மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு 3 - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்
லெனினின் சிலையை சுமந்து செல்லும் ஊர்வலமானது உலகில் மதம் குறித்த பெரும் விஷயங்களைக் குறிக்கிறது. கம்யூனிச மதம் வீழ்ந்தது ஒருபுறமிருக்க, விவசாய குடியானவர்கள் லெனின் சிலையுடன் கம்பீரமாக ஆற்றைத்தாண்டி வருகிறார்கள் என்பது ஒருபுறம் நிகழ்கிறது. விரக்தியுற்ற விவசாயிகள் மதம் தேவை என்பதை அறிந்தும் ஆனால் அது எப்படி இருக்கவேண்டும் என்று அறியாது இருக்கிறார்களா? மதம் குறித்த விஷயங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. வளம் குன்றிய விவசாயிகளுக்கு எரிச் ப்ரோம் கூறுவது போல மாய உதவி என்று மதம் குறித்து கூறலாம். ஒரு சிறு கப்பலில் பெரிய சிலையை துண்டுகளாக்கி செல்லும் காட்சியை நானே கண்டும் இருக்கிறேன். சிறு படகு ஒன்று கரும்கடலில் ரோமானிய துறைமுகமான கான் ஸ்டன்னாவினை கடந்து செல்கிறது. பேரளவிலான அழகற்ற லெனினின் உடைத்து போடப்பட்டிருக்கிற சிலைத்துண்டுகளை பார்க்கும் ஒருவன் திகிலடைந்து போகிறான். அவனைப்பார்த்து தானாக தன் நெஞ்சருகே படகோட்டும் பெண் சிலுவைக்குறி போட்டுக்கொள்கிறாள். இது போன்ற நிகழ்வுகளில் சிலுவைக்குறி போட்டுக்கொள்வது இயல்பானதாகவே உள்ளது. உங்களது அண்மைய படங்களில் நிகழ்காலத்தி