இடுகைகள்

அதிகரிக்கும் ப்ரீலான்ஸர்கள்!

படம்
பகுதிநேர வேலைகள் போதும்! –- ச.அன்பரசு காலையில் அரக்க பரக்க எழுந்து அலாரத்தை நிறுத்திவிட்டு குளித்து முடித்து பறக்கும் ரயில் பிடித்து அலுவலகம் சென்று வேலைபார்த்து திரும்புவது பழைய கதை. இந்த திகுதிகு அவசரத்தை ஜென் இசட் இளசுகள் இம்மியளவும் விரும்பவில்லை. வாழ்க்கையை ரசனையாக அனுபவிக்க வேலையை பகுதிநேரமாக்கி கொண்டால் போதும் என்று ரிலாக்சாக வாழ்கின்றனர். இது அமெரிக்காவைப் பற்றிய செய்தி அல்ல; இந்தியாவில்   1.5 கோடிப்பேர்களாக ப்ரீலான்ஸ் பணியாளர்கள் அதிகரித்துள்ளனர். இது அமெரிக்காவை விட(5.3 கோடி) அதிகம் என்கிறது Kellyocg வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஆய்வறிக்கை. பகுதிநேரப் பணியில் இளைஞர்கள் தினசரி டைம்டேபிள் போட்டு பல்வேறு வேலைகளை செய்வதோடு கணிசமான காசுடன் அனுபவங்களையும் சம்பாதித்து வருகின்றனர். இதில் தனியார் நிறுவனங்களுக்கு 20% செலவு குறைகிறது. இந்திய அரசு ஸ்வச் பாரத், டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு பகுதிநேர ஊழியர்களையே நம்பிக்கையோடு நியமித்துள்ளது. “கடந்த மூன்று ஆண்டுகளாக இன்டர்நெட் ஸ்டார்ட்அப்கள் உருவானபின்பு பகுதிநேர பணியாளர்கள் அதிகரித்துள்ளனர்.

உண்மைக்கு குரல் கொடுத்த பத்திரிகையாளர்கள் -2018

படம்
மனிதர்கள் 2018 ஊடகங்கள்- உண்மைக்காக போராடும் பத்திரிகையாளர்கள் மரியா ரெஸா ராப்ளர் என்ற இணைய செய்திதள நிறுவனர். பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ ட்யூடெர்டே நாட்டில் நிகழ்த்தி வரும் போதைப்பொருள் படுகொலைகளை அம்பலப்படுத்திய மனசாட்சியின் சுதந்திரக்குரல். அதிகாரம் என்ன செய்யும்? அதேதான் உண்மையைக் கூறிய ஒரே காரணத்திற்காக இணையதள நிருபர்களுக்கு அரசு விழாக்களில் அனுமதி மறுக்கப்பட்டது. ரெஸா மீது வரிவருவாய் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் மரியாவுக்கு பத்து ஆண்டுகள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. மனித உரிமை அமைப்பின் கணக்குப்படி பனிரெண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். "நான் போர்காலத்திய செய்திகளை பதிவு செய்யும் பத்திரிகையாளன். இப்போது எங்கள் நாட்டை நான் அப்படித்தான் குறிப்பிட வேண்டும்" என்கிறார் ரெஸா. வா லோன், கியாவ் சோ ஊ ராய்ட்டர் செய்தியாளர்களான இருவரும் மியான்மரில் நடைபெற்ற ரோஹிங்கியா அட்டூழியங்களை பதிவு செய்து செய்திகளாக தொகுத்ததுதான் அவர்கள் செய்த குற்றம். உடனே அவர்களை கைது செய்த மியான்மர் அரசு, தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு

கடந்து வந்த பாதை - 2018

படம்
2018 ஜனவரி 22 அமேஸான் காசாளர் இல்லாத முதல் கடையை அமெரிக்காவின் சியாட்டிலில் திறந்தது. பிப். 4 பிலடெல்பியா ஈகிள்ஸ் சூப்பர் பவுல் போட்டியில் வரலாற்று வெற்றியை சுவைத்தது. பிப். 22 நான்கு உலக சாம்பியன் பட்டங்களை வென்ற லிண்ட்ஸே வோன், ஒலிம்பிக் போட்டியில்  கடைசி முறையாக பங்கேற்றார்.  மார்ச் 4 சிறந்த திரைக்கதைக்காக முதல் கருப்பின எழுத்தாளர் ஜோர்டன் பீலே ஆஸ்கர் வென்றார். மார்ச் 6 மேற்கு வர்ஜீனியாவில் ஆசிரியர்களின் போராட்டம் வெடிக்க பள்ளிகள் அடைக்கப்பட்டன. மார்ச் 20 கென்யாவில் மிஞ்சிய ஆண் காண்டாமிருகமும் இறந்துபோனது. மே 16 காஷ்மீரில் ரமலான் மாதத்தில் பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மே 17 அமெரிக்காவின் சிஐஏ தலைவராக ஜினா காஸ்பெல் பொறுப்பேற்பார் என செனட் சபை முடிவு செய்தது. ஜூன் 12 முதல்முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியா அதிபர் கிம்மை சந்தித்து பேசினார். ஆக. 2 ஒரு ட்ரில்லியன் மதிப்பு கொண்ட நிறுவனமாக ஆப்பிள் மாறியது. செப். 7 ராபர்ட் முல்லர் கவுன்சில் விசாரணையில் குற்றவாளியாக ஜார்ஜ் பாபாடோபௌலோஸ் உறு

தாக்குதலுக்கு உதவும் ஜிசாட் 7 ஏ

படம்
இஸ்‌ரோவின் ஜிசாட் 7 ஏ, இந்திய விமானப்படையில் தொலைத்தொடர்புக்கென ஸ்பெஷலாக உருவாக்கப்பட்டது. என்ன பிரயோஜனம்? பல்வேறு படைகளை இணைக்கவும், ட்ரோன்களை இயக்கமும், உளவுப்பணிகளுக்கும் புதிய  தகவல் தொடர்பு  செயற்கைக்கோள் உதவும். இஸ்‌ரோ அனுப்பிய 35 ஆவது தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் 7ஏ, 2,250 கி.கி எடை கொண்டது. ஆயுள் எட்டு ஆண்டுகள், செலவு 500 கோடி.  "விமானங்களின் தகவல் தொடர்பை எளிமையாக்குவதற்கு இந்த செயற்கைக்கோள் உதவியாக இருக்கும். இதன் மூலம் பல்வேறு விமானப்படை பிரிவுகளுக்கிடையே எளிதாக தகவல் பிரிமாற்றங்களை வேகமாக செய்ய முடியும்" என்கிறார் விமானப்படை இயக்குநரான பிஎஸ் தனோவா. KU பேண்ட் அலைவரிசையில் இந்த செயற்கைக்கோள் இயங்குகிறது என்பதால் கீழேயுள்ள நிலையங்களிலிருந்து விமானிகளுக்கு எளிதாக கட்டளைகளை பிறப்பிக்க முடியும். இதன் சிறப்பம்சம் என்ன? கு பேண்ட் அலைவரிசையை பெற சிறிய ஆன்டெனா இருந்தால் போதுமானது. பிற அலைவரிசையைவிட பெரியது. மழை உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படாது. இந்தியா இதுவரை ராணுவத்திற்கென பதிமூன்று செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது. 2013 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்ப

பெண்களுக்கு நீதிமறுக்கப்படுவது கோபத்தை தருகிறது!

படம்
இந்தியாவில் ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் பெண்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தல்களை சந்திக்கிறார்கள் என்கிறது ஆய்வுத்தகவல். கடந்த ஆறு ஆண்டுகளாக பெண்கள் சந்திக்கும் வல்லுறவு, தாக்குதல், படுகொலைகள் என அனைத்தையும் ஆவணப்படுத்தி வருகிறார் பத்திரிகையாளர் பிரியங்கா துபே. தற்போது மீடூ இயக்கம் வேகமாக பிரபலம் அடைந்து வருகிறது. அதைப்பற்றிய தங்கள் கருத்து? மீடூ இந்தியாவில் பரவியபோது நான் எனது நூலை எழுதி முடித்திருந்தேன். பத்திரிகையாளராக அதன் நகர்வை தற்போது கவனித்து வருகிறேன். இது மேல்தட்டு வர்க்கத்தில் நிகழும் பாலியல் அத்துமீறல்களை கவனப்படுத்துகிறது. இது அனைத்து பெண்களுக்கான நீதியைப் பெற்றுத்தர கருவியாக உதவுமா என்று தெரியவில்லை. இணையத்தில் வைரலானாலும் பெண்களுக்கான நீதியைப் பெற்றுத்தர நாளாகலாம்.  பெண்கள் பற்றிய ஆய்வுக்காக வேறுபாடுகள் நிறைந்த நகரங்களுக்கு கிராமங்களுக்கு சென்றிருப்பீர்கள். பத்திரிகையாளராக, பெண்ணாக உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். விரக்தியும் நம்பிக்கையும் ஒருசேர மனதில் உருவானது உண்டு. தொடக்கத்தில் களப்பணியின்போது நீதிமறுக்கப்பட்ட நிக

தலைவன் இவன் ஒருவன் - மின்னூல் வெளியீடு

படம்
இனிய நண்பர்களுக்கு, முத்தாரம் வார இதழில் வெளியான சமூக தொழில்முனைவோர் குறித்த தொடர் தலைவன் இவன் ஒருவன். தன் தொழிலோடு சமூகத்தையும் கூடவே சக பயணியாக அழைத்து சென்ற தொழில்முனைவோர் குறித்த அறிமுகங்களை இந்நூல் கொண்டுள்ளது. முதலில் இந்த ஐடியாவை பகதூரிடம் கூறியபோது அவருக்கு அப்படிப்பட்டவர்களை உலகளவில் தேடிப்பிடித்தால் எழுத முடியும் என்றார். எனவே எல்லைகள் முக்கியமல்ல: ஒருவரின் எண்ணங்களே முக்கியம் என கார்ட்டூன் கதிரிடம் லோகோ வாங்கி தொடரை தொடங்கினோம். நினைத்து பார்க்கமுடியாத ஆச்சரியங்களை வாரம்தோறும் தலைவர்கள் ஏற்படுத்தினார்கள். வாசியுங்கள். விமர்சியுங்கள். நன்றி. இணைய லிங்க் இதோ! https://tamil.pratilipi.com/read/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-mafGV5eS6Fli-2h61k458u4g9551

சீனநிறுவனத்தின் மீது போர்!

படம்
சீனநிறுவனத்தை தடுத்த நியூசிலாந்து! 5ஜி சேவையை வழங்க முன்வந்த ஹூவாய் நிறுவனத்தை உளவுத்துறை எச்சரிக்கையால் நியூசிலாந்து அரசு தடுத்துள்ளது. உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் சாதனங்களை நியூசிலாந்தைச் சேர்ந்த ஸ்பார்க் பயன்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் நாட்டின் உளவுத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்க உடனே சீன நிறுவனத்தின் உதவியை அரசு மறுத்துள்ளது. பாதுகாப்பு குறைபாடுகளை அரசு கூறினால் அதனை சரிசெய்துகொள்கிறோம் என ஹூவாய் அறிக்கை விடுத்தது. அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் சீன நிறுவனமான ஹூவாயின் தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்துவதை தேசிய பாதுகாப்பு கருதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பப்புவா நியூகினியா நாடு, துணிச்சலாக ஹூவாய் நிறுவனத்துடன் இணைந்து இணைய இணைப்புகளை நாடெங்கும் வலுப்படுத்திவருவது மட்டுமே விதிவிலக்கு. “சீனா தன்னுடைய நிறுவனங்கள் மூலம் தகவல்திருட்டை முதலிலிருந்தே செய்துவருகிறது” என்கிறார் ஆஸ்திரேலியாவின் சைபர்துறையைச் சேர்ந்த பேராசிரியர் டாம் உரன்.