இடுகைகள்

முன்னேற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூக பொறுப்புணர்வு திட்டத்திற்கான விதிகள் - சிஎஸ்ஆர் 2

படம்
அத்தியாயம் 2 பெரு நிறுவன சமூகப் பொறுப்பு! முக்கியமான விதிகள்! சமூக பொறுப்பு சார்ந்த விழிப்புணர்வை மேற்குலகில் எழுத்தாளர்கள் ஏற்படுத்தினர்.  இதனை ஒழுங்குமுறைப்படுத்த அரசுகளால் சட்டத்திருத்தங்களும் உருவாக்கப்பட்டன. பின்னர்தான், இதனை பெருநிறுவனங்கள் முறையாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். இந்தியாவில் சமூகப் பொறுப்புணர்வு என்பது தனிநபர் சார்ந்து இருந்தது. சமூக விஷயங்களுக்காக நன்கொடை தருவது என்பது இயல்பான ஒன்று. காலப்போக்கில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அவை செய்யும் பல்வேறு அறச்செயற்பாடுகளுக்கு சட்டம் தேவைப்பட்டது. இதற்கான சட்டப்பூர்வ வரைவுகள்  2009 ஆம் ஆண்டு தொடங்கின.   பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு பற்றி கூறப்பட்டிருந்தது. வணிக நிறுவனங்களின் பொறுப்பு என்ற வகையில் இவை உருவாக்கப்பட்டன. பின்னர், 2011 ஆம் ஆண்டில், தேசிய தன்னார்வ சமூகப்பணிகளுக்கான விதிமுறைகள் (NVG) வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இதில் சமூகம், பொருளாதாரம், சூழல் ஆகிய மூன்று அம்சங்களையும் வணிக நிறுவனங்கள் கவனிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தன. இதில் ஒன்பது விதிகள் உண்டு.  அதி