அதிகரிக்கும் திடீர் பணக்காரர்கள்!


அதிகரிக்கும் பணக்காரர்கள்! 

Image result for mukesh ambani caricature





இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்குமான  இடைவெளி அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 60 சதவிகிதம் பேர் அல்லது ஒரு லட்சத்து 40 ஆயிரம் இந்தியர்கள் ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளதாக மத்திய வரிவருவாய் போர்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் வருமான வளர்ச்சி 68 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் 88 ஆயிரத்து 649 பேர் கட்டிய வருமான வரி ரூ.1 கோடிக்கும் அதிகம் என வரிவருவாய் போர்டு தெரிவித்துள்ளது. “முந்தைய காலகட்டத்தில் வரிவருவாய் கட்டியவர்களின் எண்ணிக்கை  48 ஆயிரத்து 416. தற்போது 80 சதவிகிதம் பேர் வருமானவரி தாக்கல் செய்யும் பட்டியலில் இணைந்துள்ளனர். 2013-14 ஆம் ஆண்டு 3.79 கோடிப்பேர் என்றிருந்த எண்ணிக்கை இன்று 6.85 கோடியாக மாறியுள்ளது” என உற்சாகமாக பேசுகிறார் வரிவருவாய் போர்டு தலைவர் சுசில் சந்திரா.