு டிக்கெட் கிழித்தாரா என்பது மூளையில் சேமித்து வைக்கவேண்டிய விஷயமில்லை . ஆனால் அவருக்கு சரியான காசை கொடுத்து டிக்கெட் வாங்கினோமா என்பது முக்கியம் . அதைவிட முக்கியமானது . அவரிடம் சொன்ன இடத்தில் இறங்கி நண்பனை சந்தித்தோமா என்பது நினைவு கொள்ளவேண்ட

புதிய பழக்கங்களை எப்படி கற்றுக்கொள்வது? - மூளையில் பழக்கவழக்கங்களை எப்படி பதிய வைக்கலாம்

படம்
            இலக்கு நோக்கிய பயணம் வாழ்வதற்கான நோக்கம் என்ன என்ற கேள்வியை தனது வாழ்நாளில் ஒருவர் சந்திக்கவேண்டும் . அப்படி சந்திக்காதபோது பிறரின் மீதான அக்கறை ஒருவருக்கு குறைந்துபோய்விடும் என டாக்டர் ரொமான்டிக் தொடரில் டீச்சர் கிம் கூறுவார் . குறிப்பிட்ட நோக்கம் இல்லாத வாழ்க்கை என்பது சலிப்பான மோசமான விஷயங்களுக்குத்தான் அழைத்துச்செல்லும் . முயல் தனது கேரட்டை எடுக்க வழிகாட்டிய புதிர் பலருக்கும் நினைவிருக்கும் . இதுபோல நோக்கங்களை மையமாக வைத்து முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும் . நோக்கங்களை தேடுவதை பயிற்சியாக கொண்டால் அதனை அடையும் வழி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை . பாதை நினைவிருக்கும் என்பதால் முயல் போலவே நமது மூளையும் எளிதாக அதனை அடைந்துவிட முடியும் . தூண்டுதல் பற்பசை விளம்பரத்தை பார்த்துவிட்டு தூண்டுதலில்தான் ஹைப்பர் மார்க்கெட்டை வேட்டையாட கிளம்புகிறோம் . சுத்தமான பற்கள் , நம்பிக்கை அளிக்கும் என ஸ்லோகனை பயன்படுத்துகிறார்கள் . இதுபோல தூண்டுதல்தான் பழக்கத்தை தொடங்க உதவும் . உடற்பயிற்சி , நல்லுணவு , தூயஆடை , ஆளுமை மாற்றங்கள் ஆகியவையும் பிறரைப் பார்த்து காப்பி

தன்னைதானே உணரவைக்கும் ஒரு நெடும் பயணம்! - கார்வான்

படம்
              கார்வான் துல்கர் சல்மான் பெங்களூருவில் வேலை செய்பவர் . புகைப்படம் எடுப்பதை தொழிலாக வைத்துக்கொள்ள நினைப்பவரின் எண்ணத்திற்கு அவரின் அப்பா சம்மதிப்பதில்லை . இதனால் வேண்டாவெறுப்பாக ஐடி கம்பெனி ஒன்றுக்கு வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார் . அப்போது அவரின் அப்பா இறந்துவிட்டதாக தகவல் வருகிறது . அதனை கார்கோ நிறுவனம் ஒன்றில் அனுப்பி வைக்கிறார்கள் . ஆனால் அதில் ஒரு குழப்பம் ஏற்பட்டு விடுகிறது . துல்கரின் அப்பாவுக்கு பதிலாக கொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவரின் உடலை அனுப்பிவிடுகிறார்கள் . இவரின் அப்பா உடல் கொச்சிக்கு மாற்றி அனுப்பப்படுகிறது . இப்படி செல்லும்போது இவர்களிடம் உள்ள உடலுக்கு சொந்தக்காரரான தாஹிரா என்ற பெண்மணியின் மகள் , ஊட்டியில் உள்ள பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறாள் . அவளையும் அழைத்துச்செல்லும்படி நேருகிறது . இதன்படி வேன் ஓட்டுநரான சௌகத் , துல்கர் , தான்யா என மூவரின் பயணம் தொடங்குகிறது . இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை மூவருமே அப்பாவினால் பாதிக்கப்பட்டவர்கள் , ஒருவருக்கு அப்பா கொடுமைக்காரர் , இன்னொருவருக்கு புரியாத புதிர் , இன்னொருவருக்கு அப்பாவைப் பார்க்கவ

உளவியலும் அதன் மேம்பாடும்!

படம்
கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாக உளவியல் துறை சிறப்பான முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. உளவியல் சார்ந்த விஷயங்களுக்கு க்ரீஸ், பெர்சியா ஆகிய நாட்டு ஆராய்ச்சியாளர்களே முன்னோடியாக இருந்து வந்துள்ளனர். உளவியல் துறை அடைந்த முன்னேற்றங்களைக் குறித்து பார்ப்போம். கிரேக்கம் கி.பி 1550ஆம் ஆண்டி எபிரஸ் பாபிரஸ் எனும் இதழில் மன அழுத்தம் பற்றி எழுதப்பட்டுள்ளது. கிபி 47- 370 காலகட்டத்தில் டெமோகிரைடஸ் உணர்வுகளின் மூலம் நாம் பெறும் அறிவு குறித்து உலகிற்கு அறிவித்தார். ஹிப்போகிரேட்டஸ் மனநலன்களுக்கான மருந்துகளை எப்படி தயாரிப்பது என்று அதற்கான விதிமுறைகளை வகுத்தார். கிபி 387 இல் பிளேட்டோ, மனிதனின் மூளைதான் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு காரணம் என்று கூறினார். 350ஆம் ஆண்டில் அரிஸ்டாட்டில் (பிளேட்டோ மாணவர், பின்னாளில் பிளேட்டோ சொன்ன கருத்துகளை மறுத்தவர்) டி அனிமா, டபுலா ரசா  எனும் உளவியல் சார்ந்த பதங்களை அறிமுகப்படுத்தினார். விளக்கினார். 300-30 காலகட்டத்தில் ஸெனோ, ஸ்டோய்சம் எனும் மனநிலை பற்றிய தன்மையை கற்பித்து வந்தார். இதனை 1960 இல் சிபிடி என்று பழக்க வழக்கம் சார்ந்த தெரபியாக உளவியலாளர்கள் வர

அனைத்து விஷயங்களும் நம் நினைவில் இருந்தால்....

படம்
டாக்டர் எக்ஸ் கடையில் பொருட்களை வாங்க போகிறோம். கடைக்காரர் என்ன என்று கண்களை நிமிர்த்து பார்க்கும்போது சொல்ல முடியாமல் போகிறது. மனைவி படித்துப் படித்து சொன்ன பொருட்கள்தான். ஆனால் ஏதோ சிக்கலில் இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித் தூள், கறிவேப்பிலை மறந்துபோய்விடுகிறது. மனைவி தாளித்து கொட்டி அர்ச்சனை செய்தாலும் வயசாகுதில்ல என்று சமாளிக்கலாம். ஆனால் உண்மையில் மறப்பது என்றால் என்ன நம் மூளையின் திறன் குறைவு என்று பொருள் கொள்ளலாமா? பதில் - ஆலிவர் ஹார்ட், மெக்ஹில் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர்.  இல்லை. மறதி, ஒன்றை முழுக்க நினைவிலிருந்து அழிப்பது என்பது குறைபாடு அல்ல. அது இயல்பாக இயற்கையாக மூளையில் நடப்பது. நான் செய்து வரும் ஆராய்ச்சியில் இதனைக் கண்டுபிடித்துள்ளேன். நாம் எப்படி சில குறிப்பிட்ட விஷயங்களை படிக்கிறோம். அதனை மீட்டிங்கில், ஐடியா சொல்லுவதற்காக மனதில் குறிப்பிட்ட வித த்தில் கீவேர்டுகள் போட்டு சேமித்து இருப்போம். குறிப்பிட்ட விஷயங்களை பேசும்போது உடனே மூளைக்கு சிக்னல் கிடைக்க அந்த விஷயங்களை எடுத்துப் பேசுவோம். இதேபோல நாம் சேர்த்து வைத்த நினைவுகளை அழிக்கும் செயல்பாடுகளும் தொட

ஹாப்டிக் மெமரி - தொட்ட அனுபவித்த நினைவுகளின் களஞ்சியம் என்பது உண்மையா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி ஹாப்டிக் மெமரி என்றால் என்ன? ஹாப்டிக் மெமரி என்பது ஒன்றைத் தொட்டது பற்றிய நினைவு. ஒரு பூட்டைத் தொட்ட நினைவு இன்னொரு பூட்டைத் தொடும்போது, அல்லது திறக்கும்போது வரலாம். ஒருவரின் கையைத் தொடும்போது, அதன் மென்மை உங்களுக்கு பழகியது போல தோன்றினால் அதுதான் ஹாப்டிக் மெமரி. இந்த நினைவு ஒரு பொருளைத் தொடுவது, அல்லது அது தொடர்பான நினைவுகளின் சேகரிப்பால் உருவாகிறது. நன்றி:  https://www.alleydog.com

பாதுகாப்பில்லாத இடத்தில் வரும் கனவு பலிக்குமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி வேறு இடங்களில் தூங்கும் போது வரும் கனவு நம் நினைவில் நிற்பது எப்படி? பொதுவாக புது இடத்தில் படுத்து உறங்க முயற்சிக்கும்போது உடலின் ஆதி எச்சரிக்கை உணர்வு தீவிரமாக இயங்குகிறது. அதாவது, கவனமாக உறங்கு. இது பாதுகாப்பான இடமல்ல. ஆபத்து இருக்கிறது என்ற செய்தி மூளையில் பதிகிறது.எனவே புது இடங்களில் தூங்கும்போது ஆழமான தூக்கம் வராது. இது ஆராய்ச்சியில் தெரிய வந்த விஷயம். பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த விஷயம் இது. அதேபோல இப்படி தூங்கும்போது வரும் கனவுகளை 98 சதவீதம் நீங்கள் நினைவு கூறமுடியும். பிற கனவுகள் 90 சதவீதம் காலையில் எழும்போது உங்கள் நினைவுகளோடு அழிந்துவிடும். அப்படியும் சில நினைவுகள், குறிப்பிட்ட கனவு காட்சி நிஜமாக விரியும்போது இடது கண் துடித்து நினைவுக்கு வந்தால் அதுதான் தேஜா வூ. இதுவும் குறைபாடு கிடையாது. உலகில் பலருக்கும் நடக்கும் நிகழ்வுதான். நன்றி: பிபிசி