இடுகைகள்

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை சாத்தியமா?-

படம்
              இவற்றின் முக்கியமான பணி . எதிர்ப்பாலினத்தைக் கண்டுபிடித்து உறவு கொள்வதுதான் . அதற்கு ஏற்ப தன்னை தயாராக வைத்திருக்கிறது . பெண்ணின் உடல் மாத த்திற்கு ஒரு கருமுட்டையை தயாரிக்கிறது என்றால் , ஆணின் உடலில் இதற்கு ஏற்ப நொடிக்கு 1500 விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன . இதில் உடலுறவின்போது எது வெல்கிறதோ அது கருமுட்டையை அடைகிறது . பிற விந்தணுக்கள் கருமுட்டையில் உள்ள அமிலத்தில் அழிகின்றன . கருத்தடைக்கு ஆணுறைகளைப் பயன்படுத்தினால் கூட அவற்றில் 15 சதவீதம் சரியாக வேலை செய்வது இல்லை . இதன் அர்த்தம் , கரு உண்டாகிவிடுகிறது என்பதுதான் . கருத்தடை என்று வரும்போது அதில் பெண்களுக்கான பொருட்களே அதிகம் , மாத்திரை , கருவிகள் , க்ரீம்கள் என ஏராளம் உ்ண்டு . பெண்களால் கருவை தடுக்க முடியும் என்ற சொன்னால் ஆண்களால் முடியாதா ? அவர்களுக்கும் கருவை தடுக்கும் மாத்திரைகளை தயாரிப்பதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது . 1960 இல் பெண்களின் ஹார்மோன் கருத்தடை மாத்திரை உருவாக்கப்பட்டது . அதன் பெயர் ஈனோவிட் . இந்த மாத்திரை உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது . அமெரிக்கா , இந்த மாத்திரையை அங்

பாலாஜி வேபர்ஸ் - குஜராத் நிறுவனத்தின் பிடிவாத சாதனை!

படம்
  குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் பாலாஜி வேபர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டுவருகிறது. 1982 இல் தொடங்கிய நிறுவனம் 2014ஆம் ஆண்டு ஆயிரம் கோடி என்ற அளவில் லாபத்தை அடைந்துள்ளது. நூடுல்ஸ் மற்றும் சிப்ஸ்களை பல்வேறு பிராண்டுகளில் தயாரித்து ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விற்று வருகிறது. ராஜஸ்தான் , மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முதலிடத்திலும் பிற மாநிலங்களில் டாப் 3 நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது.  இந்த நிறுவனத்தை 4 ஆயிரம் கோடிக்கு பன்னாட்டு நிறுவனம் வாங்குவதற்கு முயன்றாலும் அதை விற்பதற்கு  இதன் முதலாளி விரும்பவில்லை. இப்போது 2 ஆயிரம் கோடியை தாண்டிய வணிகத்தைப் பெற்று வளர்ந்துவருகிறது.  பாலாஜி வேபர்ஸ் நிறுவனம், உருளைக்கிழங்கு சிப்ஸ்களை பல்வேறு பிராண்டுகளில் விற்றுவருகிறது. நிறுவனத்தின் வணிகத்தை இப்போது அடுத்த தலைமுறையினர் பார்த்துக்கொள்கிறார்கள். குடும்ப வணிகமாக இருப்பதால் எப்படியோ தாக்குப்படித்து பெப்சிகோ, ஐடிசி, ஹால்திராம் ஆகிய நிறுவனங்களை சமாளித்து வருகிறது.  சந்துபாய் தனது சகோதர ர்களோடு தொடங்கிய நிறுவனம் இது. இப்போது அவரின் மகன்கள் தொழில் இ

பேகாசஸ் எப்படி போனை உளவு பார்க்கிறது?

படம்
  ஆம்னெஸ்டி மற்றும் பிரெஞ்சு ஊடக நிறுவனமான ஃபார்பிடன் ஸ்டோரிஸ் எனும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து பேகாசஸ் என்ற உளவு பார்க்கும் மென்பொருளைப் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு முதல் இந்த மென்பொருள் மூலம் 50 ஆயிரம் போன் நம்பர்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் 300 எண்கள் இந்தியர்களுடையது. இதில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், எதிர்கட்சிக்காரர்கள் ஆகியோரும் உண்டு.  50 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் பேகாசஸ் மென்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 189 பத்திரிக்கையாளர்களின் ஸ்மார்ட்போனில் மென்பொருள் பதியப்பட்டு உளவு பார்க்கப்பட்டுள்ளது.  உலகம் முழுக்க 600 அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மென்பொருளின் வலையில்  உள்ளனர்.  பேகாசஸ் மென்பொருளில் மாட்டிய ஆயிரம் போன் நம்பர்கள் வெளியே அறியப்பட்டுள்ளன.  சவுதி அரேபியாவில் 2018ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷ்டோகி, அவரது காதலி, மனைவி ஆகியோரின் போன்களும் கூட கண்காணிப்பில் இருந்த தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.  85 மனித உரிமை போராட்டக்காரர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.  இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ குழுமம், உலகம் முழுக்க உள

அனைத்து போக்குவரத்து வசதிகளுக்கும் ஒரே சூப்பர் ஆப்!- அசத்தும் கொச்சி - நியூஸ் ஜங்ஷன்

படம்
நியூஸ் ஜங்க்ஷன் 21.7.2021 அப்படியா! புதிய வசதி!  இன்ஸ்டாகிராமில் வன்முறை, ஆபாசம் ஆகியவற்றை தவிர்க்கும்படியான வசதிகளை நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. யாராவது ஒருவர் வெளியிடும் செய்தி, சங்கடத்தை ஏற்படுத்தும்படி இருந்தால் அதனை எக்ஸ்ப்ளோரர் எனும் டேப் மூலம் மறைத்துவிடலாம். இதன்மூலம் நாம் பார்க்க விரும்பும், விரும்பாத செய்திகளை எளிதாக தேர்ந்தெடுக்க முடியும். ”சிலர் வெளியிடும் செய்திகள் ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை அவர்கள் பார்க்காமல் தவிர்த்துக்கொள்ள முடியும். இப்படி செய்திகள் வெளியிடுவது எங்கள் விதிகளுக்கு புறம்பானது இல்லை” என இன்ஸ்டாகிராம் நிறுவனம் கூறியுள்ளது. https://techcrunch.com/2021/07/20/instagram-sensitive-content-controls-explore/ சாதனை! தொழிலதிபர் ஜெப் பெசோஸின் ஷெப்பர்ட் ராக்கெட் வானில் பறக்கும் காட்சி! இடம் அமெரிக்கா, டெக்சாஸ் அடச்சே! ஆக்சிஜன் மரணம்! இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால்  நோயாளிகள் இறந்ததாக எந்த தகவல்களும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. டில்லி, ஹரியாணா, கோவா, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கோவிட் -19 பாதிப்பு கூடுதலாக இருந்தது. இங்கு

அடையாளம் தெரியாத கடவுள் காப்பாற்றும் கிராஃபிட்டி எனும் புரட்சிகர கலை!

படம்
இங்கிலாந்தில் பாங்ஸி என்ற கலைஞர் அரசியல் கிராஃபிட்டிகளை வரைந்தே புகழ்பெற்றவர். அவரை பாங்ஸி என்று சொல்லி அழைத்தாலும் கூட அவரது முகத்தை யாருமே பார்த்தது இல்லை. அமெரிக்காவில் தான் கிராஃபிட்டி முதலில் தொடங்கியது. அரசு, தனியார் என்றெல்லாம் கிடையாது. உடனே ஸ்ப்ரே பெயின்டை குலுக்கிக்கொண்டு வரையத்தொடங்கிவிடுவதுதான் கிராஃபிட்டி கலைஞர்களின் ஸ்டைல்.  சட்டவிரோதம் என்று சொல்லி காவல்துறை அடிக்கடி துரத்தினாலும் அதற்கெல்லாம் கிராஃபிட்டி கலைஞர்கள் பயப்படுவதில்லை. ஆரஞ்ச் தெலுங்குபடத்தில் ராம்சரண் கிராஃபிட்டி வரைந்துகொண்டு கல்லூரியில் படிப்பவராக நடித்திருப்பார். இந்த கிராஃபிட்டி என்ற வார்த்தை கிரேக்கத்தின் கிராபீன் என்ற வார்தையிலிருந்து உருவானது. இப்படி வரைபவர்கள் சிலர் மட்டும்தான் பெயரை எழுதுவார்கள். பலர் ஓவியத்தை வேகமாக வரைந்துவிட்டு இடத்தை காலி செய்துவிடுவார்கள்.  இப்போது பல்வேறு முரல் கலைஞர்களும் கூட்டமாக சுற்றுவது இன்ஸ்டாவில்தான். சுவர்களில் வரைவதும் பெரிதாக மவுசு குறையாமல் சென்றுகொண்டிருக்கிறது.  இங்கிலாந்தின் பிரிஸ்டலில்தான் பாங்ஸி வசிக்கிறார். கிராஃபிட்டி கலைஞர் என்றால் பலருக்கும் இவர்தான் நினைவுக

திரைப்படமோ, வெப் தொடரோ மக்களின் மனதோடு இணையவேண்டும்! - இர்பான் அக்தர்

படம்
  இர்பான் அக்தர் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் ஓடிடி தளத்தில் தொடர்கள் வெற்றி பெறும் அளவுக்கு திரைப்படங்கள் வெற்றி பெறுவதில்லையே ஏன்? திரைப்படமோ, வெப் தொடரோ எதுவாக இருந்தாலும் அது மக்களின் மனதோடு இணைய வேண்டும். அதுதான் முக்கியம். அப்படி இணையாதபோது திரைப்படமும், தொடரும் வெற்றி பெறுவது கடினம். நாம் வாழும் காலத்தில் நடக்கும் சம்பவங்களை திரைப்படமாக பதிவு செய்வது முக்கியம். அப்போதுதான் அது மக்களை கவரும்.  ராக்கி, க்ரீட், மேரி கோம் என படங்கள் குத்துச்சண்டைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வெற்றி பெறுகின்றன. இப்படி படங்கள் உருவாக்கப்பட என்ன காரணம்? இதுபோன்ற படங்கள் வெற்றியாளராக உள்ள குத்துச்சண்டை வீரன் தோல்வியுறுவது, தோல்வியுற்றவன் வெற்றி பெறுவது என  கதை அமைக்கப்படும். இது படங்களை பார்ப்பவர்களுக்கு ஊக்கமாக அமையும். குத்துச்சண்டை வீர ர்கள் பலருமே சாதாரண பின்னணி கொண்ட குடும்பங்களில் இருந்து வருபவர்கள்தான். தங்கள் உடலை தங்கள் வாழ்க்கைக்காக எப்படி வருத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் இதில் முக்கியமான அம்சம்.  பெருந்தொற்று காலத்தில் சினிமாதுறை எப்படி இயங்கியது? பதினெட்டு மாதங்களில்  சினிமாதுறை நிற

உத்தரப்பிரதேசத்தில் மக்கள்தொகை கொள்கை 2021-2030 ஏற்படுத்தும் விளைவுகள்!

படம்
 உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் பழைய ஜெயில் ரோட்டில் சட்ட கமிஷன் அலுவலகம் அமைந்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.என்.மிட்டல் தலைமையிலான மூன்று பேர் மக்கள்தொகை கட்டுப்பாட்டு கொள்கையை உருவாக்கியுள்ளனர். இதனை இணையத்தில் மாநில அரசு வெளியிட்டுள்ளது.  மாநில அரசின் புதிய மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டப்படி, அரசின் கொள்கையை மீறுபவர்களுக்கு அரசின் எந்த சலுகைகளும் கிடைக்காது. உள்ளூர் தேர்தலிலும் அவர்கள் நிற்க முடியாது. அரசு வேலைக்குக் கூட மூன்று குழந்தைகள் கொண்டவர்களை தடுக்கிறது புதிய சட்டம்.  மாற்றுத்திறனாளிகளை வைத்துள்ள பெற்றோர், ட்வின்ஸ்களுக்கு புதிய சட்டத்தில் சலுகைகள் உண்டு.  தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அரசின் கொள்கைகளை கடைப்பிடித்தால் தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றில் கட்டண சலுகை உண்டு. பி.எப் விஷயத்திலும் கூட உபகாரம் உண்டு.  அரசு ஊழியர்கள் அரசின் குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டை கடைபிடிக்காதபோது பதவி உயர்வு, பிஎஃப் ஆகிய விஷயங்கள் கிடைக்காது. அரசின் வீடுகள் ஒதுக்குவதிலும் சிக்கல் ஏற்படும்.  குடும்ப அட்டையில் நான்கு பேருக்கு மட்டுமே இடமுண்டு.  மக்கள் தொகை கட்டுப்பாடு என யோகி கூறியபோதே உ.பியில் வா

20 ஆயிரம் ரூபாயில் இபைக் தயாரித்துள்ள பாஸ்கரன்!

படம்
  நியூஸ் ஜங்க்ஷன்  20.7.2021 அபாரம்! இபைக்! தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்தவர், பாஸ்கரன். இவர் இயந்திர பொறியியல் படித்துள்ளவர், 20 ஆயிரத்தில் இ பைக்கை உருவாக்கியுள்ளார். ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ. தூரம் செல்லும் வாகனம் இது. ஓய்வுநேரத்தில் பழைய சைக்கிள் ஒன்றை வாங்கி, இ பைக்கிற்கு ஏற்பட 18 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை மாற்றினார். ”30 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த இபைக்கில் சார்ஜ் தீர்ந்துவிட்டாலும் பெடல் மூலம் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளலாம்” என்றார் பாஸ்கரன்.  https://www.newindianexpress.com/good-news/2021/jul/19/as-fuel-prices-rise-man-spends-rs-20k-makes-e-bike-that-goes-up-to-50-km-2332149.html போராட்டம்!  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல மாக்ரன் அறிவித்த நோய்த்தொற்று கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராடும் மக்கள்! இடம் பிரான்ஸ், பாரீஸ் ஆஹா! கண்டுபிடிப்பு! கேரளத்தைச் சேர்ந்த இந்திரியம் பயாலஜிஸ்ட் நிறுவனம், பாம்பின் விஷத்தை கண்டுபிடிக்கும் சென்சார் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. 52 நச்சுப்பாம்புக்களைக் கொண்டுள்ள இந்தியாவில் பாம்பு தீண்டுவதால், ஆண்டுதோறும் தோராயமாக 50 ஆயிரம் மரணங்களு

காமத்துப்பாலை எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என அடையாளம் காட்டும் பாட்காஸ்ட்!

படம்
  ஜியோ சாவன் ஆப்பைத் திறந்து பாஸ்வேர்டு பஞ்சாயத்துகளை முடித்துவிட்டால், அடுத்து பாட்காஸ்டை திறங்கள். அதில்தான் வள்ளுவம் பேசும் காமம் என்ற பாட்காஸ்ட் உள்ளது. கட்டுமானக்கலைஞரான ஆதவன் சுந்தரமூர்த்தி திருக்குறளில் உள்ள காமத்துப்பால் குறள்களை விளக்கிப் பேசுகிறார்.  ஆரம்பமே அதிரடிதான். தன்னை பாட்காஸ்ட் தொடரில் ஆய்த எழுத்து என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். பொதுவாக போர், வன்முறை, கோபம் என பலவற்றையும் பேசும் நாம்  அன்பைப் பேசும் இடங்களில் மௌனமே சாதிக்கிறோம். பள்ளிகளில் இதனை பலரும் நினைவுகூரமுடியும். ஆண், பெண் உடல் வேறுபாடுகளை அறிவியலில் நூலில் பார்த்து கூச்சப்படுவது, தமிழில் காமத்துப்பாலை ஜஸ்ட் லைக் தட் மனப்பாடம் செய்துவிடுங்கள் என சொல்லிவிட்டு தமிழ் ஆசிரியர், ஆசிரியை நகர்ந்து விடுவதன் காரணம் என்னவென்று இன்றுவரை யாருக்கும் புரியாது.  பவா செல்லத்துரை மூலம் ஊக்கம் பெற்று பாட்காஸ்டை உருவாக்கியுள்ள ஆதவன், பகிர்ந்துகொள்ளும் முதல் எபிசோட் விஷயங்களும் இதுதான். சிம்பிளான இன்ட்ரோவாக அமைகிறது. டிசம்பர் 2020இல் வள்ளுவம் பேசும் காமத்தைத் தொடங்கியிருக்கிறார். காமத்துப்பாலில் காதல், காமம், அன்பு, பிரிவு,

மதிய உணவுத்திட்டம் பெண் குழந்தைகளை வலுவாக்கியுள்ளது! - புதிய ஆராய்ச்சி அறிக்கை

படம்
  தமிழ்நாட்டில் மதிய உணவுத்திட்டம் முன்னாள் முதல்வர் காமராஜரால் அமலாகி, பின்னர் எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா, கருணாநிதி என அடுத்தடுத்து வந்த முதல்வர்களால் விரிவுபடுத்தப்பட்டது. 1993 முதல் 2016ஆம் ஆண்டு வரை வெளியான தகவல்களை வைத்து நேச்சர் கம்யூனிகேஷன் என்ற இதழில் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.  அரசின் மதிய உணவுத்திட்டம் மூலம் குழந்தைகளும், தாய்மார்களும் வயதுக்கேற்ற உடல், மன வளர்ச்சி பெற்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 23 ஆண்டுகளாக நடைபெற்ற மதிய உணவுத்திட்டம் பற்றிய ஆராய்ச்சிகள் இதை வெளிக்காட்டியுள்ளன. 2005ஆம் ஆண்டு மதிய உணவுத்திட்டம் நிறைய மாற்றங்களைப் பெற்றன. இதன் விளைவாக பெண் குழந்தைகளின் ஊட்டச்சத்து பாதிப்பு குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  இந்தியாவில் மூன்றில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி பேசும் உணவுத்துறை வல்லுநர்கள், குழந்தை கருவாக தாயின் வயிற்றில் இருக்கும்போது, ஊட்டச்சத்து பற்றாக்குறையை சரிசெய்வதற்கான முயற்சிகளை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். 13-32 சதவீதம் வரையில் குழந்தைகளின் உயரம், எடை ஆகியவை சீராக இருக்க மதிய உண

போராட்டக்காரர்களை உளவுபார்க்கும் பீகாசஸ்

படம்
  இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், போராட்டக்காரர்கள் என பல்வேறு நபர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதாக பீகாசஸ் எனும் ஸ்பைவேரின் மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.  இந்த ஸ்பைவேரை இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான என்எஸ்ஓ தயாரித்துள்ளது.  பல்வேறு நாட்டு அரசுகள் இந்த ஸ்பைவேரை தீவிரவாத த்தை தடுக்க பயன்படுத்துகின்றன என்று என்எஸ்ஓ கூறியுள்ளது.  2019ஆம் ஆண்டு வாட்ஸ் அப் நிறுவனம், தனது பயனர்கள் மட்டுமன்றி ஃபேஸ்புக் பயனர்களும் பீகாசஸ் ஸ்பைவேரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று  கூறியது.  எப்படி இன்ஸ்டால் செய்கிறார்கள்? அதுவும் புதுமையான முறையில்தான். எளிமையாக மிஸ்டுகால் ஒன்றைக் கொடுத்து அதன் வழியாக ஸ்பைவேரை ஆப்பிள், ஆண்ட்ராய்டு போன்களில் இறக்குகின்றனர். மிஸ்டுகாலுக்கு ஒருவர் தொடர்பு கொண்டாலும் சரி இல்லையென்றாலும் சரி பீகாசஸ் உள்ளே வந்துவிடும்.  பீகாசஸ் போனில் உள்ளதே அதனை பயன்படுத்துபவர்களுக்கு தெரியாது என்பது இதன் சிறப்பம்சம். தொடர்புகள், குறுஞ்செய்திகள், கேமரா, மைக்ரோபோன் என அனைத்து தகவல்களையும் பதிவு செய்து தனது முதலாளிக்கு விசுவாசமாக ஸ்பைவேர் அனுப்பிவிடுகிறது.  மூலம