இடுகைகள்

தற்காப்புக்கலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடும்பத்தின் மரபணு தொடர்பில்லாத, ஆண்மையற்ற ஒருவனின் வாழ்க்கைப் போராட்டம்! ஸ்ட்ராங்கஸ்ட் அபாண்டட் சன் - மங்கா காமிக்ஸ்

படம்
  ஸ்ட்ராங்கஸ்ட் அபாண்டட் சன் 200+--- (சீனா) மங்கா காமிக்ஸ்   தொன்மைக் காலத்தில் நடைபெறும் போரில்,   வலிமையான   இனக்குழு, ஷே லுயான் எனும் இனக்குழுவைத் தாக்கி முழுமையாக அழிக்கிறது. இந்த தாக்குதலில் ஒரு மாணவன் மட்டும் தாக்கப்பட்டாலும் உயிரோடு இருக்கிறான். இந்த போர் நடைபெற்றது கூட அவன் மாஸ்டர் சம்பந்தப்பட்டதுதான். அவனது மாஸ்டராக உள்ள பெண்மணியை, இன்னொரு இனக்குழுவில் உள்ளவர் மணக்க விரும்புகிறார். ஆனால் மாஸ்டருக்கு விருப்பமில்லை. எனவே, திடீர் போர் நடத்தப்பட்டு பழிவாங்கப்படுகிறது. அதாவது அதிகாரம் உள்ள ஆண் மணம் செய்ய விரும்பினால, பெண் தனது உடலை விட்டுக்கொடுத்துவிடவேண்டும். அப்படி இணங்காவிட்டால் அவளையும் அவளைச் சார்ந்தவர்களையும் கொல்வது சீன கலாசார வழக்கம்.   இந்த வகையில்,   ஒட்டுமொத்த மாஸ்டர் சார்ந்த இனக்குழுவே இறந்துவிடுகிறது. தனது, மாணவனுக்காக மாஸ்டர் முன்னே நின்று தனது உயிரைவிடுகிறார். மாணவன் காப்பாற்றப்பட்டாலும் அவனது ஆன்மா முன்ஜென்ம நினைவுகளோடு நவீன உலகிற்கு வருகிறது. பொதுவாக இப்படி அமைக்கப்படும் கதையில், நவீன வாழ்க்கை வாழும் மனிதர், சோங்கியாக, பலவீனமாக, நிறைய அவமானங்களை சந்திப்

அம்மாவைப் பற்றிய உண்மையை அறிய தற்காப்புக் கலை கற்கும் மகனின் கதை! டோலுவா கான்டினென்ட் -

படம்
  டோலுவா கான்டினென்ட் - சீன டிவி தொடர் டோலுவா கான்டினெனட் - சீன டிவி தொடர் டோலுவா கான்டினென்ட் சீன டிவி தொடர்  ஷியாபோ ஷான் - டாங் சென் கிராமத்தில் காட்டிற்குள் இரும்பு பொருட்களை செய்யும் கொல்லர் தனது ஒரே மகனுடன் வாழ்ந்து வருகிறார்.   அவரது மகனுக்கு சில முக்கியமான தற்காப்பு கலைகளை சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார். ஆனால், அவனது அம்மா பற்றி ஏதும் சொல்வதில்லை. மகனுக்கு அம்மா பற்றி தெரிந்துகொள்ள ஆசை என்றாலும் கூட அப்பாவின் கடுங்கோபம் அறிந்து அமைதியாக இருக்கிறான். அப்பாவுக்கு கொல்லர் வேலை செய்வதற்கான விறகுகளை வெட்டி வந்து கொடுப்பது, சமையல் செய்வது மகன் டாங் சென்னின் வேலை. மற்றபடி கிடைத்த ஓய்வு நேரத்தில் சில தற்காப்பு கலைகளை பயிற்சி செய்கிறான்.. இந்த நேரத்தில் ஸ்பிரிட் ஹால் எனும் தற்காப்புக் கலை அகாடமியைச் சேர்ந்தவர், டாங் சென்னை ஆபத்து ஒன்றிலிருந்து காத்து அவனை ஒரு தற்காப்புக் கலை ஆன்ம ஆற்றல் சோதனைக்கு வரச்சொல்கிறார். ஆனால் டாங் சென்னின் அப்பாவோ,   நீ சோதனைக்கு எல்லாம் போக வேண்டாம். தனியாக அகாடமியில் படித்து நீ என்ன செய்யப்போகிறாய் என மறுக்கிறார். ஆனால் டாங்சென் சோதனைக்குப் போகிறான். அவ

முற்பிறப்பில் துரோகம் செய்த ஐந்து பேரரசர்களுக்கு எதிராக போராடும் வேட்டைக்காரன்! - டார்க் ஹன்டர்

படம்
  தி ஹன்டர் (or dark hunter) மங்கா காமிக்ஸ் சீனா ரீட்எம்.ஆர்க் 292----- ஐந்து பேரரசர்களால் துரோகம் செய்யப்பட்ட வீரன் ஒருவன் நெஞ்சில் வாள் பாய்ச்சி கொல்லப்படுகிறான். அவன் மறுபிறவியில் தாழ்ந்த குலத்தில் பிறந்து சமூகத்தின் வேறுபாடுகளையும் கடந்து தனது தற்காப்புக் கலை மூலம் தன்னைக் கொன்றவர்களை பழிவாங்குவதுதான் கதை. கதை இன்னும் முடியவில்லை தொடர்கிறது. படித்தவரையில் உள்ள கதையைப் பார்ப்போம். சென் பெய்மிங்கிற்கு நினைவு திரும்பும்போது, அருகில் அவனது தங்கை சூயி இருக்கிறாள். அவள்தான் அவனை எழுப்பிக்கொண்டிருக்கிறாள். வீட்டில் கடன் கொடுத்தவர்கள் சுற்றி நிற்கிறார்கள். எழும் சென் பெய்மிங்கிற்கு தான் யார், எப்படி இங்கு வந்தோம் என அனைத்துமே நினைவிருக்கிறது.துரோகத்தால் பறிபோன அவனது உயிர், சில நாட்களுக்குப் பிறகு   வேறு ஒரு உடலில் புகுந்திருக்கிறது. அதுதான், அந்த ஊரில் ஆதரவற்று வாழும் சென் குடும்பம். அதில் உள்ள உறுப்பினர்கள் அண்ணன் சென், தங்கை சூயி, பிறகு சென்னை ஆதரிக்கும் எப்போது அவனோடு இருக்கும் நண்பன் லேஸி பக். கதையின் தொடக்கத்தில் சென் பெய்மிங், அவனுக்கு இருக்கும் மூன்று மில்லியன் டாலர்

தனது பெற்றோரின் இறப்புக்கு காரணமானவர்களை பழிவாங்கத் துடிக்கும் மாவீரனின் வலிமிகுந்த பயணம்- மார்ஷியல் ரெய்ன்ஸ்

படம்
  மார்ஷியல் ரெய்ன்ஸ் மங்கா காமிக்ஸ் 550 (ஆன் கோயிங்) ரீட்எம்.ஆர்க் யே மிங், சூ லான் என்ற ஜோடிதான் இந்த காமிக்ஸின் அட்டகாசமான ஜோடி. இதைப் பார்க்கும் முன்னர் யே மிங்கின் வாழ்க்கையைப் பார்த்துவிடுவோம். யே மிங்கின் அப்பா, ஐந்து அரசுகளாலும் எதிரியாக பார்க்கப்பட்ட ஹவோசியன் செக்ட் எனும் அமைப்பில் இணைந்தவர் என வதந்தி பரப்பப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். அம்மா, யே குடும்பத்தைச் சேர்ந்தவரால் வல்லுறவு செய்யப்பட்டு இறந்துபோகிறார். தேசதுரோகி என்ற பெயரால் யே மிங்கின் அப்பா கொல்லப்படுவதில் யே குடும்பத்தில் சிலர் பயன் அடைகிறார்கள். அதேநேரம் யே மிங், தற்காப்புக் கலை கற்றால் நம்மை பழிவாங்குவான் என நினைத்து அவனது தற்காப்பு கலைத் திறன்களை முழுக்க ஊனமாக்குகிறார்கள் சக்தி வாய்ந்த யே குடும்ப உறுப்பினர்கள் சிலர். பெற்றோர் இல்லை. கற்ற தற்காப்புக் கலையும் அழிந்துவிட்டது. உண்ண ஒரு பருக்கை அரிசி கூட இல்லை. இந்த நிலையில் யே மிங் ஒரு பிச்சைக்காரரை சந்திக்கிறார். அவர் அவனுக்கு   உடலில் ஊனமாகிப் போன தற்காப்புக்கலை சக்தியை மீண்டும் உருவாக்கித் தருவதாக சொல்கிறார். ஆனால், அவனைக் கொன்று அவனது உடலில் தனது ஆன

தனது மகனைப்போன்ற சிறுவனுக்காக தனது ஆன்மாவை வாளாக மாற்றும் கரடி! தி பாய் அண்ட் தி பீஸ்ட் - அனிமேஷன்

படம்
  தி பாய் அண்ட் தி பீஸ்ட்  இயக்கம் - மமோரு ஹோசோடா அப்பா, அம்மாவை விட்டு பிரிந்துவிட குடும்பம் சிதைகிறது. அம்மா இறந்துவிடுகிறார். கடனுக்காக உறவினர்கள் வீட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துச் செல்கிறார்கள். இதனால் க்யூட்டா என்ற சிறுவன் ஆதரவற்று தெருவில் திரியும் நிலை. இந்த நேரத்தில் அவனுக்கு சில விலங்குகள் கண்ணில் படுகின்றன. அவற்றைப் பின்தொடர்ந்து செல்கிறான். அது ஒரு விலங்குகள் உலகம். அங்குள்ள கரடி ஒன்று அவனுக்கு ஆதரவளிக்கிறது. அதற்கு வலிமை இருக்குமளவு தற்காப்புக் கலையில் நுட்பம் இருப்பதில்லை. அந்த நுட்பத்தை சிறுவன் எப்படி கற்றுக்கொடுக்கிறான், தற்காப்பு போட்டியில் வெல்ல உதவுகிறான் என்பதே கதை.  இரண்டு உலகம் சார்ந்த கதை. ஜப்பானில் உள்ள தெருக்களில் உணவுக்கு பிறரிடமிருந்து திருடி சாப்பிடும் நிலையில் வாழும் சிறுவன், க்யூட்டா. அவனுக்கு அந்த நேரத்தில் எலி ஒன்று நட்பாகிறது. அவனது துன்பம், துயரம் என அனைத்திலும் உணர்ச்சி ரீதியான ஆதரவாக இருக்கிறது. பிறகுதான் விலங்குகள் உலகத்தில் கரடியை சந்திக்கிறான். அங்குதான், தனது உடலை வலிமையாக்கிக்கொண்டு கரடிக்கும் தற்காப்புக் கலையின் நுட்பங்களை கற்றுத் தருக

பிளாக் ஸ்பிரிட் ஆன்மாவை சாமுராயாக மாறி அடக்கும் ஸ்கூபி டூ! - அனிமேஷன்

படம்
  ஸ்கூபி டூ அண்ட் தி சாமுராய் ஸ்வோர்ட் (2009) ஹன்னா பார்பரா புரடக்‌ஷன்  வார்னர் பிரதர்ஸ்  ஸ்கூபி டூ டீமை அப்படியே ஜப்பானுக்கு தூக்கிச் செல்கிறார்கள். கதை அங்குதான் நடைபெறுகிறது. அங்குள்ள அருங்காட்சியகம் ஒன்றில், தொன்மையான பிளாக் ஸ்பிரிட் என்ற உருவம் பாதுகாப்பு கவசத்துடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திடீரென அந்த உருவம் அங்கிருந்து சக்திபெற்று கண்ணாடி பாதுகாப்புகளை உடைத்துக்கொண்டு தப்பி செல்கிறது.  சாமுராய் ஒருவரின் ஆன்மாவை பிரதிஷ்டை செய்த வாளைக் கொண்டுள்ள பிளாக் ஸ்பிரிட்டை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். இல்லையெனில் உலகிற்கு ஆபத்து ஏற்படும். வேறு வழியில்லை என்பதால், பேய்களின் மர்மங்களை மோட்டார் வேனில் வந்து கோமாளித்தனங்களை செய்து கண்டுபிடிக்கும் ஐந்துபேர் கொண்ட உறுப்பினர்களான ஸ்கூபி டூ டீமின் உதவியை நாடுகிறார்கள். அவர்கள் ஜப்பானுக்கு வந்து ஜப்பானிய பின்னணி இசையுடன் சாமுராய் ரோபோட்டுகளுடன் சண்டை போட்டு, புத்திசாலித்தனமாக திட்டங்களைப் போட்டு அருங்காட்சியக திருட்டுக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை.  ஃபிரெட், டெப்னே, வெல்மா, சேஜி, ஸ்கூபி டூ ஆகியோர் பொதுவாக என்ன செய்வார்கள்?

உலகின் டாப் சண்டைப்பட நடிகர்களில் நானும் ஒருவன்! - வித்யுத் ஜாம்வால்

படம்
  வித்யுத் ஜாம்வால் இந்தி நடிகர்  நீங்கள் இதுவரை நடித்து வந்த படங்கள் அனைத்துமே சண்டைப்படங்கள்தான். இப்போது உணர்ச்சிகள் சார்ந்த படங்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். ஏன்? பதினொரு ஆண்டுகளாக நான் கற்ற விஷயங்களை படத்தில் பயன்படுத்தியுள்ளேன். சண்டை படங்களிலிருந்து இப்போது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் படங்களுக்கு மாறியிருக்கிறேன். இப்போது படத்தை உருவாக்கும் முறைகளை கற்றுக்கொள்ள தொடங்கியிருக்கிறேன். எனக்கு பிடித்த விஷயங்களை படக்குழுவிடம் சொல்லுவேன். இப்போது நடித்துள்ள குதா ஹஃபீஸ் 2 படத்தில் கூட மூன்று சூஃபி பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனக்கு சூஃபி இசை பிடிக்கும் என்பதால் நான் கூறிய ஐடியா தான் இது. சண்டைப்பட நடிகராகத்தான் நிறைய படங்கள் நடித்துள்ளீர்கள். உங்களை எப்படி நீங்கள் புதுப்பித்துக்கொள்கிறீர்கள்? நான் மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றவன். பல்லாண்டுகளுக்கு முன்னர் கற்றாலும் கூட அதனை இன்னும் பயிற்சி செய்துகொண்டிருக்கிறேன். எனது படங்களிலும் நான் இதை மேம்படுத்தி பயன்படுத்துகிறேன். ஆனால் எப்போதும் இக்கலையை வைத்து ஒருவரை அடிக்கவேண்டும் என்று நினைத்ததே இல்லை. குதா ஹபீஸ் 2 படத்தின் இயக்குநர் ஃபாரூக்

தீயவாள் பயிற்சிமுறையைக் கற்க போட்டிபோடும் பேராசைக்காரர்கள்! - தி ஸ்மைலிங் ப்ரவுட் வாண்டெரர்

படம்
  ஸ்மைலில் ப்ரவுட் வாண்டரெர் சீன தொடர் மாண்டரின் மொழித்தொடர் தமிழில்.. எம்எக்ஸ்பிளேயர் தொன்மை சீனாவில் உய், ஓஷன், பௌத்தம் என பல்வேறு மதங்களைக் கடைபிடிக்கும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அனைத்து தலைவர்களையும் சந்தித்துப் பேசி முடிவெடுக்கும் திறமை உய் பள்ளிக்கு உண்டு. பிற பள்ளிகள் அனைத்தும் உய் பள்ளித் தலைவரின் கட்டளைகளை கேட்பார்கள். இதன் அனைத்து பள்ளி தலைவர்களும் கலந்துபேசி தங்களது பொது எதிரிகளை சமாளிப்பார்கள். இவர்களது பொது எதிரி, மந்திர சக்திகளை பயன்படுத்தும் அசுரர்கள். இவர்கள் டாபோ எனும் கலையைக் கற்றவர்கள்.  ஒரே பள்ளி ஒரே தலைமை என்ற கொள்கையை உய் பள்ளி தலைவர் எடுக்கிறார். இதற்காக கூலிப்படைகளை அமர்த்தி தனது கொள்கைகளுக்கு ஒத்துவராத பள்ளி தலைவர்களை கொல்கிறார். அவர்களின் பள்ளி கற்றுக்கொடுக்கும் தற்காப்புக்கலை நூல்களையும் திருடி வந்து பயிற்சி எடுக்கிறார். இதெல்லாம் தாண்டி அவருக்கு தீராத வேட்கையை ஏற்படுத்துவது தீயவாள் பயிற்சி எனும் வாள்சண்டை முறை.  இதனை ஒருவர் கற்றுவிட்டால் பிற வாள்பயிற்சி முறைகளை எளிதாக உடைக்க முடியும். பிரிந்துள்ள பள்ளிகளை ஒன்றாக இணைத்து உய் பள்ளி என்ற பெயரில் அதன

தற்காப்புக்கலையை கற்கும் தறுதலை நாயகனின் கதை! - அரஹான்

படம்
அரஹான் 2004 இயக்கம்  ரியூ சியுங் வான் ட்ராஃபிக் போலீஸாக நேர்மையாக பணி செய்து வருபவர், சாங் வான்.ஒருநாள் திருடன் ஒருவரின் பர்சைத் திருடிக்கொண்டு பைக்கில் பறக்கிறான். அதை தடுக்கும் முயற்சியில் பெண்ணிடம் கடுமையாக அடிபடுகிறார். அவரை அப்பெண் தன் தந்தை உள்ளிட்ட ஐந்து குருமார்களிடம் கொண்டு சென்று குணமாக்குகிறாள். அப்போது அவர்களுக்கு சாங் வான் உடல் தற்காப்புக் கலைக்கான ஏற்றது என தெரிய வருகிறது. எனவே அவர்கள் தாவோ தற்காப்புக்கலையை விலையின்றி கற்றுக்கொடுக்க முன்வருகிறார்கள். சாங் வான், பெண்களை வெறியோடு கவனித்துக்கொண்டு அலைபவன். அவனால் மனதைக் கட்டுப்படுத்தி தாவோ கலையைக் கற்க முடிந்ததா? ஐந்து குருமார்களையும் கொல்ல துரத்தும் வில்லனை வெல்ல முடிந்ததா? தொன்மையான தாவோ முத்திரையை பாதுகாக்க முடிந்ததா என்பதுதான் கதை. படத்தின் கதை பற்றி இயக்குநர் ரொம்பவெல்லாம் யோசிக்கவில்லை. கதை அதுபாட்டுக்கு கிடக்கட்டும் என காமெடியில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். இதனால் தற்காப்புக் கலை பற்றிய  விஷயம் டேக் இட் ஈஸியாக கையாளப்பட்டிருக்கிறது. நாயகன் ஏறத்தாழ பார்க்கும் பெண்களை உள்ளாடை வரை நோட்டமிட்டு பிரமி

தமிழ்நாட்டில் தோன்றிய தற்காப்புக்கலை களரி!

படம்
உடலினை உறுதிசெய்! நம் கனவுகளைச் சாத்தியப்படுத்த மனபலத்துடன் உடல் பலமும் அவசியத் தேவை. அதற்காக உதவுபவைதான் தற்காப்பு கலைகள். அண்மையில் இந்தியத் தற்காப்பு கலைகளில் ஒன்றான களறி பயட்டு புகழ்பெற்று வருகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக களரி வீரர்கள் திரளக்கூடாது என 1793 ஆம் ஆண்டு கேரள ஆளுநர் டோப், இக்கலைக்கு தடைவிதித்த வரலாறும் உண்டு. சென்னை வேலூரில் களரி பயிற்சிகளை அளித்துவரும் களரியில் ஷத்ரியா மையத்தை அணுகி, பயிற்சியாளர் சான் கிரிதரனிடம் பேசினோம். இன்றைக்கு களரிப் பயட்டுவின் தேவை என்ன? உங்களின் உடலையும் மனதையும் புத்துணர்வோடும், நெகிழ்வுத்தன்மையோடும் வைக்க களறிப் பயட்டு உதவுகிறது. இக்கலை கேரளாவில் புகழ்பெற்றாலும் இது தோன்றியது தமிழ்நாட்டில்தான். தோற்றுவித்தவர், அகத்திய முனிவர். களரி பயட்டுவில் கற்பித்தல் முறைகள் உண்டா? வடக்கு, தெற்கு என இருமுறைகளில் களரியைச் சொல்லித் தருகிறோம். ஆயுதங்கள், கற்பிக்கும் முறை என சில விஷயங்கள் மட்டுமே இதில் மாறுபடும். வடக்கு முறையில் மேபயட்டும், தெற்கு முறையில் நிழல் சண்டையும் பிரபலமானது. அடிப்படை பயிற்சிக்குப் பிறகு கம்பு, கத்தி, வாள், ஈட்டி ஆக