இடுகைகள்

ஆல் இன் ஆல் அறிவியல்!

படம்
சீனா ஜெயிக்க காரணம் என்ன ? 2016 ஆம் ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி 264 பில்லியன் டாலர்கள் எனில் சீனாவின் ஏற்றுமதி 2,098 பில்லியன் டாலர்கள் . இந்தியச்சந்தையை சீனர்கள் எப்படி வளைத்தார்கள் என்பதை பார்ப்போம் . மெகா தயாரிப்பு : இந்தியர்கள் இரண்டு மெஷின்களில் குடம் செய்கிறார்கள் என்றால் சீனாவில் 70 மெஷின்கள் அதை செய்கின்றன . பணியாட்களின் உற்பத்தித் திறன் 5 மடங்கு அதிகம் . நூறு பணியாளர்களை பணியில் அமர்த்த Industrial Disputes Act of 1947,Contract Labor Act of 1970 ஆகிய சட்டங்களின் குறுக்கீடு இங்கு அதிகம் . ஊழலும் போக்குவரத்தும் : ஊழல் பட்டியல் 2016 படி 176 நாடுகளில் இந்தியாவும் சீனாவும் 76 இடம் வகித்தாலும் தினசரி வாழ்வில் சீனர்களுக்கு ஊழல் குறுக்கீடு குறைவு . மேலும் யூனியன்களின் வரைமுறையற்ற ஸ்ட்ரைக் தொல்லைகள் சீனாவில் குறைவு . மும்பை - டெல்லி தூரத்தைவிட சீனாவின் குவாங்சூவிலிருந்து மும்பை 5 மடங்கு தூரம் அதிகம் . ஒரு கன்டெய்னருக்கு ஆயிரம் டாலர் செலவெனில் , ஒரு சிலைக்கு 4 சென்ட்ஸ் . இதோடு தடையற்ற மின்சாரம் , அரசு மானியங்கள் ஆகியவையும் சீனா சந்தையில் ஜெயிக்க உதவி

"பணமதிப்புநீக்கம் பற்றி அரசுதான் கூறவேண்டும்"- தாமஸ் ஃபிரான்கோ

படம்
 நேர்காணல் " பணமதிப்புநீக்க நடவடிக்கையைப் பற்றி அரசுதான் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் " தாமஸ் ஃபிரான்கோ ,AIBOC தமிழில் : ச . அன்பரசு பணமதிப்பு நீக்கம் என்பது , அமல்படுத்தப்பட்ட நான்கு மாதங்களுக்கு வங்கி ஊழியர்களுக்கு கடுமையான பணிச்சுமை தந்தது . அதைப்பற்றி கூறுங்கள் . பணமதிப்பு நீக்கத்தின் முதல்நாளில் மக்கள் பொறுமையுடன்தான் இருந்தனர் . அனைத்து வங்கிகளுக்கும் தேவையான தொகை அனுப்பப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததும் பிரச்னை தீவிரமானது . ஏனெனில் நாட்டிலுள்ள பல வங்கிகளுக்கும் பணம் சென்று சேரவேயில்லை . ரிசர்வ் வங்கி மூலம் கிடைத்த பணத்தையும் வங்கிகளின் பணநிர்வாக அமைப்பு உடனே வங்கிகளுக்கு அனுப்பவில்லை என்பதன் விளைவாக , வங்கிகளில் கி . மீ நீளத்தில் மக்கள் நிற்கத்தொடங்கினார்கள் . ஆனால் ரிசர்வ் வங்கி , பணம் கிடைத்துவிட்டது என தொடர்ந்து அறிக்கை வெளியிட மக்களின் கோபம் , வங்கி ஊழியர்களின்மேல் திரும்பியது . நிதிஅமைச்சகமும் , ஆர்பிஐயும் தங்கள் பொறுப்பை கைகழுவியதன் விளைவு இது . மக்கள் தங்களின் சேமிப்புத் தொகை கிடைக்காமல் இறந்த துயரம் போலவே , வாடிக்கையாளர்களின்

"உண்மையை உலகிற்கு சொல்வதே பத்திரிகையாளரின் வேலை"

படம்
" உண்மையை உலகிற்கு சொல்வதே  பத்திரிகையாளரின் வேலை " நேர்காணல் : மைக்கேல் ரெசண்டெஸ் தமிழில் : ச . அன்பரசு போஸ்டன் க்ளோப் பத்திரிகையில் புலனாய்வு செய்தியாளராக 20 ஆண்டுகள் பணிபுரிந்த புலிட்ஸர் பரிசு வென்றுள்ள மைக்கேல் , பத்திரிகையாளர் , ஆசிரியர் என பல்வேறு பதவிகளை திறம்பட வகித்துள்ளார் . 2003 ஆம் ஆண்டு கத்தோலிக்க சர்ச்சில் நடந்த பாலியல் விவகாரங்களை எழுதியது மைக்கேலின் பெயரை இதழியல் உலகம் தாண்டி பலரது மனதிலும் கவனப்படுத்தியது . பின்னர் வெளியான ஸ்பாட்லைட் படமும் இவரது கட்டுரையைப் பற்றியதேயாகும் . அண்மையில் இந்தியாவிற்கு செய்தி மாநாட்டில் கலந்துகொண்ட மைக்கேல் ரெசண்டெஸிடம் பேசினோம் . அமெரிக்க பத்திரிகைத்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த முக்கிய மாற்றமாக நீங்கள் எதைக் கூறுவீர்கள் ? மிக சிக்கலான காலகட்டம் இது . அமெரிக்காவிலுள்ள பல்வேறு பாரம்பரிய செய்தி நிறுவனங்களும் கூட நிதி நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியவில்லை . நாளிதழ்களின் வருமான வழிகள் அனைத்தும் இணையத்தில் பாதாளத்தில் விழுந்துவிட்டன என்பதுதான் இன்றைய நிலை . பல்வேறு நிறுவனங்களும் தங்களது பணியாளர்க

வெளிப்படைத்தன்மை இன்றைய அரசுகளுக்கு தேவை! -கோபி அன்னான்

படம்
முத்தாரம் நேர்காணல் வெளிப்படைத்தன்மை இன்றைய அரசுகளுக்கு தேவை ! கோபி அன்னான் , முன்னாள் ஐ . நா செயலாளர் . தமிழில் : ச . அன்பரசு ஐ . நா சபையின் பொதுசெயலாளராக பத்து ஆண்டுகள் பணி . பணியிலிருந்தபோதும் ஆப்பிரிக்காவில் நடைபெறும் வரி ஏய்ப்புக்குக்கும் ஊழல்களுக்கும் எதிராக தன் குரல் உயர்த்திய ஒரிஜினல் அஞ்சா நெஞ்சர் . ஆப்பிரிக்கா ஏன் இன்னும் வறுமையிலேயே உள்ளது ? ஆப்பிரிக்கா ஏழை நாடல்ல . வளமான நிலங்களையும் வறுமையான மக்களையும் கொண்டுள்ளது . வெளிநாட்டிலுள்ள ஆப்பிரிக்கர்களால் நாட்டிற்கு கிடைக்கும் தொகை 160 பில்லியன் டாலர்கள் . நாட்டின் வளங்கள் 200 பில்லியன் அளவு வெளியே சென்றுவிடுவதால்தான் ஆப்பிரிக்காவிற்கு இந்த அவலநிலை . 2013 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா அறிக்கைப்படி , காங்கோவுக்கு (2010-2012) காப்பர் , கோபால்ட் கனிமங்களை வர்ஜின் தீவுகளிலுள்ள நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததில் 1.36 பில்லியன் நஷ்டமாகியுள்ளது என்று கூறியுள்ளீர்கள் . நஷ்டதொகை , காங்கோவின் இரண்டாண்டு கல்வி மற்றும் மருத்துவ பட்ஜெட்டிற்கானது . தவறு எங்கே நிகழ்கிறது ? அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களுடன்

அறிவியல் பக்கங்கள்!

படம்
ஆஸ்திரியாவின் புதிய தலைவர் ! செபாஸ்டியன் கர்ஸ் ஆஸ்திரியாவை ஆளும் தகுதிகொண்ட இளம் தலைவராகி உள்ளார் . ஆஸ்திரிய தேர்தலில் 30% வாக்குகளைப் பெற்றுள்ள கன்சர்வேடிவ் கட்சித்தலைவரான (OVP) செபாஸ்டியன் , 27 வயதில் வெளியுறவு அமைச்சராக ( ஐரோப்பாவிலேயே இளம்வயது ) நியமிக்கப்பட்டார் . அமெரிக்கா , சீனா , ரஷ்யா , ஜெர்மனி , ஃபிரான்ஸ் , இங்கிலாந்து , வியன்னா உள்ளிட்ட நாடுகளோடு அணுஉலை டீலிங்குகளை கச்சிதமாக பேசி முடித்த சாமர்த்தியசாலி . மசூதிகளுக்கு வெளிநாட்டு நிதியுதவி , இஸ்லாமியர்கள் பொதுஇடத்தில் பர்கா அணிவது ஆகியவற்றுக்கு தடா போட்டு ஜெர்மனிய மொழியில் குரான் ஓதச்சொன்ன வலதுசாரி மனிதர் செபாஸ்டியன் . ஆஸ்திரியாவில் ஐந்து ஆண்டுகள் வசிக்காத அகதிகளுக்கு அரசின் சலுகைகள் கிடையாது என்று சொன்ன பெரிய மனசுக்காரர் 2016 ஆம் ஆண்டு அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழையும் பால்கன் வழியை மூடிய இரும்பு நெஞ்சுக்காரரான செபாஸ்டியனை அதிகார பசி கொண்ட நியோலிபரல் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள் . 2 தொட்டால் உணரும் பாக்டீரியா ! நரம்புகளின் அமைப்பே இல்லாத பாக்டீரியாவுக்கு தொடும் உணர்வு உள்ளதாக ஆராய்ச்சியாள

ரோனி பக்கங்கள்!

படம்
டாய்லெட்டில் தங்கம்! இங்கிலாந்து ட்ரைனேஜில் எண்ணெய் கட்டிகள் குழாயை அடைக்கின்றன என்றால் ஸ்விட்சர்லாந்தில் டன்கணக்கில் தங்கம் , வெள்ளி டாய்லெட்டில் கிடக்கின்றன . குண்டுமணி தங்கம் வாங்க ஆஃபர் கேட்டு பில் கம்பேர் செய்து நாயாய் அலைந்தும் பைசா பிரயோஜனமில்லை . ஸ்விஸ்ஸில் மட்டும் எப்படி ? ஸ்விஸ்ஸிலுள்ள ஜூரா பகுதி ட்ரைனேஜ் குழாய்களில் கடந்த ஆண்டு  43 கி . கி தங்கம் , 3 டன் வெள்ளி பெறப்பட்டது உண்மை . மதிப்பு 3.1 மில்லியன் டாலர்கள் . உடனே ட்ரைனேஜ் குழாய்களில் இறங்கிவிடாதீர்கள் . வாட்ச் , கெமிக்கல் மற்றும் மருந்துகம்பெனிகளின் கழிவுகளிலிருந்து கிடைத்த மைக்ரோகிராம் உலோகங்களின் அளவு இது . தொழில்நிறுவனங்கள் உலோகங்களை உருக்கி பயன்படுத்த முடியாத அளவு என்பதால் இதனை கழிவாக அனுப்பிவிடுகின்றனர் . செய்தியில் தங்கம் பற்றிய செய்தியைக் கேட்ட ஆசை விடாத மக்கள் தங்கவேட்டையை தங்கள் குடிநீர் குழாயிலும் தொடர்ந்து வருகின்றனர் . 2 மைனஸ் பிளஸ் மைனஸ் அமைச்சர் ! ஸ்கூலுக்கு இன்ஸ்பெக்‌ஷனுக்கு கல்வி ஆபீசர் டீம் வருகிறதென்றால் , முன்னமே டீட்டெய்ல் தெரிந்துகொண்டு , பிரியாணி சமைத்து காத்திருப்பது

டிஎன்ஏ தூதர்! -ச.அன்பரசு

படம்
டிஎன்ஏ தூதர் ! - ச . அன்பரசு ஹோமோசெபியன்களான மனித இனம் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி பெற்றுவர டிஎன்ஏ , ஜீன்கள் முக்கிய காரணம் . இன்று நாம் பெற்றுள்ள வளர்ச்சி என்பது லட்சக்கணக்கான ஆண்டுகளின் விளைச்சல் . அறிவியல் வளர்ச்சி டல்லாக இருந்தபோது , டிஎன்ஏ மற்றும் ஜீன்களில் ஏற்படும் பர்மனன்ட் குளறுபடிகள் முன்பு மருத்துவர்களுக்கு அசகாய சவாலாக இருந்தன . ஆனால் இன்று , மருத்துவத்தில் ஏற்பட்ட அப்டேட் வளர்ச்சி மூலம் டிஎன்ஏவையே எடிட் செய்து நலம் பெறலாம் . இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யமுனா கிருஷ்ணனும் இத்துறையில் தான் செய்த சாதனைக்குத்தான் இன்ஃபோசிஸ் பவுண்டேஷனின் பிசிகல் சயின்ஸ் 2017 விருதை வென்றிருக்கிறார் . அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியரான யமுனா , டிஎன்ஏ நானோபாட் மூலம் நோயுற்ற செல்களின் வளர்சிதைமாற்றத்தை கண்டறியும் இமேஜிங் டெக்னிக்குத்தான் 22 கேரட் தங்க மெடலோடு , 65 லட்ச ரூபாய் தொகையும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது . நானோபாட் என்பது டிஎன்ஏ மூலம் உருவாக்கப்படுகிறது . செல்களையும் மருந்துகளையும் கையாள கைகளும் , அதை ரத்தத்தில் கொண்டு சேர்க்க கால்களும்