இடுகைகள்

கோமாளி மேடை எக்ஸ்க்ளூசிவ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விடை தெரியாத 5 மர்மங்கள்(தொகுப்பு:விக்டர் காமெஸி )

படம்
விடை தெரியாத 5 மர்மங்கள்(தொகுப்பு:விக்டர் காமெஸி ) பல்வேறு புலனாய்வாளர்கள் , காவல்துறையினர் , மீட்புப்படை என அனைவரையும் மறக்கமுடியாமல் அலைய வைத்து துப்பு துலக்கச்செய்தாலும் விடை தெரியாமல் பாடாய்படுத்திய 4 மர்மச் சம்பவங்களின் காக்டெய்ல் தொகுப்பு இதோ உங்களுக்காக .... டியாடோவ் மர்மத்திற்கு விடை ! 1959 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யாவின் உரால் மலைப்பகுதியில் மலையேற்றம் செய்வதற்காக வந்த குழு ஒன்று 1 மாதமாகியும் நாடு திரும்பவில்லை என்ற தகவல் அறிந்த மீட்புப்படை சம்பவ இடத்திற்கு சென்றனர் . மைனஸ் 24 டிகிரி குளிர் மலைப்பகுதியில் அவர்களது தங்கியிருந்த கூடாரத்தை கண்டுபிடித்தபோது , கீழ்பகுதியில் வெளியே சென்றதற்கான கத்தி கீறல்கள் இருந்தன .  அக்குழு தங்கியிருந்த கூடாரத்தினுள் எட்டிப்பார்த்தபோது  அவர்கள் பயன்படுத்திய உடைகள் மற்றும் ஷூக்கள் , கேமரா , கம்பளி உடைகள் இருந்தன மேலும் நிறைய காலடித்தடங்கள் இருந்தன .  இதில் வெற்று காலடித்தடங்களும் அடக்கம் . தீவிர தேடுதல் வேட்டையினால் மே மாதம் பனி உருகிய பிறகு 9 பேரின் உடல்களும் (7 ஆண்கள் , 2 பெண்கள் ) மீட்கப்பட்டன . அவர்களின் இறப்ப

தெரிஞ்சுக்கோங்க! - தொகுப்பு: முகமது மத்தின்

படம்
தெரிஞ்சுக்கோங்க ! - தொகுப்பு: முகமது மத்தின் விண்வெளியில் அதற்கான விசேஷ உடை இல்லாமல் நடமாட முடியுமா ? நிச்சயம் முடியாது . பெரும் வலி வேதனையோடு இறப்பை சந்திக்க வேண்டியிருக்கும் . ஏன் இப்படி ? முதல் காரணம் காற்று பற்றாக்குறை . நீங்கள் உயிர்பிழைக்க அணுவளவு காற்றும் விண்வெளியில் இருக்காது . பின் எதை சுவாசிப்பீர்கள் ? மற்ற பிரச்சினைகளை விட முதலில் உங்களை சிரமத்திற்குள்ளாக்குவது காற்று இல்லாமைதான் . அடுத்த சிக்கல் சோடாவை திறக்கும்போது எழுமே குமிழ்கள் அதுபோல நமது உடலின் ரத்தத்தில் வாயுக்குமிழ்கள் பணியாரம் அளவு தோலில் படபடவென உருவாகத் தொடங்கும் வேதனையான நிகழ்வு தொடங்கும் . இது விண்வெளியில் உள்ள அழுத்தத்தினால் ஏற்படும் . விண்வெளியில் அணியும் விசேஷ ஆடை நமது உடலின் தட்பவெப்பத்தை நிலைப்படுத்தும் தன்மை கொண்டது . விண்வெளி ஓடம் இருந்தால் மேற்கண்ட ஆபத்திலிருந்து நீங்கள் தப்பிக்கலாம் . இல்லையெனில் சாமி சத்தியமாக மோட்சம் நிச்சயம் .   பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவது போல ஆண்களுக்கு ஏற்படுவது உண்டா ?  பெண்களுக்கு ஏற்படுவது போல மாதாமாதம் ஏற்படும் அந்த மூன்று நாட்கள் சமா

இது மனித டிஎன்ஏ பேக்! -தொகுப்பு: குருஜி

படம்
டிஎன்ஏ கோட் இது மனித டிஎன்ஏ பேக் ! -தொகுப்பு: குருஜி முதலை , பாம்பு உள்ளிட்ட உயிரினங்களை கொன்று அதனை உடைகள் மற்றும் பெல்ட்டுகளாக வடிவமைத்து அணிவதற்கு உலகெங்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது . மேலும் வணிகத்திற்கான உயிரினங்களை அழிப்பது இயற்கை சூழலுக்கு மீள முடியாத இழப்பை ஏற்படுத்துகிறது . இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் ஆசிரியரின் டிஎன்ஏ மூலம் பேக் ஒன்றை தயாரித்து அதிர வைத்துள்ளார் . மனித தோலில் பைகளை தயாரிப்பது சரியா தவறா என்பது தாண்டி இது எப்படி சாத்தியம் பார்ப்போமா ? 1854  ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்ட்ரல் செயின்ட் மார்டின் எனும் கலைக்கல்லூரியில் ஆடை வடிவமைப்புத்துறையில் புகழ்பெற்ற ஆசிரியர்களில் ஒருவரான   அலெக்‌ஸாண்டர் மெக்வீன் , 2000 ஆம் ஆண்டில் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் . இவரது மாணவி டினா கோர்ஜாங்க் , மெக்வீனுக்கு அஞ்சலி செலுத்தி பொக்கே வைத்துவிட்டு சென்றுவிடவில்லை . அவரை உலகமே நினைவில் வைத்திருக்கும்படி ஒரு காரியத்தை தில்லாக செய்திருக்கிறார் . மெக்வீனின் தலைமுடியை அவரது உறவினர்களிடம் பெற்று டிஎன்ஏ மூலம் அவரின் தோல் உள்ளிட்டவற்றை ஆய்வகத்தில்

மருந்து கொண்டு செல்லும் மோலிகுலர் எந்திரன்கள்-.-கா.சி.வின்சென்ட்.

படம்
மருந்து கொண்டு செல்லும் மோலிகுலர் எந்திரன்கள்- . -கா.சி.வின்சென்ட். இன்றைய உலகில் ட்ரோன் விமானம் மூலம் பீட்ஸாக்கள் , சாப்பாடு விநியோகிப்பது , பாதுகாப்பு கண்காணிப்பு , ஹோட்டல்களில் உபசரிப்பு வரை பல இடங்களிலும் எந்திரன்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன . பிறகு மருத்துவத்தில் மட்டும் எதற்கு  தயக்கம் என துணிந்து களமிறங்கிவிட்டனர் ஜப்பான் விஞ்ஞானிகள் . அறிவியல் வளர்ச்சியே இனி எந்திரன்கள் சார்ந்துதான் போல . ஜப்பானின் ஹோக்கைடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சிறிய வகை ( மோலிகுலர் ) எந்திரன்களை இயற்கையான பொருட்களின் மூலம் உருவாக்கியுள்ளனர் . இதனை மூலக்கூறு எந்திரன்கள் என்று கூறலாம் . இதனைப் பயன்படுத்தி உடலின் பல்வேறு இடங்களுக்கு தேவையான மருந்தை எடுத்துச்செல்ல பயன்படுத்தலாம் என தீர்மானித்துள்ளனர் . ஹோக்கைடோ பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ள இந்த மூலக்கூறு எந்திரன்கள் படிகம் போல நீல நிறத்தில் நகர்ந்து செல்கின்றன . நீரில் எளிதில் இவை மிதந்துசெல்லக்கூடிய திறன் வாய்ந்தவையாகும் . ஒளி மூலம் இதனை எளிதில் கட்டுப்படுத்தவு