இடுகைகள்

தனிமைத் துயரைப் போக்கும் பிணங்கள் - ஜெப்ரி டாமர்

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 ஜெப்ரி டாமர் பெயரை குற்ற உலக வரலாறு எப்போதும் மறந்திருக்காது. இவரது பெயரில் ஓடிடியில் தொடரைக் கூட வெளியிட்டு வருகிறார்கள்.   1991ஆம் ஆண்டில் பதினேழு பேர்களை வெட்டி கொலை செய்திருந்தார். இவர் கொலை செய்ய திட்டமிட்டவர்களில் ஒருவர் மட்டும்   தப்பிப் போய் காவல்துறைக்கு தகவல் கொடுத்து கொலைத் திருவிழாவை தடுத்துவிட்டார். இல்லையென்றால் கொலைகள் ஒருவழியாக ரவுண்ட் ஃபிகராக வந்திருக்கும். கொலை செய்தவர்களின் உடல்களை, வெட்டியெடுத்த உடல் பாகங்களை தடய அறிவியல் துறையை விட தெளிவாக புகைப்படம் எடுத்து வைத்திருந்தார் டாமர். அதெல்லாம் காவல்துறைக்கு அவரது குற்றத்தைப் புரிந்துகொள்ள உதவின. குளிர்பதனப் பெட்டியில் குடல், குண்டாமணி, இதயம், நுரையீரல் என அனைத்தையும் பங்கு பாகம் பிரித்து வைத்திருந்தார். உடல்களை கரைக்க, பதப்படுத்தவென பேரல் நிறைய அமிலங்களும் இருந்தன.   காவல்துறை சேகரித்தது பதினொரு ஆண்களின் உடல் பாகங்களைத்தான். அதற்கும் மேல் ஆறு பேர் உண்டு என கூடுதல் தந்து உதவினார் டாமர். பின்னே இதெல்லாம் சாதனைதானே? பதினெட்டு வயதில் ஸ்டீவ் ஹிக்ஸ் என்பவரைக் கொலை செய்து ரத்த ருசி கண்டார்.

பெற்றோர் சொல்வதை பெண்கள் கேட்டு நடந்தாலே வாழ்க்கை நல்லாயிருக்கும்! -

படம்
  மீக்கு பாகர தெக்கிரவாகினி கதை, நடிப்பு – கிரண் அப்பாவரம் இசை மணி சர்மா காதல் திருமணம் செய்தால் குடும்ப உறவுகள் வருத்தப்படுவார்கள். எனவே வீட்டில் பார்த்து வைத்த திருமணம் செய்யுங்கள். சந்தோஷமாக இருக்கலாம் என கலாசார செய்தி சொல்லுகிறது படம். ஹைதராபாத்தில் டாக்சி டிரைவராக இருக்கிறார் நாயகன். அவர் காரில் குடிபோதையில் உள்ள பெண் வாடிக்கையாளர் ஏறுகிறார். அவரிடம் பேசி அவரது மனதில் உள்ள பிரச்னையைக் கேட்கிறார். அதில்தான் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட காதலும் காதலன் ஏமாற்றிவிட்டு சென்றதும் தெரியவருகிறது. இதனால் அவள் காதலனுக்காக வீட்டைவிட்டு வந்து, நகரத்தில் வேலை செய்கிறாள். பெற்றோரிடம் செல்லவும் பயம். ஏனெனில் அவளின் கல்யாண முகூர்த்தம் போதுதான் காதலனோடு ஓடி வருகிறாள். இதனால் அவளது அப்பா மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இன்னும் நிறைய சங்கடங்கள் ஏற்படுகின்றன. இதெல்லாம் கேட்கும் நாயகி, பிறகு டாக்சி டிரைவரிடம் அவனது காதல் கதையைக் கேட்கிறாள். அவனும் தான் வழக்குரைஞர் பெண்ணை சித்தப்பா உதவியுடன் காதலித்தது பற்றி சொல்லுகிறார். இருவரும் மெல்ல நட்பாகிறார்கள். அப்போது டாக்சி டிரைவர் அந

பிணங்களோடு வாழ்வதே இன்பம் - நீல்சனின் வாழ்க்கை முறை

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 ஜெஃப்ரி டாமர், நீல்சன் ஆகிய இருவரும் அமைதியாக இருக்கும் நபர்கள்தான். ஆனால் செய்த கொலைகள் எல்லாமே பீதியூட்டும் ரகத்தைச் சேர்ந்தவை. டாமரைப் பொறுத்தவரை உடலுறவில் ஈடுபடவென தனி ஜோம்பி போன்ற உடல் தேவைப்பட்டது. அதை உருவாக்க முடியும் என நம்பினார். நீல்சனைப் பொறுத்தவரை தன் ஆயுளுக்கும் தன்னை விட்டு நீங்காத ஒருவரை தேடிக்கொண்டிருந்தார். இவர்கள் மட்டுமல்ல கொலைகளை செய்யும் பலரும் மக்களை உயிருள்ளவர்களாக பார்க்கவில்லை. அவர்கள், பொருட்களை எப்படி தேவைக்கு எடுத்து பயன்படுத்துகிறோம். அதுபோல நினைத்து பயன்படுத்தினார்கள். நீல்சன் தனக்கு தேவையான இரைகளை   பப்களில் கண்டுபிடித்தார்.   இவருக்கு பிறரை தனக்கு வேண்டிய விஷயங்களைச் செய்யச் சொல்லி கேட்பது அவமானமாக இருந்தது. எனவே தன்னைத் தானே இறந்துபோனது போல மாற்றிக் கொண்டு   கண்ணாடி முன்னே சரி பார்த்துக்கொள்வார். ஆனால் இதெல்லாம் கூட அவருக்கு மனதில் நினைத்த மகிழ்ச்சியைத் தரவில்லை. 78களில் நீல்சன்,   பப் ஒன்றுக்குச் சென்றார். அங்குள்ளவரை தனது வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்துச் சென்றார். வீட்டுக்கு சென்றதும் சில பீர்களை குடித்தார்கள். என்னதா

நெக்ரோபிலி - பிணங்களோடு மனிதர்கள் கொள்ளும் உடலுறவு ஆசை

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 இறந்தவர்களோடு வாழ்தல். இறந்த காதலியை தோளில் போட்டுக்கொண்டே திரிதல், அந்த உடலுடன் வாழ்தல், கொலை செய்து அல்லது இறந்த பிணங்களை தோண்டியெடுத்து அறையில் அருங்காட்சியகம் போல அமைப்பது, அழும் தசை துர்நாற்றத்தை சகித்துக்கொள்வது என வாழும் மனிதர்கள் உலகில் உண்டு. இதில் உடல்ரீதியான இன்பம் அனுபவிக்கும் பழக்கங்களையும் மனிதர்கள் செய்கிறார்கள். இதை உளவியல் மருத்துவர்கள் நெக்ரோபிலியா என்கிறார்கள். இறந்த உடல்களைப் பார்த்து ரசிப்பது, மனநல குறைபாடு கொண்ட மனிதர்களுக்கு பிடித்தமானது. உடலே விதையாக.. இங்கிலாந்தில் நடந்த கதை இது. அங்குள்ள லண்டன் நகரில் ப்ரௌன் என்பவர் ஒரு இடத்தை வாங்கினார். அறையில் இருந்து வரும் துர்நாற்றம் அவரை என்னடா இது என வெறுப்பு கொள்ள வைத்தது. சுவரில் ஒட்டியிருந்த வால்பேப்பரை உருவி எலி செத்திருக்கிறதோ என பார்த்தவர் நொடியில் முதுகுத்தண்டில் மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்தார். சுவரில் கான்க்ரீட் கலவையில் மூடியபடி நிர்வாணமாக ஒரு உருவம். பெண். தொட்டுப் பார்த்து உறுதி செய்தவர், உடனே காவல்துறைக்கு தகவல் சொன்னார். அவர்கள் வந்து சுவரை இடித்துப் பார்க்க இன்ன

மகப்பேறு மருத்துவத்தின் மூலம் தன்னைச்சுற்றியுள்ள பெண்களை புரிந்துகொள்ளும் மருத்துவர்! டாக்டர் ஜி

படம்
  டாக்டர் ஜி ஆயுஷ்மான் குரானா, ரகுல் ப்ரீத் சிங், ஷெபாலி ஷா இசை அமித் திரிவேதி   பொதுமருத்துவம் படித்த உதய் குப்தா, சிறப்பு மருத்துவராக மாற எலும்புகள் பற்றி படிக்க நினைக்கிறார். ஆனால் அதை படிப்பதற்கான சீட், அவருக்கு அருகில் கிடைப்பதில்லை. எனவே மகப்பேறு மருத்துவத்தை அவர் தேர்ந்தெடுக்கிறார். ஆனால் அதை முழு மனதாக செய்யவில்லை. ஆண் என்றால் மகப்பேறு மருத்துவம் எதற்கு செய்யவேண்டும் என நினைக்கிறார். பெண்களுக்குத்தான் அது சரியானது என நினைக்கிறார். இந்த மனநிலையை அவர் மாற்றிக்கொண்டு நல்ல மகப்பேறு மருத்துவராக அவர் மாறுவதுதான் கதை. உதய் குப்தா, ஆணாதிக்க கருத்துகள் கொண்டவர். அவருக்கு அவரது நெருங்கிய உறவினரான எலும்பு மருத்துவர்தான் ரோல்மாடல். அதுபோல மருத்துவராகி சந்தோஷமாக வாழவேண்டும். வெற்றிகரமான மருத்துவராக செயல்டுவதே கனவு. ஆனால் நிலைமை அப்படி எளிதாக செல்லவில்லை. அவருக்கு மகப்பேறு மருத்துவம்தான் படிக்க கிடைக்கிறது.   மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை என இரண்டு இடங்களிலும் அவர் தன்னை மிகவும் அந்நியமாக உணர்கிறார். வகுப்பில் அவர் மட்டும்தான் ஒரே ஆண். வேலையின்போது, ஆசிரியரும் துறை தலைவருமான நந்த

மாண்வரி அல்குல் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  மாண்வரி அல்குல் என்ற சிறுநூல், பிடிஎஸ்எம் வாழ்க்கை முறையைப் பற்றி பேசுகிறது. இந்த வாழ்க்கை முறை சார்ந்து ஆங்கில நூல்கள் நிறைய இருந்தாலும் தமிழில் நூல்கள் குறைவு. அந்த வகையில் பிடிஎஸ்எம் முறையில் உள்ள கருத்துகள், நம்பிக்கைகள், விதிகள் பற்றி மாண்வரி அல்குல் உரையாடுகிறது.  பிடிஎஸ்எம் என்றால் பலருக்கும் ஆபாச வீடியோ தளங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் அத்தகைய தன்மையை இயல்பாக கொண்ட உறவுமுறை பிடிஎஸ்எம்மில் மிக குறைவு. காட்சியாக ஒன்றை காண்பதற்கும் அனுபவித்து வாழ்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இணையத்தில் இதுபற்றி தேடினால் உங்களுக்கு நிறைய மக்கள் குழுக்களாக பிடிஎஸ்எம் முறையை கடைபிடித்து வாழ்கிறார்கள். விருந்துகளை நடத்துகிறார்கள். அதுபற்றி புரிதலை ஏற்படுத்தும் நூல்தான் மாண்வரி அல்குல். ரோஸ்கோல்ட் அண்ட் கோ., நிறுவனம் நூலை தொகுத்துள்ளது.  நூலை கிண்டில் மூலம் வாசிக்கலாம். நன்றி! https://www.amazon.in/dp/B0BQ7H4ZMK

மென்மையான உணர்வுகளை மனதிற்குள் கடத்தும் கதைகள் - அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்

படம்
  அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன் சிறுகதைகள் அப்பாவின் வேஷ்டி பிரபஞ்சன் டிஸ்கவரி பப்ளிகேஷன் தொகுப்பில் மொத்தம் பதினைந்து கதைகள் உள்ளன. இதில் வாசிக்க அனைத்துமே வெவ்வேறு வகையாக மனித வாழ்க்கையை அணுகுபவைதான். நிகழ் உலகம், அமரத்துவம், குழந்தைகள் ஆகிய கதைகள் சற்றே வேறுபட்ட தன்மையைக் கொண்டுள்ளன. குழந்தைகள் கதையில் வாசு என்ற இசைக்கலைஞரிடம் வீணை பாடம் கற்க இரு இளைஞர்கள் செல்கிறார்கள். அங்கு வாசு சாரின் மகள் விதவையாகி வாழ்ந்து வருகிறாள். பிறகென்ன கதை அதேதான். பாடம் கற்க சென்றவரான பிச்சுவுக்கு காதல் பொத்துக்கொண்டு வருகிறது. ஆனால் பிச்சுவின் செயலை வாசு சார் எப்படி பார்க்கிறார், அவரின் மகள் ஜானகி எப்படி புரிந்துகொள்கிறாள் என்பதே கதையின் இயல்பை மாற்றுகிறது. இதில் வைத்தி முதலிலேயே வாசு சாரின் இயல்பைப் புரிந்துகொள்கிறான். அதனால் பிச்சு தனது காதல் பற்றி சொன்னதும், அது சிக்கலாகும் வேண்டாம். நீ காதல் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என எச்சரிக்கிறான். ஆனால் காதல் இதற்கெல்லாம் நின்றுவிடுமா என்ன? இறுதியாக என்னாகிறது, பிச்சுவின் காதல் பற்றி வைத்தி என்ன சொல்லுகிறான் என்பதுதான் முக்கியமானது. நிகழ்