இடுகைகள்

குளோகல்(Glocal) செய்திகள்! - ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எமர்ஜென்சி முதலுதவிக்கு படிப்பு கட்டாயமாகிறது!

படம்
விபத்துகளில் இந்தியர்கள் பலி! எமர்ஜென்சி மருத்துவ வசதிகள் கிடைக்காததால் ஆண்டுதோறும் 50 ஆயிரம் இந்தியர்கள் இறப்பதாக ஹார்வர்டு பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அவசரநிலையில் நோயாளிக்கு எதுமாதிரியான சிகிச்சைகளை அளிக்கவேண்டும் என்பதை மருத்துவர்களும், செவிலியர்களும் அறியாததால் இந்த அவலநிலை. “அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அக்யூட் கிரிட்டிக்கல் கேர் கோர்ஸ்(ACCC) அனைத்து மருத்துவர்களுக்கும் கட்டாயம். அவசரநிலை உதவிகளால் பத்து சதவிகித மரணங்களை தடுத்து மக்களை காப்பாற்ற முடியும்” என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த மாற்று உறுப்பு அறுவைசிகிச்சை வல்லுநர் அஜய் சர்மா. நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிப்பது தொடர்பான மருத்துவர்- செவிலியர்களின் தடுமாற்றங்களால் இங்கிலாந்தில் ஆண்டுதோறும் 98 ஆயிரம் பேர் மரணித்து வருகின்றனர். 2012 ஆம் ஆண்டு இந்தியாவில் இப்பாடம் அறிமுகமானாலும் இதனைக் கற்றவர்களின் அளவு இந்தியளவில் 450 மருத்துவர்கள் மட்டுமே. எமர்ஜென்சி சூழலில் விபத்துக்குள்ளாகி மருத்துவமனைக்கு வருபவர்களின் மூச்சை சோதித்து ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவது இதில் முக்கிய அங்கம்.

இந்தியாவின் செழிப்பான மாநிலம் எது?

பணக்கார மாநிலம்! – இந்தியாவில் பணக்கார மாநிலங்களின் பட்டியலில்   குஜராத், நான்காவது இடம் பிடித்துள்ளது. மாநிலத்திலுள்ள 58 பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 300 கோடிக்கும் அதிகம். குஜராத் கோடீஸ்வர தொழிலதிபர்களில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற அதானி ரூ.71 ஆயிரத்து 200 கோடி சொத்து மதிப்புடன் முன்னிலை வகிக்கிறார். இவருக்கு அடுத்து பங்கஜ் படேல்(ரூ.32,100 கோடி), பத்ரேஷ் ஷா(ரூ.9,700 கோடி), கர்சன்பாய் படேல்(ரூ.9,600 கோடி), சமீர் மற்றும் சுதீர் மேத்தா(ரூ.8,300 கோடி) சொத்துமதிப்புடன் கௌரவமாக பார்க்லேய்ஸ் ஹூருன் இந்தியா பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இந்திய மாநிலங்களில் மகாராஷ்டிரா, 271 பணக்காரர்களை உருவாக்கி ரூ.21.14 லட்சம் கோடி சொத்துக்களோடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கடுத்த இடத்தை 163   பணக்காரர்களைக்(ரூ.6.7 லட்சம் கோடி) கொண்டுள்ள டெல்லி பிடித்துள்ளது. இதற்கடுத்த இடங்களை கர்நாடகா(ரூ.3.49 லட்சம் கோடி), தெலங்கானா(ரூ.1.56 லட்சம் கோடி) பெற்றுள்ளன. நகரங்களின் அடிப்படையில் மும்பை 233 பணக்காரர்களை வாழவைத்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கடுத்த இடங்களில் டெல்லி,

கார் தந்த முதலாளி!

படம்
முதலாளிக்கு வைர மனசு! – வைரவியாபாரியான சாவ்ஜி துலாகியா, தன் நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 600 கார்களை வாங்கி பரிசளித்து திகைக்க வைத்துள்ளார். குஜராத்தின் சூரத்திலுள்ள வார்ச்சாவில் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வரும் வைரவியாபாரி சாவ்ஜி துலாகியா, தன் நிறுவன ஊழியர்கள் 600 பேர்களுக்கு வீடியோ கான்பரன்ஸ் வழி பிரதமர் மோடியின் கரங்களால் கார்சாவிகளை வழங்க வைத்து கௌரவித்துள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டிலிருந்து தனது நிறுவன ஊழியர்களுக்கு பல்வேறு அதிரடி பரிசுகளை வழங்கி உழைப்பு மற்றும் திறமைக்கு மரியாதை செய்து வருகிறார். “ஆயிரத்து ஐந்நூறு பேர்களை பரிசளிக்க தேர்ந்தெடுத்தோம். இதில் 600 பேர்களுக்கு கார்களும், 900 பேர்களுக்கு நிரந்தர வைப்புத்தொகையை வங்கியில் செலுத்தி அதற்கான சான்றிதழ்களையும் வழங்கினோம்” என பெருமையாக பேசுகிறார் உதாரண முதலாளி சாவ்ஜி துலாகியா. மாற்றுத்திறனாளி பெண்கள் நால்வரும் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து தங்களுக்கான பரிசைப் பெற்றுள்ளது நெகிழவைக்கும் பண்டிகை நிகழ்வு. இவ்வாண்டு ரூ.50 கோடி மதிப்பிலாக பரிசுப்பொருட்களை வழங்கிய சாவ்ஜி இதற்கு முன்பு

பாலியல்தளங்களை மூடுவது நன்மை தருமா?

படம்
பாலியல் தளங்களுக்கு பூட்டு!  இந்திய அரசு பாதுகாப்பு தொடர்பாக காரணங்களுக்காக விரைவில் பாலியல் இணையதளங்களை தடை செய்யவுள்ளது. உத்தர்காண்ட் உயர்நீதிமன்றம் இதுதொடர்பான வழக்கில் பாலியல் தளங்களை தடைசெய்ய செப்.28 அன்று உத்தரவிட்டுள்ளதை தொலைத்தொடர்பு அமைச்சகம் விரைவில் நாடெங்கும் அமுல்படுத்தவுள்ளது. 30 இணையதளங்களைத் தவிர்த்து ஆபாச வீடியோக்களை பதிவேற்றியுள்ள 827 செக்ஸ் இணையதளங்கள் இனி இந்தியாவில் தெரியாது. இதுதொடர்பான சுற்றறிக்கையை தொலைத்தொடர்பு அமைச்சகம் அனைத்து இணையசேவை நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளது. 2 இந்தியாவுக்கு சூழல் நிதி!  ஐ.நா சபை வெப்பநிலை உயர்வை தடுப்பதற்காக ஒரு பில்லியன் டாலர்களை வளரும் நாடுகளுக்காக ஒதுக்கியுள்ளது.  பத்தொன்பது திட்டங்களின் கீழ் இந்நிதியை வளரும் நாடுகளுக்கு ஐ.நா சபை வழங்கும். இதில் இந்தியாவின் பங்கு ரூ.4.34 கோடி வெப்பநிலை உயர்வால் முதலில் பாதிக்கப்படுவது கடல்புற மக்கள் என்பதால் அவர்களுக்கான திட்டங்களுக்கு இந்நிதி முதலில் ஒதுக்கப்பட்டு செயல்பாடுகள் தொடங்கும்.  பஹ்ரைனின் மனாமா நகரில் நடந்த பசுமை சூழல் நிதி போர்டு கூட்டத்தில

மோடிக்கு அமைதிப்பரிசு எதற்கு?

படம்
பார்வையற்றவர்களை அரவணைக்கும் தெலங்கானா! – தெலங்கானாவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அரசு செய்யும் பல்வேறு வசதிகள் இந்தியளவில் கவனம் ஈர்த்துள்ளன. பார்வையற்றோர்களுக்கான EPIC எனும் ப்ரெய்லி புகைப்பட அட்டையை தெலங்கானா அரசு தயாரித்து அசத்தியுள்ளது. “இந்தியாவிலேயே தெலங்கானா அரசு முதல்முறையாக பார்வையற்றோர்களுக்கு ப்ரெய்லி புகைப்பட அட்டைகளை தயாரித்து வழங்கவிருக்கிறது. வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வாகனப்போக்குவரத்து வசதியையும் அரசு அளிக்கவிருக்கிறது” என உற்சாகமாக பேசுகிறார் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனரான பி. சைலஜா. தெலங்கானா மாநிலத்தில் 5 லட்சம் மாற்றுத்திறனாளிகளை அரசு அடையாளம் கண்டு வாக்களிக்கும் பூத்தில் அவர்களுக்கு வீல்சேர் உள்ளிட்ட வசதிகளை வழங்க ஆயத்தமாகியுள்ளது. டிசம்பர் 7 அன்று சட்டமன்றதேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 39 லட்சம் அலட்சிய மரணங்கள்!  இந்தியாவில் விபத்துகளால் நேர்ந்த 39 லட்சம் மரணங்களை தவிர்த்திருக்க முடியும் என தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் அறிக்கை தகவல் தெ

இமாலய வயாகரா தெரியுமா?

படம்
இமாலயத்தில் வயாகரா!  நேபாளம் மற்றும் சீனாவில் பிரபலமான யார்ச்சகும்பா எனும் இமாலய வயாகரா, அதிகரிக்கும் வெப்பமயமாதலால் கிடைப்பது அரிதாகி வருகிறது. இந்தியாவின் இமாலயம், நேபாளம், திபெத் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கும் பூஞ்சைக்காளான் வகையைச் சேர்ந்த யார்ச்சகும்பா( Ophiocordyceps sinensis ), சீனமருத்துவத்தில் தங்கத்திற்கு நிகரான மதிப்பு கொண்டது. ஆண்மைக்குறைவு முதல் புற்றுநோய் பிரச்னைகளை தீர்க்கும் சர்வரோக நிவாரணியாக யார்ச்சாகும்பாவை சீனாவிலும், நேபாள மருத்துவட்டாரங்களிலும் கருதுகிறார்கள். கிராக்கி இருந்தாலும் இதன் உற்பத்தி மிக குறைவாக உள்ளதற்கு காரணம், விற்பனைக்காக மக்கள் இதனை அதிதீவீரமாக அறுவடை செய்வதும் பருவநிலை சூழல்கள் மாறுவதும்தான் என தட்பவெப்ப ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  3ஆயிரத்து 500 மீட்டர் உயரத்தில் வளரும் இந்த பூஞ்சை தாவரம் வளர வெப்பம் 32 பாரன்ஹீட் தேவை என்றாலும் மண் பனியால் உறைந்துவிடக்கூடாது என்பது முக்கியம். திபெத், பூடான் பகுதியில் பத்தாண்டுகளில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் அதிகரித்தது இமாலய வயாகரா வளர்ச்சி பாதாளத்தில் விழக்க

அதிகரிக்கும் திடீர் பணக்காரர்கள்!

படம்
அதிகரிக்கும் பணக்காரர்கள்!  இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்குமான   இடைவெளி அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 60 சதவிகிதம் பேர் அல்லது ஒரு லட்சத்து 40 ஆயிரம் இந்தியர்கள் ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளதாக மத்திய வரிவருவாய் போர்டு அறிக்கை தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் வருமான வளர்ச்சி 68 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் 88 ஆயிரத்து 649 பேர் கட்டிய வருமான வரி ரூ.1 கோடிக்கும் அதிகம் என வரிவருவாய் போர்டு தெரிவித்துள்ளது. “முந்தைய காலகட்டத்தில் வரிவருவாய் கட்டியவர்களின் எண்ணிக்கை   48 ஆயிரத்து 416. தற்போது 80 சதவிகிதம் பேர் வருமானவரி தாக்கல் செய்யும் பட்டியலில் இணைந்துள்ளனர். 2013-14 ஆம் ஆண்டு 3.79 கோடிப்பேர் என்றிருந்த எண்ணிக்கை இன்று 6.85 கோடியாக மாறியுள்ளது” என உற்சாகமாக பேசுகிறார் வரிவருவாய் போர்டு தலைவர் சுசில் சந்திரா.

நாய்களே கட்டிடங்களுக்கு பாதுகாப்பு!

படம்
கட்டிடங்களை பாதுகாக்கும் நாய்ப்படை! கொலைகளையும் கொள்ளைகளையும், போதைப் பொருட்களையும் முகர்ந்து பார்த்து கண்டுபிடித்து சட்டப்படி குற்றம் சொல்லி குரைத்த போலீஸ் நாய்கள் விரைவில் அரசு கட்டிடங்களின் பாதுகாவலர்களாக டூட்டி பார்க்கவிருக்கின்றன. நகரின் முக்கியமான கட்டிடங்களான ராஜ்பவன், முதல்வர் மாளிகை, பாபா அணுஆராய்ச்சி மையம், மாநில காவல்துறை தலைமையகம், மந்திராலயா உள்ளிட்டவற்றை இனி காவல்காக்கப் போவது நன்கு பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள்தான். “சந்தேகத்திற்குரிய பொருட்களை கண்டறியவும் தேவைப்பட்டால் ஒருவர் மீது தாக்குதல் நடத்தவும் நாய்ப்படைகளுக்கு பயிற்சியளித்து வருகிறோம். நாய்கள் தினசரி பல்வேறு இடங்களில் மாற்றப்பட்டு பணிநேரம் ஒதுக்கப்படும்” என்கிறார் காவல்துறை அதிகாரியொருவர். இதில் லேப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வெய்லர் உள்ளிட்ட இன நாய்கள் இடம்பெற்றிருக்கும் காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.  

குற்றவாளிகளை பிடித்தால் பணப்பரிசு நிச்சயம்!

படம்
குற்றவாளியைப் பிடித்தால் காசு! – இந்தியாவின் தேசிய புலனாய்வு ஏஜென்சி(NIA), தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்த குற்றவாளிகளின் லிஸ்ட்டை வெளியிட்டு பிடித்துதருபவர்களுக்கு காசு என அறிவித்துள்ளது. சையது சலாலுதீன்(ஹைஜப் அல் முஜாகிதீன்), ஜாகீர் நாயக், இலியாஸ் கஷ்மீரி(ஹர்கட் அல் ஜிகாத்), ஹபீஸ் முகமது சயீத்(ஜமாத் அட் தவா), ஜாகி அர் ரஹ்மான் லக்வி(லஷ்கர் இ தொய்பா) ஆகியோர் இப்பட்டியலிலுள்ள தீவிர குற்றவாளிகள் ஆவர். புதிதாக வெளியான குற்றவாளிகளின் பட்டியலிலுள்ள சிவப்பு புள்ளி, இன்டர்போல் அமைப்பால் தேடப்படும் குற்றவாளிகளையும் ரூபாய் அடையாளம் பணப்பரிசையும் குறிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 57 குற்றவாளிகளை மக்கள் பிடித்துக்கொடுத்தால் இந்திய அரசிடம் ஜிஎஸ்டி வரி கழித்து பணப்பரிசைப் பெறலாம். துப்பு கொடுப்பவர்களின் அடையாளத்தை யாருக்கும் தெரிவிக்க மாட்டோம் என்ற உறுதியுடன் தொலைபேசி, மின்னஞ்சல் முகவரியையும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அளித்துள்ளது. பாகிஸ்தானில் அல்கொய்தா தலைவர் ஓசாமா பின்லேடன் கொல்லப்பட்டபின் 2011 ஆம் ஆண்டு ஐம்பது பேர் கொண்ட குற்றவாளிகளின் பட்டியலை இந்திய அரச

'நாய'கன் இவர்தான்!

படம்
நாயைக் காப்பாற்றிய நாயகன்! அண்மையில் பஞ்சாபின் அமிர்தசரஸில் நடந்த தசரா விழா நிகழ்வில் ரயில்பாதையில் நின்று வேடிக்கை பார்த்த அறுபது பேர் பலியான சோக நிகழ்வு நீங்கள் அறிந்த செய்தி. ஆனால் மும்பையில் நாயைக் காப்பாற்ற மெதுவாக மெட்ரோ ரயிலை ஒட்டிய ஓட்டுநர் பற்றிய செய்திதான் இன்று ஹாட் நியூஸ். முலுந்த் ரயில் நிலையம் நோக்கி வந்த உள்ளூர் ரயில் திடீரென பிளாட்பாரத்திற்கு முன்பே நின்றுவிட்டது. ஆபீஸ் நேரத்தில் ரயிலை எதற்கு ஓட்டுநர் நிறுத்தினார் என பயணிகளுக்கும் குழப்பம். எட்டிப்பார்த்தபோதுதான் ரயில் வருவதை அறியாமல் ரயில் பாதையில் நாய் நின்றதும் அதனை காப்பாற்ற ரயில் ஓட்டுநர் ரயிலை வேகம் குறைத்து நிறுத்தியதும் தெரிய வந்துள்ளது.  சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி ஹார்ன் அடித்து நாயை விலகச்செய்து ரயிலை ஓட்டிய ரயில் ஓட்டுநர் ஜி.எஸ்.பிஷ்ட், தன் மனிதநேய செயல் மூலம் ஒரேநாளில் மெட்ரோ நாயகனாகி விட்டார். இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையில் 245 பசுக்களை இந்திய ரயில்கள் காவு வாங்கியுள்ளன. இந்திய மாநிலங்களிலேயே ஒடிஷாவில் ரயிலில் அடிபட்டு இறக்கும் விலங்குகளின் எண்ணிக்கை மிக அதிகம்.

சீனாவில் நிலவே தெருவிளக்கு!

படம்
தெரு விளக்குக்கு பதில் நிலவு! சீனா தன் நாட்டிலுள்ள தெருவிளக்குகளை அகற்றிவிட்டு அதற்கு பதில் செயற்கை நிலவுகளை வானில் ஏற்றவிருக்கிறது. உடான்ஸ் அல்ல; 2022 ஆம் ஆண்டுக்குள் மூன்று செயற்கை நிலவுகளை விண்ணில் ஏற்றி மின்சார செலவுகளைக் குறைக்கும் ஐடியாவை யோசித்து வருகிறது சீன அரசு. ‘தெருவிளக்குகளுக்கு நிகரான வெளிச்சத்தை செயற்கை நிலவுகள் தருவதற்கான ஆய்வுகளில் உள்ளோம். விரைவில் நிலவை வட்டப்பாதையில் பொருத்துவோம்’’ என்கிறார் தியான்ஃபு புதுமாவட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கழக தலைவரான வூ சுங்ஃபெங். கண்ணாடிகளைப் பொருத்தி சூரிய ஒளியை பிரதிபலித்து நிலவொளியை விட 6 ஆயிரத்து 400 ச.கி.மீ பரப்பில் அதிக வெளிச்சத்தை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். “செயற்கை நிலவு பூமியிலிருந்து 500 கி.மீ தூரத்திற்குள் வட்டப்பாதையில் பொருத்தப்பட்டாலும் அதன் அபரிமிதமாக வெளிச்சம் ஆராய்ச்சியாளர்களால் கட்டுப்படுத்தப்படும். இதனால் விலங்குகள், தாவரங்களுக்கு எப்பிரச்னையுமில்லை” என்கிறார் ஆராய்ச்சியாளர் வூ சுங்ஃபெங். தெருவிளக்குகளை அகற்றி செயற்கை   நிலவை பயன்படுத்துவதால் சீனாவுக்கு ஆண்டுதோறும் 1.2 பில்லியன்

ஒரு ரூபாய்க்கு இசை ஆசிரியர்!

படம்
ஒரு ரூபாய் இசை ஆசிரியர்! – ஆந்திராவைச் சேர்ந்த சிவில் எஞ்சினியர், 55 ஆண்டுகளாக ஒரு ரூபாய் கட்டணத்தில் சிறுவர்களுக்கு இசைவாசிக்க கற்றுக்கொடுத்து வருகிறார். கிடார் ராவ் என ஆந்திராவில் புகழ்பெற்றுவிட்ட பொறியாளர் எஸ்.வி.ராவிடம் ஆந்திராவில் தினசரி மூன்று இடங்களில் மாணவர்கள் கிடார் பாடங்களை கற்றுவருகின்றனர். ஆந்திராபவன், விஜய் சௌக் ஆகிய இடங்களில் கிடார் கற்கவரும் மாணவர்களுக்கு தன்னுடைய கிடார்களை கொடுத்தே பாடம் சொல்லிக்கொடுக்கிறார் கிடார் ராவ். பொறியாளராக இருந்து கிடார் ஆசிரியராக மாறிய ராவிடம் கிடார் வாசிக்க கற்ற மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொடும். தற்போது 160 மாணவர்கள் இவரின் இசை வகுப்புக்கு தினசரி சீடர்களாக வந்துகொண்டிருக்கின்றனர். ஆர்வம் கொண்ட சிறுவர்களுக்கு இசை சென்று சேரவேண்டும் என ஆசைப்படும் கிடார் ராவ், மோடியின் ஸ்வச் பாரத் போல சங்கீத் பாரத் திட்டத்தில் இசையை இந்தியாவிலுள்ள மாணவர்களுக்கு கற்றுத்தரவேண்டும் என விரும்புகிறார். தெலுங்கானா பல்கலைக்கழகத்தில் இசைப்பட்டதாரியான கிடார் ராவ், மன அழுத்தத்தில் விழுந்து அதிலிருந்து மீள இசை கற்கத் தொடங்கியவராம்.

இந்தியாவின் ஆதாரை ஃபாலோ செய்யும் நாடு!

படம்
இந்தியாவை பின்பற்றும் மலேசியா! நலத்திட்டங்கள், நிதி பரிமாற்றங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க மலேசிய அரசு இந்திய அரசின் ஆதார் கார்டுகளின் மாடலை பின்பற்றவிருக்கிறது. கடந்த மேமாதம் பிரதமர் மோடி மலேசியா சென்றபோது அவருடன் அந்நாட்டு பிரதமர் மகாதிர் முகமது, மனிதவளத்துறை அமைச்சர் குலசேகரன் ஆகியோர் ஆதார் குறித்து உரையாடினர். மத்திய வங்கி அதிகாரிகள், வணிகத்துறை ஆகியோரை அழைத்துக்கொண்டு குலசேகரன் ஆதார் ஆணைய தலைவரான அஜய் பூஷன் பாண்டேவை சந்தித்து பேசியுள்ளார். “ஆதார் மாடலில் ‘Mykad’ என்ற கார்டுகளை மலேசியாவில் அறிமுகப்படுத்த விரும்புகிறோம். நிதிபரிமாற்ற முறைகேடுகளை தடுக்கவே இம்முயற்சி” எனும் குலசேகரன் ஆதார் முறைகளை மலேசியாவுக்கு ஏற்றபடி மாற்றும் முயற்சியில் உள்ளனர். 3,990 ரிங்கெட்டுகளுக்கு குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு மலேசிய அரசு Mykad கார்டு மூலம் எரிபொருள், விதவைகள் உள்ளிட்ட மானிய உதவிகளை வழங்கவிருக்கிறது. பிரைவசி தொடர்பான பிரச்னைகள் இந்தியாவுக்கு அடுத்து மலேசியாவிலும் எழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.  

போரில் வெல்ல ராஜ்நாத்சிங் பூஜை!

படம்
மோடியின் பாட்டுக்கு பாட்டு! அண்மையில் பிரதமர் மோடி அகமதாபாத்தைச் சேர்ந்த பார்வையற்ற பெண்கள் ஆடிய நடன வீடியோவை பார்த்து வியந்து பாராட்டியுள்ளார். ‘அந்த் கன்யா பிரகாஷ் குரு’ எனும் அமைப்பினர் நடத்திய கார்பா நடனநிகழ்ச்சியில் பிரதமர் மோடி எழுதிய பாடல் வரிகளுக்கு இப்பெண்கள் ஆடியது குறிப்பிடத்தக்கது. “கார்பா நடனமாடிய பார்வையற்ற மகள்களின் நடனம் என நெஞ்சைத் தொட்டது.” என டுவிட்டரில் நெகிழ்ந்துள்ள மோடி, அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார். குஜராத்தின் கலாசார நடனமான கார்பாவில் பயன்படுத்திய பாடலை 2012 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது குஜராத்தியில் எழுதினார். அதன் பெயர் குமே ஏனோ கார்போ. 2 லடாக்கில் கேன்சர்! ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதி, பனிபடர்ந்த தூய அழகு   அங்குள்ள மக்களுக்கு ஆபத்தாக மாறிவருகிறது. அதிகரிக்கும் புறஊதா கதிர்கள், குறைவான ஆக்சிஜன் பிரச்னைகளால் மக்களுக்கு புற்றுநோய் அறிகுறிகள் அதிகம் தோன்றியுள்ளன. அசோகா மிஷன் திட்டத்தின் கீழ் அங்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 2 ஆயிரத்து 700 பேர்களுக்கு செய்த செக்-அப்பில் சூரியக்கதிர்களால் தோல் மற்றும் இரை

திருடர்களின் சூப்பர் கம்பெனி!

படம்
கொள்ளையர்கள் (பி) லிமிடெட்! – ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஆசிஷ் மீனாவுக்கு சுயதொழில் செய்ய ஆசை. கையில் காசில்லை; கால்குலேட்டர் மூளை மூலம் ப்ளூபிரிண்ட் போட்டவர் கொள்ளையர்களை வேலைக்கு அமர்த்தி தினசரி கொள்ளைடிப்பதற்கு மாதசம்பளம் வழங்கி போலீசாரையே வியக்க வைத்துள்ளார். படிப்பறிவற்ற, வேலையில்லாத ஏழுபேர்களை திருட்டு வேலைக்கு எடுத்து மாத இலக்குகளை சொல்லி தினசரி கொள்ளையடிக்க சொன்ன ஆசிஷ் மீனாவின் வயது 21 தான். டார்க்கெட் தாண்டினால் பேட்டா, கமிஷன் கொடுத்து உற்சாகப்படுத்திய ஆசிஷ் மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் கொடுத்து கொள்ளையர்கள் (பி) லிட். கம்பெனி நடத்தியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நகைகள், பைக்குகளை அபேஸ் செய்ததோடு விடாமல் பேராசையில் ஸ்மார்ட்போன்களை திருடியபோது மாட்டிக்கொண்டனர். சிவதாஸ்புரா, சனாகானெர் ஆகிய இடங்களில் கைவரிசை காட்டியவர்கள் ஆபீஸ் பிரதாப் நகரில் செயல்பட்டது. சிசிடிவி, போன் ஜிபிஎஸ் மூலம் டிராக் செய்து ரெய்டு போனதில் 33 போன்கள், லேப்டாப், தங்க நகைகள், நான்கு பைக்குகள் என போலீசார் மீட்டனர். அமேசிங் ஐடியா!

சோலோகாமி கல்யாணம்!

படம்
கல்யாண தொல்லை விபரீதம்! – இடைவிடாத கல்யாண டார்ச்சர்களால் உகாண்டாவைச் சேர்ந்த லுலு என்ற பெண், தன்னைத்தானே கல்யாணம் செய்துகொண்டு பெற்றோரை கடுப்பேற்றியுள்ளார். உகாண்டாவை பூர்விகமாக கொண்ட லூலு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவி. வயது 32 ஆனதால் அவரது பெற்றோர் சீக்கிரமாக கல்யாணம் செய்துகொள் என இடைவிடாமல் அட்வைஸ் பொழிந்தனர். ஒருகட்டத்தில் அட்வைஸ்களை ‘இனியும் பொறுக்கமுடியாது லூலு’ என கொதித்தெழுந்த மனக்குரலுக்கு செவிசாய்த்தவர் சுபமுகூர்த்தம் பார்த்து கல்யாண கவுன் அணிந்து மோதிரம் மாட்டி தன்னைத்தானே மணம் செய்துகொண்டார். தன்னைத்தானே மணம் செய்யும் பழக்கத்திற்கு சோலோகாமி என்று பெயர். கம்பாலாவிலுள்ள க்யூபாசா பாரில் திருமண நிகழ்வை தில்லாக நடத்தி பெற்றோருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் லூலு. “எனக்கு படிப்புதான் முக்கியம். என்னுடைய திருமண முடிவை பெற்றோருக்கு புரியவைப்பேன்” என கூறிய லூலுவின் சோலோ கல்யாணத்திற்கு பெற்றோர் வரவில்லை. லூலுவின் பதிலடியாக பெற்றோர் டென்ஷனானாலும் இணையம் ஆரவாரமாக லூலுவின் செயலை பாராட்டியுள்ளது. எதிர்வினை புதுசு!

பாரத் வைபவ் எனும் வரலாற்று சதி!

படம்
வரலாற்றை மாற்றும் இந்திய அரசு! இந்திய அரசு உலகத்திற்கு வழங்கிய பல்வேறு வரலாற்று பொக்கிஷங்களை அடையாளப்படுத்தும் விதமாக புதிய வரலாற்று நூலை வெளியிடவிருக்கிறது. இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் உதவியுடன் பாரத் வைபவ் என்ற திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் புதிய வரலாற்று நூலில் தொன்மை இந்தியாவின் கல்வி, பெண்களின் நிலை, கலை, அறிவியல், விளையாட்டு ஆகியவற்றைக் குறித்த சாதனைகள் இடம்பெற்றுள்ளன. டார்வின் பரிணாம வளர்ச்சியை விமர்சித்த மனிதவளத்துறை அமைச்சர் சத்யபால்சிங் தலைமையில் புதிய வரலாற்று நூல் தயாரிக்கப்பட்டு வருகிறது. பதினெட்டு அத்தியாயங்கள், 350 பக்கங்கள் என நீளும் புத்தகத்தை என்இசிஆர்டி, ஐசிஹெச்ஆர் ஆகிய நிறுவனங்களும் இணைந்து பதிப்பித்து இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடவிருக்கின்றன. “தொன்மை இந்தியாவில் உருவான பிளாஸ்டிக் சர்ஜரி, ரைட் சகோதரர்களுக்கு முந்தைய ஆகாய விமானங்கள், சூரியனின் ஏழுகுதிரை வாகனம் வானவில்லானது, கருந்துளை குறித்த வேத எழுத்துக்கள் ஆகியவை இந்நூலில் இடம்பெற்று இந்தியப்பெருமையை உலக அரங்கில் பேசும்” என்கிறார் ஐசிஹெச்ஆர் நிறுவனத்தின் செயலர் ரஜனீஸ்

ஸ்பீக்கர் கேட்டால் லட்டு கிடைத்தது!

படம்
ஸ்பீக்கருக்கு பதில் லட்டு! – வீட்டிலேயே ஸ்மார்ட்போனில் பொருட்களை ஆர்டர் செய்து சொகுசாக வீட்டு வாசலுக்கு சென்று வாங்கும் ஆன்லைன் பர்சேஸ் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பில்லியன் டாலர் விற்பனையிலும் பொருட்கள் மாறும் காமெடி அரங்கேறுவதுதான் சிச்சுவேஷன் காமெடி. தீபாவளிக்கு ஸ்பீக்கர் வாங்கி கொண்டாட நினைத்த வாடிகையாளர் ஒருவர், அமேஸானில் ஆர்ப்பாட்டமாக தேடி சலித்து புகழ்பெற்ற பிராண்டை ஆர்டர் செய்தார். ரூ.7 ஆயிரம் செலுத்தி ஸ்பீக்கர் வாங்கிவிட்டோம் என்ற கெத்தில் டெலிவரி முகவரி கொடுத்தவருக்கு சில நாட்கள் கழித்து ரூ. 20 மதிப்புள்ள லட்டுகள் மட்டுமே கிடைத்தன. “எனக்கு நடந்த அநீதியைப் பாருங்களேன்” என டென்ஷனான வாடிக்கையாளர் அதை சமூகவலைதளத்தில் படம்பிடித்து போட அமேஸானுக்கு பெரும் தர்மசங்கடமாக, மன்னிப்பு கேட்டு தவறான பார்சலை மாற்றிக்கொடுப்பதாக கோரியுள்ளது. ஆன்லைன் டெலிவரிகளில் போலிகளும் புயலாய் உள்ளே புக, வாடிக்கையாளர்களின் போலீஸ் புகார்களும், பணத்தை திரும்ப தரும் இக்கட்டும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஏற்படத்தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கொழிக்கும் லஞ்சம்!

லஞ்சம் ஒழியவில்லை! ஊழலை, லஞ்சத்தை ஒழிப்போம் என அரசியல் கட்சிகள் மாறாத டெம்போவில் கூறினாலும் 56 சதவிகித இந்தியர்கள் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது என கூறி இந்திய அரசுக்கு பொளேர் அதிர்ச்சியளித்துள்ளனர். 2017 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு வரை 11 சதவிகதம் லஞ்சம் கைமாறி ஊழலின் அளவு 45 சதவிகிதமாக மாறியுள்ளதை ஜெர்மனியைச் சேர்ந்த டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மற்றும் லோக்கல் சர்க்கிள் என்ற அமைப்புகள் மேற்கொண்ட ஊழல் லஞ்ச ஆய்வு 2018 வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. டிஜிட்டல் இந்தியாவிலும் லஞ்சம் வழங்குவதற்கு ரொக்கப்பணமே பலரின் விருப்ப சாய்ஸ். இந்தியாவின் 215 மாவட்டங்களில் 50 ஆயிரத்திற்கு அதிகமானோரிடம் ஆய்வு செய்ததில் 91 சதவிகிதத்தினருக்கு லஞ்ச ஒழிப்புத்துறையின் ஹெல்ப்லைன் எண் கூட தெரியவில்லை. 82% மக்களுக்கு உள்ளூர் நிர்வாகம், மாநில அரசு ஊழல் மற்றும் லஞ்சத்தை எதிர்க்க துரும்பையும் கிள்ளிப்போடவில்லை என்ற கோபமும் கனன்றுவருவதை ஆய்வு காட்டியிருக்கிறது. ஊழல், லஞ்சத்தில் உத்தரப்பிரதேசம்(79%), பஞ்சாப்(56%), மத்தியப்பிரதேசம்(50) ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. இவ்வாண்டின் ஜூலை

செக்ஸ் தவறுக்கு என்ன தண்டனை?

படம்
செக்ஸ் தவறுக்கு சிறை உறுதி!  மேலைநாடுகள் மட்டுமல்ல இந்தியாவிலும் சினிமா, பத்திரிகை வட்டாரங்களை #மீ டூ குற்றச்சாட்டுகள் உலுக்கி வருகின்றன. பெண்கள் மீதான அத்துமீறல்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு சிறைதண்டனை உண்டு என்பதால் ஜொள்ளு விடும் ஆண்களே கவனம்! 1997 ஆம் ஆண்டு விசாகா விதிகளின் படி பணியிடங்களுக்கான பாலியல் அத்துமீறல்களை உச்சநீதிமன்றம் வரையறுத்தது. டிசம்பர் 2013 ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களை தடுப்பது, தண்டிப்பது, இழப்பீடு ஆகியவற்றுக்கான விதிமுறைகள்(கூடுதலாக பிரிவு 354) வகுக்கப்பட்டு சட்டம் வெளியானது. பெண்களை கை, கால்களால் தொடுவது, ஆபாச படங்களை காண்பிப்பது, வலுக்கட்டாயமான பாலுறவுக்கு நிர்பந்தம், இவை சொற்களால் பாலுறவுக்கு கட்டாயப்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றங்கள்தான். பாலியல்புகார் எழும்போது பத்து பேர் கொண்ட ஊழியர்களின் குழு, அமைக்கப்பட்டு இதனை விசாரிக்கலாம். இதில் 4 பேர் கட்டாயம் பெண் உறுப்பினர்களாக இருப்பது அவசியம். பெண்களை பாலியல்ரீதியில் தீண்டுவதற்கு குற்றவியல் சட்டம் 2013 படி, 1-5 ஆண்டுகளும், பெண்களை அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து விநியோகிப்பதற்கு சட்ட