இடுகைகள்

தொழில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன்னைச்சுத்தி நடக்குறதை கவனிக்கிறதும், திறந்த மனசோட இருக்கிறதும் பத்திரிகைக்காரனுக்கு முக்கியம்!

படம்
  பாலசுப்பிரமணியன், ஆனந்தவிகடன் பாலசுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியர், ஆனந்தவிகடன்   பாலசுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியர், ஆனந்தவிகடன் சினிமாவில் இருந்து எது உங்களை பத்திரிகை நோக்கி ஈர்த்தது? எனக்கு சினிமா மேல எப்பவும் ஆர்வம் இருந்தது கிடையாது. சொல்லப்போனா, சினிமால இருந்ததே ஒரு நிர்பந்தம். பத்திரிகைக் கனவுதான் என்னைத் துரத்திக்கிட்டே இருந்தது. உங்களுக்கு பத்திரிகை ஆர்வம் எப்போது வந்தது? சின்ன வயசுலேயே. பனிரெண்டு வயசுலேயே கையெழுத்து பத்திரிகை நடத்தியிருக்கேன். சந்திரிகா அப்படின்னுட்டு. இப்போது வரும் பத்திரிகைகளைப் படிக்கிறீர்களா? இன்றைய தமிழ் இதழியலை எப்படி பார்க்கிறீர்கள்? ம்ஹூம்.. நான் எதையும் படிக்கிறதில்ல. கண்ணு சுத்தமா தெரியலை. எப்பவாது, எதையாவது வாசிக்கணும்னு தோணினா பேரனைவிட்டு வாசிக்கச் சொல்லிக் கேட்டுக்கிறதோட சரி. வீட்டுல ஹிண்டு மட்டும்தான் வாசிப்பேன். ஆபீஸ்லதான் மத்த பத்திரிகைகள் வாசிக்கிறதெல்லாம். ஆபீஸோட போன பல விஷயங்கள்ல அந்த வாசிப்பும் ஒண்ணு.   ஒரு பத்திரிகை ஆசிரியராக , மிகவும் முக்கியமான தருணம் என எதைச் சொல்லுவீர்கள்? நான் ஆனந்தவிகடனில் இருந்த ஐம்பது வருஷங்களும

ஆடியோ கதைகள் மூலம் மக்களின் மனதை வென்ற பாக்கெட் எஃப்எம்! - பார்ச்சூன் 40 அண்டர் 40

படம்
  நிஷாந்த், ரோகன், பிரதீக்- துணை நிறுவனர்கள், பாக்கெட் எஃப்எம் பாக்கெட் எஃப்எம்- ஆடியோ கதைசொல்லி ரோகன் நாயக், நிஷாந்த், பிரதீக் தீக்‌ஷித் துணை நிறுவனர்கள் பாக்கெட் எஃப்எம் யூட்யூபை திறந்தால், ‘’பார்க்கிறதுக்கு பிச்சைக்காரன் மாதிரி இருக்கான். இவனுக்கு பேங்கில அக்கவுண்ட் இருக்கா, இந்த பிச்சைக்காரனுக்கு ஹோட்டல் டேபிளா,, அதை எங்களுக்கு கொடுங்க. பாக்குறதுக்கு சர்வர் மாதிரி இருக்க, இரண்டு கிளாஸ்ல டீ போட்டு எடுத்துட்டு வா ‘’ என்ற டோனில் பெண் குரல் பேசும் மோசமான அனிமேஷன் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். அந்த கம்பெனிதான் பாக்கெட் எஃப்எம். கதைகளை ஆடியோ வடிவில் கூறும் நிறுவனம். ரோகன், நிஷாந்த் ஆகிய இருவரும் காரக்பூரல் ஐஐடியில் படித்தவர்கள். இவர்கள் பிரதீக்கை சந்தித்தபிறகு பாக்கெட் எஃப் நிறுவனத்தை உருவாக்கினர்.   இன்று பாக்கெட் எஃப்எம்மின் மதிப்பு, 400 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம். அண்மையில்தான் 93.5 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றது. பாக்கெட் நாவல் என்ற சகோதர நிறுவனத்திலிருந்து பாக்கெட் எஃப் எம் நிறுவனம் உருவானது. திகில் கதைகளில் யட்சினி என்ற கதையை பொறியியல் மாணவர் ஒருவர் எழுதி, அக்

கிரியேட்டிவிட்டியை அடையாளம் காண்பது எப்படி? - சில அறிவுறுத்தல்கள்....

படம்
  புதுமைத்திறன் உலகம் கிரியேட்டிவிட்டியை உருவாக்கிட பிறருக்கு தெரியாத கலை வடிவம் ஏதும் கிடையாது என எழுத்தாளர் ரிக் ரூபின் கூறுகிறார். இவர் இதுபற்றி, தி கிரியேட்டிவ் ஆக்ட் – எ வே ஆஃப் பீயிங் என்ற நூலை எழுதியிருக்கிறார்.’’ நீங்கள் கிரியேட்டிவிட்டியை நாடகம் போல எடுத்துக்கொண்டு முன்னேறி செல்லுங்கள். நிஜ உலகைப் போலவே அனைத்து விஷயங்களையும் உருவாக்குங்கள். அது சிறியதாக அல்லது   வினோதமாக கூட இருக்கலாம். புதிய பரிசோதனை முயற்சிகளை செய்து பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் உருவாக்கியதை காட்ட நினைத்தால் உலகில் அதை வெளியிடலாம்.’’ என்பது இவரது கருத்து. தனி பார்வை ‘’உங்களுக்கென தனி பார்வையை உருவாக்கிக்கொள்ளுங்கள்’’ என ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ் கூறுகிறார். இவர் 50 திரைப்படங்களைப் பார்த்து அதன் வழியாக தனக்கான கிரியேட்டிவிட்டி பாதையை உருவாக்கிக்கொண்டார். தன்னை வழிநடத்திய திரைப்படங்களாக எ பியூட்டிஃபுல் மைண்ட் தொடங்கி 1917 என்ற திரைப்படங்கள் வரை குறிப்பிடுகிறார்.’’யாரையும் நகல் செய்யாதீர்கள்’’ என்றும் குறிப்பிட மறக்கவில்லை. ஆற்றலின் பிரதிபலிப்பு ‘’நான் திரைப்படங்களுக்கான நடிகர்களை அடைய

நகைகளை வடிவமைக்க கற்கும் ஆர்வம் இருந்தால் போதுமானது! - நிஃப்ட் வழங்கும் படிப்புகள்

படம்
  படிப்பு வேண்டாம் - ஆர்வம் இருந்தால் போதும் நகைகளை எளிதாக வடிவமைக்கலாம்! சென்னையிலுள்ள கண்ணகி நகர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பலரும் நகை வடிவமைப்பு சார்ந்த பாடங்களை கற்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு சென்னையில் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனமே காரணம். இந்த நிறுவனம், தற்போது நகை வடிவமைப்பு பற்றிய படிப்புகளை இணையம் வழியாக படிப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளது. இதனால், பள்ளிப்படிப்பை படிக்காதவர்கள், எட்டாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்கள், டீக்கடை, பெட்ரோல் பங்க் என பிழைப்புக்கான வேலைகளை செய்து வருபவர்கள் கூட நகை வடிவமைப்பு பற்றிய படிப்பில் இணைகிறார்கள். படித்து முடித்து நகைகளை தாங்களே வடிவமைத்து வேலையையும் பெற்று வருகின்றனர். கற்களை பதிப்பது, வெல்டிங், மெழுகு மாதிரியில் நகைகளை தயாரிப்பது ஆகிய விஷயங்களில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அரசு, திறன் சார்ந்த வேலைவாய்ப்புகளை ஊக்குவித்து பத்து லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளது.எனவே, குறைந்த கல்வித்தகுதி இருந்தாலும் கூட கற்றலின் தீப்பொறி உள்ளவர்களுக்கு நகை வடிவமைப்பு த

நாங்கள் மக்களிடம் முதலீடு செய்கிறோம்! - ஶ்ரீதர் வேம்பு, இயக்குநர், ஜோஹோ

படம்
  ஶ்ரீதர்வேம்பு, ஜோஹோ நிறுவன இயக்குநர் ஶ்ரீதர் வேம்பு படம் - மனிகண்ட்ரோல் ஶ்ரீதர் வேம்பு நேர்காணல்   உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டங்களைப் பெற்றவர்கள் அல்ல. தொழில்நுட்பத் துறையில் வேலை இல்லாமல் தவிக்கும் பட்டதாரிகளைப் பார்க்க முடிகிறது. ஒருவர், இரண்டு வேலைகள் செய்து வாழவேண்டியிருக்கிறது. திறமையானவர்களுக்கு தட்டுப்பாடு ஏறபட்டிருக்கிறதா? இந்த பிரச்னையை எப்படி பார்க்கிறீர்கள்? சந்தையில் நிறைய நிறுவனங்கள் திறமைசாலிகளை தேடுகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை திறமைசாலிகள் இருந்தாலும் அவர்களை வழிகாட்டி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல யாரும் முயல்வது இல்லை. நாங்கள் அந்த பணியை செய்கிறோம். இதன் மூலம் ஊழியர்களின் திறன் உயர்கிறது. அவர்கள் எங்களோடு விசுவாசமாக பணியாற்றுகிறார்கள். இவர்கள் மூலமே எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியும் உயர்கிறது. நாங்கள் தொழிலில் முதலீடு செய்வதை விட மக்களின் மீது முதலீடு   செய்கிறோம். மூன்லைட்டிங் (இரு நிறுவனங்களில் பணிகளை செய்வது) பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பொறியாளர் ஒருவர் ஒரு நிறுவனத்தில் இருந்துகொண்டு

பத்திரிகையாளர்கள் தம் நண்பர்களைப் பற்றி நேர்மையாக கட்டுரை எழுதினால்...

படம்
  பத்திரிகையாளராக ஒருவர் இருந்தாலும் அவருக்கும் மனதில் சில ஆதரவு, விருப்பு வெறுப்பு கருத்துகள் இருக்கும். அரசியல் கட்சி தொடங்கி, சினிமா பிரபலம், சிறந்த தொழில்நிறுவனம், வங்கி முதலீடு, பிடித்த ஆளுமை, ஆதரவான பல்வேறு துறைசார்ந்த நண்பர்கள் என விளக்கிக் கூறலாம். ‘’பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளுக்கு நண்பர்களாக இருக்க முடியாது’’ என்று அவுட்லுக் வார இதழ் ஆசிரியர் வினோத் மேத்தா கூறுவார். நான் இங்கு உண்மையான பத்திரிகையாளர்களைப் பற்றி சொல்கிறேன்.   நீங்கள் அரசியல்வாதிகளின் நண்பராக இருந்தால், அவரைப் பற்றி நேர்மையாக கட்டுரை எழுத முடியாது. அவர் செய்த ஊழல்கள், தவறுகள் பற்றி நண்பர் என்ற காரணத்திற்காக பூசி மெழுகி சமாளிக்க வேண்டும். உங்கள் கட்டுரையைப் படிக்கும் வாசகர் இதனால் ஏமாற்றப்படுகிறார். ஆக, பத்திரிகையாளராக நீங்கள் நேர்மையாக செயல்படவில்லை என்றாகிறது. பத்திரிகையாளர் என்பது தொழிலாக இருந்தாலும் வேலையைக் கடந்து அவரும் விருப்பு, வெறுப்பு கொண்ட மனிதர்தான். பொதுவாக 30 வயதில் ஒருவருக்கு உலகம், சமூகம் என திட்டவட்டமாக முடிவுகள் உருவாகிவிடுகின்றன. ஆனால் பத்திரிகையாளரைப் பொறுத்தவரை இப்படி முடிவுகளை உரு

உதயமாகும் பேரரசன் - ஆனந்த் மகிந்திரா - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  ஆனந்த் மகிந்திரா வாகனத்துறையில் வேகமாக முன்னேறி வரும் தொழிலதிபர். தொடக்கத்தில் இரும்பு உற்பத்தி ஆலையாக தொடங்கப்பட்ட மகிந்திரா இன்று 20க்கும் மேற்பட்ட துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. உள்நாடு, வெளிநாடு என அனைத்து இடங்களிலும் வருமானத்தை பெருக்கும் பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இதற்கு பின்னால் உள்ளவர்தான், ஆனந்த் மகிந்திரா. ட்விட்டரில் தொடர்ச்சியாக மக்களிடம் உரையாடி அவர்களின் எண்ணங்களை தெரிந்துகொண்டு நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்கி வருகிறார். அவரின் சிந்தனைகள் எப்படியானவை, நோக்கம் என்ன, வெற்றி சூத்திரங்கள் என்ன என்பதை அறிய நீங்கள் இந்த நூலை வாசித்தே ஆகவேண்டும்.. அமேசான் வலைத்தளம் https://www.amazon.in/dp/B0BSLYLGBB

உதயமாகும் பேரரசன்- ஆனந்த் மகிந்திரா - புதிய மின்னூலின் அட்டைப்படம்

படம்
 

மக்களின் நம்பிக்கையை பெறுவதே முக்கியம் - ஆனந்த் மகிந்திரா

படம்
  மகிந்திரா நிறுவனம் நேர்காணல் ஆனந்த் மகிந்திரா முதலீட்டாளர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து பெரும்பாலான தொழில்கள் நடைபெறுகின்றன. இதில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இதைப பற்றி தங்கள் கருத்து என்ன? 2007-2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. நிறைய பெரிய நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டன. இதனால் மக்களுக்கு பெரு நிறுவனங்கள் என்றாலே நம்பிக்கை வைக்க முடியாது என நம்பத் தொடங்கினர். பிறகுதான், மெல்ல நிலைமை மாறியது. கோவிட் -19 ஏற்பட்ட காலம் மீண்டும் நிறுவனங்களுக்கு சோதனையான காலகட்டம். பெரிய நிறுவனங்கள் நடப்பு நிகழ்ச்சி பற்றி கருத்து தெரிவிப்பது சாத்தியமில்லை. இதில் சில நிறுவனங்களிடம்தான் டிவி சேனல் அல்லது பத்திரிகைகள் உள்ளன.      நிறுவனத்தின் தேவை, லட்சியம் பற்றி மக்களுக்கு தெரிய வேண்டும். முதலீட்டாளர்களுக்கும் விளக்கி விடுவது நல்லது. இப்படி எதையும் கூறாதபோது மக்கள் நிறுவனங்களை நம்ப மாட்டார்கள். இதனால் தொழில் சரிவுக்கு உள்ளாகும். முதலீட்டாளர்களுக்கு செலவிட்ட பணம் திரும்ப கிடைக்காது. சில நிறுவனங்கள் ஊடகங்களைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் லாபம் பெற முயல்கிறார்கள். ஆனால் நீ

விளம்பர இடைவேளை - ஆராபிரஸ் வெளியீடுகள்

படம்
 

மகிந்திரா நிறுவனத்தை அடித்தளமிட்டு உருவாக்கிய இரண்டு சகோதரர்கள்!

படம்
  இடமிருந்து வலம் - கே சி மகிந்திரா, ஜே சி மகிந்திரா, குலாம் முகமது வீடு, தொழிற்சாலை என கட்டுமானங்களுக்கு அடித்தளம் சரியாக அமைக்கப்படவேண்டும். அப்போதுதான் அதனை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் கட்ட முடியும். அடித்தளம் என்பது கட்டிடம் எங்கு எழும்புகிறதோ அங்குள்ள மண், இயற்கைப்பேரழிவு ஆபத்துகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு திட்டமிட்டு அமைக்கின்றனர். ஒரு நிறுவனத்தை தொடங்குபவர் உயர்ந்த லட்சியத்திற்காக, வானுயர்ந்த நோக்கத்தை கருத்தில் கொண்டு உருவாக்குகிறார். அடுத்து தலைமை பதவிக்கு வருபவர், நிறுவனரின் லட்சியத்தை மேம்படுத்துகிறார். விரிவுபடுத்துகிறார். இப்படி தலைமை   பதவிக்கு வருபவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் நல்லது. குடும்பம் என்பதை விட திறமையே முக்கியம். இதற்கு எடுத்துக்காட்டு   வேண்டுமெனில் வெளிநாடுளில் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் நிறுவனங்களை அடையாளம்   கூறலாம். இந்த நிறுவனங்களில் தலைமை பொறுப்பை வகிப்பவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அல்லது குடும்பத்தில் பெண் எடுத்தவர்களாக இருக்கிறார்கள். பல்வேறு தலைமுறைகளாக நிறுவனம் நிலைத்து நிற்க அர்ப்பணி

மக்களின் மனதைப் புரிந்துகொள்ள முயலும் தொழிலதிபர் - ஆனந்த் மகிந்திரா

படம்
  இந்தியாவில் தற்போது பொதுமக்களோடு அதிகம் உரையாடிக் கொண்டிருக்கும் தலைவர் யாரென   நினைக்கிறீர்கள்? அமெரிக்காவில் இதுபோல இயங்கும் சர்ச்சை கிளப்பும் தலைவர் ஒருவருண்டு. அவர் எலன் ம|ஸ்க் என அனைரும் தெரிந்துகொண்டிருப்பீர்கள். இந்தியாவில் எலன் ம|ஸ்கையொத்த பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்துகொண்டிருப்பவர் இவர் ஒருவரே…. அவர்தான் ஆனந்த் மகிந்திரா. இந்தியாவைப் பொறுத்தவரை தொழிலதிபர்கள் யாரும் வெளிப்படையாக தங்கள் கருத்தை எங்கும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். என்ன காரணம்? அரசியல் கட்சிகள் அதை வைத்து அவர்களது தொழிலை நசித்து விடுவார்கள் என்பதுதான்   முக்கியமான காரணம்.   ஆனந்த் மகிந்திரா இந்தவகையில் அரசியல் என்பதைப் பற்றி கவலைப்படாமல் நம்பிக்கையான மனிதர்கள், அவர்களைப் பற்றிய வீடியோ என பகிர்ந்துகொண்டு   ட்விட்டரில் இயங்கி வருகிறார்.   ஆனந்த்   நாள்தோறும் ட்விட்டரில் பகிரும் வீடியோக்களைப் பார்க்க பகிரவே நிறைய மனிதர்கள் ட்விட்டரில் அவரைப் பின்தொடர்கிறாரகள். மகிந்திரா நிறுவனம் 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2022ஆம் ஆண்டோடு 77 ஆண்டுகளை   நிறைவு செய்துள்ளது. 2020ஆம் ஆண்டில் 75 ஆண்டுகளை நிறைவு செய்தது. மகிந்

புதிர்ப்பாதையிலிருந்து நம்பிக்கை பெற்று தப்பி வாழ்க்கையை அடைய கற்றுத்தரும் நூல்! - ஸ்பென்சர் ஜான்சன் (தமிழில் நாகலட்சுமி சண்முகம்)

படம்
  புதிர்ப்பாதையிலிருந்து தப்பித்து வெளியேறுதல்  ஸ்பென்சர் ஜான்சன் தமிழில் நாகலட்சுமி சண்முகம்  மின்னூல்  என் சீஸை நகர்த்தியது யார் என்ற நூலின் இரண்டாம் பகுதி. நூல் சிறியதுதான். வேகமாக படித்துவிடலாம்.  நாம் நம்புகின்ற நம்பிக்கை தவறாக இருக்கும்போது, அது நம்மை தொழில் வாழ்க்கையில் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்து துன்பத்திற்குள்ளாக்குவதை எழுத்தாளர் வலுவாக சொல்ல நினைத்துள்ளார். அதற்குத்தான் புதிர்ப்பாதையில் சீஸ் தேடும் கதை கூறப்படுகிறது. இதில் ஜெம், ஜா, ஹோம் மற்றும் இரு சுண்டெலிகள் உள்ளன.  சுண்டெலிகளும், ஜாவும் புதிர்ப்பாதையில் இருந்த சீஸ்களைத் தேடி கண்டுபிடிக்க கிளம்புகின்றனர். ஆனால் ஜெம், இன்று இல்லாவிட்டால் என்ன நாளை இதே இடத்தில் சீஸ் கிடைக்கும் என காத்திருக்கிறான். பாறையின் புதிர்ப்பாதையில் யார் சீஸை வைப்பது, அதற்கான ஆதாரம் பற்றி அவன் ஏதும் கவலைப்படுவதில்லை. இதனால் நாளுக்குநாள் அவனுக்கு உணவு கிடைக்கவில்லை. ஆளும் மெலிய நம்பிக்கையும் மெலிகிறது. அப்போது ஹோம் என்ற சிறு குள்ளப் பெண் அவனுக்கு ஆப்பிள் தந்து உதவுகிறாள். ஜெம்முக்கு அது ஆப்பிள் என்பது கூட தெரிவதில்லை. சீஸ் தவிர ஏதும் சாப்பிடமாட்டேன்

சிதையும் தாய்மாமன் வழி உறவு! - கடிதங்கள்- கதிரவன்

படம்
  அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? தேர்தலுக்கான இரைச்சல் சென்னையில் அதிகமாகிவிட்டது. 6 மணிக்கு மேல் சாலையில் தேர்தல் இரைச்சல் சகிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது.  இன்று தகைமை சான்ற கோ ஆர்டினேட்டர் வரவில்லை. எனவே, இதழ் வேலைகளைப் பார்க்கத் சொல்லிவிட்டார் பொறுப்பாசிரியர். எனவே, எழுத நினைத்த கட்டுரைகளை எழுத முடியவில்லை. சனி என்றால் அலுவலக சகாக்கள் நிறையப் பேர் விடுமுறை எடுத்துவிடுவார்கள். ஆறுநாட்கள் அலுவலகம் என்பது மிக நீண்டதுதானே? இன்று தாய்மாமா மகன் தனது திருமணத்திற்காக அழைத்தார். நான் அழைப்பை ஏற்கவில்லை. அவரது திருமணத்திற்கான வாழ்த்துச் செய்தியை அனுப்பினேன். அவரும் அதற்குமேல் வற்புறுத்தவில்லை. எல்லாமே சடங்கு, சாங்கியம் என ஆகிவிட்டது. நமக்கு பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதெல்லாம் கிடையாது. செய்யவேண்டும் அவ்வளவுதான். தாய்மாமன் வழி உறவு இதோடு முடிவுக்கு வருகிறது.  ரஷ்மி பன்சலின் தொழில் சம்பந்தமான நூலைப் படித்து வருகிறேன். இன்னும் 70 பக்கங்கள் மிச்சமிருக்கிறது. எம்பிஏ படிக்காத தொழில்முனைவோரைத் தேர்ந்தெடுத்து பேட்டிகளை எடுத்து நூலாக்கி இருக்கிறார் ஆசிரியர். இந்த

உலகம் முழுக்க நிதிச்சேவையில் சாதித்த தொழிலதிபர்கள்! -

படம்
  கில்லாமே பௌசாஸ்  சொத்து மதிப்பு -23 பில்லியன்  குடியுரிமை - சுவிட்சர்லாந்து 2012 ஆம் ஆண்டு பௌசாஸ் செக்அவுட்.காம் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். கடைகள், வாடிக்கையாளர்கள் என ஆன்லைனில் பணத்தைக் கட்டும் தீர்வுகளை வழங்குகிறது. செக் அவுட்.காம். பௌசாஸூக்கு வயது 40. லண்டனில் வழங்கும் நிதிச்சேவையில் மூன்றில் இருபங்கு நிதிவணிகத்தை செக் அவுட் வலைத்தளம் வழங்குகிறது. இதன் தற்போதைய மதிப்பு 40 பில்லியன் டாலர்கள். நிதி நிறுவனத்திற்கு வரும் முன்னரே, பெரியளவு சாதித்தவர் என்றால் அப்படி ஏதும் இல்லை. கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர், கலிஃபோர்னியாவில் ஜாலியாக சர்ஃபிங் செய்துகொண்டிருந்தவர் பிறகு தான் நிதிச்சேவை பக்கம் வந்திருக்கிறார்.  பெருந்தொற்று காலத்திலும் செக் அவுட்.காம் பயன் அடைந்துள்ளது. 2020ஆம் ஆண்டில் இருந்து தான் செய்யும் நிதி பரிவர்த்தனைகளை அதிகரித்துள்ளது.  நிக் ஸ்ட்ரோன்ஸ்கி  சொத்து மதிப்பு - 7.1 பில்லியன் டாலர்கள் குடியுரிமை - இங்கிலாந்து, ரஷ்யா  2015ஆம் ஆண்டு ரீவால்யூட் என்ற நிதிசேவை நிறுவனத்தை லண்டனில் தொடங்கினார். இதன் 2021ஆம் ஆண்டு மதிப்பு 33 பில்லியன் டாலர்கள். பதினெட்டு மில்லியன் வாடிக்

மனதிற்கு பிடித்த விஷயத்தை செய்தால் வெற்றி! ஸ்கை க்ரூ நிறுவனர், மலோபிகா

படம்
  மலோபிகா பானர்ஜி எம்ஜே  பாடகர், நடிகர், பாடலாசிரியர் ஸ்கைக்ரூ நிறுவனர் மலோபிகாவின் பெயருக்கு பின்னே இருக்கும் அத்தனையும் நிஜம். அவ்வளவு ஆர்வமாக பல்வேறு வேலைகளை செய்துவருகிறார். ஸ்கை க்ரூ என்பது அவரின் ஆடை நிறுவனமாகும். பாரம்பரிய இழைகளில் தேவையான திருத்தங்களோடு கஸ்டமைஸ்டு உடைகளை தைத்து கொடுப்பது இவரது நிறுவன பாணி.  உள்ளூர் சார்ந்த விஷயங்களை முக்கியமாக நினைக்கிறார். ஆர்வமும், அர்ப்பணிப்புமான தனது நிறுவனத்தை வளர்ச்சியடையச் செய்ய உழைத்து வருகிறார்.  உங்களின் ரோல்மாடல் யார்? என்னுடைய குடும்பம்தான் என்னுடைய ஊக்கசக்தி, ஆற்றல் அனைத்துமே. சரியாக வேலை செய்தால் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என என் அம்மா கொடுக்கும் ஊக்கம் அற்புதமானது. இதனால் நான் நினைத்த இலக்குகளை எதிர்காலத்தில் அடைவேன் என நம்புகிறேன்.  மன அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்? பொதுமுடக்க காலத்தைப் பற்றி கேட்கிறீர்கள். நான் அப்போது சமையல் செய்துகொண்டிருந்தேன். அதுதான் மன அழுத்தத்தை போக்கும் ஒரே வேலையாக இருந்தது. காய்கறியை சீராக ஒன்றுபோல வெட்டுவது எனக்கு பிடித்திருந்தது. மன அழுத்தம் வரும்போது நடனமாடுவது எனக்கு பிடித்தமானது. இது உடலையு

பெண்கள் தங்களின் பலம் அனைத்தையும் தொழிலில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்! - டாக்டர் லீனா, நெயில் ஆர்டிஸ்டரி

படம்
  டாக்டர் லீனா நிறுவனர், நெய்ல் ஆர்டிஸ்டரி டாக்டர் லீனா  பெண்களில் கைகளில் உள்ள நகங்களில் கூட ஓவியங்களை இப்போது வரையத் தொடங்கிவிட்டார்கள். அப்படித்தான் நெய்ல் ஆர்டிஸ்டரி தொடங்கியது. இதனை தொடங்கிய லீனா துபாயைச் சேர்ந்தவர். பிறந்ததும், வளர்ந்ததும் துபாயில்தான். லீனாவின் பூர்விகம், தென்னிந்தியா என்பதால் இந்தியாவின் கலாசாரம் மீது இவருக்கு ஆர்வம் இருந்தது. இதன்  காரணமாக பள்ளிப்படிப்பை முடித்தவர் மேற்படிப்பை படிக்க இந்தியாவுக்கு வந்தார். இங்கு பல் மருத்துவம் படித்தார்.  படித்துவிட்டு வேலை பார்க்க நினைத்தபோது அதை ஏன் எங்கேயோ போய் செய்யவேண்டும். இந்த நாட்டிலேயே செய்யலாம் என முடிவுக்கு வந்தார். அப்படித்தான் நகத்தில் ஓவியங்களை வரையும் தொழிலை தொடங்க முடிவெடுத்தார்.  முதலில் கேரளத்தின் கொச்சியில் தொழிலை தொடங்கியவர் பிறகு சென்னையில் ஒரு கிளையை திறந்துள்ளார். அவரிடம் பேசினோம்.  உங்களுக்கு எப்படி அழகுப்பொருட்கள் சார்ந்த துறையில் ஈடுபாடு வந்தது? இந்த துறை மிகவும் தனித்துவம் வாய்ந்தது என்பதை அடையாளம் கண்டுதான் தொழிலை தொடங்க முடிவு செய்தேன். நகம் என்பது சிறியதாக இருந்தாலும் மிகப்பெரியத தாக்கம் ஏற்படுத்த