ஒரு ரூபாய்க்கு இசை ஆசிரியர்!


ஒரு ரூபாய் இசை ஆசிரியர்! –


Image result for guidar rao




ஆந்திராவைச் சேர்ந்த சிவில் எஞ்சினியர், 55 ஆண்டுகளாக ஒரு ரூபாய் கட்டணத்தில் சிறுவர்களுக்கு இசைவாசிக்க கற்றுக்கொடுத்து வருகிறார்.

கிடார் ராவ் என ஆந்திராவில் புகழ்பெற்றுவிட்ட பொறியாளர் எஸ்.வி.ராவிடம் ஆந்திராவில் தினசரி மூன்று இடங்களில் மாணவர்கள் கிடார் பாடங்களை கற்றுவருகின்றனர். ஆந்திராபவன், விஜய் சௌக் ஆகிய இடங்களில் கிடார் கற்கவரும் மாணவர்களுக்கு தன்னுடைய கிடார்களை கொடுத்தே பாடம் சொல்லிக்கொடுக்கிறார் கிடார் ராவ். பொறியாளராக இருந்து கிடார் ஆசிரியராக மாறிய ராவிடம் கிடார் வாசிக்க கற்ற மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொடும். தற்போது 160 மாணவர்கள் இவரின் இசை வகுப்புக்கு தினசரி சீடர்களாக வந்துகொண்டிருக்கின்றனர்.

ஆர்வம் கொண்ட சிறுவர்களுக்கு இசை சென்று சேரவேண்டும் என ஆசைப்படும் கிடார் ராவ், மோடியின் ஸ்வச் பாரத் போல சங்கீத் பாரத் திட்டத்தில் இசையை இந்தியாவிலுள்ள மாணவர்களுக்கு கற்றுத்தரவேண்டும் என விரும்புகிறார். தெலுங்கானா பல்கலைக்கழகத்தில் இசைப்பட்டதாரியான கிடார் ராவ், மன அழுத்தத்தில் விழுந்து அதிலிருந்து மீள இசை கற்கத் தொடங்கியவராம்.