பாரத் வைபவ் எனும் வரலாற்று சதி!


வரலாற்றை மாற்றும் இந்திய அரசு!



Image result for history change bjp
இந்திய அரசு உலகத்திற்கு வழங்கிய பல்வேறு வரலாற்று பொக்கிஷங்களை அடையாளப்படுத்தும் விதமாக புதிய வரலாற்று நூலை வெளியிடவிருக்கிறது.

இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் உதவியுடன் பாரத் வைபவ் என்ற திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் புதிய வரலாற்று நூலில் தொன்மை இந்தியாவின் கல்வி, பெண்களின் நிலை, கலை, அறிவியல், விளையாட்டு ஆகியவற்றைக் குறித்த சாதனைகள் இடம்பெற்றுள்ளன. டார்வின் பரிணாம வளர்ச்சியை விமர்சித்த மனிதவளத்துறை அமைச்சர் சத்யபால்சிங் தலைமையில் புதிய வரலாற்று நூல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பதினெட்டு அத்தியாயங்கள், 350 பக்கங்கள் என நீளும் புத்தகத்தை என்இசிஆர்டி, ஐசிஹெச்ஆர் ஆகிய நிறுவனங்களும் இணைந்து பதிப்பித்து இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடவிருக்கின்றன. “தொன்மை இந்தியாவில் உருவான பிளாஸ்டிக் சர்ஜரி, ரைட் சகோதரர்களுக்கு முந்தைய ஆகாய விமானங்கள், சூரியனின் ஏழுகுதிரை வாகனம் வானவில்லானது, கருந்துளை குறித்த வேத எழுத்துக்கள் ஆகியவை இந்நூலில் இடம்பெற்று இந்தியப்பெருமையை உலக அரங்கில் பேசும்” என்கிறார் ஐசிஹெச்ஆர் நிறுவனத்தின் செயலர் ரஜனீஸ்குமார் சுக்லா. காமெடி வரலாறாகாமல் இருந்தால் சரிதான்!


பிரபலமான இடுகைகள்