இடுகைகள்

மத்திய அரசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாநில அரசுகள்தான் ஆயுர்வேத மருத்துவத்தின் புனித தன்மையை கெடுத்துவிட்டன! - தியோபுஜாரி, இந்திய மருத்துவத்துறை

படம்
            மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவைசிகிச்சை செய்யலாம் என்று கூறியுள்ளது . இதனை அலோபதி மருத்துவர்கள் எதிர்க்கி்ன்றனர் . கூடுதலாக ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யமுடியுமா என மக்களும் குழப்பத்தில் உள்ளனர் . இதுபற்றி மத்திய அரசின் இந்திய மருத்துவமுறைகள் கௌன்சில் தலைவர் வைத் ஜெயந்த் தியோபுஜாரி கூறுகிறார் . அறுவை சிகிச்சை பற்றிய மத்தி அரசின் புதிய அறிவிப்பு எதற்கு ? 1979 ஆம் ஆண்டு ஆயுர்வேத படிப்பின் முதுகலைதொடர்பாக விதிமுறைகள் உருவாக்கப்பட்டன . 2016 ஆம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கான தெளிவிற்காக கூறப்பட்டது . விதிமுறைகள் முன்னமே அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருபவைதான் . நாடெங்கும் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சை நடைமுறைப்படுபப்பட்டால் அதனை எப்படி கண்காணிப்பீர்கள் ? நாங்கள் கடுமையாக விதிகளை வகுத்துள்ளோம் . கல்லூரியில் குறிப்பிட்ட தர அளவுகோல் கடைப்பிடிக்கப்படாதபோது நாங்கள் அவர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை . கடந்த ஆண்டு நாங்கள் இம்முறையில் 106 கல்லூரிகளுக்கு இளநிலைப்படிப்பிற்கான அனுமதியை வழங்கவில்லை . அறுவைசிகிச்சையாள

காஷ்மீரில் அனைவரும் நிலம் வாங்க முடியுமா? புதிய சட்டங்கள் என்னென்ன சொல்லுகின்றன?

படம்
                காஷ்மீரில் மத்திய அரசு 12 விதிகளை மாற்றியுள்ளது . புதிதாக 14 திருத்தங்களை விதிகளில் கொண்டுவந்துள்ளது . இதெல்லாம் எதற்கு காஷ்மீரை விற்பதற்குத்தான் . அதாவது அங்குள்ள நிலங்களை தொழிற்சாலைகளுக்கும் , விவசாயம் செய்யவேண்டி விரும்புபவர்களும் இந்த சட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் . இது உண்மையா ? காஷ்மீரில் உள்ள விவசாய நிலங்களை விவசாயிகள் தவிர பிறர் வாங்க முடியாது . விவசாய நிலங்களை வாங்குபவர்கள் விவசாயம் செய்வதற்குத்தான் பயன்படுத்த வேண்டும் . காஷ்மீர் இப்போது யூனியன் பிரதேசம் என்பதால் புதிய விதிகளை கவனித்துத்தான் ஒருவர் நிலங்களை வாங்க முடியும் . ஆனால் இந்த விதியை அரசு தூக்கியெறிந்து தேவைப்படுபவர்களுக்கு நிலங்களை வழங்க முடியும் . எது விவசாய நிலம் , விவசாய நிலமல்லாதது எது என மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து அறிக்கை கொடுக்கலாம் . நிலங்களை வாங்குவதற்கான வரம்பு ஏதாவது இருக்கிறதா ? முன்னர் ஒருவர் ஒன்பது ஹெக்டேர்களுக்கு அதிகமாக நிலங்களை வைத்திருக்கக்கூடாது என்று கூறப்பட்டது . 1950 ஆம்ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டம்தான் இப்படி சொல்கிறது . மோடி அரசு இதனை மாற்றிவிட்டத

கொரோனா கற்றுத் தந்த பாடங்களை மறக்க கூடாது!

படம்
        சின்மய் தும்பே     சின்மய் தும்பே பொருளாதார பேராசிரியர் ஐஐஎம் அகமதாபாத் பெருந்தொற்று காலத்தில் நாம் கற்று்க்கொண்ட விஷயங்களை பின்பற்றுவதுதான் எதிர்காலத்தில் ஏற்படும் பேரிடர்களை காக்கும் என்கிறீர்கள் . இந்தியா அப்படி பாடங்களை கற்றுக்கொண்டது என நினைக்கிறீர்களா ? ஆம் , இல்லை என இரண்டுவிதமாகவும் இதற்கு பதில் சொல்லலாம் . நோய்த்தொற்றுக்கு எதிராக முன்னமே நடவடிக்கை எடுப்பது பெருந்தொற்றை கட்டுப்படுத்த உதவும் . 1817 றற்றும் 1920 ஆகிய ஆண்டுகளில் பெருந்தொற்று ஏற்பட்ட வரலாற்றை இந்தியா அம்னீசியா வந்த து போல மறந்துவிட்டது . இந்த பாதிப்பில் 40 மில்லியன் மக்கள் இறந்துபோனார்கள் . கடந்துபோன பெருந்தொற்றை கவனித்தால் , தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து வருவதை எளிதாக கணித்திருக்க முடியும் . சீனாவில் 1911 ஆம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் தொழிலாளர்களை சிறப்பாக கையாண்டது . அக்காலகட்டத்தில் நடந்து சென்ற தொழிலாளர்கள் பனியில் சிக்கி இறந்தனர் . நாம் நேரடியாக அதனை எடுத்துக்காட்டாக கொள்ளமுடியாவிட்டாலும் கூட அப்பாடங்களை மறக்க கூடாது . கொரோனா முதலில் சீன வைரஸ் என்று கூறப்பட்டது . பின்னாளில்

கல்வி உதவித்தொகை தாமதம் ஆவதால் வேலைகளுக்கு மாறும் மாணவர்கள்!

படம்
              கல்வி உதவித்தொகை தாமதம் ஆவதால் வேலைகளுக்கு மாறும் மாணவர்கள் ! அஹ்மத்நகரைச் சேர்ந்த கமலாகர் சேட்டே , எம் . காம் பட்டதாரி . சமூக நலத்துறை மூலம் டாக்டர் அம்பேத்கர் ஸ்வாதர் யோஜனா திட்டத்தின் கீழ் இவருக்கு 51 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உறுதி செய்யப்பட்டது . இவர் ஏற்கெனவே இறுதியாண்டுத் தேர்வை எழுதிவிட்டார் . சமூக நலத்துறை எனக்கு வரவேண்டிய கல்வி உதவித்தொகையை கொரோனா காரணமாக இல்லை என்று கூறிவிட்டது . ஆண்டுகள் கடந்தாலும் உதவித்தொகை வரும் என காத்திருந்து சலித்துவிட்டார் கமலாகர் . ஆனால் இன்றுவரை உதவித்தொகை கிடைப்பதாக தெரியவில்லை . ஆண்டு வருமானமே 50 ஆயிரம் ரூபாய் வரும் கமலாகரின் பெற்றோர் எப்படி இவரின் கல்விச்செல்வுக்கு பணம் அனுப்ப முடியும் ? அரசு கல்வி உதவித்தொகையை தருவதாக சொல்லி கை கழுவியதால் பெற்றோரிடம் காசுக்கு கை ஏ்ந்தி நிற்கும் நிலை . மத்திய மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை தாமதாவது தொடர்கதையாகிவிட்ட நிகழ்வு . அண்மையில் லேடி ஶ்ரீராம் பெண்கள் கல்லூரி மாணவி ஐஸ்வர்யா ரெட்டி கல்விக்கட்டணத்தை கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட நிக்ழச்சிநாளிதழில் வெளியானது . இவர் இ

ஓடிடி பிளாட்பாரங்களுக்கான தணிக்கை தடை பாதிப்பை ஏற்படுத்துமா? டேட்டா கார்னர்

படம்
                  நவம்பர் 9 அன்று , இணையத்தில் வெளியாகும் படங்கள் , பாடல்கள் , பேச்சு உள்ளிட்ட அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டது . இதனை தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை கட்டுப்படுத்தும் . இதன் கீழ் இனி அனைத்து ஓடிடி சேவை வழங்கும் நிறுவனங்களும் , சமூக வலைத்தளங்கள் , இணையதளங்கள் வரும் . இந்த நிறுவனங்கள் இருக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது . இந்த வகையில் 26 சதவீதம் வெளிநாட்டு முதலீடுகள் மட்டுமே இவற்றில் இருக்கும் . மேற்கண்ட முதலீட்டிற்கு மேல் உள்ள செய்தி நிறுவனங்ளள் இதுபற்றிய விவரங்களை மத்திய அரசுக்கு வழங்கவேண்டும் . இதில் நிறுவனத்தின் இயக்குநர் , தலைவர் , உறுப்பினர்கள் என பல்வேறு விவரங்கள் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது . அக்டோபர் 15, 2021 ஆம் ஆண்டிற்குள் வெளிநாட்டு முதலீடுகள் 26 சதவீதமாக்கப்படவேண்டும் என்ற மத்திய அரசு காலவரம்பு நிர்ணயித்துள்ளது . இதுபற்றி டிஜிபப் நிறுவனம் , மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஊடகங்களை கட்டுப்படுத்த நினைக்கிறது . அரசின் இதுபோன்ற

மத்திய அரசு மாநில அரசுகளுக்கான நிதியை உடனே அளிக்க வேண்டும்! - பிரனாப் சென், பொருளாதார நிலைக்குழு புள்ளியலாளர்

படம்
      நேர்காணல் பிரனாப் சென் பொருளாதார புள்ளிவிவர நிலைக்குழு தலைவர் . அரசு மூன்றாவது முறையாக நிதி ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது ? இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ? இந்திய பொருளாதாரம் ஏற்கெனவே கடுமையான பாதிப்பில் உள்ளது . கடந்தாண்டு மட்டும் 18 முதல் 20 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது . வரி வருவாயில் 8 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது என தோராயமாக மதிப்பிடலாம் . பிற இழப்பு தொழில்துறை , நிறுவனங்கள் சார்ந்த இழப்பாக கூறலாம் . இயல்பு நிலைக்கு திரும்ப இழந்த இழப்புகளை சரி செய்யவேண்டியது அவசியம் . தற்போது மெல்ல நிலை மீண்டு வருகிறது கடந்த மூன்று மாதங்களாக சில்லறை விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது . காரணம் , மக்கள் கடந்த சில மாதங்களாக எதையும் செலவு செய்ய அனுமதிக்கப்படவில்லை . திருவிழாக்கள் நடைபெறும் காலம் வேறு . எனவே மெல்ல நிலை மாறி வருகிறது . ஆனால் இதன் பொருள் நாம் முன்னர் இழந்த அத்ததனையும் திரும்ப பெற்றுவிடமுடியும் என்று உறுதியாக கூறமுடியாது என்பதுதான் . இரண்டாவது மூன்றாவது காலாண்டில் விற்பனை சரிந்தாலும் கூட அடுத்த காலாண்டில் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது .