'நாய'கன் இவர்தான்!


நாயைக் காப்பாற்றிய நாயகன்!



Image result for dog


அண்மையில் பஞ்சாபின் அமிர்தசரஸில் நடந்த தசரா விழா நிகழ்வில் ரயில்பாதையில் நின்று வேடிக்கை பார்த்த அறுபது பேர் பலியான சோக நிகழ்வு நீங்கள் அறிந்த செய்தி. ஆனால் மும்பையில் நாயைக் காப்பாற்ற மெதுவாக மெட்ரோ ரயிலை ஒட்டிய ஓட்டுநர் பற்றிய செய்திதான் இன்று ஹாட் நியூஸ்.
முலுந்த் ரயில் நிலையம் நோக்கி வந்த உள்ளூர் ரயில் திடீரென பிளாட்பாரத்திற்கு முன்பே நின்றுவிட்டது. ஆபீஸ் நேரத்தில் ரயிலை எதற்கு ஓட்டுநர் நிறுத்தினார் என பயணிகளுக்கும் குழப்பம். எட்டிப்பார்த்தபோதுதான் ரயில் வருவதை அறியாமல் ரயில் பாதையில் நாய் நின்றதும் அதனை காப்பாற்ற ரயில் ஓட்டுநர் ரயிலை வேகம் குறைத்து நிறுத்தியதும் தெரிய வந்துள்ளது. 

சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி ஹார்ன் அடித்து நாயை விலகச்செய்து ரயிலை ஓட்டிய ரயில் ஓட்டுநர் ஜி.எஸ்.பிஷ்ட், தன் மனிதநேய செயல் மூலம் ஒரேநாளில் மெட்ரோ நாயகனாகி விட்டார். இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையில் 245 பசுக்களை இந்திய ரயில்கள் காவு வாங்கியுள்ளன. இந்திய மாநிலங்களிலேயே ஒடிஷாவில் ரயிலில் அடிபட்டு இறக்கும் விலங்குகளின் எண்ணிக்கை மிக அதிகம்.