குற்றவாளிகளை பிடித்தால் பணப்பரிசு நிச்சயம்!


குற்றவாளியைப் பிடித்தால் காசு! –


Image result for NIA


இந்தியாவின் தேசிய புலனாய்வு ஏஜென்சி(NIA), தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்த குற்றவாளிகளின் லிஸ்ட்டை வெளியிட்டு பிடித்துதருபவர்களுக்கு காசு என அறிவித்துள்ளது.
சையது சலாலுதீன்(ஹைஜப் அல் முஜாகிதீன்), ஜாகீர் நாயக், இலியாஸ் கஷ்மீரி(ஹர்கட் அல் ஜிகாத்), ஹபீஸ் முகமது சயீத்(ஜமாத் அட் தவா), ஜாகி அர் ரஹ்மான் லக்வி(லஷ்கர் இ தொய்பா) ஆகியோர் இப்பட்டியலிலுள்ள தீவிர குற்றவாளிகள் ஆவர்.

புதிதாக வெளியான குற்றவாளிகளின் பட்டியலிலுள்ள சிவப்பு புள்ளி, இன்டர்போல் அமைப்பால் தேடப்படும் குற்றவாளிகளையும் ரூபாய் அடையாளம் பணப்பரிசையும் குறிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 57 குற்றவாளிகளை மக்கள் பிடித்துக்கொடுத்தால் இந்திய அரசிடம் ஜிஎஸ்டி வரி கழித்து பணப்பரிசைப் பெறலாம்.
துப்பு கொடுப்பவர்களின் அடையாளத்தை யாருக்கும் தெரிவிக்க மாட்டோம் என்ற உறுதியுடன் தொலைபேசி, மின்னஞ்சல் முகவரியையும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அளித்துள்ளது. பாகிஸ்தானில் அல்கொய்தா தலைவர் ஓசாமா பின்லேடன் கொல்லப்பட்டபின் 2011 ஆம் ஆண்டு ஐம்பது பேர் கொண்ட குற்றவாளிகளின் பட்டியலை இந்திய அரசு உள்நாடு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் தயாரித்து வெளியிட்டது.