இடுகைகள்

செய்யும் அனைத்து விஷயங்களிலும் கிக் தேடும் ஆள்- கல்யாண் - கிக் 1 - இயக்குநர் சுரேந்தர் ரெட்டி

படம்
  கல்யாண் -கிக் (தெலுங்கு) ரவிதேஜா இயக்குநர் – சுரேந்திர ரெட்டி வாழ்க்கையை சாதாரணமாக வாழ்பவர்கள் உண்டு. ஆனால் சாதாரண வாழ்க்கைதான் என்று விடாமல்,   அதை சற்றேனும் சாகசமாக வாழ நினைக்கும் ஆட்கள் சிலர் உண்டு. தேடுவதற்கு சற்று அரிதானவர்கள்தான். ஆனால் கண்டுபிடித்துவிடலாம். அப்படிப்பட்ட ஒருவர்தான் கல்யாண். கல்யாணைப் பொறுத்தவரை சுவாரசியமாக சவாலாக இருந்தால்தான் ஒன்றைச் செய்வது.. இல்லையென்றால் அதை தூக்கிப் போட்டுவிட்டு ஜாலியாக அடுத்த வேலைக்குப் போய்விடுவதுதான் பிடிக்கும். பொதுவாக கிணற்றில் மூச்சை தம் கட்டி உள்ளே இருப்பது, சைக்கிளில் கைவிட்டு ஓட்டுவது என சில விஷயங்களை பலரும் முயற்சி செய்திருப்போம். ஆனால் கல்யாண் வேறுபடுவது எங்கே? வாழ்க்கையின் ஒவ்வொரு இன்ச்சிலும் சாகசம் இருக்கவேண்டும் என நினைப்பதுதான் வேறுபாடு. பார்க்க மற்றவர்களுக்கு திகிலாக இருந்தாலும் அதில் ஈடுபடும் கல்யாணுக்கு திருப்தியும், சந்தோஷமும் கிடைக்கிறது. உளவியலைப் பொறுத்தவரை இந்த வகையில் சாகச அனுபவங்களை நாடி குற்றங்களைச் செய்பவர்களை மனநலகுறைபாடு கொண்ட நோயாளிகளாகத்தான் பார்க்கிறார்கள். கிக் படத்தில் கல்யாணை சாகச அனுபவங்களை சமூ

பணமும், அறிவுக்கூர்மையும் ஒரே இடத்தில் இருந்தால்.... - காதல்கவிதை (விஷ்வா)

படம்
  விஷ்வா (காதல் கவிதை) பிரசாந்த் தமிழ் இயக்குநர் – அகத்தியன் படத்தின் தொடக்க காட்சியில் விஷ்வா என்பவர், பெட்டிக்கடையில் வந்து நின்று தண்ணீர் கேட்பார்.   காசு கொடுத்து வாட்டர் பாக்கெட் கேட்க மாட்டார். இலவசமாக டம்ளரில் நீர் கேட்பார். ‘காசு கொடுத்தாத்தான் தண்ணீர் ’ என கடைக்காரர் சொல்லுவார். அதாவது, பாக்கெட்டில் கொடுப்பேன் என்கிறார். ஆனால், விஷ்வா தனது சட்டை பாக்கெட்டை காட்டி ‘’பாக்கெட்டில் ஊற்றினால் கீழே கொட்டிடுமே, டம்ளரில் கொடுங்க’’ என கேட்பார். தான் கிராமத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லும்போதுதான் நமக்கே பீதியாகும். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என…. முதல் காட்சி தொடங்கி விஷ்வாவின் பாத்திரம் சற்று ரிவர்ஸாகவே பேசிக்கொண்டிருக்கும். விஷ்வா, அப்போதுதான் ஜில்லெட் க்ரீம் போட்டு அதே கம்பெனி ரேஷரில் ஷேவ் செய்துவிட்டு வந்த மாதிரியான பளபளப்பில் இருப்பார். சைக்கிளை நிறுத்திவிட்டு பெட்டிக் கடைக்கு வரும் சார்லி, சைக்கிளுக்கு ட்ரைவர் வேணும் என விஷ்வாவைக் (பிரசாந்தைக்) கூட்டிக்கொண்டு போவார். பிறகு பீச்சுக்கு செல்வார்கள். அங்கு ஏதோ ஒரு கடையைப் பார்த்துக்கொள்வதாக பேசிக்கொண்டு இருப்பார்கள்.

சமூகத்திற்கு தன்னை வெளிக்காட்ட வெடிகுண்டே ஒரே வழி

படம்
  கத்தி, துப்பாக்கி வைத்து கொலை செய்யும் தொடர் கொலைகாரர்கள் உண்டு. ஆனால் வெடிகுண்டு வைத்து பிரமாண்டமான செலவில் கொலை செய்யும் கொலைகாரர்களை குறைவாகவே பார்க்க முடியும்.பொதுவாக,   தொடர் கொலைகார்களுக்கு நிலையான வேலை இருக்காது. எனவே, அவர்களால் அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் பிளான் செய்து கொலைகளை செய்ய முடியாது. ஆனால் பாம் வைத்து கொல்பவர்களே இல்லையா என்றால் இருந்திருக்கிறார்கள். இப்போது அவர்களைப் பற்றி பார்ப்போம். 1940-50 காலகட்டத்தில் அமெரிக்காவில் இதுபோல வெடிகுண்டு வைத்து மக்களைக் கொல்லும் சம்பவங்கள் நடந்தன. இதற்கு காரணமானவர், அரசு நிறுவனத்தில் வேலை செய்த ஜார்ஜ் என்பவர். இவருக்கு காசநோய் பாதிப்பு இருந்தது. வேலைக்குச் சென்ற இடத்தில் இவரைப் பார்த்து நோய் தொற்றிவிடும் என அனைவரும் பயந்தனர். ஏசினர். தூற்றினர். பலரும் டெய்லி புஷ்ப ஊழியர்கள் போல சைக்கோபயல்கள். இதனால் மனதிற்குள் வைராக்கியம் வளர்த்த ஜார்ஜ், தன்னை   துவேஷித்த ஆட்களை கொல்ல முயன்றார். இவருக்கு அடுத்து தியோடர் என்ற நபரைக் குறிப்பிடலாம். எட்டு மாகாணங்களில் பதினாறு வெடிகுண்டுகளை வைத்தவர். 1995 – 1978 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தியோடர

டீனேஜ் பெண்களை வல்லுறவு செய்து கொல்ல திட்டமிட்ட நண்பர்கள்!

படம்
  லாரன்ஸ் பிடேக்கர்   - நோரிஸ் திட்டக்குழு உருவாக்கி நாட்டிற்கான திட்டங்களை தொலைநோக்காக உருவாக்குவது போல சிலர் உண்டு. இவர்கள், தாங்கள் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என திட்டமிட்டு அதற்கான களப்பணிகளை செய்துவிட்டு இறங்குவார்கள். இதனால் அனைத்து விஷயங்களும் நினைத்தபடி கச்சிதமாக நடக்கும் என்று கூறமுடியாது. ஆனால் செய்பவர்களுக்கு செயலில் தீவிரம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள்தான் லாரன்ஸ் – நோரிஸ் ஆகிய இரு கொலைகார நண்பரகளும்.. லாரன்ஸ் ஒருவரை தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் சிறை சென்றார், அங்கு தன் வாழ்நாள் முழுக்க இருக்கப்போகும் நண்பன் ராய் நோரிஸை சந்தித்தார். இருவரும் பேச பேச அவர்களின் சிந்தனைகள் ஒத்துப்போயின. அப்புறம் என்ன? நண்பர்கள் ஆனார்கள். நண்பர்கள் ஆனதே டீனேஜ் பெண்களை கடத்தி வல்லுறவு செய்து கொல்வதற்காகத்தான். திட்டத்தை ப்ளூபிரின்ட் போட்டு வைத்துவிட்டு காத்திருந்தனர். பதிமூன்று தொடங்கி பத்தொன்பது வயது பெண்கள்தான் லட்சியம். லாரன்ஸ் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்து வேன் ஒன்றை வாங்கி அதற்கு மர்டர் மேக் என்று பெயர் கூட வைத்து தயார் செய்துவிட்டார். அடுத்த ஆண்டான 1979ஆம் ஆண்டு ஜூனி

கடத்தி, வல்லுறவு செய்து கொலை - கென்னத் - ப்யூனோ சகோதர்களின் அட்டூழியம்

படம்
  1951ஆம் ஆண்டு, விலைமாது ஒருவருக்குப் பிறந்தார். குழந்தையாக இருக்கும்போதே   தத்து கொடுக்கப்பட்டார். பதினெட்டு வயதில் திருமணம் செய்துகொண்டார். ஒருமுறை தனது பெண் தோழிக்கு கடிதம் எழுதியபோது, தான் ஒருவரைக் கொன்றதாக கூறினார். ஆனால், அதை தோழி கென்னத் தனது ஆண்மையின் பெருமைக்காக கூறுவதாக நினைத்துக்கொண்டார். 1973ஆம் ஆண்டு காவல்துறை கென்னத் பியான்சியை கொலை வழக்கு ஒன்றில் சந்தேகப்பட்டது. ஆனால் உண்மையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே கென்னத்தின் கார் கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததை காவல்துறை அதிகாரி ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தார். 1976ஆம் ஆண்டு கென்னத் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றார். அங்கு கென்னத்தின் சகோதரர்   இருந்தார். அவருடன் சேர்ந்துதான் பின்னாளில் பல்வேறு கொலைகளைச் செய்தார். சகோதரர் பியூனோ ஜூனியர், சிறுவயதில் இருந்தே அம்மாவுடன் பல்வேறு ஊர்களில் வசித்த அனுபவம் கொண்டவர். பதினான்கு வயது தொடங்கியதிலிருந்தே கார்களைத் திருடி விற்கத் தொடங்கினார். சோடோமி எனும் மலப்புழை வழியாக   உடலுறவு கொள்வதில் ஆர்வம் கொண்ட ஆள். கார் திருட்டுக்காக சிறை சென்ற அனுபவம் உள்ளவர். செக்ஸ் குற்றவாளியான

காதலிக்க, காதலிக்கப்பட செய்யவேண்டியவை - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி தென் தேர் ஈஸ் லவ் ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம்   எது காதல் என்ற கேள்விக்கு பதிலைத் தேடி   நாம் பயணிக்க வேண்டும் என்றால் பல நூற்றாண்டுகளாக கூறப்பட்டுள்ள முன்மாதிரிகள், கருத்துகளை சற்று தள்ளி வைக்கவேண்டும். வாழ்க்கையை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கும், அழிக்கும் விவகாரங்களையும் விட்டு தள்ளிச் செல்ல வேண்டும். இப்போது, காதல் என்று கூறும் தீப்பிழம்பை பற்றி கண்டறிவோம். உண்மையில் அதன் அர்த்தம் என்ன? இதை அறிய முதலில் தேவாலாயம், நூல், பெற்றோர், நண்பர்கள், தனிப்பட்ட மனிதர்கள் ஆகியோர் கூறியுள்ள விஷயங்களை ஒதுக்க வேண்டும். காதல் என்பதை நாமாகவே தேடி அடைய வேண்டும்.   காதல் என்பதை மனிதர்கள் பலநூறு வரையறை கொண்டு கூறமுடியும். காதலை நமக்கு பிடித்தது போல, குறிப்பிட்ட முறையில் புரிந்துகொண்ட வகையில் உருவாக்கிக் கொள்ள முடியும். எனவே, காதலைப் பற்றி தேடுவதற்கு முதலில் நமக்குள் உள்ள முன்முடிவுகளை, கருத்துகளை விலக்க வேண்டும். நமக்குள் இருக்கும் குழப்பத்திலிருந்து   வெளியே வந்தால்தான், எது காதல் இல்லை என்பதைக் கண்டறிய முடியும். அரசு ‘’ உங்கள் நாடு மீது வைத்துள்ள காதலுக்காக சென்று பிற

பேராசை பூதம் 2 - ஹிண்டன்பர்க் அறிக்கையின் தமிழாக்கம் - மின்னூல் வெளியீடு

படம்
  இன்று இந்தியாவில் மத்திய அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை  பலம் வாய்ந்த தொழில் நிறுவனங்களே முடிவு செய்கின்றன. அரசின் கொள்கை மாற்றங்களை பெருநிறுவனங்கள் முடிவு செய்து அறிவிக்கச்செய்து பயன் பெறுகின்றன. நாட்டின் பிரதமர் தொழில்நிறுவனங்களோடு நெருக்கமாக இருப்பது, அணுக்க முதலாளித்துவம் என்று கூறப்படுகிறது. இப்படி இருப்பதால் அவருக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் நன்மை உண்டு. வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் இருக்காது. தொழிலதிபரின் வாராக்கடன்களுக்கு, வரிச்சுமையை சுமக்க வேண்டியது மக்கள்தான்.  அதானி குழுமம், பல்லாண்டுகளாக திட்டமிட்டு செய்த மோசடிகளை பேராசை பூதம் 3 நூல் விவரிக்கிறது. இதைப் படிக்கும்போது இப்படியெல்லாம் யோசித்து நிதி மோசடிகளை செய்ய முடியுமா என பிரமித்து அதிர்ச்சியடைவீர்கள்.  அந்தளவு நேர்த்தியாக திட்டமிட்டு இந்தியாவை மட்டுமல்ல வரி கட்டும் அத்தனை குடிமக்களையும் ஏமாற்றியுள்ளது அதானி குழுமம். மோசடிக்கு கௌதம் அதானியின் மொத்த உறுப்பினர்களுமே காய்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.   பங்குச்சந்தை நிதியை மடைமாற்றி தனது இஷ்டம்போல நிறுவனத்தின் மதிப்பை மாற்றிக் காண்பித்து அதை அடையாளம் கண