இடுகைகள்

பழக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குற்றவாளிகளின் கொலைப்பழக்கம் எப்படி தொடர்கிறது?

படம்
    நிகழ்ச்சிகள் பழக்கம் இன்று நெட்பிளிக்ஸ் , அமேசான் , எம்எக்ஸ்பிளேயர் வலைத்தளங்களில் வெப் சீரிஸ்களை பா்ர்க்க வைக்கும் நுணுக்கமான அல்காரிதம்களை பயன்படுத்துகின்றனர் . இதன்படி ஒருவர் என்ன விஷயங்களைத் தேடுகிறார் . என்ன படங்களைப் பார்க்கிறார் என்பது பற்றிய தகவல்களை தேர்ந்தெடுக்கின்றனர் . இத்னை வைத்து 90 நொடிகளில் ஒருவரின் கவனத்தை ஈர்க்கும்படியான விஷயங்களை தொகுக்கின்றனர் . இதனால் ஒருவர் பார்க்கும் அனுபவத்தை வைத்து அவருக்கேற்றபடி நிகழ்ச்சிகளை தொகுக்கின்றனர் . மேலும் படங்களின் வெப்சீரிஸ்களின் முகப்பு படங்களை பிறரது கவனத்தை ஈர்க்கும்படி வடிவமைக்கின்றனர் . இதனை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கின்றனர் . ஒரு வெப்சீரியசில் சில கேரக்டர்களை வைத்து கவர் ஆர்ட் செய்திருப்பார்கள் . ஆனால் அது அனைவருக்குமே பிடித்திருக்காது . எனவே மாற்றி அமைத்தால் தனிப்பட்ட விருப்பத்தின்படி அனைவரும் ரசிப்பார்கள் . நெட்பிளிக்ஸ் இம்முறையை பின்பற்றி வெற்றி பெற்றுள்ளது . உபர் நிறுவனம் , தனது வாகன ஓட்டுநர்களை ஊக்குவிக்க நெட்பிளிக்ஸின் முறையைத்தான் காப்பியடிக்கிறது . பிஸியான டைமிலும் ஓட்டுநர்களை வேலைவ

வாழ்க்கையைக் காப்பாற்றும் பழக்க வழக்கங்கள்! - உடல், மனதின் இயல்பான பழக்கங்கள்

படம்
              ஆபத்து கால நடவடிக்கைகள் ! உடலைப் பொறுத்தவரை ஆயுளுக்கும் நமக்கு பாதுகாவலராகவே செயல்படுகிறது . மிகவும் இக்கட்டான நேரம் என்றால் உடல் தானியங்கியாக தன்னைப் பாதுகாத்துக்கொள்வதில் இறங்கிவிடும் . இதனை ஒருவர் தவிர்க்கவே முடியாது . நீரில் இறங்கினால் , நீச்சலடிப்பது , நெருப்பைப் பார்த்தால் அது ஏற்படுத்தும் விளைவுகளை அறிந்து எச்சரிக்கையாவது , நாய் துரத்தினால் இயல்பாகவே ஓடத் தயாராவது என சில விஷயங்களைக் குறிப்பிடலாம் . நவீன நகர வாழ்க்கையில் இந்த செயல்பாடுகள் ஒருவரின் சிந்தனை வாழ்க்கை முறையைப் பொறுத்து மாற்றங்களை காண்கிறது . அடிப்படையில் தன்னைக் காத்துக்கொள்வதுதான் இதில் முக்கியமானது . அப்படி சில அம்சங்களை கீழே காண்போ்ம் தாக்குதல் அல்லது தப்பித்தல் ஆபத்து என்று வரும்போது ஒன்று அதனை எதிர்ப்பது அல்லது அங்கிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொண்டு ஓடுவது என இரண்டில் ஒன்றைத் தான் தேர்ந்தெடுக்க முடியும் . அதுதான் விலங்காக இருந்து நாம் பெற்ற அடிப்படை இயல்பு . இன்று இதே அம்சம் வெவ்வேறு வகையில் வெளிப்படுகிறது . உயிருக்கு ஆபத்தான நிலையில் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது . உடல்

நம் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் பழக்கங்கள் என்னென்ன?

படம்
              சிறிய பழக்கம் பெரிய மாற்றங்கள் தாகசாந்தி செய்யுங்கள் ! அலுவலகங்களில் வேலை செய்யும்போது ஏசி ஓடிக்கொண்டே இருப்பதால் பெரும்பாலானோர்க்கு நீர் தேவை இருக்கிறதா இல்லையா என்றே தெரியாது . தண்ணீரை அதிகம் குடிக்காவிட்டால் உடலில் இயக்கம் குளறுபடியாகிவிடும் . எலும்புகளின் இணைப்பிற்கு உயவு எண்ணெய் போல நீர் பயன்படுகிறது . உடலின் வெப்பநிலையை கட்டுப்பாடு செய்வதற்கும் , செரிமானத்திற்கு்ம் உதவுகிறது . அடிக்கடி கடி நீர் குடிப்பதை மறந்தால் உடல் , மனம் என இணைத்தும் ஒத்திசைவாக இயங்காது . நீண்டகால நோக்கிலும் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் . இனிமேல் அலுவலகத்தில் பரபரப்பாக இயங்கினால் கூட அதற்கேற்ப போனில் அலாரம் வைத்துக்கூட நீரை நேரத்திற்கு குடிக்கலாம் . இதில் ஒன்றும் வெட்கப்படவேண்டியதில்லை . நீரை அதிகமாக குடிக்கமுடியவில்லை என்றால் பழரசம் அல்லது மூலிகை தேநீர் போன்றவற்றை அருந்தலாம் . நேரமே எழுங்கள் இது கடைபிடிப்பதற்கு கடினமான பழக்கம் . இரவில் தாமதமாக படுப்பவர்கள் எப்படி சூரிய உதயம் பார்க்கமுடியும் ? தினசரி நடவடிக்கைகளை சரியானபடி அமைத்துக்கொண்டவர்களுக்கு பெரிய பிரச்னை

பழக்கங்களின் நதிமூலம், ரிஷி மூலம்! - நல்ல பழக்கங்களை எப்படி தொடர்வது?

படம்
          பழக்கங்கள் எப்படி உருவாகின்றன ? குழந்தைகளாக இருக்கும் யாரும் பழக்கத்தை தானாக வே பழகுவதில்லை . கர்லான் மெத்தையில் குழந்தையை படுக்க வைத்திருக்கு்ம்போது கூட அதற்கு அதன் தேவை என்னவென்று முதலில் தெரியாது . ஆனால் தினசரி அதில் படுத்து தூங்குபவர்களுக்கு அதன் பயன்பாடு என்னவென்று தெரிந்துவிடும் . பல்வேறு பழக்கங்களை குழந்தைகள் வீட்டில்தான் கற்கிறார்கள் இவற்றைக்கூட பெற்றோரைப் பார்த்துதான் கற்கிறார்கள் . அதிலும் குழ்ந்தைப்பருவத்தில் கற்கும் பல்வேறு பழக்கங்களை அவர்கள் வயது முதிரும்போது கைவிடுகிறார்கள் . அப்படியும் நல்ல பழக்கங்கள் நீடித்திருந்தால் , பின்னாளில் அவை வாழ்க்கைக்கு உதவலாம் . இப்போதும் கூட சிலர் குழந்தையாக இருக்கும்போது கற்ற கைவிரல்களை சூப்புவது , காது மடல்களை இழுத்துக்கொண்டே நடப்பது ஆகிய பழக்கங்களை சிலர் எப்போதும் செய்வார்கள் . அனைத்து நல்ல பழக்கங்களுமே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தும்தான் . இதனை புரிந்துகொண்டு அதற்கேற்ப மனவலிமையோடு பழக்கங்களை தொடர்ந்தால் மட்டுமே அதற்கான விளைவுகளைப் பெறமுடியும் . நல்ல பழக்கங்களை தொடர்வதற்கு அதற்

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக தன்னை அர்ப்பணித்த ஆசிரியை! - தேசியளவில் சிறந்த ஆசிரியர் - ஜூலியானா உட்ருபே

படம்
              மாற்றம் தரும் ஆசிரியர் கடந்த இரு ஆண்டுகளாக கல்வி என்பது மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்றுத்தரும் வழக்கம் குறைந்துவிட்டது . அதற்கான காலம் கூடிவரவில்லை . நோய்த்தொற்று பாதிப்பால் கல்வித்தளம் என்பது முழுக்க இணையம் சார்ந்ததாக மாறிவிட்டது . இந்த சூழ்நிலையில் ஆசிரியர்கள் இதைப்பற்றி என்ன பேசுவார்கள் என்பது முக்கியம்தானே ? நடப்பு ஆண்டிற்கான தேசிய ஆசிரியர் பரிசை ஜூலியானா உட்ருபே பெற்றுள்ளார் . இனிக் கல்விமுறையில் தனித்தனி மாணவர்களுக்கான திறனைப் பொறுத்தே அவர்களுக்கு கல்வி கற்பிப்பது சிறந்தது . கல்விமுறையையும் வேறுபட்டு சிந்திக்கும் , செயல்படும் மாணவர்களுக்கானதாகவே மாறும் என்றார் உட்ருபே . இவரை கவுன்சில் ஆப் சீப் ஸ்டேட் ஸ்கூல் ஆபீசர்ஸ்அமைப்பு சிறந்த ஆசிரியராக தேர்ந்தெடுத்துள்ளது . உட்ருபே போன்ற அர்ப்பணிப்பான ஆசிரியர்கள் , புதுமைத்திறன் ஆகியவை இனக்குழு சார்ந்த மக்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுவார்கள் என்றார் கவுன்சிலின் இயக்குநரான காரிசா மொஃபாட் மில்லர் . 2005 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை சிறந்த ஆசிரியர் விருது பெற்றவர்களில் உட்ருபே மட்டும்தான் லத்தீன் பகுதியைச

உணவு, வாக்கு, உடல்பருமன், தூக்கம் என அனைத்தையும் தீர்மானிப்பது மரபணுக்கள்தான்! - பழக்கங்களின் தொடர்ச்சி

படம்
              இயற்கையான முறையும் , சூழலின் தாக்கமும் இந்த இரண்டு வார்த்தைகளும் இப்போது அனைத்து இடங்களிலும் புழங்கி வருகிறது . இன்று கிறிஸ்பிஆர் முறையில் மரபணுவைக் கூட வெட்டி ஒட்டி பிறப்புக்குறைபாடுகளை மாற்றிக்கொள்ளமுடியும் . இதற்கான ஆராய்ச்சிகள் தடுப்பூசிகள் தயாரிப்பிலும் கூட பயன்படுகின்றன . பொதுவாக ஒருவரின் குணம் , ஆளுமை , சாப்பிடும் பழக்கம் , திறன் ஆகியவற்றிலும் கூட அவரின் பரம்பரை , சூழல் என இரண்டின் தாக்கமும் உண்டு . இதனை பலரும் மாற்றி மாற்றி விவாதம் செய்வதுண்டு . அதாவது , அவரின் பரம்பரை அப்படி அதனால் திறமையுடன் இருக்கிறார் . மற்றொன்று , பரம்பரையாக இல்லையென்றாலும் சூழலின் அழுத்தத்தில் ஒருவர் தனது திறன்களை வளர்த்துக்கொள்வது . இது இன்றுவரை முடிவில்லாத விவாதமாக செல்கிறது . ஒருவரின் ஆரோக்கியம் , உணவின் முறை என அனைத்துமே மரபணுக்களின் தாக்கம் பெற்றுள்ளது . குற்றவியல் துறையில் பல்வேறு குற்றவாளிகளைத்தான் இந்தவகையில் ஆராய்ந்தனர் . அடிக்கடி குற்றம் செய்பவர்களின் மனநிலையையும் அவர்களின் குடும்ப பாரம்பரியத்தையும் ஆராய்ந்து பல்வேறு உண்மைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்

நல்ல பழக்கங்களை குழந்தைகள் பின்பற்ற பரிசு கொடுங்கள்!

படம்
            குழந்தைகளின் மூளை வளர்ச்சி வேகம் ! குழந்தைகளின் மூளை வளர்ச்சி முதல் ஐந்து ஆண்டுகளில் வேகமாக இருக்கிறது . ஆனாலும் கூட அவர்கள் உலக அனுபவங்களைப் பெற்றும் முதிர்ச்சி அடையும் வரை அவர்களால் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது . இதனால்தான் தனக்கு வேண்டும் என்பதை பிடிவாதம் பிடித்து அழுவது , கோபம் கொள்வது , வருத்தப்படுவது , பொறாமையுறுவது ஆகியவற்றை வெளிப்படையாக காண்பிக்கிறார்கள் . இதே விஷயங்கள் முதிர்ச்சியுள்ள மனிதர்களுக்கு உண்டுதான் . ஆனால் ஏன் வெளிப்படுவதில்லை ? காரணம் அப்படி வெளிப்படுவது நமது சமூக அந்தஸ்துக்கு பொருத்தமானதில்லை எனநம்புகிறோம் . குழந்தைகள் தங்களுக்கு ஏற்ற அல்லது வெளியிடங்களில் பார்க்கும் , கேட்கும் , பேசும் விஷயங்களை கவனிக்கிறார்கள் . அதனை கற்றுக்கொள்வதை இன்டக்டிவ் லேர்னிங் என்று கூறுகிறார்கள் . குழந்தைகளின் மூளைவளர்ச்சி பெறாத நிலையில் வெடிக்கும் எரிமலை போல உணர்ச்சிகளை கொட்டுவார்கள் . ஆனால் அவர்களின் வயது மூன்று அல்லது நான்கு என ஆகும்போது , கவனம் , உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் கட்டுப்பாடு இருக்கும் . நினைவுகளை கையாள்வதும் பின்னாளில்

மூளையில் ஏற்படும் மாற்றங்கள் நினைவுகளை பாதிக்கும்- இரு நோயாளிகளிடம் செய்த பரிசோதனைகள்

படம்
                  மூளையும் நினைவுகளும் மருத்துவத்துறையில் மூளை நரம்பியல் இன்று வெகுவாக முன்னேறிவிட்டது . ஆனால் அதில் ஏற்பட்ட துல்லியமான அனைத்து மாற்றங்களையும் வெகுஜன மக்கள் அறியமுடியாது . திரைப்படங்கள் அந்த வேலையை செய்தன . தலையில் அடிபட்டு நினைவுகளை இழந்தவர் , பைத்தியம் ஆனவர் , கோமா நிலைக்கு சென்றவர் என பல்வேறு மனிதர்களை செல்லுலாய்டில் உலவ விட்டனர் . இதில் சுந்தர் சி போன்ற இயக்குநர்களின் படங்களில் கட்டையால் அடித்தால் கண்டிப்பாக ரத்த த்தைவிட மயக்கம்தான் வரும் எனும் டுபாக்கூர் விஷயங்களும் வெளிவந்தன . பின்னாளில் அவரே தன்னுடைய படத்தில் லாஜிக் பார்த்தால் எப்படி என்று சொல்லிவிட்டதால் , அவரை விமர்சிக்க ஏதுமில்லை . இப்போது ஒரு நோயாளி பற்றி பார்ப்போம் . அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹென்றி மொலைசன் . இவரது ஏழு வயதில் மோட்டார் பைக் விபத்தில் தலையில் அடிபட்டது . அதிலிருந்து டெம்பொரல் லோப் பகுதி பாதிக்கப்பட்டு வலிப்பு பிரச்னைஉருவானது . வலிப்பு தொடர்பான மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்தினார் . ஆனாலும் 27 வயதில் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது . மருத்துவர் ஸ்கோவில்லே இவருக்கு