போரில் வெல்ல ராஜ்நாத்சிங் பூஜை!




Image result for rajnath singh caricature



மோடியின் பாட்டுக்கு பாட்டு!


அண்மையில் பிரதமர் மோடி அகமதாபாத்தைச் சேர்ந்த பார்வையற்ற பெண்கள் ஆடிய நடன வீடியோவை பார்த்து வியந்து பாராட்டியுள்ளார். ‘அந்த் கன்யா பிரகாஷ் குரு’ எனும் அமைப்பினர் நடத்திய கார்பா நடனநிகழ்ச்சியில் பிரதமர் மோடி எழுதிய பாடல் வரிகளுக்கு இப்பெண்கள் ஆடியது குறிப்பிடத்தக்கது.
“கார்பா நடனமாடிய பார்வையற்ற மகள்களின் நடனம் என நெஞ்சைத் தொட்டது.” என டுவிட்டரில் நெகிழ்ந்துள்ள மோடி, அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார். குஜராத்தின் கலாசார நடனமான கார்பாவில் பயன்படுத்திய பாடலை 2012 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது குஜராத்தியில் எழுதினார். அதன் பெயர் குமே ஏனோ கார்போ.
2


லடாக்கில் கேன்சர்!

ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதி, பனிபடர்ந்த தூய அழகு  அங்குள்ள மக்களுக்கு ஆபத்தாக மாறிவருகிறது. அதிகரிக்கும் புறஊதா கதிர்கள், குறைவான ஆக்சிஜன் பிரச்னைகளால் மக்களுக்கு புற்றுநோய் அறிகுறிகள் அதிகம் தோன்றியுள்ளன.
அசோகா மிஷன் திட்டத்தின் கீழ் அங்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 2 ஆயிரத்து 700 பேர்களுக்கு செய்த செக்-அப்பில் சூரியக்கதிர்களால் தோல் மற்றும் இரைப்பையில் புற்றுநோய் அறிகுறிகள் தெரியவந்துள்ளன. “நூற்றுக்கு 65 பேர்களுக்கு இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் உள்ளன. சரியான தரவுகள் சேகரிக்கப்படாததால் துல்லியமான எண்ணிக்கை தெரியவில்லை” என்கிறார் மருத்துவர் அதுல் சர்மா. குளிர்காலங்களில் பதப்படுத்திய இறைச்சி, அதி சூடான பானங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதும் முக்கிய காரணம். அறிகுறிகளை அலட்சியப்படுத்தும் இம்மக்கள் நோய் முதிர்ந்த பிறகே சிகிச்சைக்கு வருகின்றனர்” என்கிறார் மருத்துவர் சர்மா. தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் அளவும் லடாக்கில் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வு விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

3

முதலை நேசன்!


ஆற்றில் இருக்கும் முதலைகளை விசில் மூலம் அழைக்கமுடியுமா? மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தைச் சேர்ந்த சரத்கார் விசில் மூலமே முதலைகளை தொடர்புகொண்டு பிரமிக்க வைத்துள்ளார்.

கோழிப்பண்ணை வைத்துள்ள ராம்சந்தர் சரத்கார், விசிலடித்தாலே திரகோல் ஆற்றிலிருந்து 25 க்கும் மேற்பட்ட முதலைகள் அவரைத் தேடி கரைக்கு மின்னலென வருகின்றன. என்ன காரணம்? புதனும், சனியும் முதலைகளுக்கு ராம்சந்தர் அளிக்கும் கோழிகள்தான் காரணம். மீன்பிடிக்க செல்லும் கிராமத்தினர் யாரையும் முதலைகளை இதுவரை தாக்கியதில்லையாம். “முதலைகளை எளிதில் பழக்கப்படுத்த முடியும். ராம்சந்தரின் விசிலைப் புரிந்துகொள்வதும் அப்படித்தான்” என்கிறார் உயிரியலாளரான சோகம் முகர்ஜி. மும்பை, கோவா, டெல்லியிருந்து சுற்றுலா பயணிகள் முதலைகளை பார்க்க வருவதால் ஆற்றுப்படுகையை ‘மகர் தர்ஷன்’ எனும் முதலைகளை காணுமிடமாக வனத்துறை மாற்றவிருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

4

பாக் எல்லையில் பூஜை! –

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்திய – பாக் எல்லையில் முதல்முறையாக சாஸ்‌த்ரா பூஜை செய்துள்ளார்.

ராஜஸ்தானின் பைகனெர் அருகிலுள்ள இந்திய- பாக் எல்லைக்கு வருகை தந்த ராஜ்நாத்சிங், பிஎஸ்எஃப் வீரர்களுடன்  இணைந்து தசரா விழாவைக் கொண்டாடியதோடு முதல்முறையாக சாஸ்த்ரா பூஜையையும் நடத்தினார். ராவணனை. ராமன் வீழ்த்திய வெற்றியைக் கொண்டாடி நடத்தப்படும் பூஜையே சாஸ்த்ரா பூஜை. இரண்டு நாள் சுற்றுப்பயணத்தில் ராணுவப்பிரிவுகள் உள்ள இடங்களில் நடைபெறும் சாலைகளை பார்வையிடுவதோடு ‘படா கானா’ எனும் வீரர்களுடன் உணவுண்ணும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். கடந்தாண்டு ராஜ்நாத்சிங் சீன- இந்திய எல்லையில் தசராவை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. இந்திய – பாக் எல்லை 3 ஆயிரத்து 323 கி.மீ நீளம் கொண்டது.

படம் உதவி: யாதவ்