இடுகைகள்

காஸனோவா, ஒரு பெண் மீது கொள்ளும் காதல் வழியாக உறவுகளின் மதிப்பை அறிந்துகொள்ளும் கதை!

படம்
                கிரேக்க வீருடு நாகார்ஜூனா , நயன்தாரா பெண்கள் என்றாலே உடல் இன்பத்திற்கு மட்டும்தான் என நம்பும் ஒருவர் சூழல்களால் மனம்மாறி குடும்பத்தை நேசிப்பதோடு , காதலித்த பெண்ணை திருமணம் செய்வதுதான் கதை . வெளிநாட்டு தொழிலதிபர் நாகார்ஜூனா . அவரும் , உறவு முறையில் மாமாவும் , நெருங்கிய நண்பன் என இணைந்து நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள் . தனது செல்வாக்கு , அழகு ஆகியவற்றைப் பயன்படுத்தி ஏறத்தாழ 99 பெண்களை படுக்கையில் வீழ்த்துகிறார் கிங் நாகார்ஜூனா . பெண்களை போகப்பொருளாக பார்க்கிறார் . நெருக்கமான உறவை அவர் விரும்புவதில்லை . இதனால் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் . இந்த நேரத்தில் அவரால் செக்சுக்காக பயன்படுத்தப்பட்ட பெண் ஒருத்தி , அவருடைய சிஎஸ்ஆர் திட்டம் ஒன்றை வன்மத்தோடு உருக்குலைக்கிறாள் . இதனால் , அந்த பணியை ஒப்படைத்த நிறுவனம் நாகார்ஜூனா மீது வழக்கு போட்டு வெல்கிறார்கள் . அதிக அளவு தொகையில் அபராதம் கட்ட வேண்டும் என்பதே பெரிய பிரச்னை . இந்த நேரத்தில் கிங்கிற்கு இந்தியாவில் பூர்விகமான தாத்தாவிடமிருந்து போன் வருகிறது . அவர் , மகன் வயிற்று பேரனான கிங்க

அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தோற்றுப்போவதன் காரணம்! - அமைப்பு முறை இல்லாத மக்கள போராட்டம்

படம்
                  போராட்டத்தின் வீழ்ச்சி 2010 தொடங்கி 2020 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளை போராட்டத்தின் காலம் என்று கூறலாம் . அத்தனை போராட்டங்கள் நடைபெற்றன . இதற்கான விதை துனிசியாவில் விழுந்தது . அங்கு தொடங்கிய போராட்டம் அப்படியே அரபு நாடுகளுக்கும் பரவியது . இதற்கு சமூக வலைதளங்கள் முக்கியமான தளமாக அமைந்தன . குறிப்பாக ஃபேஸ்புக்கைக் கூறவேண்டும் . துருக்கி , உக்ரைன் , ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் நடந்த மக்களின் போராட்டங்கள் ஆட்சியாளர்களை என்ன செய்வதென தெரியாமல் பதைபதைக்க வைத்தன . சூடான் , ஈராக் , அல்ஜீரியா , ஆஸ்திரேலியா , ஃபிரான்ஸ் , இந்தோனேஷியா , லத்தீன் அமெரிக்கநாடுகள் , இந்தியா , லெபனான் , ஹைதி ஆகிய நாடுகள் போராட்டச் சுழலில் மாட்டின . மேற்சொன்ன பத்தாண்டுகளில் மக்கள் வீதிக்கு வந்து போராடினர் . போராடியவர்களுக்கு பிற மக்கள் ஆதரவு தெரிவித்தனர் . போராட்டங்களை உலகளவிலான ஊடகங்கள் பதிவு செய்து ஒளிபரப்பின . புகழ்பெற்ற நாளிதழ்களில் கட்டுரைகள் ஏராளமாக எழுதப்பட்டன . போராட்டங்கள் வெற்றிபெற்றன என்பது உண்மைதான் . ஆனால் , போராட்டக்காரர்கள் கோரிய விஷயங்கள் ஏதேனும் நிறைவேற

இவான் பாவ்லோவ் செய்த உளவியல் ஆராய்ச்சி

படம்
          இவான் பாவ்லோவ்     1890 ஆம் ஆண்டு , ரஷ்ய மருத்துவரான இவான் பாவ்லோவ் உளவியல் கோட்பாடுகளை ஆய்வு மூலம் அமெரிக்கா , ஐரோப்பாவிற்கு நிரூபிக்க நினைத்தார் . விலங்குகளை பழக்க முடியும் . அவற்றை குறிப்பிட்ட முறையில் பழக்கி எதிர்வினையைப் பெறலாம் என்பதே இவானின் ஆய்வு நோக்கம் . ஆய்வகம் என்பது கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளைக் கொண்ட இடம் . அங்கு விலங்குகளை வைத்து சோதனை செய்து அதன் வழியாக முடிவுகளைப் பெறுவது , அதை வைத்து சோதனைகளை மனிதர்களுக்கு செய்வது என்பதே இறுதி திட்டம் . ஒருவரின் குணநலன் என்பது அவர் வாழும் சூழலோடு தொடர்புள்ளதாகவே உள்ளது . அதன் அடிப்படையில்தான் குண மாறுதல்கள் அடையாளம் காணப்படுகின்றன . ஊக்கமூட்டுதல் – எதிர்வினை என்ற கோட்பாட்டை ஜான் வாட்சன் உருவாக்கினார் . இந்தக் கோட்பாடு ஒரு சிறிய உதாரணம்தான் . இதன் அடிப்படையில் ஏராளமான கோட்பாடுகள் உருவாகின . அமெரிக்கா , ஐரோப்பாவில் உள்ள மக்களும் இதை ப்பற்றி அறிந்துகொள்ள முயன்றனர் . அப்போது , வியன்னா நாட்டைச் சேர்ந்த நரம்பியலாளர் மனம் பற்றிய புதிய கோட்பாட்டை உருவாக்கினார் . அதுவரை உளவியல் பற்றிய ஆய்வறிக்கைகள் கோட்பாடுகள்

தாய்லாந்தில் சீர்த்திருத்தங்களை செய்யத்துடிக்கும் இளம் அரசியல் தலைவர் - பிடா

படம்
    pita,move forward party       எங்களுக்கும் நேரம் வரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூவ் ஃபார்வேர்ட் கட்சித்தலைவர் பிடா லிம்ஜாரோன்ராட் மேலேயுள்ள தலைப்பைத்தான் தனக்குத்தானே இப்படித்தான் சொல்லிக்கொண்டே பிரசாரம் செய்து வருகிறார் . பிடா செல்வாக்கான பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் . இவரது மாமா பாடுங் , முன்னாள் பிரதமர் தக்‌ஷினின் உதவியாளராக வேலை செய்தவர் . பிடா பாங்காக்கின் தம்மாசாட் பல்கலைக்கழகத்தில் படித்தவர் பிறகு மேற்படிப்பை அமெரிக்காவில் ஹார்வர்டில் படித்தார் . பிறகு நாடு திரும்பி குடும்பத்தொழிலான வேளாண்மை சார்ந்த தொழிலில் இயங்கி வந்தவர் , இப்போது அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார் . தாய்லாந்து நாட்டில் ஜனநாயகத்தன்மையை ஏற்படுத்தவேண்டும் . பொருளாதார சீர்திருத்தங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தவேண்டும் என தீர்மானமாக பேசுபவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அரசால் பிடுங்கப்பட்டது . அரசு அவைக்குள் வராதபடி தடுக்கப்பட்டிருக்கிறார் . ஆனால் அவர் மக்களை , ஆதரவாளர்களை சந்திப்பை அரசு தடுக்கமுடியவில்லை . அரசியல் எதிரிகள் இவரை அமெரிக்காவின் சிஐஏ

மருத்துவ சோதனையால் நோயுற்ற கிராம மக்களைக் காப்பாற்ற கொலைத்தாண்டவமாடும் பொதுநல நேசன்!

படம்
                பத்ராத்ரி தெலுங்கு ஶ்ரீஹரி , கஜாலா பத்ராத்ரி என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக மருந்துகளை பார்மசூட்டிகல் நிறுவன அதிபர் பரிசோதிக்கிறார் . இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் , அவரது துறைசார்ந்த பிற அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் . இதனால் அந்த கிராமத்தில் வாழும் பல நூறு மக்கள் வியாதி வந்து வாழும் பிணம் போல மாறுகிறார்கள் . இதை தடுக்க அந்த கிராமத்தில் உள்ள ரகுராம் என்பவர் முயல்கிறார் . அவரது தம்பியை மருத்துவம் படிக்க வைக்கிறார் . கிராமத்தினர் நோய்களிலிருந்து மீண்டனரா என்பதே கதை . தொடக்க காட்சியில் சிறைக்குள் சென்று குற்றவாளி ஒருவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொல்கிறார் ரகுராம் . அடுத்து , போலீசார் துரத்த அவர்களை பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்து பீதிக்குள்ளாக்கி தப்பித்து பத்ராத்ரி வருகிறார் . அங்குள்ள மக்களுக்கு தம்பி கொடுத்ததாக மாத்திரைகளை கொடுக்கிறார் . அவரது குடும்பத்தில் அம்மா , மாமா , அவரின் பெண் ஆகியோர் இருக்கிறார்கள் . மாமா பெண்ணை , மருத்துவரான பிறகு தம்பி திருமணம் செய்துகொள்வதுதான் ஏற்பாடு . அதைப்பற்றி பேசுகிறார்கள் . ஆனால் ரகுராம் சற்று மன