இடுகைகள்

சுதந்திரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேரு செய்த பெரும் தவறு இதுதான்! - அரவிந்த் பனகரியா, பொருளாதார பேராசிரியர், கொலம்பியா

படம்
                இந்தியா வல்லரசாக மாறுவதை தடுத்த நேரு இந்தியா தனது 75 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது . ஆனால் தனது நூறாவது ஆண்டைத் தொடும்போது வல்லரசாக வளர்ச்சி பெற்ற நாடாக மாறியிருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது . சுதந்திரம் பெற்று ஒரு நாடு 75 ஆண்டுகள் கடந்து வந்திருக்கிறது என்பது பெரிய விஷயம் . பிற நாடுகள் இதே காலகட்டத்தில் இந்தியாவை விட மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளனர் . ஆனால் அதில் பின்தங்கிவிட்டோம் . பொருளாதார ரீதியாக இந்தியா பெரும்தோல்வியை தழுவியுள்ளது . இதற்கு முக்கியமான காரணம் , சுதந்திரம் பெற்றபிறகு ஆட்சிக்கு வந்த பிரதமரான நேருவும் அவர் கடைபிடித்த சோசலிச கொள்கையும்தான் . பலருக்கும் கேளவிகள் மனதில் தோன்றலாம் . அவர் கடைபிடித்த கொள்கையில் என்ன பிரச்னை என்று ? அவர் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார் . கனரக பெரும் தொழிற்சாலைகளை கட்டினார் . இவற்றில் கிடைக்கும் லாபம் அரசுக்கு வரும் . இது தனியாரின் சொத்துக்களைப் போல அரசு சொத்தாக மாறும் என நினைத்தார் . இந்த தொழிற்சாலைகளுக்கான முதலீடு அதிகம் . நேருவின் சோசலிசம் , மார்க்சிசத்தின் புரட்சிகர கூறுகளை த

மேல் முறையீட்டிற்கு உயர் நீதிமன்றம்தான் செல்லவேண்டும் என சொல்லும் மத்திய அரசின் புதிய சீர்திருத்தம்! - ட்ரிப்பியூனல் அமைப்பு கலைக்கப்படுகிறது

படம்
                காணாமல் போகும் ட்ரிப்யூனல் மத்திய அரசு , தற்போது புதிய சீர்திருத்தமாக திரைப்படங்களை மேல் முறையீட்டிற்கு அனுப்பும் ட்ரிப்பியூனலை கலைத்துள்ளது . இதனால் சர்ச்சைக்குரிய மையப்பொருளைக் கொண்ட படங்கள் உயர்நீதிமன்றத்தில் தங்கள் படங்களை திரையிடுவதற்கான அனுமதியை பெற வேண்டியிருக்கும் . 1983 ஆம் ஆண்டு திரைப்பட ஒளிப்பதிவு சட்டம் 1952 படி ட்ரிப்பியூனல் அமைக்கப்பட்டது . இதில் தலைவர் உட்பட ஐந்து பேர் இருப்பார்கள் . இவர்களை உறுப்பினர்களாக கருதலாம் . கூடுதலாக ஒளிபரப்புத்துறை அமைச்சக செயலரும் இருப்பார் . மத்திய தணிக்கை வாரியத்தின் கருத்திற்கு எதிராக திரைப்பட்ட தயாரிப்பாளர்கள் ட்ரிப்பியூனில் தங்கள் படங்களின் திருத்தங்களுக்கு எதிராக முறையிட்டு நீதி பெறலாம் . மத்திய தணிக்கை வாரியத்தில் தலைவர் தவிர்த்து 23 உறுப்பினர்கள் இருப்பார்கள் . இவர்கள் படங்களைப் பார்த்து திருத்தங்களை கூறி அதற்கான பல்வேறு சான்றிதழ்களை வழங்குவார்கள் . யு , யு / ஏ , ஏ என பல்வேறு வித சான்றிதழ்களை வழங்குவார்கள் . ஏ சான்றிதழ் பெற்ற படங்களை டிவியில் ஒளிபரப்புவது கடினம் . பொதுமக்களின் பார்வையிடலுக்கு வரு

நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு பயனர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய அறிவுறுத்துகிறோம்! - கூ ஆப் துணை நிறுவனர் மயங்க்

படம்
          மயங்க் பைடாவட்கா கூ , சமூக வலைத்தளம் , துணை நிறுவனர் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை விதிகளை எப்படி பார்க்கிறீர்கள் ? இன்று சமூக வலைத்தளங்களில் செய்திகளை பதிவிடுபவர்கள் முக்மூடிகளை அணிந்துகொண்டுதான் செயல்படுகிறார்கள் . இவர்கள் நேரடியாக தங்கள் கருத்துகளை வெளியிட முன்வருவதில்லை . இதனால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுகின்றன . போலிசெய்திகள் , வதந்திகள் அதிகம் வருகின்றன . இதனை தீர்க்க அரசு புதிய விதிகளை உருவாக்கியுள்ளது . இதன்மூலம் யார் செய்தியை உருவாக்குகிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடிக்கமுடியும் .. அரசு இந்த வகையில் வெறுப்பு பேச்சு , போலிச்செய்திகளை கட்டுப்படுத்த முடியும் என்ற வகையில் அரசின் கட்டுப்பாடுகளை நான் ஆதரிக்கிறேன் . உள்நாட்டு ஆப்கள் மூலம் வெளிநாட்டு சமூகவலைத்தள ஆப்களை சமாளிக்க முடியும் என நினைக்கிறீர்களா ? இந்தியாவில் இதுபோன்ற ஆப்களுக்கான சந்தை உள்ளது . அதனைப் பயன்படுத்திக்கொள்ள இந்திய நிறுவனங்கள் சிறிதே முயன்றால் போதுமானது . ரெட்பஸ் என்ற நிறுவனம் இந்திய நிறுவனம்தான் , இணைய வழியில் பஸ்களை புக் செய்யும் பெரும் நிறுவ

பொறியாளரின் சுதந்திர வேட்கையை உடைத்து நொறுக்கும் மத, அரசியல் அமைப்புகளின் கோர முகம்! ரோஸ் ஐலேண்ட் 2020

படம்
                ரோஸ் ஐலேண்ட் சுதந்திரமாக வாழ நினைக்கும் பொறியாளரின் கனவை அரசியலும் மதமும் இணைந்து எப்படி அழிக்கின்றன என்பதுதான் கதை.  இத்தாலியில் வாழும் பொறியாளர் ஜார்ஜியா ரோஸ். இவருக்கு தனித்துவமாக வேலைகளை செய்வது பிடிக்கும். எனவே, பிற பிராண்டு வண்டிகளை வாங்கி நம்பர் பிளேட் வைத்து ஓட்டாமல் தானே மோட்டார் காரை வடிவமைத்து அதனை ஓட்டிச்செல்கிறார். இவரது கனவு பெரியது. ஆனால் அதனை உலகம் புரிந்துகொள்வதில்லை. ஏன்  வழக்குரைஞராக இருக்கும் அவரது காதலி கூட புரிந்துகொள்வதில்லை. ஆனால் அவர் அதற்காகவெல்லாம் கவலைப்படவில்லை. அப்படியா ஃபைன் என கடந்துபோய்விடுகிறார். தான் சுதந்திரமாக இருப்பதோடு பிறரும் அப்படி வாழும்படி ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என முடிவு செய்கிறார். இதற்கு காதலி  கோபத்தில் திட்டும் ஒரு வாக்கியம்தான் காரணமாக உள்ளது. நீ வேறு உலகத்தில் வாழ்கிறாய். நானும் நீயும் ஒன்றாக வாழ முடியாது. நீ ஏதாவது சாதிக்கணும்னா அதை உன்னுடைய உலகில் உருவாக்கிக்கொள் என திட்டிவிட்டு சென்று செல்கிறாள் கேப்ரியெல்லா. அந்த வாக்கியம் ரோஸை அதிகம் யோசிக்க வைக்கிறது. எனவே, உடனே தனது தொழிலதிபர் நண்பனைத் தொடர்புகொள்கிறான். அதி

இந்தியாவைப் போன்ற மத சுதந்திரம் பாக்.கில் கிடையாது!

படம்
ஆரிஃப் ஆஜாகியா , மனித உரிமைகள் செயற்பாட்டாளர் . பாகிஸ்தானின் சட்டங்கள் மற்றும் ராணுவத்தை கடுமையாக விமர்சித்து வந்தவர் ஆரிஃப் . தற்போது வெளிநாட்டில் வசிப்பவர் , தாய்நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீற்ல்களைக் கண்டித்துப் பேசி வருகிறார் . பாகிஸ்தானில் நடைபெறும் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசி வருகிறீர்கள் . அங்கு நடைபெறும் முக்கியமான பிரச்னையாக எதனைக் கூறுவீர்கள் ? அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றிய புகார்கள் , செய்திகள் நம்பிக்கை அளிக்கும்படி இல்லை . ராணுவத்தின் சொல்படி நடப்பவர்தான் அங்கு பிரதமராக முடியும் . பாக் . ராணுவம் சிந்து , பலுசிஸ்தான் , கைபர் பக்துன்காவா ஆகிய பகுதிகளில் கடுமையான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியுள்ளனர் . அங்கு சுதந்திரமாக பேசுவது கூட குற்றமாக கருதப்படுகிறது . குழந்தை தொழிலாளர்கள் , கொத்தடிமை முறை , பாலியல் தொழில் , குழந்தைகளின் மீதான வன்முறை ஆகியவை பாக்கில் சாதாரணமாக நடைபெற்று வருகிறது . மசூதிகளிலும் மதராசாக்களிலும் இதுபோன்ற அநிதீகள் நடந்தாலும் , அவை இன்னும் கண்டுகொள்ளப்படவிலைல . பாக்கில் சிறுபான்மையினர் மீது மனித உரிமை மீறல்கள் ந

திருமணம் ஏற்படுத்திய அதிர்ச்சி! - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
pixabay 10 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நலமாக   இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் இங்கு மருந்துகளை விடாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். வருமானம் பற்றிய கவலை எப்போதும் இருக்கிறது. செய்யும் வேலைக்கு மதிப்பான சம்பளம் கிடைக்கவில்லை என்று படுகிறது. திருமணம் பற்றி கேட்டிருந்தீர்கள். அது பற்றி எனக்கு எந்த யோசனையும், சிந்தனையும் இல்லை. நீங்கள் யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். சகோதரரின் திருமணம் நடந்தவிதமே அதிர்ச்சியாக இருந்தது. பெரும்பாலான செலவுகளை நாமே ஏற்றுக்கொண்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. உங்களுக்கு சகோதரரிடம் நிறைய பாசம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் எப்படி யோசிப்பார் என்பதை உங்களால் தீர்மானிக்க முடியவில்லை என்பதை நான் நம்பவில்லை. இந்த வகையில் ஒப்பிட்டால் எனக்கு சில நண்பர்களே உள்ளனர். சாதி சார்ந்த உறவுகளை நான் பெரிதாக நினைப்பதில்லை. சகோதரருக்கு நீங்கள் உதவுவது பற்றி எனக்கெந்த ஆட்சேபனையும் கிடையாது. அது உங்கள் விருப்பம். சுதந்திரமும் கூட. நன்றி! ச.அன்பரசு 7.5.16

கண்காணிப்பை தகர்க்கும் போராட்டக்காரர்கள்! - சீனா எரிச்சல்

படம்
கண்காணிக்கும் விளக்கு கம்பம்! ஹாங்காங்கில் போராட்டக்கார ர்கள் செய்யும் குறிப்பிட்ட காரியம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நாம் சாதாரணமாக கவனமின்றி எரிச்சலில் என்ன செய்வோம்? ஜல்லிக்கற்களை எடுத்து சோடியம் வேபர் விளக்கில் விட்டெறிந்து அதனை உடைப்போம். இது ஒரு ஜாலியான பொழுதுபோக்கு. பின்னர் அப்படி அடித்த ஆட்களே அதனை தவறு என்று மாறுவது வழக்கம். அதேபோல அங்கு சீன அரசு அமைத்துள்ள மின்விளக்கு தூண்களை ஹாங்காங் குடிமகன்கள் அடித்து உடைத்து சாய்க்கின்றனர். அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் போடுகின்றனர். எதற்கு? காரணம், அது சீனாவின் கண்காணிப்பு கோபுரமாக உள்ளது. சீன அரசு அதனை போக்குவரத்தை கண்காணிக்கும் கம்பம் என்று கூறுகிறது. மின்விளக்கு கம்பம்தான், குப்பைகளைப் போடுபவர்களை கண்காணிக்கிறது. மேலும் தட்பவெப்பநிலை, 5ஜி இணைய இணைப்பு, ப்ளூடூத் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டு இயங்குகிறது. ஸ்மார்ட் சிட்டி வசதிகளில் இதுவும் ஒரு அங்கம். இதைத்தான் ஹாங்காங்க் புரட்சியாளர்கள் அடித்து உடைக்கின்றனர். அவர்களின் கூட்டம் அதற்கு அப்ளாஸ் எழுப்புகின்றனர். இதன் விலை 34.75 மில்லியன் டாலர்கள். அதாவது ஒரு க

விடுதலை, சுதந்திரம் பற்றிய உளவியல் குறிப்பு

படம்
Add caption மரணவீட்டின் குறிப்புகள் தாஸ்தாயெவ்ஸ்கி அலெக்சாண்டர் பெட்ரோவிச் என்ற பிரபு ஒருவரின் கதை. அவர் தன் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ரஷ்யாவின் சைபீரியாவில் மிக பாதுகாப்பான சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு அவருக்கு கிடைக்கும் அனுபவங்கள், சந்திக்கும் மனிதர்கள்தான் கதை. இதில் முக்கியமானதாக தாஸ்தாயெவ்ஸ்கி விவாதிப்பது, விடுதலை, சுதந்திரம், சிறையின் தன்மை ஆகியவை பற்றித்தான். முதலிலேயே சிறை வாழ்வை அலெக்சாந்தர் அனுபவிக்கத் தொடங்கி விடுகிறார். ராணுவம் மற்றும் பிற மக்கள் செய்யும் குற்றங்களுக்கும் அச்சிறைவாழ்வுதான் கிடைத்தது. ஆனால் இருபிரிவாக பிரித்து சிறைதண்டனை கைதிகள் வாழ்ந்து வருகின்றனர். நன்னடத்தை அடிப்படையில் கைதிகளைப் பிரித்து அவர்களுக்கென தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரும் கைதிதான். நான் எனும் அடையாளத்தில் வரும் கைதிகள் மெல்ல ஒடுங்கி சிறையின் சுவர்களுக்குள் இளமையைத் தொலைத்து வெளிவரும்போது சமூகத்தில் வாழும் தன்மையை தொலைத்தவர்களாக மாறிவிடுவதை அசத்தலாக எழுதி உள்ளார் தாஸ்தாயெவ்ஸ்கி. முழுக்க உளவியல்ரீதியான தன்மையில் சென்று டக்கென கதை முடிந்துவிடுகிறது. அ

இணையத்தின் வயது 30!

படம்
wired/tim berners lee இணையத்தின் வயது 30  இணையம் தோன்றி முப்பதாண்டுகள் ஆகிறது. இதன் பிரம்மா டிம் பெர்னர்ஸ் லீ. இன்று உலகின் பாதி வாழ்வது இணையத்தில்தான். இதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இணையம் என்பது பலரும் கண்டுகொள்ளாத பலருக்கும் அவர்களது தரப்பைச் சொல்வதற்கான வாய்ப்பாக உள்ளது. அதேசமயம் இதனை சுயநலனாக பயன்படுத்தி லாபம் பார்க்கும் நெட்வொர்க்கும் வளர்ந்து வருகிறது. இது நிச்சயம் இணையத்தின் தோல்வி அல்ல என்பது நிச்சயம். இணையத்தை சீரழிப்பது இவைதான். இணையத்தில் தீவிரவாதம், வெறுப்பு பரப்பும் பதிவுகள், க்ரைம் செயல்பாடுகள், அரசு பயங்கரவாதம் சைபரிலும் பரவத் தொடங்கிவிட்டது. விளம்பர வருவாய்க்காக பயனர்களின் அந்தரங்கத்தை உளவறியும்  வாய்ப்பை பல்வேறு நிறுவனங்களும் செய்யத் தயங்குவதில்லை. இலவசம் என்று கூறி சேவையை பயன்படுத்த அழைக்கும் நிறுவனங்கள் இதையே செய்து காசு பார்க்கின்றன. இணையம் மாசுபடாமல் இருக்க அதனைப் பாதுகாப்பது நமது கடமை. அதன் சுதந்திரம், தனித்துவத்தை பாதுகாப்பது நமது கையில் உள்ளது.