இடுகைகள்

ஓராண்டு இடைவெளியில் சமூகத்தை கற்ற சிறுவனின் கல்வி! - தெருக்களே பள்ளிக்கூடம் - ராகுல் அல்வரிஸ்

படம்
  ராகுல் அல்வரிஸ் - தெருக்களே பள்ளிக்கூடம் தெருக்களே பள்ளிக்கூடம் ராகுல் அல்வரிஸ் தமிழில் - சுஷில்குமார்  தன்னறம் நூல்வெளி ரூ.200 பக்கங்கள் 203 பொதுவான கல்விமுறையில் நாம் படித்து நிறுவனத்தில் வேலைக்கு செல்லலாம். ஆனால் இதில் நாம் கற்பவை பெரும்பாலும் உதவாது. அவை கல்வி சான்றிதழில் இருக்கும். நேரடியாக வாழ்க்கையில் அவை பெரிய பங்காற்றாது. இப்போது கல்லூரி படிப்பவர்கள் பெரும்பாலானோர்க்கு அவை கல்யாணப் பத்திரிக்கையில் குறிப்பிட உதவுகிறது. பெருமைக்கு மட்டுமே.  இதைத்தாண்டி நடைமுறை வாழ்க்கையைக் கற்க நாம் வெகுதூரம் செல்லவேண்டியிருக்கிறது. பள்ளி, கல்லூரி என மூடிய வகுப்புகளைத் தாண்டி சாளரம் திறந்தால்தான் சூரிய ஒளி, காற்று என வெளிப்புற சூழல்களை உணரமுடியும்.  கோவாவைச் சேர்ந்த ராகுலும் அப்படித்தான் தனது படிப்பை அமைத்துக்கொண்டார். ஜூன் 1995 முதல் ஜூன் 1996 என பள்ளிப்படிப்பில் சிறு இடைவெளி எடுத்துக்கொண்டார். இந்த இடைவெளியில் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென என்பதை தெருக்களே பள்ளிக்கூடம் நூல் விவரிக்கிறது.  ராகுல் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் தனது உறவினர்கள், நண்பர்கள் போல கல்லூரியில் சேரவில்லை. அதில்

இருமல் கூடுகிறது! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  pixabay அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? சமூக வலைத்தளங்கள் இல்லாமல் வாழ்வது பற்றி கணினி வல்லுநர் ஜாரோன் லேனியர் சில நூல்களை எழுதியிருக்கிறார். இதனை எனது சீட்டுக்கு அருகில் உட்கார்ந்து என்னை கிண்டல் செய்துகொண்டிருக்கும்  ஓவியர் குழந்தை முருகன் கூறினார். தரவிறக்கிய இந்த நூல்களை விரைவில் படிக்க வேண்டும்.  சளி வந்தால் மூச்சுக்குழலில் உராயும்படி ஆக்ரோஷமாக மாறிவிடுகிறது. வேறுவழியின்றி அதனை வேகமாக வெளியேற்ற டாபர் ஹனிடஸ் வாங்கி குடித்தேன். நூறுமில்லி மருந்து ரூ.99க்கு விற்கிறார்கள். அலுவலகத்தில் வேலை பெரிதாக இல்லை. திங்கட்கிழமை இதழுக்கான வேலையை மட்டும் செய்தால் போதும். எழுத்தாளர் ஷோபா டே எழுதிய கட்டுரை நூலை படித்து வருகிறேன். தினசரி பத்து பக்கம் என்ற கணக்கில்தான் படிக்க முடிகிறது. இப்போதைக்கு அவ்வளவுதான்.  நன்றி சந்திப்போம் அன்பரசு  2.11.2021

மயிலாப்பூர் டைம்ஸ் - பாரம் சுமந்த திருவண்ணாமலைப் பயணம்!

படம்
  பாரம் ஏந்திய பயணம்! சில நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை சென்றிருந்தேன். அங்குதான் குருவி என்ற  அமைப்பில் முன்னர் கிடைத்த நட்புகள் இருந்தன். முன்னர் வேலை செய்யும்போது நிறைய பேர் நட்பில் இருந்தாலும் என்னால் அதில் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது தினேஷ் என்பவரைத்தான். அதாவது ஒருவரைத்தான்.  இவர் தொழில்முறையில் புகைப்படக்காரர். இப்போது மெல்ல வீடியோக்களையும் பதிவு செய்துவருகிறார். தினேஷ் அண்ணாவிடம் பேசுவது தொடர்புகொள்வது தவம் செய்யும் முனிவரிடம் அனுமதி கேட்டு சந்திப்பது போலத்தான். போன் செய்தால் பெரும்பாலும் எடுக்கமாட்டார். அப்படி எடுக்கும்போதும் நிறைய வேலைகள் இருப்பதாக சொல்லிவிடுவார். அவுட்கோயிங்கிற்கு அவசியமில்லை. இன்கம்மிற்கு ரெஸ்பான்ஸ் இல்லை என காமெடி நடிகர் பிரம்மானந்தம் ஒரு படத்தில் சொல்லுவார். அதே கேரக்டர்தான் அவர்.  அப்புறம் எப்படி அவரைப் போய் பார்ப்பது? சரியான பதில் கிடைக்காததால்இதனால் சில வாரங்களாக திருவண்ணாமலை செல்லும் திட்டம் தடங்கலாகி நின்றுகொண்டே இருந்தது.  சென்னையில் விடியல் முழக்க முதல் அமைச்சர் எப்போது என்ன சொல்லுவார் என்றே பீதியாக பலரும் வீட்டில் வேலை செய்கிறோம் என்று சொல்லி

2020 நம்பிக்கை இளைஞர்கள் விருது! - த.சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  வலி உணர்த்தும் நிஜம்! 1.5.2021 அன்புள்ள நண்பர் சீனிவாசனுக்கு, வணக்கம். பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன். விகடனில் வரும் அண்டன் பிரகாஷின் தொடரைப் படித்து வருகிறேன். நிறைய விஷயங்களை அவர் இதில் எளிமையாக விளக்குகிறார். இந்தியாவைப் பற்றிய செய்திகள் பலவும் மோசமான எதிர்மறை செய்திகளாகவே இருக்கிறது. இதற்கு நாட்டை ஆள்பவர்களைத்தான் கோபித்துக்கொள்ள வேண்டும். வார இதழ்கள், நாளிதழ்கள் என்ன செய்ய முடியும்?   வலி நிவாரணி பற்றிய நூல் ஒன்றை இணையத்தில் தரவிறக்கினேன். கொரிய தொடர் ஒன்றில் வலி நிவாரண மருத்துவம் பற்றி அறிந்தேன். அதற்கென தனி துறையே இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மனதை நெகிழ்ச்சியாக்கிக் கொண்டு தளர்வாக்கிக் கொள்ள அதிகளவு மருந்துகளைப் பயன்படுத்துபவர்களைப் பற்றி நூல் பேசுகிறது. இதனைத் தடுப்பது எப்படி? இப்படி மருந்துகளை சாப்பிடுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை விவரிக்கிறார்கள். மருத்துவத்துறை சார்ந்த அடிப்படை அறிவையேனும் நூல்களின் வழியே எட்ட முடியும் என நினைக்கிறேன்.  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி அவரது செயலர் சஞ்சயா பாரு எழுதிய நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன். எழுபது பக்க

சுபாஷ் சந்திரபோஸை எதற்காக நினைவுகூர வேண்டும்?- 125ஆவது பிறந்த தின ஆண்டு

படம்
  2022ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் பிறந்து 125  ஆண்டுகள் ஆகிறது. தேசியத் தலைவராக இவரது பெயர்களை தமிழ்நாட்டில் நிறைய குழந்தைகளுக்கு வைத்துள்ளனர். ஆனால் இதேபோல தமிழ்நாட்டு தலைவர்கள் பெயரை வட இந்தியர்கள் வைத்துள்ளார்களா என்றால் மிகவும் குறைவு. இதைப்பற்றி இன்று (20.1.2022) கூட தமிழ் இந்துவில் ஆசை சிறப்பான கட்டுரை எழுதியுள்ளார்.  நாம் வட இந்தியர்கள் அளவுக்கு மத, ஜாதி வெறியர்கள் கிடையாது என்பதால் கொல்கத்தாக்காரரான போஸ் பற்றி எழுதலாம். எழுதியதை படிக்கலாம். நமது மனப்பாங்கு அத்தகையது.  1897ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி சுபாஷ் சந்திரபோஸ், ஒடிஷாவின் கட்டாக்கில் பிறந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் போராடிய தலைவர்களில் முக்கியமானவர். இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பிலும் அங்கம் வகித்தார். சோசலிச கொள்கைகளுக்கு ஏற்ப காங்கிரஸ் அமைப்பில் இருந்து பிரிந்து தனி அமைப்பை உருவாக்கினார்.  1918ஆம் ஆண்டு கொல்கத்தாவில் த த்துவப் படிப்பில் பட்டம் பெற்றார். ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்தான் இதற்காக படித்தார். 1916ஆம் ஆண்டு இந்திய கலாசாரம் பற்றி ஆங்கில பேராசிரியர் தவறாக ஏதோ பேசியிருக்கிறார். பிறர் ஒதுங்கிப் போனாலும் போஸ் அ

நூலகத்திற்கு செலுத்தும் நன்றிக்கடன்! - த.சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
pixabay நூலகத்திற்கு செலுத்தும் நன்றிக்கடன்!  5.4.2021   அன்பு நண்பர் சீனிவாசனுக்கு, வணக்கம். நலமா? நான் தற்போது ஈரோட்டுக்கு வந்துவிட்டேன். ஜூன் இறுதியில் நாளிதழ் வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். அதுவரையில் நான் ஊரில் இருக்க திட்டமிட்டுள்ளேன். நீங்கள் கொடுத்த அடோமிக் ஹேபிட்ஸ் என்ற நூலை இங்கே படிக்க எடுத்து வந்துவிட்டேன். அதில் பதிமூன்று பக்கங்கள்தான் படித்துள்ளேன். சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு வரும் பேருந்து பயணம் பெரும் களைப்பை உடலில் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து சேலம், சேலத்திலிருந்து ஈரோடு, ஈரோட்டிலிருந்து கரூர் என மூன்று பேருந்துகளில் ஏறி எட்டு மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் பயணிக்க வேண்டும்.  இப்படி பாடுபட்டு முக்கி முனகி வீட்டுக்கு வந்தால் இரவில் மின்சாரம் இல்லை. அதுவும் எந்த நேரத்தில் தெரியுமா? தட்டில் சோற்றைப் போட்டு சாப்பிடும் நேரத்தில்....  நூல்களை நூலகத்திற்கு தரும் உங்களது பழக்கத்தைப் பின்பற்றி, எங்கள் ஊர் நூலகத்திற்கு தர ஒன்பது நூல்களை எடுத்து வைத்துள்ளேன். இவை அனைத்துமே புத்தக திருவிழாவில் வாங்கியவைதான்.  தேர்தல் முடிந்தபிறகு நூல்களை கொண்டு சென்று கொடுப்பேன். நூல

தெரு நாய்களைப் பராமரிக்கும் மருந்துகடை உரிமையாளர்!

படம்
  ஜெய்ப்பூரைச் சேர்ந்த வீரென் சர்மா பற்றி உங்களுக்குத் தெரியுமா? இவர் கால்நடை, செல்லப்பிராணிகளுக்காக மருந்துக்கடை நடத்துகிறார். அதையும்கூட இவர் தொடங்கவில்லை. சர்மாவின் தாத்தா 1957இல் தொடங்கியதை அப்படியே பின்தொடர்கிறார். அப்போது எதற்கு நாம் இவரைப் பற்றி பேசுகிறோம்?  தெருவில் உள்ள நாய்க்குட்டிகளை காப்பாற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறார். அதற்காகத்தான். 2000இல் நாய்க்குட்டிகளை வணிக ரீதியாக விற்கத் தொடங்கினார். முதலில் தெருவில் இருந்த நான்கு குட்டிகளை வீட்டுக்கு எடுத்து வந்தவர், உள்ளூரில் உள்ளவர்களுக்கு வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளுங்கள் என்ற சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். பிறகு பார்த்தால், அவரது மருந்துக்கடை முழுக்க நாய்களை தத்து எடுக்க நிறைய பேர் வந்துவிட்டனர். இப்படித்தான் தெருவில் இருக்கும் நாய்க்குட்டிகளை வளர்க்க நிறைய பேர்  உருவாகியிருக்கிறார்கள். இந்த வகையில் 2500 நாய்க்குட்டிகளுக்கு புதிய வளர்ப்பு பெற்றோர் கிடைத்துள்ளனர்.  பொதுமுடக்க காலத்தில் வாரம்தோறும் சனியன்று நூறு நாய்களுக்கு உணவளித்திருக்கிறார். இந்த எண்ணிக்கை மெல்ல அதிகரித்து 1200 நாய்களுக்கு சென்றிருக்கிறது. நா

2021 இல் இப்படி சொன்னார்கள்! - அரசியல், கிரிக்கெட், தொழில், சமூக வலைத்தளம், மருத்துவம்

படம்
  பிப்ரவரி 1  இப்போது விராட் அணியின் தலைவராக இருக்கிறார். நான் துணைக்கேப்டன். நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் பின்புற இருக்கையில் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கிறேன். ரகானே இந்திய கிரிக்கெட் வீரர் மார்ச் 8 இருபது இந்திய நிறுவனங்கள் மட்டுமே நூறுகோடிக்கும் மேல் மதிப்பு கொண்டவையாக உள்ளன. இவர்கள் எப்படி பன்னாட்டு நிறுவனங்களை எதிர்கொண்டு போராட முடியும்? அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்? விஜய் சேகர் சர்மா நிறுவனர், இயக்குநர் பேடிஎம் மார்ச் 29 அடையாள அரசியல் இங்கே எப்போதும் உள்ளது. இதில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதே முக்கியம். மேற்கு வங்கத்தில் தலித்துகள் பங்களிப்பு முக்கியமானது. அவர்களே இம்முறை முக்கியமானவர்கள்.  பிரசாந்த் கிஷோர் அரசியல் நிலைப்பாட்டாளர் ஏப்ரல் 5 மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மிக மிக கடினம். இதற்கான கொள்கைகளை வகுத்து கொரோனா விதிகளை மக்கள் பின்பற்றாதபோது என்ன செய்வது என திட்டம் வகுப்பது முக்கியம் ரந்தீப் குலேரிலா எய்ம்ஸ் இயக்குநர் ஏப்ரல் 26 அனைத்து கட்சிகளும் தவறு செய்பவர்கள்தான். நாங்கள் நம்பிக்கையாக உள்ளோம். தீதியின் மீதுள்ள நம

ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசி எறிந்த முகமது அலி! - அமெரிக்காவை எதிர்த்த குத்துச்சண்டை வீரர் முகமது அலி

படம்
  முகமது அலி பட்டாம்பூச்சி போல உடல் லாவகம், தேனீ போன்ற வலி என்ற வாசகத்தை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதை முகமது அலியின் குத்துச்சண்டையைப் பார்த்து பலரும் சொன்னது.  அமெரிக்காவின் கென்டக்கியில் காசியஸ்  மார்செல்லஸ் கிளே ஜூனியர் என்ற பெயரில் முகமது அலி பிறந்தார். 1942ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று பிறந்தவர் இந்த குத்துச்சண்டை வீரர்.  தனது 12ஆவது வயதில் உள்ளூர் விழா ஒன்றில் சைக்கிளைத் தொலைத்துவிட்டார். அப்போது உள்ளூர் போலீஸ்காரர் காசியஸை சந்தித்தபோது, அவன் திருடனை கண்டால் அடித்து பிரித்துவிடுவேன் என ஆக்ரோஷமான தொனியில் இருப்பதைப் பார்த்தார். சண்டை போடுவது சரி. அதற்கு முறையான பயிற்சி வேண்டுமே என்று சொல்லி அவனை குத்துச்சண்டை பயிற்சிக்கு வரச்செய்தார். உள்ளூரில் இருந்த ஜிம்மில் மெல்ல பயிற்சி செய்யத் தொடங்கினான் காசியஸ் . அப்புறம் என்ன உள்ளூரில் சிறந்த குத்துச்சண்டை வீரராக மாறத் தொடங்கினான் காசியஸ்.  1960ஆம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டார் காசியஸ். தனது பதினெட்டு வயதிலேயே தங்கப்பதக்கம் வென்றுவிட்டார். பதக்க பெருமையுடன் லூயிஸ்வில்லேவுக்கு வந்தார். ஆனால் அமெரிக்கர்கள் அவரை ஆப்பிரிக்க அமெ

உறவுகளை சமாளித்து குற்றங்களை துப்புதுலக்கும் சாம்பு! - துப்பறியும் சாம்பு - 2 - தேவன்

படம்
  துப்பறியும் சாம்பு - 2 தேவன்  அல்லயன்ஸ்  சாம்புடன் எழுத்தாளர் தேவன் - நன்றி - இந்து தமிழ் துப்பறியும் சாம்பு பற்றிய குறிப்பை முன்னதாகவே எழுதியிருக்கிறோம். இதனால் நேரடியாக கதைக்குள் போய்விடலாம். முட்டாள் சாம்பு, துப்பறியும் சாம்புவாக மாறி நிறைய வழக்குகளை கண்டுபிடிக்கிறார். கூடவே இதன் மூலம் தனக்கான இனத்தில் வேம்பு என்ற பெண்ணையும் கரம் பிடிக்கிறார். அவள் மூலம் ட்ரேட்மார்க் மூக்கு கொண்ட சுந்து என்ற ஆண் பிள்ளை பிறக்கிறது. இந்த இரண்டாம் பாகத்தில் சாம்புவுக்கு சுப்பு என்ற பெண் குழந்தை பிறக்கிறது.  அதுதான் கதையா என அயர்ச்சியாக கூடாது. இம்முறை சாம்பு, இங்கிலாந்து சென்று கோமாளித்தனங்கள் செய்து அடிவாங்கியும் கூட புகழ்பெற்று வருவதோடு கடைசி அத்தியாயம் முடிவுக்கு வருகிறது. அதில்தான் செய்தியாக சுப்பு என்ற பெண்பிள்ளை பிறப்பதாக கூறப்படுகிறது. வேம்புவும் கும்பகோணத்திலிருந்து சென்னை வந்து சேர்கிறாள்.  இந்த நாவலில் பெரும்பாலும் கதைகள் எப்படி அமையும் என்றால், சாம்பு ஏதேனும் வழக்கை கோபாலன் சொல்லி எடுத்துக்கொள்வார். பிறகு தன் மனம்போக்கில் அதனை ஆராய்ந்து அடிவாங்கி பிறகு கோபாலன் மூலம் அதிலிருந்து மீண்டு வருவ

தனது நாவல் பாத்திரங்களை ஒரே நாவலில் வலம் வரச்செய்த பாலபாரதி! - கடிதங்கள் - த.சீனிவாசன்

படம்
    10 திடீரென நேர்ந்த விபத்து ! 26.2.2021 அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு , வணக்கம் . நலமா ? அறிவியல் நேர்காணல்களை எழுதிக் கொண்டு இருக்கிறேன் . இதனை ஓராண்டுக்கு முன்னரே எழுதினேன் . நான் வேலை செய்யும் தினசரிக்காக எழுதினேன் . ஆனால் அங்கு பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை . தற்போது தனி நூலாக மாற்றி வெளியிட நினைத்துள்ளேன் . புத்தக காட்சியில் காமிக்ஸ் நூல்களை தேடிப்பார்க்க வேண்டும் . இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் அங்கு செல்வேன் என்று நினைக்கிறேன் . எனது ஆசான் குங்குமம் ஆசிரியர் கே . என் . சிவராமன் அவர்களை சந்திக்க நினைத்தேன் . ஆனால் அவர் ஏதோ விபத்தில் சிக்கி கையில் காயத்துடன் இருந்தார் . அவரது அம்மாவின் நலம் பற்றிக் கேட்டபோது அடிபட்ட தகவலை சொன்னார் . வருத்தமாக இருந்தது . டிஸ்கவரி இந்தியா நூலை மெல்லத்தான் படிக்கக முடிகிறது . நடப்பு ஆண்டில் உடல் மனம் உள்ளே போன்ற இயல்பிலான உளவியல் நூலை எழுதி தொகுக்க வேண்டும் . நான் எழுதிய மருத்துவம் சார்ந்த நூல்களில் பரவாயில்லை என்று எனக்குத் தோன்றிய நூல் அதுவே . 2021 ஆம் ஆண்டில் நூலை செம்மைப்பட