இடுகைகள்

டைம் இதழில் இடம்பிடித்த கலைத்துறை பிரபலங்கள்! பீட்டே டேவிட்சன், குவிண்டா பிரன்சன், மிலா குனிஸ்

படம்
        குவின்டா ப்ரன்சன் கல்வியும் நகைச்சுவையும் quinta brunson குவின்டா ப்ரன்சனை வெறும் எழுத்தாளர் என்று கூறிவிடமுடியாது. அவர் தயாரிப்பாளர், நகைச்சுவைக் கலைஞர் என பொறுப்புகளை ஏற்று செய்தார். தான் செய்யும் வேலையை மாணவராக கற்றுக்கொள்ளவும், அதில் தேர்ந்த குருவாகவும் இருக்க முடிவது ஆச்சரியம்தான். டிவி தொடர்களில் நிறைய மாற்றங்களை தனது நடிப்பு, தயாரிப்பு மூலம் செய்து வருகிறார். அப்போட் எலிமெண்டரி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பொதுக்கல்வியில் உள்ள பிரச்னைகளைப் பற்றி பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் வரும் நகைச்சுவையில் பிரச்னைகளை பேசுவதுதான் குவின்டாவின் தனித்துவம். மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் தனது நிகழ்ச்சி மூலம் சிறப்பாக இணைத்து அறிய வேண்டுவனவற்றை அறிய வைப்பதுதான் குவிண்டாவின் புத்திசாலித்தனம். தடைகளை உடைத்து நகைச்சுவை மூலம் நிறைய கதவுகளை குவின்டா திறந்து வைத்துள்ளார். லெப்ரோன் ஜேம்ஸ் கூடைப்பந்தாட்ட வீரர் மிலா குனிஸ் ஆங்கிலப்பட நடிகை மிலா குனிஸ், அமெரிக்காவிற்கு தனது அம்மா, சகோதரருடன் வந்தவர். நடிகர் ஆஸ்டின் கட்சரை மணந்துகொண்டவர் மிலா குனிஸ். இருவருமே உக்ரைன் மீது ரஷ்யா போர்

கடல் தாண்டியும் பழிவாங்குவான் தெலுங்குவாடு!

படம்
              ஜெய் சிரஞ்சீவா சிரஞ்சீவி, பூமிகா சாவ்லா, சமீரா ரெட்டி     தனது தங்கை மகளை துப்பாக்கியை சுட்டு காண்பிக்கும் முறையில் கொல்லும் தீவிரவாத அமைப்பு தலைவனை தீர்த்துக்கட்டும் கிராமத்து விவசாயியின் கதை.  படத்தில் சிரஞ்சீவி, கிராமத்து விவசாயியாக வருகிறார். டிராக்டர் ஓட்டுகிறார். தங்கை பிள்ளையை கொஞ்சுகிறார். அதேவேகத்தில் அந்த சந்தோஷம் தொலைந்துபோக அதற்கு காரணமானவர்களை போட்டு பொளக்கிறார். இதுதான் கதை. இதற்குள் சிரஞ்சீவி இரண்டு பெண்களை காதலித்து அவர்களுடன் நிறைய பாடல்களை ஆடிப்பாடிமகிழ்விக்கிறார். கூடவே வேணு வேறு இருக்கிறார். காமெடிக்கு கேட்கவா வேண்டும்.  தொடக்க காட்சியில் அதிரடியாக இளம்பெண் ஒருவரை குழு வல்லுறவு பிரச்னையிலிருந்து அடி உதை மூலம் மீட்டு என்ட்ரி கொடுக்கிறார் ஆந்திரப் பிரதேச சூப்பர் ஸ்டார். பிறகுதான் ஹைதராபாத்திற்கு காப்பு கட்டுமளவு ரவுடிகளை அடித்து பிளக்கிறார். படத்தின் இறுதிவரை அவர் தனது தங்கை பிள்ளைக்காக மட்டுமே பழிவாங்குகிறார். வில்லனின் தீவிரவாத செயல்கள் மூலம் நிறையப் பேர் பாதிக்கப்படுவதை அழிவதைப் பற்றியெல்லாம் இயக்குநரும் கவலைப்படவில்லை. எனவே சிரஞ்சீவியும் கவலைப்படவில்

லக் கீ உங்களுக்கும் கிடைக்கலாம்!

படம்
             லக் கீ தென்கொரியா    தென்கொரிய டிவி சீரியல்களில் துக்கடா வேடங்களில் நடித்து வரும் சீ ஜூங், நினைத்த வேகத்தில் முன்னேற முடியவில்லை.அவனது ஒரே ஆதரவான அப்பா சலூன் வைத்து நடத்துகிறார். அவர் அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கூட தனது மகனின் நடிப்பு ஆர்வத்தைப் பற்றி புல்லரிப்பாக பேசுவதோடு நம்பிக்கையும் கொண்டிருக்கிறார். ஆனால் மகனோ தான் தங்கியுள்ள அறைக்கு வாடகை கூட கொடுக்க முடியாமல் தூக்கு மாட்டிக்கொண்டு இறக்க நினைக்கிறான். அப்போது அவனுக்கு விதி வாய்ப்பு ஒன்றை வழங்குகிறது. விபத்தாகி நினைவிழந்த ஒருவரின் வீட்டு சாவி அவனுக்கு கிடைக்கிறது. அதை வைத்து அவன் தனது வாழ்க்கையை எப்படி மாற்றிக் கொண்டான் என்பதே கதை. உண்மையில் தமிழில் வெளிவந்த அறை எண் 305 இல் கடவுள் போலத்தான் கதையின் மையம் இருக்கிறது. கதாநாயகன் சீ ஜூங்கிற்கு ஒரு நூடுல்ஸ் வாங்கித்தரக்கூட ஆளில்லை. அவன் காதலித்த பெண்ணுக்கு இரண்டு மாதங்களில் திருமணமாகப் போகிறது. அவனது துக்கடா வேஷங்கள் பெரிய முன்னேற்றம் அடையவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அறை வாடகை கொடுக்க கூட கையில் நயா பைசா கிடையாது. இந்த லட்சணத்தில் அவன் வாழ்க்கையை நினைத்து அழ

மாணவர்கள் கல்வி கற்க உதவும் தி பைசைக்கிள் புராஜெக்ட்!

படம்
  தி பைசைக்கிள் புராஜெக்ட் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர், ஹேமந்த் சாப்ரா. இவர் 2009ஆம் ஆண்டு தி பைசைக்கிள் புராஜெக்டைத் தொடங்கினார். இதன்படி நகரங்களில் உள்ள சிறுவர்கள் பயன்படுத்திய சைக்கிள்களைப் பெறுகின்றனர். அதை பெயிண்ட் அடித்து பழுது நீக்குகின்றனர். பிறகு பள்ளிகளை தேர்ந்தெடுத்து அதில் நீண்ட தொலைவிலிருந்து வரும் மாணவர்களை பட்டியலிடுகின்றனர்.  அவர்களுக்குத்தான் சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்த பைசைக்கிள் புராஜெக்ட் திட்டத்தை ஹேமந்த் சாப்ரா, அவரது மனைவி சங்கீதா, பத்திரிகையாளர் சைமோனா டெரோன் ஆகிய மூவரும் தான். இதில் சைமோனா டெரோன் மூலம் தான் சமூகத்தில் உள்ள நிறைய மனிதர்களின் தொடர்பு கிடைத்தது.. இப்படித்தான் பழைய சைக்கிள்களைப் பெற்று அதை ஹேமந்த் சாப்ரா தனது வீட்டின் அருகில் உள்ள நஸீம் என்பவரிடம் கொடுத்தார். அவர், மாணவர்களுக்கென குறைந்த விலையில் பழைய சைக்கிள்களை நகாசு பார்த்து கொடுத்திருக்கிறார். இதற்கு முக்கியமான காரணம், நஸீமின் தம்பியும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்தான்.  ஹேமந்த் சாப்ராவின் அப்பா, சிறுவயதில் ஒருமுறை சொன்ன சம்பவமே பைசைக்கிள் புராஜெக்ட் தொடங்கப்பட முக்கியமான காரணம். பள

75ஆவது சுதந்திர தினத்தில் மூடப்படும் அரசு பொதுத்துறை நிறுவனம்!

படம்
  75ஆவது சுதந்திர தினத்தில் மூடப்படும் அரசு பொதுநிறுவனம்! 1920ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியா கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்டு இயங்கியது.  1981ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த இந்திராகாந்தி, பிரிட்டிஷ்  இந்தியா கார்ப்பரேஷனை தேசியமயமாக்கி உத்தரவிட்டார்.  1991ஆம் ஆண்டு, பிஐசிஎல் நிறுவனம் நலிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.  2001ஆம் ஆண்டு மத்திய அரசு, பிஐசிஎல் நிறுவனத்தை பல்வேறு சீர்திருத்தங்களால் மீட்க முடியவில்லை என்று அறிவித்தது.  2017ஆம் ஆண்டு, நிதி ஆயோக் அமைப்பு, நிறுவனத்தை மூடிவிடலாம் என ஆலோசனை தெரிவித்தது.  உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் சிவப்பு நிற கட்டிடத்தில் அமைந்திருந்த பிஐசிஎல் நிறுவனம், லால் இம்லி என்ற பிராண்டில் செல்லமாக அழைக்கப்பட்டது. கம்பளி தொடர்பான பல்வேறு பொருட்களை தயாரித்து வழங்கிக் கொண்டிருந்தது.  இந்த நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகளால், மான்செஸ்டர் ஆப் ஈஸ்ட் என வழங்கப்பட்டது.  சிறப்பெல்லாம் பழைய கதை. இப்போது நிறுவனத்தை மூடப்போகிறார்கள்.  தேசிய டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் (NTC) என்ற நிறுவனத்தையும் பிஐசிஎல் நிறுவனத்தோடு சேர்த்து மூடுகிறார்கள். இந்த

வினோத் மேத்தா, ஜே.கிருஷ்ணமூர்த்தி நமக்கு காட்டும் வழி என்ன? - கடிதங்கள் - கதிரவன்

படம்
  அன்பு நண்பர் கதிரவனுக்கு வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  இன்று மாலை நீங்கள் என்னுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. நான் இன்று உணவு பற்றிய அவுட்லுக் இதழ் ஒன்றை வாங்கிப் படித்தேன். ரூ.70. இவர்கள் சிறப்பிதழ் போல இதழை கொண்டு வருகிறார்கள். இவர்களின் போட்டியாளராக உள்ள பத்திரிகை, இந்தியா டுடே. வலதுசாரி கருத்தியலை அடிப்படையாக கொண்டது. இவர்கள் ஆண்டின் இறுதியில் கொண்டு வரும் செக்ஸ் சர்வே தான் உருப்படியான புத்தகம். அதை ஒட்டுமொத்த இந்தியாவே வாங்கிப் படிக்கும். அந்தளவு செலவு செய்து போட்டோஷூட் நடத்தி இதழை வெளியிடுவார்கள்.  அலுவலகத்தில் அறியாமையை கிரீடமாக அணிந்தவர்களிடம் எல்லாம் நின்று விவாதிக்கும் நிலைமை கஷ்டமாக உள்ளது. நான் வேலைக்கு வந்து அதைப்பற்றி மட்டுமே பேசுகிறேன். நான் உண்டு எனது வேலை உண்டு என பயணிக்கிறேன். பிறரைப் பற்றி மட்டம் தட்டும் ஏளனம் பேசும் தீய ஆன்மாக்கள் இங்கு அதிகம்.  வினோத் மேத்தா என்ற பத்திரிகையாளர் பற்றிய சுயசரிதை படித்தேன். தன் வாழ்க்கையில் சந்தித்த அரசியல் சிக்கல்கள், துணிச்சலான செயல்பாடுகள் என பல்வேறு விஷயங்களை நூலில் எழுதியிருக்கிறார். இப்போது வலசை செல்லும் பறவைகள் என்ற நூல

உடலைத் தாண்டி மூளைக்குள்ளும் செல்லும் வெப்பம்! - கடிதங்கள்- கதிரவன்

படம்
  14.4.2022 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? திருமண வேலைகளை நிறைவு செய்திருப்பீர்கள். நான் இன்று எனது அறைத்தோழர் மெய்யருள் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொன்னேன். தினகரனில் வேலை செய்தபோது கே.கே.நகரில் அறையில் தங்க வைத்து உதவினார். ஏப்ரல் 14 அம்பேத்கரின் பிறந்தநாள் வேறு. இப்போது நாடெங்கும் சமத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.  தமிழ் புத்தாண்டுக்கு விடுமுறை. அறையில் உட்கார்ந்து 2 அறிவியல் நேர்காணல்களை எழுதினேன். வெயில் உடல்சோர்வை எளிதாக உருவாக்கிவிடுகிறது. மதியம் கடும் வெக்கை. படுத்து தூங்கிவிட்டேன். வெளியில் எங்கும் செல்லவில்லை. பக்கத்து அறைவாசி, பட்டைசாதம் ஒரு பாக்கெட் கொடுத்தார். அதுவே மதியச்சோறு. பால் பொருட்கள் சேர்க்க கூடாது என சித்த மருத்துவர் ரெஜூநாத் முன்னரே எச்சரித்தார். அதிகரிக்கும் வெப்பம் காரணமாக நான் தயிரை உணவில் சேர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளேன். வேறுவழி தெரியவில்லை.  அம்மா இன்று குலதெய்வ கோவிலுக்குச் சென்று வந்ததாக சொன்னாள். அவளது நம்பிக்கை அவளுக்கு உள்ளது. பயணம் மனதுக்கு ஆறுதல் தரும். சென்றவாரம் விகடனில் வந்த நீரதிகாரம் முன்கதை சுருக்கம் போல வந்து