இடுகைகள்

மர்மம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸிசோபெரேனியா பிரச்னை கொண்ட மருத்துவப்படிப்பு மாணவன் கண்டுபிடிக்கும் உளவியல் மர்மங்கள்!

படம்
  ஜர்னி அக்ராஸ் தி நைட் சீன டிவி தொடர்  26 அத்தியாயங்கள்  லி ஜியா, சீனாவிலிருந்து ஹாங்காங்கிற்கு உளவியலாளர் படிப்பை படிக்க வருகிறார். அவர் அப்படி படிக்க வர அவரது குடும்பம் முக்கியமான காரணம். அவரது அம்மாவிற்கு ஸிசோபெரேனியா இருக்கிறது. அந்த நோய் வந்துதான் அவர் மனநிலை சிக்கலாகி இறக்கிறார். அடுத்து இதே பிரச்னையில் அவரது அண்ணன் கூட மாட்டிக்கொள்கிறார். எல்லோருமே இருபத்து நான்கு வயதில் மனநல பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். லி ஜியாவிற்கு இன்னும் சில மாதங்களில் 24 வயதாகப்போகிறது.  தனது பிரச்னையை ஹாங்காங்கிலுள்ள பேராசிரியருக்கு விளக்கி கூற அவர் லி ஜியாவுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கி படிப்பில் சேர்த்துக்கொள்கிறார். லி ஜியா படிப்பில் இணைகிறார். ஆனால் தங்குவதற்கு ஹாஸ்டலில் இடம் கிடைக்கவில்லை. அப்போதுதான் கல்லூரி வளாகத்தில்   உளவியல் பிரச்னை கொண்ட ஒருவரிடமிருந்து இளம்பெண் ஒருத்தியைக் காப்பாற்றுகிறார். செங்குவான் சாசா எனும் அவள், தனக்கு தெரிந்த இடத்தில் வாடகைக்கு இடம் இருக்கிறது. மிகவும் குறைந்த வாடகை என்று சொல்லி வினோதமான ஆட்கள் உள்ள இடத்தில் அறையைக் காட்டுகிறாள். அப்போதுள்ள சூழலில் லி ஜியாவுக்கும் வேறு

சீக்ரெட் கோட் வழியாக படுகொலை செய்யும் குழுவை கண்டுபிடிக்க போராடும் முன்னாள் எப்பிஐ ஊழியர்! - சீக்ரெட் கோட்(சைபர்)

படம்
                சீக்ரெட் கோட் எம்எக்ஸ் பிளேயர் Series Directed by  Majdi Smiri Mohamed Sayed Bisheer ... (creator) (8 episodes, 2021) Mohamed Sayed Bisheer ... (head writer) (8 episodes, 2021) Victor Mathieu ... (head writer) (8 episodes, 2021) Majdi Smiri ... (creator) (8 episodes, 2021) Majdi Smiri ... (writer) (8 episodes, 2021) Justin Escue ... (3 episodes, 2021) Daniel H. Friedman ... (2 episodes,

உளவியல்ரீதியில் பாதிக்கும் கதைகள - ஆல்பிரட் எழுதிய மர்மக்கதைகள்!

படம்
ஆல்பிரட் ஹிட்ச்சாக் மர்மக்கதைகள் விகடன் பிரசுரம் இவை எதுவும் ஆல்பிரட் எழுதிய கதைகள் கிடையாது. பிற எழுத்தாளர்களின் கதைகளை இயக்குநர் ஆல்பிரட் சிறிது மாற்றி அதனை தனக்கான கதைகளாக மாற்றியிருக்கிறார். எதற்கு சினிமாவாக எடுக்கத்தான். அனைத்து கதைகளுமே ஆல்பிரட்டின் கைவண்ணத்தில் கடும் திகிலை மனதில் ஊட்டுகின்றன. அதில் எந்த சந்தேகமும் வேண்டும். மொழிபெயர்ப்பு கதைகள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. அதை நினைவில் கொண்டு படிக்கவேண்டியதில்லை. நடைபெறும் சூழல்கள், இடம் ஆகியவற்றை புரிந்துகொண்டால் எளிதாக நீங்கள் கதையை உள்வாங்க முடியும். அதற்காக சொன்னேன். இதில் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து பரம்பரை பற்றி கேள்விகளை ஒருவர் நிரப்புவார். பின்னர் அந்த நிறுவனத்தில் உயர் பதவிகளை எட்ட சாம, பேத, தண்ட முறைகளை பின்பற்றுவார். இக்கதை திரைப்படத்திற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளது. கணவர் வர தாமதம் ஆகிறது. புயல் மழை, மனைவியின் மனதில் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது என்று செல்லும் கதை முழுக்க அக உணர்வுகளை முன்னிலைப்படுத்துகிறது. இந்த வகையில் இதில் கைவிடப்பட்ட வீடு போன்ற தோற்றத்திலுள்ள வீட்டின் அருகில்

உலகை மிரட்டிய சார்லஸ் சோப்ராஜ்!

படம்
சார்லஸ் சோப்ராஜ் ! பிகினி கொலைகாரர் என அழைக்கப்படும் சோப்ராஜ் இருபது சுற்றுலா பயணிகளைக் கொன்றார். இதற்காக சிறையில் அடைத்தாலும் அங்கிருந்தும் தப்பித்து போலீசாருக்கே தண்ணி காட்டிய ஆள். 1944 ஆம் ஆண்டு வியட்நாமில் பிறந்தார் சோப்ராஜ். தந்தையற்ற சூழலில் தெருவில்தான் வறுமையான வாழ்க்கை. அவரது தாயும் இவரும்தான்  அச்சூழலில் தவித்தனர். பின்னர் தாய் பிரெஞ்சு அதிகாரியை திருமணம் செய்ய சூழல் மாறியது. 1960 ஆம் ஆண்டு ஐரோப்பாவுக்குச்சென்றவர், தன் குற்ற அதிகாரத்தை கட்டவிழ்த்தார். சிம்பிளாக ஆட்டோவைத் திருடினார். அதற்கு வசமாக சிக்க, சிறையில் தள்ளிவிட்டனர். பின்னர் சிறை தண்டனை அனுபவித்தவர் வெளியே வந்தார். பார்சி பெண் காதலைத் தூண்ட, யோசிக்கவெல்லாம் நேரமில்லை. குற்றத்திற்கு துணை வேண்டாமா? உடனே கல்யாணம். சந்தால் சம்பாக்னன் என்ற பெண்ணுடன் ஐரோப்பா முழுக்க நாடோடியாக அலைந்தனர். காசுக்கு கடத்தல், கொள்ளை என என்ன முடியுமோ அதனைச் செய்தனர். சகல சௌக்கியங்களுடன் வாழ்ந்தனர். 1973 ஆம் ஆண்டு சிறையிலிருந்து தப்பியவர், காதல் மனைவியுடன் காபூலுக்கு வந்தார். இங்கும் சுற்றுலா பயணிகளிடம் ஆட்டையைப் போட்டு வாழ்ந்தனர்

காணாமல் போன மனைவிகள் - க்ரைம் ஆய்வு!

படம்
பெண், பணம், நிலம் ஆகியவை எப்போதும் பிரச்னையானவைதான். இதிலும் திருமண உறவு பொய்க்கும் போது நொடியில் ஏற்படும் கோபம், திருமணம் கடந்த உறவுகளின் இன்பம், சொத்துக்கான துரோகம் என வழக்குகளில் பல ட்விஸ்டுகள் உண்டு. இதுவும் அப்படியான வழக்குகளில் சில விஷயங்கள்தான்.  மாயமாய் மறைந்தவள் - மிச்செல் ஹாரிஸ் 2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. கூடுதலாக ஒரு கொலையும் நடந்தது. மிச்செல் என்ற பெண்மணி ஓட்டி வந்த கார் தனியாக ரோட்டில் நிற்க, ஆளை எங்குமே காணோம். வீட்டில் சில துளிகள் ரத்தம் மட்டும் இருக்க, அங்கு அப்பாவியாக நின்ற கணவர் கல் ஹாரிஸை குற்றவாளி என கைது செய்து கோர்ட்டில் நிறுத்தினர். அப்போது ஆண்டு 2005. கணவரைக் கைது செய்ய ரத்தம் மட்டுமே ஆதாரம். இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்னர், சாட்சிகள் அவரை காரினருகில் வேறொரு ஆணுடன் பார்த்ததாக பல்டியடிக்க, விசாரணை நீதிபதியையே பங்கம் செய்தது. அதுவரையில் மட்டுமல்ல இன்றுவரையிலுமே மிச்செல்லின் நகத்துணுக்கைக் கூட  போலீஸ் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சாட்சிகளில் கபடி ஆட்டத்தால் கல் ஹாரிஸ் 2005 ஆம் ஆண்டு  20

தனியாக நிற்கும் அவுட்ஹவுஸ் மர்மம்!

படம்
தனியாக நிற்கும் அவுட்ஹவுஸ்! மிச்சிகனிலுள்ள செடார் ஏரி அருகே, அவுட் ஹவுஸ் ஒன்று உள்ளது. இது எதற்கு கட்டப்பட்டுள்ளது என்றால் பலரும்  பல கதைகளைப் பேசுவார்கள். இதனைக் கட்டியவர் பெயர் வில்லியம் நெல்சன். இவர் தன்னுடைய மனைவி மற்றும் ஏழு மகள்களிடமிருந்து சிறிது தனிமை விரும்பி இதனை அமைத்தார். இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த ஓய்வறையில் கழிவறை வசதிகள் உண்டு. பெரும்பாலும் ஏரியைச் சுற்றிப்பார்க்க வரும் பயணிகளே இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். 1875 ஆம் ஆண்டு உருவான இந்த அவுட்ஹவுஸ் சிலமுறை தீ விபத்துகளைச் சந்தித்து மீண்டிருக்கிறது. நன்றி: அட்லஸ் அப்ஸ்குரா

புகைப்படக்காரரின் கண்டுபிடிப்பு!

படம்
புகைப்படக்காரரின் கண்டுபிடிப்பு ! இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அன்செல் ஆடம்ஸ் மிகச்சிறந்த புகைப்படக்காரர் . இவரின் Denali and Wonder Lake   என்ற அலாஸ்காவில் எடுக்கப்பட்ட புகைப்படம் 1940 ஆம் ஆண்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது . பொதுவாக போட்டோகிராபர்கள் கேமராவில் பயன்படுத்தி ஃபிலிம் , ஃபில்டர் பற்றி நினைவில் வைத்திருப்பார்கள் . நாள் , நேரம் எல்லாம் ஆடம்ஸ் குறித்துவைக்கவில்லை . இதுபற்றி ஆய்வு செய்த டெக்ஸாஸ் பல்கலைக்கழக வானியல் ஆய்வாளரான ஆல்சன் , ஏரி மர்மத்தை பின்னாளில் கண்டறிந்தார் . ஏரியில் நிலவு தெரியும் படத்தையும் , ஆடம்ஸின் ஏரி படத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்தார் ஆல்சன் . டோபோகிராபி மூலம் ஆய்வாளர் ஆல்சன் மற்றும் அவரது மாணவரான அவா போப் இணைந்து கணினி புரோகிராம் ஒன்றை எழுதி ஏரி மற்றும் நிலவு இருந்த படங்களை கணக்கிட்டனர் . இதில் ஏரியில் நிலவு தெரியும் படம் எடுக்கப்பட்ட நேரம் 1948 ஆம் ஆண்டு இரவு 8.48 என்றும் ஆடம்ஸின் ஏரி படம் எடுக்கப்பட்டது அதே ஆண்டு ஜூலை 15, அதிகாலை 3.42 எனவும் கண்டுபி

கொலைகார குடும்பம்!

படம்
கொலைகார குடும்பம் ! அமெரிக்காவின் கான்ஸாஸ் பகுதியிலுள்ள செர்ரிவேலே பகுதிக்கு புதிய குடும்பம் ஒன்று இடம்பெயர்ந்தது . பெண்டர் சீனியர் குடும்பத்தலைவர் . இவரின் நோய்களை குணமாக்கும் சக்தி கொண்ட மனைவி 'ma' என அழைக்கப்பட்டார் . இக்குடும்பம் தன் வீட்டை இரண்டாக பிரித்து ஒன்றை அங்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு அறை , உணவு கொடுத்தும் அதன் பின்புறத்தை தங்கள் வீடாகவும் மாற்றி வாழ்ந்து வந்தது . மூத்தவர்கள் ஜெர்மனும் இளையவர்கள் ஆங்கிலமும் பேசிய இவர்களின் இடத்தில் தங்கிச்சென்ற பலரும் காணாமல் போக தொடங்கினர் . தொற்றுநோய் என்ற சப்பைக்கட்டும் கூட காணாமல் போகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்க உதவவில்லை . மருத்துவர் வில்லியம் யார்க் காணாமல் போனபின்புதான் இந்த விவகாரம் சூடுபிடித்தது . அவரின் சகோதரர்களான கலோனல் எட்வர்ட் யார்க் , கான்ஸாஸ் செனட்டர் அலெக்ஸாண்டர் யார்க் ஆகிய இருவரும் வழக்கை துப்பறியத்தொடங்கினர் . பெண்டரின் வீட்டில் ரத்தக்கறைகள் இருந்தன . அதனைப் பின்பற்றி தோட்டத்திற்கு சென்று தோண்டியவுடன் வந்த முதல் பிணம் டாக்டருடையது . அடுத்தடுத்து 21 பிணங்கள் . அனைவரின் தலையு