சீனாவில் நிலவே தெருவிளக்கு!


தெரு விளக்குக்கு பதில் நிலவு!



Image result for moon


சீனா தன் நாட்டிலுள்ள தெருவிளக்குகளை அகற்றிவிட்டு அதற்கு பதில் செயற்கை நிலவுகளை வானில் ஏற்றவிருக்கிறது. உடான்ஸ் அல்ல; 2022 ஆம் ஆண்டுக்குள் மூன்று செயற்கை நிலவுகளை விண்ணில் ஏற்றி மின்சார செலவுகளைக் குறைக்கும் ஐடியாவை யோசித்து வருகிறது சீன அரசு.
‘தெருவிளக்குகளுக்கு நிகரான வெளிச்சத்தை செயற்கை நிலவுகள் தருவதற்கான ஆய்வுகளில் உள்ளோம். விரைவில் நிலவை வட்டப்பாதையில் பொருத்துவோம்’’ என்கிறார் தியான்ஃபு புதுமாவட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கழக தலைவரான வூ சுங்ஃபெங்.

கண்ணாடிகளைப் பொருத்தி சூரிய ஒளியை பிரதிபலித்து நிலவொளியை விட 6 ஆயிரத்து 400 ச.கி.மீ பரப்பில் அதிக வெளிச்சத்தை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். “செயற்கை நிலவு பூமியிலிருந்து 500 கி.மீ தூரத்திற்குள் வட்டப்பாதையில் பொருத்தப்பட்டாலும் அதன் அபரிமிதமாக வெளிச்சம் ஆராய்ச்சியாளர்களால் கட்டுப்படுத்தப்படும். இதனால் விலங்குகள், தாவரங்களுக்கு எப்பிரச்னையுமில்லை” என்கிறார் ஆராய்ச்சியாளர் வூ சுங்ஃபெங். தெருவிளக்குகளை அகற்றி செயற்கை  நிலவை பயன்படுத்துவதால் சீனாவுக்கு ஆண்டுதோறும் 1.2 பில்லியன் யுவான்கள்(ரூ.13,94,37,24,300) மிச்சமாகும். செயற்கை நிலவு ஆராய்ச்சியை அமெரிக்கா, ரஷ்யா முன்னரே பரிசோதித்து கைவிட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


பிரபலமான இடுகைகள்