இடுகைகள்

இறப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட் -19 சிகிச்சை செய்வது கடினம்!

படம்
                    நிகில் தாண்டன் பேராசிரியர் , எய்ம்ஸ் கோவிட் -19 பாதிப்பு ்நீரிழிவை பாதிப்பை உருவாக்குகிறதா ? ஒருவருக்கு கோவிட் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும்போது அவருக்கு ஹெச்பிஏ 1 சி என்ற சோதனையை செய்யவேண்டும் . இதன் மூலம் ஒருவரின் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அளவிடலாம் . பாதிப்பு ஏற்பட்ட மூன்று மாதத்தில் அவரின் குளுக்கோஸ் அளவு உயர்ந்திருந்தால் அவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என அறியலாம் . முதலில் ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்து அவருக்கு குளுக்கோஸ் அளவு உயர்ந்தால் உடனே அவருக்கு வழங்கப்படும் ஸ்டீராய்டு சிகிச்சைகளை நிறுத்தவேண்டும் . குளுக்கோஸ் அளவுகள் இயல்பான நிலையில் இருந்தால் அவருக்கு ஸ்டீராய்டு சிகிச்சையை தொடரலாம் . ஆனால் சர்க்கரை அளவு கூடியிருந்தால் அதே நேரம் ஸ்டீரா்ய்டு சிகிச்சை காரணமாக நீரிழிவு பாதிப்பு கூடவும் வாய்ப்புண்டு . உறுதியாக இதனை கூறலாமா ? நீரிழிவு என்பது அறிகுறிகள் இல்லாமல் பலருக்கும் ஏற்படும் நோய் . எனவே அவர்கள் தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியாமலேயே இருப்பார்கள் . இந்தியாவில் 50 சதவீத மக்களுக்கு தங்களுக்கு சர்க

அமெரிக்காவை விட உத்தரப் பிரதேசத்தில் இறப்பு சதவீதம் குறைவுதான்! - யோகி ஆதித்யநாத், முதல்வர், உத்தரப்பிரதேசம்

படம்
                    யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதல்வர் ஆக்சிஜன் , படுக்கை , மருந்துகள் இல்லாத காரணத்தால் மாநிலத்தில் அதிகளவு கோவிட் 19 இறப்புகள் நேர்ந்துள்ளதை ஏற்கிறீர்களா ? இந்த விவகாரத்தில் நாம் அரசியல் செய்யக்கூடாது . வளர்ந்த நாடுகளை விட பிற மாநிலங்களை விட எங்களது மாநிலத்தில் குறைவான இறப்புகளே நோய்த்தொற்றால் நடந்துள்ளன . நாங்கள்தான் முதல் மாநிலமாக ஆக்சிஜன் சப்ளையை மருத்துவமனைகளுக்கு வழங்குவதை செய்தோ்ம் . இங்கே அதிகளவு ஆக்சிஜனை தயாரிக்கும் ஆலைகள் இல்லாதபோதும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலத்தில் இருந்தும் அதனை பெற்று வழங்கினோ்ம் . இதற்கான ஆக்சிஜன் உருளை தணிக்கை முறையையும் இங்கு அமல்படுத்தியுள்ளோம் . தடுப்பூசியை பெண்களும் , கிராமத்திலுள்ளவர்களும் செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை . இவர்களை எப்படி ஊக்கப்படுத்தப் போகிறீர்கள் ? நாங்கள் மூடநம்பிக்கையை ஒழித்து விழிப்புணர்வு செய்துவருகிறோம் . எதிர்க்கட்சியினர் தடுப்பூசி பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர் . கிராமத்தில் உள்ள மக்களுக்காக ஆப்களை உருவாக்கியுள்ளோம் . மக்களுக்கு உதவ 1,33,

குடும்ப பாசமா, உலகை காப்பதா என முடிவு செய்யும் கிராமவாசி இளைஞனின் சாகச பயணம்! மார்ஷியல் யுனிவர்ஸ்

படம்
                  மார்ஷியல் யுனிவர்ஸ் சீன தொலைக்காட்சி தொடர் 42 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர் சீனாவில் சிறு கிராமத்தில் வாழும் கோணங்கித்தனமான குடும்ப பாசம் கொண்ட லின் டாங் எப்படி அசுரர்களைக்க கட்டுப்படுத்தி அடக்கும் தாயத்து குருமாராக மாறினார் , உலகை காப்பாற்றினார் என்பதே கதை . இந்த தொடரின் முக்கியமான பலம் , லின் டாங் என்ற நாயகனின் கோணங்கித்தனமான சேட்டைகளும் , அபாரமான நடிப்பும் , சண்டையும்தான் . இதுதான் தொடரை சலிப்பு தராமல் பார்க்க வைக்கிறது . சில எபிசோடுகளில் போதுண்டா பரந்தாமா என விரக்தி வரவும் வைக்கிறது . லீ வம்சம் நடத்தும் கிளாடியேட்டர் ரக மைதானக் காட்சியில் தொடர் தொடங்குகிறது . அம்மன் பட வில்லன் போன்ற ஒருவரை சன்னமான சைசில் உள்ள லின் டாங் எப்படி தாக்கி வீழ்த்துகிறான் என்பதே காட்சியாக விரிகிறது . அவனுக்கு ஆதரவு தந்து உதவுபவள் அவனது தங்கை குவிங் டாங் . நோயுற்ற தந்தையின் மருத்துவச்செலவிற்காகெ லின் டாங் தனது உயரையே பந்தய மைதானத்தில் பணயம் வைக்கிறான் . இத்தனைக்கும் குங் பூ கலையை முறையாக பயிற்சி செய்யாதவன் . அவன் தான் எந்த வம்சம் என்று கூறாமல் போட்

இந்திய மக்கள் இறப்பதற்கு அரசின் செயலற்ற தன்மைதான் காரணம்! - ஶ்ரீனிவாஸ் பி.வி. இளைஞர் காங்கிரஸ் தேசியத் தலைவர்

படம்
            கோவிட் 19 நோய்த்தொற்று காரணமாக அரசு முழுக்கவே செயலிழந்துவிட்டதாக என நினைக்கத்தோன்றும் அளவுக்கு நிலை மோசமாக உள்ளது . பேஸ்புக்கில் மோடிபதவிவிலகு என எழுதும் அளவுக்கு மக்கள் விரக்தி நிலைக்கு வந்துவிட்டார்கள் . கோபம் கொள்வது சரி , செயல்வேகம் கொண்ட மனிதர்கள் இந்தியாவில் வேறு யாரும் இல்லையா ? என்றால் இருக்கிறார்கள் என உற்சாகமாக கூறலாம் . இளைஞர் காங்கிரசின் தேசிய தலைவர் ஶ்ரீனிவாஸ் பிவி , கட்சி பேதமில்லாமல் பலருக்கும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறார் . நீங்கள் என்ன விதமான உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறீர்கள் ? நாங்கள் எங்களை தொடர்புகொள்ளும் நோயாளிகளிடம் பேசிவருகிறோம் . அவர்களை தனிமைப்படுத்தவும் , தேவையான தன்னார்வலர்களாக உள்ள மருத்துவர்களின் உதவிகளைப் பெற உதவுகிறோம் . நோயிலிருந்து மீண்டவர்களைப் பற்றிய பட்டியலைப் பெற்று அவர்களிடமிருந்து பிறருக்கு பிளாஸ்மா பெற உதவுகிறோம் . மேலும் மக்களுக்கு மருத்துவமனை படுக்கை , ஆக்சிஜன் சிலி்ண்டர்களையும் வழங்குகிறோம் . நாங்கள் ஆக்சிஜன் வழங்குபவர்களோடு தொடர்பில் இருக்கிறோம் என்வே , ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற முடியாத ஏழைகளுக்கு உ

கொடூரமாக பரவும் வைரஸை பற்றி கவலைப்படாமல் இருந்துவிட்டோம்! - ப்ராமர் முகர்ஜி,

படம்
            நேர்காணல் பேராசிரியர் பிராமர் முகர்ஜி உத்தர்பிரதேச மாநிலத்தில் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது . இதில் நாம் பின்பற்றிய மாடல் தோற்றுப்போய்விட்டது என்று கூறியுள்ளீர்கள் . இப்படி நோய்த்தொற்று அதிகரிப்பது உத்தரப்பிரதேசத்தில் மட்டும்தானா ? இல்லை . உத்தரப்பிரதேசம் , மேற்குவங்கம் , பீகார் , டெல்லி ஆகியவை இதுபோன்ற ஆபத்தான கட்டத்தில் உள்ளன . இதற்குப்பிறகு ஆந்திரா , ராஜஸ்தான் , மத்தியப்பிரதேசம் . கேரளா , குஜராத் , கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வருகின்றன . கேரளத்தில் பாதிப்பு அதிகரித்துள்ளது . கேரளா , மேற்கு வங்கம் , உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பது அவசியம் . அசாம் , ஒடிஷாவில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை இப்போதைக்கு குறைவாக உள்ளது . இரண்டாவது அலை பாதிப்பு இந்தியாவில் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா ? மே மாதத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் . பிறகு பத்து நாட்களில் இறப்பு எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்புள்ளது . மே மாதத்தின் நடுப்பகுதியில் எட்டு முதல் பத்து லட்சம் என நோயாளிகளின் எண்ணிக்கை கூடலாம் . 5,500 என இறப்பு எண்

காலப்பயணம் செய்து தன் தாயின் உயிரைக் காப்பாற்றும் மகனின் பாசம் வென்றதா? - ஆலிஸ் - கொரியத் தொடர் - 16 எபிசோடுகள்

படம்
                  ஆலிஸ் கொரிய தொடர் 16 எபிசோடுகள்     Genre: Science fiction, Romance Developed by: SBS TV Written by: Kim Kyu-won, Kang Cheol-gyu, Kim Ga-yeong August 28 – October 24, 2020   டிவியில் காலப்பயணம் மாதிரி மையப்பொ ருளை எடுத்து ரசிக்க வைக்கமுடியுமா ? ஏன் முடியாது என்று சொல்லி சாத்தியமாக்கியிருக்கிறார் ஆலிஸ் தொடர் இயக்குநர் . காலப்பயணம் என்றால் ஏராளமான சிஜி காட்சிகள் தேவை , தேடுதல் , கொலை , குற்றங்கள் தேவை என்று பலர் நினைப்போம் . ஆனால் இந்த தொடர் முழுக்க உணர்ச்சிகரமான உறவுகளை மட்டுமே மையமாக வைத்து எடுத்திருக்கிறார்கள் . இதனால் பெரிய ஜிம்மிக்ஸ் வேலைகள் , எதிர்கால மனிதர்களின் தொழில்நுட்பம் என்று கவலைப்படவேண்டியதில்லை . பார்க் ஜின் , காவல்துறையில் வேலை செய்யும் கேப்டனுக்கு அடுத்த இரண்டாம் நிலை அதிகாரி . இவரது மேலதிகாரி கோ . இவர்தான் அம்மா இறந்தபிறகு , பார்க் ஜின்னை தனது பிள்ளை போல வீட்டில் தங்க வைத்து வளர்க்கிறார் . இதற்கு என்ன காரணம் என்று தேடினால் , 2010 க்கு கதை செல்கிறது . அங்கு ஜின்னின் அம்மா , அப்பா இல்லாமல் பையனை 19 ஆண்டுகளாக வளர்க்க