இடுகைகள்

உயிர்கொல்லும் விஷ ஊசி! - விக்டர் காமெஸி

படம்
உயிர்கொல்லும் விஷ ஊசி ! - விக்டர் காமெஸி அர்கான்சாஸ் நகர நீதிபதியின் உத்தரவுப்படி கடும் குற்றங்களில் ஈடுபட்ட 7 நபர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது . எப்படி மரணம் நிகழும் தெரியுமா ? முதலில் நரம்பு வழியாக மிடாஸோலம் எனும் வேலியம் குடும்பவகை மருந்து ஊசி , கோமாவிற்கு கொண்டு செல்ல போடப்படும் . பின் , அடுத்த வேக்குரோனியம் ப்ரோமைடு ஊசி ( நரம்புதசைகளை செயலிழக்கச்செய்வதோடு மூச்சு திணறவைக்கும் ), அடுத்து பொட்டாசியம் குளோரைடு இறுதியாக செலுத்தப்படும் . இதிலுள்ள பொட்டாசியம் அயனிகள் இதயச்செயல்பாட்டை நிறுத்தும்போது சாவு உறுதி .  விஷ ஊசி வழிமுறை அனைத்து மாநிலங்களுக்குமானதல்ல . சில மாநிலங்களில் ஒரே ஊசிதான் . ஆனால் வழிமுறை இதுதான் . கத்தியால் வெட்டுவது , சுடுவது , நச்சுவாயு அறை , தூக்குதண்டனை இவற்றை விட விஷ ஊசி மிதமான தண்டனையாகவே பலருக்கும் தோன்றும் . ஆனால் அமெரிக்க அரசமைப்பு சட்டப்படி 8 வது சட்டப்பிரிவு , குற்றவாளிக்கு குரூரமான தண்டனைகளை அளிப்பதை தடுக்கிறது . 1977 ஆம் ஆண்டு விஷ ஊசிகளைப்பற்றி 3 கொள்கைகளை ஜே சாப்மன் வகுத்தார் எனினும் , அவை குறித்த எந்த ஆதாரமோ , ஆராய்ச்சியோ கிடையாத

நீ எங்கே என் அன்பே!- விக்டர் காமெஸி

படம்
நீ எங்கே என் அன்பே !- விக்டர் காமெஸி லூதியானாவில் பிறந்து டெல்லியில் செட்டிலான அழகான , ஹேண்ட்ஸமான 3 வயது கோல்டன் லேப்ரடார் ஆணுக்கு , அதே இனத்தில் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண் தேவை . புகைபிடிக்கும் , மது அருந்தும் , பெண்ணியம் பேசும் பெண்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்ற  டெல்லியிலுள்ள டோனிகான் மார்க்கெட்டிலுள்ள சுவரில் ஒட்டியிருந்த விளம்பரத்தை பார்த்து இந்தியாவின் அனைத்து ஏ டூ இஸட் நாளிதழ்களும் ஆச்சர்யப்பட்டுவிட்டன . ஆண் நாய்க்கு பெண் இணை சேர்க்கும் விளம்பரம்தான் அது . என் நாய் ! என் உரிமை ! அச்சுவரில் இந்த விளம்பரம் மட்டுமல்ல , லாப்ரடார் நாய்க்கு அழகான , புத்திசாலியான , நேசம் கொண்ட குடும்பத்திற்கேற்ற பெண் தேவை என்ற மற்றுமொரு விளம்பரமும் பளிச்சிடுகிறது . இப்படி பண்ணுறீங்களே பாஸ் ? என அதுல் கண்ணாவை கேட்டால் , " நமக்கு மேட்ரிமோனியல் இருக்கும்போது நாய்கள் மட்டும் என்ன பாவம் செஞ்சுச்சு ப்ரோ ?" என உரிமைக்குரல் எம்ஜிஆராகும் இவர்தான் மேலே சொன்ன நாய் மேட்ரிமோனல் போஸ்டர் டைரக்டர் . தன் இரண்டரை வயது நாய் மோல்டுவுக்கு பெண் தேடத்தான் இந்த புரட்சி போராட்டம் . போஸ்ட

பசுமை பேச்சாளர்கள் - 5 (எர்வின் மேஜிக் ஜான்ஸன்) -ச.அன்பரசு

படம்
பசுமை பேச்சாளர்கள் - 5 எர்வின் மேஜிக் ஜான்ஸன் ச . அன்பரசு 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள லான்சிங் நகரில் பிறந்த எர்வின் ஜான்ஸன் அமெரிக்காவின் சிறந்த பேஸ்கட்பால் விளையாட்டு வீரராகவும் , மெகா தொழிலதிபராகவும் சாதித்தவர் . ரியல் எஸ்டேட் , ஸ்டார்பக்ஸ் கிளைகளின் ஏஜன்சி , தியேட்டர் என ஏராள தொழில்களில் வென்று காட்டியவர் , எர்வின் ஜான்சன் . ஒன்பது சகோதர சகோதரிகளை கொண்ட ஜான்சனுக்கு பேஸ்கட்பால் என்றால் கொள்ளை இஷ்டம் . காலையில் 7.30 க்கும் பயிற்சியைத் தொடங்கிவிடுவார் . பள்ளி மேட்சுகளில் விறுவிறுவென பாய்ண்ட் எடுக்கும் இவரது வேகத்திற்குத்தான் மேஜிக் என்ற பட்டப்பெயர் . 6 அடி 9 அங்குலத்தில் பல்கலைக்கழக மேட்சுகளில் சூப்பராக பாய்ண்டுகளை எடுத்து , லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணியில் 1979 ஆம் ஆண்டு இணைந்தார் . பல்வேறு நூல்களையும் எழுதியுள்ள ஜான்சன் , டிவிகளில் விளையாட்டு தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் . 1996 ஆம் ஆண்டு மிகச்சிறந்த 50 விளையாட்டு வீரர்களில் ஒருவராக ஜான்ஸன் தேர்வானது  முக்கிய நிகழ்வு . இன்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணியின் த

பசுமை பேச்சாளர்கள் -4: (அலெக்ஸாண்ட்ரா குஸ்டெவ்) ச.அன்பரசு

படம்
பசுமை பேச்சாளர்கள் -4: அலெக்ஸாண்ட்ரா குஸ்டெவ் ச . அன்பரசு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1976 ஆம் ஆண்டு மார்ச் 21 அன்று அவதரித்த அலெக்ஸாண்ட்ரா மார்க்கரீட் கிளமென்டைன் குஸ்டெவ் , திரைப்பட இயக்குநரும் , நேரம் குறித்து வைத்து பல்வேறு இடங்களில் பேசக்கூடிய புகழ்பெற்ற சூழலியல் பேச்சாளரும் கூட . தன் தாத்தா ஜாக்யூஸ் குஸ்டெவ் , தந்தை பிலிப் உள்ளிட்டோரின் வழியில் கடல் சூழல் காக்கும் முயற்சியில் ஈடுபட வசதியாக ஏழு வயதிலேயே துடிப்பாக நீச்சல் கற்றார் அலெக்ஸாண்ட்ரா . 1998 ஆம் ஆண்டு ஜார்ஜ் டவுன் கல்லூரியில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் வென்றவருக்கு , 2016 ஆம் ஆண்டு இவரது பணிகளைப் பாராட்டி தேடி வந்த கௌரவம்தான் இவர் படித்த கல்லூரியின் கௌரவ டாக்டர் பட்டம் .  2000 ஆம் ஆண்டில் தன் குடும்ப தொழிலான அறிவியல் , கல்வி , சட்டம் என்ற வகையில் எர்த்எக்கோ இன்க் என்ற நிறுவனத்தை தனது சகோதரர் பிலிப்புடன் சேர்ந்து தொடங்கினார் .  பின்னர் , 2007 வரையில் கடல் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகராகவும் , அமெரிக்கா , கனடா , மெக்சிகோ பகுதிகளிலுள்ள நீர்நிலைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்ப

பசுமை பேச்சாளர்கள் 3 - (டேவிட் ஆர்ர்) ச.அன்பரசு

படம்
பசுமை பேச்சாளர்கள் 3 - ச . அன்பரசு டேவிட் ஆர்ர் 1944 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லோவா மாநிலத்தில் டெஸ்மாய்னெஸ் நகரில் பிறந்த துடிப்பான சூழலியலாளர் டேவிட் ஆர்ர் . வெஸ்ட்மினிஸ்டர் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்த இவர் மாறும் சூழல்களுக்கேற்ப வாழ்வை அமைத்துக்கொள்வது பற்றியும் , சூழல் காக்கும் தேவைகளைக் குறித்தும் பல்வேறு அற்புத உரைகளை நாடெங்கும் நடத்திவரும் முக்கியமான சூழலியல் வல்லுநரும் கூட . ஓஹியோ மாநிலத்திலுள்ள ஓபெர்லின் கலைக்கல்லூரியில் சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் துறையின் பேராசிரியராக உள்ள டேவிட் , சூழலுக்கு இசைவான திட்டங்களை செயல்படுத்தும் குழுவை வளர்த்தெடுக்கும் முயற்சிகளை செய்துவருகிறார் . பல்வேறு கல்லூரி , பல்கலையில் குறைந்த கார்பன் வெளியீடு கொண்ட திட்டங்களை செயல்படுத்தவும் உதவி வருவது முக்கியமான செயல்பாடு . டேவிட் ஆர்ரின் வழிகாட்டுதலில் 2006 ஆண்டு ஆடம் ஜோசப் லூயிஸ் சென்டர் ஃபார் என்விரோன்மென்டல் ஸ்டடீஸ் என்ற கட்டிடம் முழுக்க சூரிய சக்தியில் இயங்கும்விதமாக வடிவமைக்கப்பட்டது . 4 ஆயிரத்து 600 ச . அடியில் கார்பன் வெளியீட்டை குறைக்கும்விதமாக பயோடீசல் , சூரியமின்சாரம

பசுமை பேச்சாளர்கள் (2) -சர் ரிச்சர்ட் பிரான்ஸன் - ச.அன்பரசு

படம்
பசுமை பேச்சாளர்கள் (2) - ச . அன்பரசு சர் ரிச்சர்ட் பிரான்ஸன் இங்கிலாந்தில் 1950 ஆண்டு ஜூலை 18 அன்று பிளாக்ஹீத் நகரில் பிறந்த 400 நிறுவனங்களை கட்டியாளும் கோடீஸ்வரர் இவர் . வர்ஜின் நிறுவனத்தின் தலைவர் சார்தான் . டிஸ்லெக்சியா குழந்தையான பிரான்ஸனுக்கு பால்யவயது வேதனைகள் சுனாமியாய் தாக்கின . பள்ளிப்படிப்பில் சுமார் மூஞ்சி குமார் . இவன் வளர்ந்தால் ஒன்று ஜெயிலில் இருப்பான் இல்லையென்றால் கோடீஸ்வரனாக மாறியிருப்பான் என அப்போதே பிரான்ஸனின் படித்த பள்ளியின் தலைமையாசிரியர் சொன்னதில் இரண்டாவது நிஜமானதற்கு ஒரே காரணம் பிரான்ஸனின் அயராத கனவை நோக்கிய உழைப்பு .   முதலில் நடத்திய ஸ்டூடன்ட் மேகசின் , அட்டகாச கட்டுரைகள் , நேர்காணல் என அசத்தியதில் பத்திரிகை செம ஹிட்தான் . அடுத்து , பாடல் கேட்கும் ரெக்கார்டுகளை வாங்கி கட்ட ரேட்டில் மற்றவர்களை விட டிஸ்கவுண்டில் விற்று அதிலும் புகழ்பெற்றார் . வர்ஜின் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பிறந்தது இப்படித்தான் . இவரின் சொத்து மதிப்பு 5.2 பில்லியன் . 2004 இல் தொடங்கிய வர்ஜின் யுனைட் என்ஜிஓ மூலம் சூழல் காப்பதற்கான ஏராள முயற்சிகளை முன்னெடுக்கிறார் . தோல்

பசுமை பேச்சாளர்கள் 1 எட் பெக்லே ஜூனியர் -ச.அன்பரசு

படம்
பசுமை பேச்சாளர்கள் 1 - ச . அன்பரசு எட் பெக்லே ஜூனியர் . இயற்கை சூழலை காக்க இரண்டு விஷயங்கள் செய்யலாம் . அரசும் , தனியார் நிறுவனங்களுமே பார்த்துக்கொள்ளும் என நம்புவது . இல்லையென்றால் நாமே செய்வோம் என பொறுப்பை கையிலெடுப்பது . இதில் எட் பெக்லே ஜூனியர் இரண்டாவது ரகம் . அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1949 ஆம் ஆண்டு செப் .16 ஆம் தேதி பிறந்த எட் பெக்லே ஜூர் , பல்வேறு திரைப்படங்களிலும் டிவி தொடர்களிலும் நடித்து களைத்த நடிகரும் , சுற்றுச்சூழல் ஆர்வலரும் கூட . லாஸ் ஏஞ்சல்ஸில் தன் மனைவியோடு சோலார் வீட்டில் வசித்துவரும் பெக்லே , தான் பங்கேற்ற பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு சைக்கிள் மிதித்து வந்து ஆச்சரியம் தருவார் . மாற்றங்களை பிறரிடம் எதிர்பார்க்கும் உலகில் மாற்றங்களை தன்னிடமிருந்தே தொடங்குவது என செயல்படும் பெக்லே ஆச்சரியமானவர்தானே ! 1970 ஆம் ஆண்டு முதன்முதலாக   எலக்ட்ரிக் வாகனத்தை தன் பயணத்திற்கு தேர்ந்தெடுத்தார் பெக்லே . வீகன் உணவுப்பழக்கத்தை கடைபிடிக்கும் இவர் , 1585 சதுர அடியில் சோலார் ஆற்றலில் இயங்கும் பசுமை வீட்டை கட்டி பலரையும் வாயை பிளக்க வைத்

நீங்கள் காலேஜ் ட்ராப் அவுட்டா? - ராஜா திரையன்

படம்
நீங்கள் காலேஜ் ட்ராப் அவுட்டா ? - ராஜா திரையன் நீ காலேஜை விட்டு நின்னுட்டியா ? லைஃப் போச்சு , எப்படி உருப்பட போறீயோ என காலேஜை கைவிட்ட லோக்கல் ஐன்ஸ்டீன்களான நம் பயலுகளை கரிச்சு கொட்டாத அப்பன் ஆத்தா உலகிலேயே கிடையாது . சரி இதில் யார் பெஸ்ட் ? வீட்டுக்கு நல்லபிள்ளையாய் நடந்துகொண்டு நார்த்தங்காய் ஊறுகாயோடு தயிர்சாதம் எடுத்துக்கொண்டு போய் டிஸ்டிங்ஷனோடு டிகிரி வாங்கி , ஐடி கம்பெனிக்கு வேலைக்கு போய்க்கொண்டு இருப்பவர்களா , அல்லது காலேஜை விட்டு நின்று மனதிற்கு பிடித்த ஸ்டார்ட் அப் ஐடியாக்களில் உலகையே வியக்க வைத்துக்கொண்டிருப்பவர்களா ? ஜாலி அலசல் பார்ப்போம் கமான் லெட்ஸ் கோ ... அமெரிக்காவில் 11,745 தலைவர்களை ஆராய்ந்தபோது , 94% விகிதத்தினர் காலேஜூக்கு அட்டனன்ஸ் போட்டுள்ளனர் . இதில் 50% நபர்கள் எலைட் பள்ளியில் படித்துள்ளனர் என்பது முக்கியம் . ஆனால் காலேஜில் கட்டிய காசுக்கு 80% முக்கிய தலைவர்கள் சரியாக சென்றுள்ளனர் . இதில் 11 ஆயிரம் பேர் கடும் வறுமையில் இருந்தனர் என்று சொல்லும் நிலைமையிலெல்லாம் இல்லை . ஆனால் எதிர்காலத்தில் பள்ளிகள் மொழிப்பயிற்சியை தாண்டிய ஒன்றை தருவதற்காகவெல்ல

ஏன்? எப்படி? எதற்கு? - தொகுப்பு ரோனி ப்ரௌன்

படம்
ஏன் ? எப்படி ? எதற்கு ? -Mr. ரோனி 1366x 768 என்பது லேப்டாப் கம்ப்யூட்டரின் ரிசல்யூஷனாக இருக்க காரணம் என்ன ? திரையளவு 4:3 அளவில் இருந்தபோது 640 x 480, 800 x 600, 1024 x 768 என்ற ரிசல்யூஷன் படங்களையே வீடியோ கிராபிக்ஸ் கார்டு ஏற்றது . ஆனால் படங்களின் தெளிவுக்கு நீங்கள் மெனக்கெட்டால் 1280 x 1024, 1600 x 1200 அளவுள்ள கணினி திரைகளுக்கு தனி திறன்கொண்ட வீடியோ கார்டு அவசியம் . எல்சிடி டிவிகளின் வரவால் 1024x768 என்ற துல்லியத்தில் படங்கள் அழகாக இருந்ததோடு இதற்கான தொகையும் குறைவு . இதன் அளவை சிறிது உயர்த்தினால் 16:9 என திரையளவு மாறும் . கணினி மெல்ல வீடியோ பார்க்கவும் பயன்பட்டபோது அளவை மாற்றி , 1366x 768 என்பது இன்று பொதுவான கணினித் திரையளவாக மாறியதற்கு அப்டேட்டாகிய ஹார்ட்வேரின் பங்கும் முக்கியக்காரணம் . தற்போதையை அனைத்து ஹெச்டி டிவிக்களிலும் 1080 பிக்சல் என்பது பொதுவான ஒன்று . கூகுள் மேப்ஸ் ட்ராஃபிக்கை கண்டுபிடிப்பது எப்படி ? நீங்கள் ஆர்வமாக வேலைக்கு பீக் ஹவரின் முன்பே கிளம்ப ஆயத்தமாகிவிட்டீர்கள் . கூகுள் மேப்ஸை திறந்தால் , எந்த ரூட்டில் சென்றால் எவ்வளவு நேரம்
படம்
தற்கொலையைத் தூண்டும் வசந்தகாலம் ! - கா . சி . வின்சென்ட் தற்கொலைகள் மன அழுத்தத்தால் நடைபெறுகிறது என்பதால் தற்கொலைக்கு முயற்சிப்பவரை ஜெயிலுக்குள் தள்ளவேண்டாம் என இந்திய அரசு அண்மையில் சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது . தற்கொலை மனநிலைக்கு சிகிச்சைகள் தேவை என்பது சரிதான் . ஆனால் அதற்கு என்ன காரணம் , குறிப்பிட்ட பருவகாலங்களில் அவை அதிகம் நிகழ்கிறதா என்பதைக் குறித்த அலசலே இக்கட்டுரை . 1800 ஆண்டுகளிலிருந்து செய்யப்பட்டு வரும் ஆய்வுகளில் வசந்தகாலத்தில் தற்கொலை மரணங்கள் அதிகரித்தும் , குளிர்காலத்தில் குறைந்தும் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது . " பனிக்காலத்தை அடிப்படையாக கொண்டால் , வசந்தகாலத்தில் நிகழும் தற்கொலைகளின் அளவு 20%-60% வரை " என பீதியூட்டுகிறார் ஸ்வீடனின் உப்சலா பல்கலைக்கழக உளவியல் பேராசிரியரான   ஃபோடிஸ் பாப்படோபௌலோஸ் . பருவநிலைக்கும் தற்கொலை மனநிலையை தூண்டுவதில் ஏதேனும் பங்கிருக்குமா ? மூளையில் மனநிலையை தீர்மானிக்கும் நியூரோட்ரான்ஸ்மிட்டர்களில் தோன்றும் செரடோனின் அளவில் ஏற்படும் மாறுபாடும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம் . பனிக்காலத்தை விட வெயில்காலத்தில்

ஊழலில் தவிக்கும் தம்மகயா!

படம்
ஊழலில் தவிக்கும் தம்மகயா ! - ச . அன்பரசு கடந்த ஒரு மாதமாக தாய்லாந்தின் அந்த புத்த மடாலயத்தைப் பற்றி பேசாத நாளிதழ்களே இல்லை . இன்று கோயிலைச்சுற்றி 3 ஆயிரம் போலீஸ்காரர்கள் நின்றுகொண்டிருக்கும் அளவு  பரபரப்பு ஏற்படுத்தியதற்கு காரணம் அந்த மடாலய குருதான் . வாட்டிகன் நகரைவிட 8 மடங்கும் , கம்போடியாவின் அங்கோர்வாட் கோயிலைவிட 2 மடங்கும் பெரிய மடாலயம்தான் தாய்லாந்திலுள்ள வாட் தம்மகயா . மடாலயம் ஏலியன்களின் வாகன வடிவில் திகைப்பை ஏற்படுத்தும் பிரமாண்டம் . உலகிலுள்ள 30 நாடுகளிலிருந்து வந்த புத்த துறவிகள் இங்கு தங்கியுள்ளனர் . 15 அடுக்கிலான இக்கட்டிடத்தை புத்த மதத்தின் ஐ . நா சபை என்று இதன் பக்தர்கள் அழைக்கின்றனர் . புத்தமதம் தொடர்பான விஷயங்களைக் கவனிக்க 20 மூத்த துறவிகளை உறுப்பினர்களாக கொண்ட குழுவே தம்மகயாவிற்கு உண்டு .    ராணுவத்தின் கிடுக்கிப்பிடி !   தாய்லாந்தில் 2014 மே 22 அன்று ராயல் தாய் ஃபோர்ஸ் எனும் ஆயுதப்படை அதன் தலைவர் ஜெனரல் பிரயுட் சான் ஓ சான் தலைமையில் கலகத்தை தொடங்கியது . அதன்பிறகு நாடாளுமன்றம் முடக்கப்பட்டு என்சிபிஓ (National Council for Peace and Or