இடுகைகள்

மொழியாக்க கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

'புலிகளின் மீதானது மட்டுமல்ல எனது அக்கறை'' - வால்மிக் தாபர்

''புலிகளின் மீதானது மட்டுமல்ல எனது அக்கறை'' - வால்மிக் தாபர்                                                                     சஷி சன்னி தமிழில்: ரோஸலின் கார்த்திக் 1961 ஆம் ஆண்டு வால்மிக் தாபர் கார்பெட் தேசியப்பூங்காவில் முதன்முதலாக புலிகளைப்பார்க்கிறார். 40 ஆண்டுகளுக்குப்பிறகான இன்றைய தினத்தில் அந்தப்பயணம் ரசவாதத்தை தன்வாழ்வில் நிகழ்த்தியிருக்கிறது என்கிறார் அவர். ''வனவாழ்வு குறித்து ரசவாதம் போல என் மிச்ச வாழ்வை தொடர்வேன் என்று அப்போது எனக்குத்தெரியாது'' என்று கூறும் வால்மிக் தாபர் இந்தியாவின் முக்கியமான இயற்கையியலாளர் மற்றும் சூழல் பாதுகாப்பாளர் ஆவார். விலங்குகளையும், தாவரங்களையும் பாதுகாக்க முயற்சிக்கிறவன் என்று தன்னைப்பற்றி கூறிக்கொள்கிறார். வால்மிக் தாபர் எழுதியதும், தொகுத்ததுமாக தோராயமாக 25 புத்தகங்களையும் தாண்டுகிறது. பிபிசி நிறுவனத்திற்காக பல ஆவணப்படங்களை எடுத்துத் தந்திருக்கிறார். இதற்கான தொடக்கமாக, இந்தியாவில் அழியும் இயற்கை பாரம்பரியத்தை மாறி வரும் சூழலில் பாதிக்கப்படாமல் காப்பது குறித்த முயற்சிகள் இவை என்கிறார். இவரத

வாழ்வதற்கான உரிமை வேண்டிய நீண்ட போராட்டம்

வாழ்வதற்கான உரிமை வேண்டிய நீண்ட போராட்டம்              சதினாத் சாரங்கி             தமிழில்: ஃப்ரான்சிஸ் ரஞ்சா      போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான சட்டரீதியான தீர்வுக்காக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கிறார்கள். நிலத்தடி நீரில் கலந்துவிட்ட நச்சுக்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கான உரிமைகளைப் பெற போராட்டத்தினை தொடர்ந்து மேற்கொண்டு நடத்தி வருகிறார்கள்.       30 ஆண்டுகளுக்கு முன்பு போபாலில் உரத்தொழிற்சாலை ஒன்றிலிருந்து விஷவாயு கசிந்ததில், நடந்த பேரழிவை அறிந்து பலரும் அதிர்ச்சியடைந்திருப்போம். இன்றும் அதன் விளைவுகளை அம்மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள். டிசம்பர் 1984 ல் நச்சுவாயுவினால் பாதிக்கப்பட்ட பலர் இறந்துவிட்டாலும், தொடரும் போராட்டம் ஆனது, தொடரும் நச்சுவாயுவின் கொடும் விளைவுகளால் இன்றுவரை 25000 பேரும் தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புற்றுநோய் மற்றும் மூச்சுக்குழல் புற்றுநோய், பிறக்கும்போதே குணப்படுத்த முடியாத உடல்நலக்கோளாறுகளுடனும், ஊனங்களுடனும் பிறக்கின்றனர்.      மேலும் ஒரு பேரழிவு ந

வாழ்வின் கடைசித்துளியில் வலி நீக்கும் மருத்துவர்

வாழ்வின் கடைசித்துளியில் வலி நீக்கும் மருத்துவர்                       சென்ஞ்சோ செரின் தாமஸ்                       தமிழில்: ஆலன் வான்கா கேரளாவைச் சேர்ந்த மரு. ராஜகோபால் கடும் நோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுபவர்களுக்கு அன்பையும், கவனிப்பையும் அவர்களின் கடைசித்தருணம் வரை தர முயற்சிக்கிறார்.      மரு. ராஜகோபால் குதூகலமாக தொடங்கிய அன்றைய தினத்தை நினைவு படுத்தி பார்க்கிறார். புற்றுநோய் நோயாளி ஒருவரை நரம்பு சிகிச்சை மூலம் வலியில்லாமல் இருக்கச்செய்கிறார்.  தன் திறமைகளை தானே வியந்து அமைதியாக அன்று இரவு உறங்கச்செல்பவருக்கு, அடுத்தநாள் எழும்போது, சிகிச்சையளித்த புற்றுநோய் நோயாளி தற்கொலை செய்துகொண்டதாக செய்தி கிடைக்கிறது.      தொண்டைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனது மருத்துவரின் பேரில், மரு. ராஜகோபாலைத் தேடி வந்தார். அவர் ராஜகோபாலிடம் மேம்பட்ட சிகிச்சை முறைகளை எதிர்பார்த்தார். ஆனால் ராஜகோபால் மயக்கமருந்து கொடுத்து நரம்புகளை உணர்விழக்கச்செய்யும் நிபுணராக இருந்தார். ஆனால் அந்த நோயாளி எதிர்பார்த்தது அத்தகைய சிகிச்சையல்ல. அவரின் இறுதிமுடிவை ராஜகோபாலின் சிகிச்சை தடுக்கமுட

காற்றிலிருந்து வார்த்தைகளுக்கு ஒரு பயணம்

காற்றிலிருந்து வார்த்தைகளுக்கு ஒரு பயணம்                                                                 ஆங்கிலத்தில் : ரோஹிணி நாயர்                                                                 தமிழில் : ஜோ ஃபாக்ஸ்                 நம் வாழ்வில் அனைவரும் மருத்துவரின் ஆலோசனையைப்பெற ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் காத்திருந்திருப்போம் . அப்போது நாம் ஒரு மாத இதழைப்புரட்டியபடி ( அ ) மற்றவர்கள் பேசுவதைக்கேட்டுக் கொண்டோ ( அ ) நம் உறவினர்கள் நோயினால் துன்பப்படுவதை பார்த்துக்கொண்டோ குழப்பமான நிலையில் அமர்ந்திருப்போம் .                 ஆனால் ஹரியானா , பானிபட் பகுதியைச்சேர்ந்த அர்ஸ்ஷா தில்பாகி (16), மருத்துவருக்காக காத்திருந்த ஒரு நாளின் நேரத்தை மிகவும் பயன்பாடான கருவி ஒன்றினை உருவாக்குவதற்கான அடித்தளம் ஒன்றினை ஏற்படுத்திக் கொண்டார் .                 “ பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு பேசும் திறன் இழந்த நோயாளி ஒருவர் அழுதுகொண்டிருப்பதை கவனித்தேன் ” என்று கூறுகிற அர்ஸ் பானிபட்டில் டிஏவி பள்ளியில் பனிரெண்டாம்