திருடர்களின் சூப்பர் கம்பெனி!


கொள்ளையர்கள் (பி) லிமிடெட்! –

Image result for thief


ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஆசிஷ் மீனாவுக்கு சுயதொழில் செய்ய ஆசை. கையில் காசில்லை; கால்குலேட்டர் மூளை மூலம் ப்ளூபிரிண்ட் போட்டவர் கொள்ளையர்களை வேலைக்கு அமர்த்தி தினசரி கொள்ளைடிப்பதற்கு மாதசம்பளம் வழங்கி போலீசாரையே வியக்க வைத்துள்ளார்.

படிப்பறிவற்ற, வேலையில்லாத ஏழுபேர்களை திருட்டு வேலைக்கு எடுத்து மாத இலக்குகளை சொல்லி தினசரி கொள்ளையடிக்க சொன்ன ஆசிஷ் மீனாவின் வயது 21 தான். டார்க்கெட் தாண்டினால் பேட்டா, கமிஷன் கொடுத்து உற்சாகப்படுத்திய ஆசிஷ் மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் கொடுத்து கொள்ளையர்கள் (பி) லிட். கம்பெனி நடத்தியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நகைகள், பைக்குகளை அபேஸ் செய்ததோடு விடாமல் பேராசையில் ஸ்மார்ட்போன்களை திருடியபோது மாட்டிக்கொண்டனர்.
சிவதாஸ்புரா, சனாகானெர் ஆகிய இடங்களில் கைவரிசை காட்டியவர்கள் ஆபீஸ் பிரதாப் நகரில் செயல்பட்டது. சிசிடிவி, போன் ஜிபிஎஸ் மூலம் டிராக் செய்து ரெய்டு போனதில் 33 போன்கள், லேப்டாப், தங்க நகைகள், நான்கு பைக்குகள் என போலீசார் மீட்டனர். அமேசிங் ஐடியா!